Education News (கல்விச் செய்திகள்)
Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
தேர்வில் வெற்றியை எட்ட சில வழிகாட்டுதல் முறைகள் : * தேர்வர்கள் பாடவாரியாக நாட்கள் ஒதுக்கி முழு முயற்சியுடன் படிக்கவும்.
* தேர்வு காலம் அருகில் உள்ளதால் ஒரு நாளுக்கு அதிகபட்சம் 14-15 மணி நேரம் படிப்பது பயனளிக்கும்.
* ஆன்லைனில் காலம் செலவழிப்பதை குறையுங்கள். காலை மாலை 1 மணி நேரம் மட்டும் மொபைலை பயன்படுத்தி படியுங்கள்.
* முழு புத்தக வாசிப்பு அவசியம்.
*எந்நிலை வந்தாலும் மனம் தளராதீர் . உழைபிற்கு ஏற்ற ஊதியம் நிச்சயம் உண்டு.
*தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாடப்பகுதியை வரி விடாமல் வாசிப்பதன் மூலம் 28, 28, 55 மதிப்பெண் வரை பெறலாம்
* அறிவியல் பகுதி அதிக பாட திட்டம் கொண்டது. குறிப்பெடுத்து திருப்புதல் செய்தல் பயனளிக்கும்
*சமூக அறிவியல் நிகழ்வுகளை பட்டியலிட்டு படிக்கலாம்
* உளவியல் குறைவான பாட அளவுடையது. ஆனால் மிக ஆழமாக உட்கூர்ந்து படித்தல் அவசியம்
*கணிதம் புரிதல் இன்றி படிப்பது பலனளிக்காது. நடைமுறை கணக்குகள் அதிகளவில் பயிற்சி எடுத்தல் சிறந்தது
*ஆங்கிலம் மொழி ஆளுமை அடிப்படையில் கேட்கபடும் வினாக்கள் அமையும்.
*வகுப்பு 6, 7 படிப்பதற்கு எளிமையானவை இவற்றை படிக்க கால அளவு குறைவாக பயன்படுத்தவும்
*9, 10 வகுப்பு பாட பகுதிகள் அதிகமான கடின தன்மை உடையது. இவற்றை ஆழ்ந்து படிக்கவும். கால அளவு அதிகம் தரவும்
* தமிழ், அறிவியல், ச.அறிவியல் படிப்பதை முதலில் துவங்குங்கள். இவை சுவாரஸ்யம் மிக்கவை. எனவே சலிப்பு வராது
* நேர மேலாண்மை அவசியம். கால அளவு குறைவு என்பதால் விரைவாக மற்றும் ஆழ்ந்து படிக்கவும்
* எதிர்வினை எண்ணங்களை தவிருங்கள். இங்கு எல்லோரும் திறமை மிக்கவரே
* தண்ணீர் இயன்ற வரை குடிக்கவும். சோர்வை போக்கும்
* கவன சிதறல் தரும் இடங்களை தவிர்த்து அமைதி நிறைந்த இடத்தில் படிக்க பழகவும்
* வெற்றி வாய்ப்பை நோக்கி நம்பிக்கையுடன் பயணியுங்கள். எண்ணமே செயலாகிறது
By ,
K.PRATHEEP, BT ASST
GHSS-POONGULAM
VELLORE DT
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )