HPCL Recruitment 2025: HPCL ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! டிப்ளமோ படித்திருந்தாலே வேலை உறுதி...

 மத்திய அரசின் கீழ் செயல்படும் எச்.பி.சி.எல்., ராஜஸ்தான் சுத்திகரிப்பு நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் விவரங்கள் : இன்ஜினியர் 50, சீனியர் மேனேஜர் 28, சீனியர் இன்ஜினியர் 18, அசிஸ்டென்ட் இன்ஜினியர் 14, ஜூனியர் எக்சிகியூட்டிவ் 8, அசிஸ்டென்ட் அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 4 உட்பட மொத்தம் 131 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ.,/ பி.டெக்., / எம்.பி.ஏ., / சி.ஏ., படித்திருந்தால் போதும்.வயது: பிரிவு வாரியாக மாறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுதேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.  கடைசிநாள்: 10.8.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு hrrl.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

ஐ.சி.எப் - ல் 1010 காலிப்பணியிடங்கள்!! சென்யைில் பணிபுரிய அரிய வாய்ப்பு - உடனே முந்துங்கள்...

இப்பணிக்கு 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. இதற்கு பட்டப்படிப்பு, என்ஜினீயரிங், டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.சி.எப், நிறுவனம் சென்னையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது ஐ.சி.எப். ல் அப்ரண்டீஸ் ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காலி இடங்கள் 1010 பணி இடம்: சென்னை. கார்பெண்டர், எலெக்ட்ரீஷியன், பிட்டர், மெஷினிஸ்ட், பெயிண்டர், வெல்டர், எம்.எல்.டி. (கதிரியக்கவியல், நோயியல்) போன்ற பணியிடங்களுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது.

கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. இதற்கு பட்டப்படிப்பு, என்ஜினீயரிங், டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

பயிற்சி காலம்: ஒரு ஆண்டு, வயது: ஐ.டி.ஐ. படித்தவர்கள், 24 வயது. நிரம்பாதவர்களாகவும் இருக்க வேண்டும். ஐ.டி.ஐ. படிக்காதவர்கள் 22 வயது நிரம்பாதவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.

தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு மூலம் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்படவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-08-2025விண்ணப்பிக்கும் இணையதளம்: https://pb.icf.gov.in/ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

ரூ. 27 ஆயிரம் சம்பளம்... உள்ளூரிலேயே அரசு வேலை காத்துகிட்டு இருக்கு.. முழு விவரம் இதோ..!

 தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியாற்றிட பாதுகாப்பு அலுவலர்  பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். இது முற்றிலும் தற்காலிகமான பணியிடமாகும்.

கல்வி தகுதி: Post Graduate degree in Social Work/Sociology/ Child Development/Human Rights Public Administration/Psychology/ Psychiatry/ Law/ Public Health / Community Resource Management from a recognized University. OR Graduate in Social Work /Sociology/ Child Development/ Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health /Community Resource Management ஆகிய பட்டப்படிப்பை அதிகாரப்பூர்வமான பல்கலைக்கழகத்தின் கீழ் முடித்திருக்க வேண்டும். மேலும் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

தொகுப்பூதியம்: இதற்கு தொகுப்பூதியமாக ரூ.27,804 வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் 15.08.2025 அன்று மாலை 5.30 மணிக்குள் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:  மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு, எண்:14. பெருமாள் கோவில் தெரு (SPA Hall). செவன்த்டே பள்ளி அருகில், தென்காசி - 627 811. தென்காசி மாவட்டம் என்ற அலுவலக முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை https://tenkasi.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 04633 291125 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆக.4 முதல் கலை திருவிழா போட்டிகள்

          Education News (கல்விச் செய்திகள்)

1370878

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் நவம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளாக கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இந்த கல்வி ஆண்டிலும் மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

1, 2-ம் வகுப்புகள், 3, 4, 5-ம் வகுப்புகள், 6, 7, 8-ம் வகுப்புகள், 9, 10-ம் வகுப்புகள், 11, 12-ம் வகுப்புகள் என 5 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. ‘பசுமையும், பாரம்பரியமும்’ என்ற கருத்தின் அடிப்படையில் போட்டிகள் நடைபெறும். கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், பேச்சு, திருக்குறள் ஒப்பித்தல், மெல்லிசை, நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், மணல் சிற்பம், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், நகைச்சுவை, பலகுரல் பேச்சு, பம்பை, உடுக்கை, பறை, மிருதங்கம், டிரம்ஸ், வயலின், நாதஸ்வரம், கீபோர்டு இசைத்தல், பொம்மலாட்டம் உட்பட பல்வேறு வகைகளில் போட்டிகள் நடத்தப்படும்.

முதல்கட்டமாக, பள்ளி அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் 18-ம் தேதி வரை நடைபெறும். அதை தொடர்ந்து, குறுவட்ட அளவில் (ஆக.25 முதல் 29), வட்டார அளவில் (அக். 13 முதல் 17), மாவட்ட அளவில் (அக்.27 முதல் 31), மாநில அளவில் (நவ.24 முதல் 28) போட்டிகள் நடைபெறும்.

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கப்படும். மேலும், தரவரிசையில் முதன்மை இடம் பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, போட்டிகளை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

ஜிபே, போன்பே, பிம் செயலிகளைப் பயன்படுத்துபவரா? ஆக.1 முதல் புதிய விதிமுறைகள்!

       Education News (கல்விச் செய்திகள்)

dinamani%2F2025-05-19%2Fsrd46fv0%2FC_53_1_CH1214_39383824

பொருளுக்கு பொருள் என பண்டமாற்றத்துக்கு மாற்றாக வந்த பணம் பல காலமாக கோலோச்சி வந்த நிலையில் அதற்கு மாற்றாக மாறியிருக்கிறது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள்.

இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் சாதகமும் உள்ளன, பாதகங்களும் உள்ளன. எப்படி செலவழிக்கிறோம், எதற்காக செலவழிக்கிறோம் என்பதைப் பொருத்தே இது பொருந்தும்.

கையில் காசை வைத்துக்கொண்டு எண்ணி, எண்ணி செலவிட்ட மக்கள், எவ்வளவு செலவிடுகிறோம், எவ்வளவு கையில் இருக்கிறது என்றே தெரியாமல் செலவு செய்யும் அளவுக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மாற்றிவிட்டன.

இந்த டிஜிட்டல் பணப்பவரித்தனைகளை ஊக்குவிக்கும் போன்பே, ஜிபே, பிம் செயலிகளுக்கு சில விதிமுறைகள் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

1. பண இருப்பு பற்றிய தகவல்

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைப்படி, ஒவ்வொருப் பணப்பரிமாற்றத்துக்குப் பிறகும், ஒரு வங்கிக் கணக்கில் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை வங்கிகள் பயனர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு வரவிருக்கிறது.

2. கையிருப்பை அறிய கட்டுப்பாடு

யுபிஐ பணப்பரிவர்த்தனை செயலிகளில், வங்கிக் கணக்கில் இருக்கும் கையிருப்பை, அடுத்தமாதம் முதல் ஒருவர் செயலி மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறைதான் பார்க்க முடியும்.

அதுபோல, செல்போன் செயலியில் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கை ஒருவர் 25 முறைதான் பார்க்க முடியும்.

ஒரே நேரத்தில் எண்ணற்றோர், செயலிகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் சர்வர் பாதிப்பைத் தடுக்கும் வகையில், இந்த கட்டுப்பாடு ஆகஸ்ட் முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

3. பரிமாற்ற நிலை

ஒரு பணப்பரிமாற்ற நிலையை ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறைதான் அறிய முடியும். அதுவும் 90 வினாடிகளுக்குப் பிறகே மற்றொரு முறை முயல முடியும்.

அதுபோல, தானாகவே வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு அதாவது, இஎம்ஐ செலுத்துவது, கடன் தவணை பிடித்தம் போன்றவை, நாள் முழுக்க எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை மாற்றி ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும். இதனால், வாடிக்கையாளர்கள் அவ்வப்போது அதனை பரிசோதிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

4. என்ன காரணம்?

கடந்த ஏப்தல் - மே மாதங்களில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற செயலிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு, பணப்பரிமாற்றம் தோல்வியடைதல் போன்றக் காரணங்களால், இந்தக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

5. இனி என்னவாகும்?

இது குறித்து வந்த புகார்களைக் கவனத்தில் கொண்ட இந்திய தேசிய கொடுப்பனவு கழகம், மக்கள் அடிக்கடி பணக் கையிருப்பை சோதிப்பது, பணப்பரிமாற்ற நிலையை சோதிப்பது போன்றவையே இந்த தொழில்நுட்பக் குறைபாடுகளுக்குக் காரணம் என கூறப்படுகிறது.

இந்த புதிய மாற்றங்கள் மூலம், பணப்பரிமாற்றங்கள் வேகமாக நடைபெறும், பயன்பாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர, பணப்பரிமாற்றம் செய்வது மற்றும் தொகையில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை.ஒருவர் அதிகபட்சமாக ஒரே பணப்பரிமாற்றத்தில் ரூ.1 லட்சம் வரைதான் செலுத்த முடியும், கல்வி அல்லது மருத்துவ சிகிச்சைக்காக என்றால் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை பரிமாற்றம் செய்யலாம். இதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

6. நாம் எதாவது செய்ய வேண்டுமா?

இந்த மாற்றங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. இந்த விதிமுறைக்கு ஏற்ப யுபிஐ செயலிகளே மேம்படுத்தப்படும். இந்த விதிகளை அறிந்து கொண்டால் ஒரு நாளைக்கு அதிகபட்ச எண்ணிக்கையைக் கடந்துவிட்டு அவதிக்குள்ளாக வேண்டியதில்லை

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

மன்றம் மற்றும் சிறார் திரைப்படம் திரையிடுதல் வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

         Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250725_205241

2022-23 ஆம் ஆண்டு முதல் அனைத்து அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9 - ஆம் வகுப்பு மாணவர்கள் கண்டுணறும் வகையில் , சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் சிறார் திரைப்படங்களை திரையிடுதல் மூலம் மாணவர்களின் கற்பனைத்திறன் , படைப்பாற்றலை வளர்த்தல் . விரிசிந்தனை மற்றும் விமர்சிக்கும் திறன் உள்ளிட்ட திறன்களை மேம்படுத்த இந்நிகழ்வு தூண்டுகோலாக அமைகிறது.

2025-26 மன்றச் செயல்பாடுகள் அரசு பள்ளியில் பயிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறார் திரைப்படம் மன்றம் மற்றும் சிறார் திரைப்படம் திரையிடுதல் வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 

DSE - Children Movie.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

NMMS 2025-2026 -Poor performance in Fresh and Renewal Registration Status Report - regarding .

 Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250726_085523

NMMS- 2025 - > 2026 Fresh and Renewal Registration சார்ந்து பணிகளை முடித்திட இணையவழி கூட்டங்கள் , Whatsapp Group மூலமாக பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் தகவல்களை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது . 75 பார்வை ( 1 ) இல் காணும் கடிதத்தில் NMMS - 2025-2026 -Fresh மற்றும் Renewal 100 சதவீதத்தை Registration- ல் சதவீதத்தை ஜுன் மாதத்திற்குள்ளும் , ஜூலை 15 -க்குள் முடித்திடுமாறு தெரிவிக்கப்பட்டது.

 ஆனால் மேற்காண் பொருள் சார்ந்த பணிகள் 40 % மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் , 60 % பணிகள் நிலுவையில் உள்ளது . NMMS - 2025 - 2026 Fresh and Renewal Registration- ன் பணியில் 100 சதவீதம் முடிக்குமாறும் , தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பிரிவு எழுத்தர் , கண்காணிப்பாளர் மற்றும் INO / HOI & DNO முழு பொறுப்பாவார்கள் என்று அறிவுறுத்தப்பட்டது . மேலும் Fresh மற்றும் Renewal Registration- ல் அரியலூர் . செங்கல்பட்டு , கடலூர் , காஞ்சிபுரம் , கரூர் , கிருஷ்ணகிரி , மயிலாடுதுறை , நாகபட்டினம் . நாமக்கல் , பெரம்பலூர் , இராமநாதபுரம் , இராணிப்பேட்டை , நீலகிரி , திருவள்ளூர் , திருப்பத்தூர் , திருப்பூர் , திருவாருர் , திருவண்ணாமலை , வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 19 மாவட்டங்களில் பணிபுரியும் 25.07.2025 அன்று நேரில் சார்ந்த இவ்வியக்ககத்திற்கு பிரிவு எழுத்தர் மடிக்கணினியுடன் வந்து NMMS - 2025-2026 -Fresh மற்றும் Renewal Registration சார்ந்த பணிகளை முடிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் திருவாருர் , தேனி , கள்ளக்குறிச்சி , சென்னை , சிவகங்கை , தஞ்சாவூர் , தர்மபுரி , திண்டுக்கல் , ஈரோடு , கோயம்புத்தூர் , புதுக்கோட்டை , திருநெல்வேலி , தூத்துக்குடி , மதுரை , தென்காசி , சேலம் , திருச்சி , விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி 19 ஆகிய மாவட்டங்கள் NMMS - 2025-2026 -Fresh மற்றும் Renewal Registration சார்ந்த பணிகளை 25.07.2025 அன்றுக்குள் முடிக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது . அவ்வாறு முடிக்காவிடில் 28.07.2025 அன்று சார்ந்த பிரிவு எழுத்தர் வருகை புரிய வேண்டும் . இப்பணியினை முடித்த பின்னரே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற விவரமும் தெரிவிக்கப்படுகிறது.

NMMS- 2025 - > 2026 Fresh and Renewal Registration Proceedings

👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!NMMS 2025-2026 -Poor performance in Fresh and Renewal Registration Status Report - regarding .

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 1 - ( Set - 9 ) Lesson Plan - T/M & E/M

Education News (கல்விச் செய்திகள்)

Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026

SET : 9

* Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Set - 9 ) Lesson Plan - T/M - Download here

* Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Set - 9 ) Lesson Plan - E/M - Download here

* Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 1 - ( Set - 9 ) Lesson Plan - T/M - Download here

* Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 1 - ( Set - 9 ) Lesson Plan - E/M - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

" ஆற்றல் மிகு ஆசிரியர் விருது 2025 " விருதுக்கு தேர்வாகியுள்ள ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு.

         Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250726_100142_wm

NEWS 7 தொலைக்காட்சி மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வழங்கும் " ஆற்றல் மிகு ஆசிரியர் விருது 2025 " விருதுக்கு தேர்வாகியுள்ள ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு.

Selected Teachers List - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

முதுகலை ஆசிரியர்களுக்கு சென்னையில் இரண்டு நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநர் பட்டியல் வெளியீடு!

         Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250726_144801

முதுகலை இயற்பியல் ஆசிரியர்களுக்கு சென்னையில் இரண்டு நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநர் பட்டியல் வெளியீடு!

PG State Level Training - Physics.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

Dr.இராதாகிருஷ்ணன் விருதுக்கு EMIS தளத்தில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு!!!

   Education News (கல்விச் செய்திகள்)

1485510-

உடற்பயிற்சி வகுப்பை கடன் கேட்காதீர்கள் ஆசிரியர்களுக்கு துணை முதல்வர் அறிவுரை

        Education News (கல்விச் செய்திகள்)

Tamil_News_lrg_3988095

''பள்ளிகளில் உடற்கல்வி பயிற்சி வகுப்பை, மற்ற ஆசிரியர்கள் கடன் கேட்கக்கூடாது,'' என, ஆசிரியர்களை துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தினார்.

கடந்த, 2024 - 25ம் கல்வியாண்டில், சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற, 5,788 மாணவ --- மாணவியருக்கு, பள்ளிக்கல்வி துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. விழாவில் சான்றிதழ்கள் வழங்கி, துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:

தமிழகத்தின் இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காண, இத்தகைய விழா கைகொடுக்கிறது. பாடப் புத்தகத்தின் வழியே கிடைக்கும் கல்வி மட்டும் கல்வி அல்ல. விளையாட்டிலும் கல்வியை மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும்.

ஒத்துழைப்பு, குழுப்பணி, நம்பிக்கை, நட்பு, உத்தி, திட்டமிடல், செயல் படுத்துதல் என, வாழ்க்கைக்கு தேவையான பாடத்தையும் விளையாட்டு கற்று தரும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்த அங்கீகாரம் வழங்குவது தொடர்பான பள்ளி கல்வித்துறை இயக்குநரின் பரிந்துரையை பரிசீலிக்க கோரி வழக்கு

        Education News (கல்விச் செய்திகள்)

14-105

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பான தனியார் பள்ளிகள் இயக்குனரின் பரிந்துரையை பரிசீலிக்குமாறு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய தனியார் கல்வி நிறுவன சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் பழனியப்பன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 1994ம் ஆண்டு தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

 ஆனால், அந்த உத்தரவை அமல்படுத்தாமல் தற்காலிக அங்கீகாரம் மட்டுமே வழங்கபட்டு வருகிறது. இதை எதிர்த்து கடந்த 2021ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிரந்தர அங்கீகாரம் வழங்கும் வகையில் 1994ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்துமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கு பதிலாக நிரந்தர அங்கீகாரம் வழங்கும் அரசாணையை, எந்த காரணமும் தெரிவிக்காமல் அரசு திரும்ப பெற்று கொண்டது.

அதன்பிறகு, 2024ம் ஆண்டு தனியார் பள்ளிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. இது சட்ட விரோதமானது. இதுபோல குறிப்பிட்ட கால வரம்பு நிர்ணயிக்க எந்த அவசியமும் இல்லை என்பதால் நிரந்தர அங்கீகாரம் வழங்கக் கோரி கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அளிக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நீண்ட காலமாக இயங்க கூடிய பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் தனியார் பள்ளிகள் இயக்குனர் பரிந்துரை அளித்தார்.

 அந்்த பரிந்துரையை பரீசிலீத்து நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக தகுந்த உத்தரவு பிறப்பிக்குமாறு கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன், கல்வித்துறை செயலாளர் மற்றும் தனியார் பள்ளி இயக்குனர் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார். இதேபோல, கல்வி உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், ஆரம்ப பள்ளிகளை நடுநிலை பள்ளியாக உயர்த்துவது தொடர்பாக அகில இந்திய தனியார் கல்வி நிறுவன சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி குமரப்பன், ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

தற்போதைய அரசு வேலை ஜூலை 2025

        Education News (கல்விச் செய்திகள்)
தற்போதைய அரசு வேலை ஜூலை 2025

IMG-20250723-WA0014_wm