Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
தொழில்திறனை மேம்படுத்தும் நோக்குடன் செயல்படுகிறது. 8 அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்களும், தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆதார் நகலுடன் நேரில் விண்ணப்பிக்கலாம். பொறியியல் சார்ந்த மற்றும் சாராத துறைகளிலும் பயிற்சி வழங்கப்படும்.
தொழில்முனை திறன்களை வளர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் வடசென்னை மற்றும் கிண்டி அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில், தொழில்நுட்பக் கல்வியில் பயிற்சி பெற விரும்பும் இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வடசென்னை தொழிற்பயிற்சி நிலையத்தில், இரண்டாண்டு, ஓராண்டு மற்றும் ஆறு மாதத் தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பிளம்பர், வெல்டர், வயர்மேன் போன்ற தொழில்களில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அதே சமயம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ படித்தவர்களும் தங்களின் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் வந்து சேர முடியும். மேலும், டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தொழில்நுட்பத்தில் சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
கிண்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் மகளிரின் தொழில்திறனை மேம்படுத்தும் நோக்குடன் செயல்படுகிறது. 8 அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்களும், தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆதார் நகலுடன் நேரில் விண்ணப்பிக்கலாம். பொறியியல் சார்ந்த மற்றும் சாராத துறைகளிலும் பயிற்சி வழங்கப்படும்.
இந்த பயிற்சிகள் மாணவிகளுக்கு பல்வேறு அரசுச் சலுகைகளுடன் வழங்கப்படுகின்றன. கட்டணமில்லாப் பயிற்சி, இலவசப் பாடப்புத்தகங்கள், சீருடை, வரைபடக் கருவிகள், இலவசப் பேருந்து மற்றும் ரயில் பயண அட்டைகள், மாத உதவித்தொகை ரூ.750 மற்றும் தகுதியுள்ள மகளிருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000 வழங்கப்படும். மேலும் விடுதி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர், வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று துணை இயக்குநர் அல்லது முதல்வரைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு: 94990 55653 / 81446 22567. கிண்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் தொடர்பாக 044-22510001 அல்லது 94990 55651 எனும் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )