Search

8 வாரத்துக்கு தொடர்ந்து சீரக தண்ணீரை இப்படி குடிங்க.. எவ்வளவு கொலஸ்ட்ரால் இருந்தாலும் குறைஞ்சிடும்..!

 அதிகப்படியான கொலஸ்ட்ரால் உட்பட பல்வேறு விதமான உடல்நலக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு சீரக தண்ணீர் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரவு முழுவதும் சீரகத்தை தண்ணீரில் ஊற வைப்பதன் மூலம் பெறப்படும் தண்ணீர் சீரக தண்ணீர் என்று அழைக்கப்படுகிறது. மறுநாள் காலை தண்ணீரை வடிகட்டி அதனை வெறும் வயிற்றில் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் பிற கெமிக்கல்கள் நிறைந்த இந்த சீரக தண்ணீர் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதற்கு பெயர் போனது.

சீரக விதைகளில் காணப்படும் ஃபிளவனாய்டுகள் மற்றும் LDL அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்கு உதவுவதாக ஒரு சில ஆய்வுகள் கூறுகின்றன. கூடுதலாக சீரக விதைகளில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலுடன் ஒட்டிக் கொள்வதன் மூலமாக கொலஸ்ட்ரால் ரத்த ஓட்டத்திற்குள் நுழைவதை தடுக்கிறது.

தொடர்ந்து 8 வாரங்களுக்கு வெறும் வயிற்றில் இந்த சீரக தண்ணீரை குடித்து வரும் நபர்களுக்கு டிரைகிளிசரைடு அளவுகள் மற்றும் LDL கொலஸ்ட்ரால் குறைவதாக ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு ஆய்வில், சீரகத் தண்ணீர் அதிக கொலஸ்ட்ரால் கொண்ட நீரழிவு நோயாளிகளின் நிலைமையை மேம்படுத்தியதாக கூறுகிறது.

கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதற்கு சீரகம் எந்த அளவுக்கு உதவும் என்பதை நிரூபிப்பதற்கு இன்னும் பல்வேறு விதமான ஆய்வுகள் தேவைப்படுகிறது என்றாலும் கூட இது அனைவரும் முயற்சி செய்து பார்க்கக்கூடிய ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாக அமைகிறது.

News18

கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதற்கு சீரக நீரை தயாரிப்பது எப்படி?

- ஒரு டீஸ்பூன் அளவு சீரக விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கக்கூடிய டம்ளர்களில் பெரிய டம்ளர் ஒன்றை எடுத்து, அதில் தண்ணீரை நிரப்பி சீரகத்தை சேர்க்கவும். இதனை இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளலாம்.

- மறுநாள் காலை சீரக விதைகளை வடிகட்டி நீக்கிவிட்டு கிடைத்த தண்ணீரை வெறும் வயிற்றில் பருகவும்.

- இவ்வாறு சீரகத் தண்ணீரை நீங்கள் தொடர்ந்து பல நாட்களுக்கு குடித்து வரலாம். எனினும் உங்களது உணவில் எந்த ஒரு மாற்றத்தை செய்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்கு நீங்கள் ஏதேனும் இயற்கையான வழிகளை முயற்சித்து பார்க்கலாம் என்ற திட்டத்தில் இருந்தால் இந்த சீரக தண்ணீர் உங்களுக்கு ஒரு அற்புதமான வழியாக அமையும். இதனை தயார் செய்வது எளிது, அதோடு மிகக் குறைந்த விலையில் மற்றும் பாதுகாப்பான முறையில் இதனை நாம் பெறலாம்.

News18

இப்பொழுது உங்களது நாளை சீரகத் தண்ணீருடன் துவங்குவதால் கிடைக்கக்கூடிய சில பலன்கள் குறித்து பார்க்கலாம்:

செரிமானத்தை மேம்படுத்துகிறது - செரிமானத்திற்கு அவசியமான திரவங்கள் மற்றும் என்சைம்களின் உற்பத்தி சீரக தண்ணீர் குடிப்பதால் மேம்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக செரிமானம் சிறந்த முறையில் நடைபெறுகிறது. மேலும் மலச்சிக்கல், வாயு பிரச்சனை மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.

உடல் எடையை குறைக்க உதவுகிறது - வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, கொழுப்பு எரிப்பதை மேம்படுத்துவதால் சீரக தண்ணீர் உடல் எடை குறைவதற்கு வழி வகுக்கிறது.

ரத்த சர்க்கரை அளவுகளை பராமரிக்க உதவுகிறது - நீரிழிவுநோயாளிகள் சீரகத் தண்ணீரை தொடர்ந்து குடித்து வரும் பொழுது அவர்களது ரத்த சர்க்கரை அளவுகள் சீராவதை கவனிக்கலாம்.

ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் - சீரகத் தண்ணீரில் இருக்கக்கூடிய வீக்க எதிர்ப்பு பொருட்கள் உடல் முழுவதும் ஏற்படக்கூடிய வீக்கத்தை எதிர்த்து போராடுகின்றன. இது பல்வேறு விதமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

எச்சரிக்கை: இந்த வீட்டு வைத்தியம் ஒரு பரிந்துரையாகவும் மற்றும் குறிப்பாக மட்டுமே ஒருவர் கருத வேண்டும். நீண்ட கால அறிகுறிகளை ஒருபோதும் அலட்சியமாக கருத வேண்டாம். உங்களது உணவில் எந்த ஒரு மாற்றத்தை செய்வதற்கு முன்பும் மருத்துவரின் ஆலோசனையை பெற்றிடுங்கள்.


🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment