சுற்றுலா, பயண மேலாண்மை படிப்புகளும், வேலை வாய்ப்புகளும் - ஒரு பார்வை

     Education News (கல்விச் செய்திகள்) 
பிளஸ் டூ முடித்த மாணவர்கள், இளநிலை சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். பி.ஏ. டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ் மென்ட் ஊட்டி அரசு கல்லூரியில் பயிற்றுவிக்கப்படுகிறது.

உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாகவும், 10ல் ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கும் பிரிவாகவும் திகழ்கிறது சுற்றுலாத் துறை. இந்தத் துறைத் தொடர்பான சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை பட்டப் படிப்புக்கு நாளுக்கு நாள் முக்கியத்துவம் அதிகமாகி வருகிறது. மேலாண்மை சார்ந்த கல்வி, உலகச் சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய பாடத்திட்டம், படிக்கும் போதே சுற்றுலா சார்ந்த நிறுவனங்களில் பயிற்சி, படித்து முடித்த உடன் வேலை எனப் பல சிறப்புகளைக் கொண்டு இருக்கும் சுற்றுலா படிப்புகள் உலக அளவில் அநேக மாணவர்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்படும் படிப்பாக உள்ளது.

சுற்றுலா சார்ந்த பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவிச் சிறப்பாகச் செயல்பட்டு, வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து வருகின்றன. ஆனாலும், தமிழகத்தில் சுற்றுலா படிப்பைப் பற்றிய விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் அவ்வளவாக இல்லை என்பதே நிதர்சனம்.

பிளஸ் டூ முடித்த மாணவர்கள், இளநிலை சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். பி.ஏ.டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ் மென்ட், பி.பி.ஏ. டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ் மென்ட், பி.காம். டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ் மென்ட் எனப் பல பெயர்களில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக் கல்லூரி உட்படப் பல அரசு, தனியார் கல்லூரிகளில் பி.ஏ.டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ் மென்ட் என்ற மூன்று ஆண்டு பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது.

ஊட்டி அரசு கல்லூரி சுற்றுலாத் துறை பேராசிரியர்கள் கூறியது: பிளஸ் டூ வகுப்பில் எந்த பிரிவில் படித்த மாணவர்களும் இந்தத் துறையைத் தேர்தெடுத்துப் படிக்கலாம். தகவல் தொடர்புத் திறன், ஆளுமை மேம்பாடு, பயண நிறுவனம் மேலாண்மை, உலகச் சுற்றுலாத் தலங்களைப் பற்றிய அறிவு , சுற்றுலா தொகுப்பு வடிவமைப்பு, சந்தைப் படுத்தல் மேலாண்மை, சுற்றுலா பொருளாதாரம், விருந்தோம்பல் மேலாண்மை, நிகழ்வு மேலாண்மை, விமான மற்றும் விமான நிலைய மேலாண்மை ஆகியவை சுற்றுலா பாடத் திட்டத்தில் உள்ள மிக முக்கியமான பாடங்கள். இந்தப் பாடப் பிரிவில் கற்றுத் தேர்ந்து சிறந்த அறிவும் ஆங்கில மொழிப் புலமையும் பேச்சுத் திறனும் வளர்த்துக்கொண்டால் சுற்றுலாத் துறையில் பிரகாசமான எதிர்காலம் நிச்சயம்.

ஏதாவது ஓர் இளைநிலை பட்டம் பெற்ற பிறகும் கூட, முதுநிலை பட்டமாக சுற்றுலா படிப்புகளைப் படிக்கலாம். MTTM (Master of Tourism & Travel Management), MBA (Tourism), MA (Tourism) எனப் பல பெயர்களில் பல்கலைக் கழகம் சார்ந்து முதுநிலையில் சுற்றுலா படிப்புகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியச் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை கல்வி நிறுவனம் (IITTM) குவாலியர், நொய்டா, புவனேஸ்வர், கோவா, நெல்லூர் ஆகிய இடங்களில் சுற்றுலா சார்ந்த உயர் கல்வியை வழங்குகிறது.

புதுச்சேரி பல்கலைக்கழகம், புதுடெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகம், பனாரஸ் இந்து பல்கலைக் கழகம், HNB கர்வால் பல்கலைக் கழகம், ஜம்மு மத்தியப் பல்கலைக்கழகம், ஹிமாச்சல் மத்தியப் பல்கலைக் கழகம் ஆகிய மத்தியப் பல்கலைக் கழகங்களில் சுற்றுலா சார்ந்த முதுநிலை பாடப் பிரிவுகள் வழங்கப்படுகின்றன

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், கோவை அரசு கலைக் கல்லூரியிலும் சுற்றுலா சார்ந்த முதுநிலை பாடப் பிரிவுகள் வழங்கப்படுகின்றன. புத்தகப் படிப்பைத் தாண்டி செயல் வழி கல்விக்காகச் சுற்றுலா சார்ந்த பாடத் திட்டத்தில் இரண்டு மாத நிறுவனப் பணிப் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் படிக்கும்போதே பணிக்குத் தயாராகிவிடுவார்கள்.

சுற்றுலாத் துறையில் உள்ள ஏராளமான வேலை வாய்ப்புகளுக்கு, அபரிமிதமான மனித வளம் தேவைப் படுகிறது. முதுநிலை சுற்றுலா பயின்ற மாணவர்கள், இந்தத் துறையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களால் மேலாண்மைப் பயிற்சியாளராகப் பணியமர்த்தப்படுகிறார்கள்.

பயண முகவர், சுற்றுலா ஒருங்கிணைப்பு நிறுவனங்கள், ஆன்லைன் பயண நிறுவனங்கள், நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்கள், விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள், ஹோட்டல், போக்குவரத்து மற்றும் சரக்கு நிறுவனங்கள் எனப் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பிறப்பு , பள்ளிச்சான்று அடிப்படையில் ஆதாரில் பிறந்த தேதி மாற்றம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

    Education News (கல்விச் செய்திகள்) 

IMG-20250517-WA0008_wm

பிறப்புச்சான்று, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சான்று அடிப்படையில் பிறந்த தேதியில் மாற்றம் செய்து மறைந்த ராணுவ வீரர் மனைவிக்கு ஆதார் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் அய்யம்பட்டி ஐஸ்வர்யா தாக்கல் செய்த மனு: எனக்கு இன்பராஜா என்பவருடன் திருமணம் நடந்தது. அவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தார். அவர் ஒரு விபத்தில் 2024 டிச., 22 ல் இறந்தார். குடும்ப ஓய்வூதியத்திற்காக எனது ஆதார் அட்டை நகலை ராணுவ நிர்வாகத்தில் சமர்ப்பித்தேன். அப்போது என் பிறந்த தேதி 2006 மே 2 என்பதற்கு பதில் 2005 மே 2 என குறிப்பிட்டிருந்ததை அறிந்தேன். பிறந்த தேதியில் திருத்தம் செய்து ராணுவ அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதற்காக டில்லியிலுள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் விண்ணப்பித்தேன்.​பதிவு விண்ணப்பம் மற்றும் பிறந்த தேதி ஆவணச் சான்றிலுள்ள விபரங்கள் பொருந்தும் வகையில் இல்லை எனக்கூறி ஆன்லைன் மூலம் நிராகரித்தனர். அது சட்டவிரோதமானது என ரத்து செய்ய வேண்டும். பிறந்த தேதியை திருத்தம் செய்து வழங்க தனித்துவ அடையாள ஆணையம், மதுரை புதுார் ஆதார் பதிவு மண்டல அலுவலகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

நீதிபதி வி.லட்சுமி நாராயணன்: ஆவடியிலுள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் 2006 ஜூன் 23 ல் வழங்கிய பிறப்புச்சான்றை மனுதாரர் சமர்ப்பித்துள்ளார். இதன்படி மனுதாரர் சென்னை திருமுல்லைவாயிலிலுள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்துள்ளார். அவர் பிறந்த 2 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்டது. தமிழக அரசு வழங்கிய பத்தாம் வகுப்பு மற்றும் உயர்நிலை (பிளஸ் 2) பள்ளிச் சான்றுகளில் மனுதாரர் 2006 மே 2 ல் பிறந்தார் என்பதைக் குறிப்பிடுகிறது.

ஆதார் அதிகாரிகளிடம் உள்ள சான்றானது, அது ஒருவேளை மனுதாரரால் ஏற்பட்ட தவறின் விளைவானதாகக்கூட இருக்கலாம். பிறப்புச் சான்று, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சான்றுகளின் அடிப்படையில் மனுதாரர் 2006 மே 2 ல் பிறந்தார் என முடிவு செய்கிறேன். இதன்படி மாற்றம் செய்து ஆதார் சான்றை மனுதாரருக்கு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

குறைந்த கட்டணத்தில் இளங்கலை, முதுகலை, பி.எச்டி. படிப்புகள் @ மத்திய அரசுப் பல்கலை.

    Education News (கல்விச் செய்திகள்) 

மிகவும் குறைந்த கட்டணத்தில் அரசு மத்தியப் பல்கலைக் கழகங்களில் இளங்கலை, முதுகலை, பி.எச்டி. படிப்புகளைப் படிக்க முடியும்.

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் நாடு முழுவதும் 13 மத்தியப் பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகின்றன. இது தவிர 5 பல்கலைக் கழகங்களும் இயங்கி வருகின்றன. இவை அனைத்துமே மிகவும் குறைவான கட்டணத்தில் தரமான கல்வியை வழங்குகின்றன.

மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியான ஹாஸ்டல் வசதியும் இங்குண்டு. மத்தியப் பல்கலைக் கழங்களுக்கு என நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அரசின் ஏதாவது ஒரு மத்தியப் பல்கலைக் கழகத்தில் (ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, குஜராத், ஹரியாணா, ஜம்மு, ஜார்க்கண்ட், காஷ்மீர், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெற்கு பிஹார், பெர்ஹாம்பூர்) சேர்ந்து படிக்கலாம்.

தமிழகத்தில், திருவாரூர் மாவட்டத்தில் மத்தியப் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. இங்கு படிக்க 60 சதவீத மதிப்பெண்களோடு பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்கள் 55 சதவீதமும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 50 சதவீத மதிப் பெண்களும் பெற்றிருந்தால் போதுமானது.

ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. (கணிதம், இயற்பியல், வேதியியல், உயிர் அறிவியல்), ஒருங்கிணைந்த எம்.ஏ., மற்றும் எம்பிஏ உள்ளிட்ட முதுகலைப் படிப்புகள் இங்கே கற்பிக்கப்படுகின்றன., எம்.பில்., பிஎச்டி ஆகிய படிப்புகளும் இங்கே உண்டு.

இளங்கலை ஆசிரியர் பயிற்சி, இளங்கலை சட்டப் படிப்பு, மக்கள் தொடர்பியல், ஒருங்கிணைந்த சமூக அறிவியல் ஆகியவையும் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அனைத்துப் படிப்புகளுக்குமான பருவத் தேர்வு கட்டணம் சொற்பத் தொகையே பெறப்படுவதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

25+ படிப்புகள்... தஞ்சை தமிழ்ப் பல்கலை. சிறப்பு என்ன? - ஒரு விரைவுப் பார்வை

     Education News (கல்விச் செய்திகள்) 
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் 1981ம் ஆண்டு செப்.15ம் நாள் மறைந்த தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி. ஆரால் உருவாக்கப்பட்டது. தஞ்சை - திருச்சி சாலையில் ஆயிரம் ஏக்கரில் இப்பல்கலைக் கழகம் உள்ளது. தமிழுக்கென்று துவங்கப்பட்ட பல்கலைக் கழகம். கலைப்புலம், சுவடிப்புலம், வளர் தமிழ்ப்புலம், மொழிப் புலம் மற்றும் அறிவியல் புலம் என 5 பிரிவுகளின் கீழ் பல்வேறு பாடப்பிரிவுகளை கொண்டது.

சிற்பம், இசை, நாடகம், ஓலைச் சுவடி, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், கடல் சார் வரலாறு மற்றும் கடல் சார் தொல்லியல் துறை, அயல் நாட்டு தமிழ்க்கல்வி துறை, மொழிபெயர்ப்புத் துறை, அகராதியியல் துறை, அறிவியல் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, இலக்கியத் துறை, மொழியியல் துறை, மெய்யியல் துறை, பழங்குடி மக்கள் ஆய்வு மையம், நாட்டுப் புறவியல் துறை, சித்த மருத்துவத் துறை, கட்டிடகலைத் துறை என 25-க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்குகிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் இந்த பல்கலைக் கழகத்தில் படித்த பலர் இன்றைக்கு அரசின் உயர் பொறுப்புகளிலும், மத்திய அரசின் தொல்லியல் துறைகளிலும், போட்டித் தேர்வுகளில் வெற்றியாளர் களாகவும், குடிமைப் பணி உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களாகவும் பலர் இருக்கிறார்கள். திருச்சி, தஞ்சை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் மொழி மீது, இலக்கியத்தின் மீதும் ஆர்வம் கொண்ட மாணவ, மாணவியர் பலர் தங்கி படிக்கின்றனர்.

மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் அனைத்து கல்வி உதவித் தொகைகளும் வழங்கப்படுகின்றன. துறை வாரியாக அனைத்து படிப்புகளிலு ம் முதல் 3 இடங்களில் வரும் மாணவ, மாணவியருக்கு அறக் கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் மாணவ, மாணவியருக்கு பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெறும். உலகெங்கிலும் இருந்து வருவோர்க்கெல்லாம் தமிழ் மொழியை, பண்பாட்டை, நாகரிகத்தை, கலை நலங்களைக் கற்பிக்கும் நிறுவனமாக, பண்பாட்டு ஆய்வரணாக இப்பல்கலைக் கழகம் திகழ்கிறது.

சீனா, ஜப்பான், போலந்து, செக்கோசுலோவேகியா, அமெரிக்கா, தென்னாப் பிரிக்கா முதலிய பல நாடுகளிலிருந்து வந்த மாணவர்களுக்குத் தமிழ் மொழி, கலை, இலக்கியம், பண்பாட்டுக்கல்வி வாய்ப்பை வழங்கியுள்ளது. ஒவ்வோராண்டும் இந்திய ஆட்சிப் பணிப் (ஐ.ஏ.எஸ்) பயிற்சியாளர்களுக்குத் தமிழ் மொழிப் பயிற்சியையும் வழங்குகிறது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

SSLC & +1 SCAN Copy & Provisional Certificate - Instructions by DGE!

     Education News (கல்விச் செய்திகள்) 

IMG_20250516_171916

SSLC & +1 SCAN Copy & Provisional Certificate - Instructions by DGE!

DGE - SSLC & +1 Scan & Provisional.pdf

👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

SSLC & +1 துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு!

  Education News (கல்விச் செய்திகள்) 

SSLC & +1 துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு!

ஜூலை -2025 , பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணை இத்துடன் மாணவர்கள் இணைக்கப்பட்டுள்ளது.

 இத்தேர்வுக்கால அட்டவணையினை மற்றும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தங்களது பத்திரிகையில் ஊடகத்தில் செய்திக்குறிப்பாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

Supplementary Time Table 10 & 11.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

IIITDM காஞ்சிபுரத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

  Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IIITDM காஞ்சிபுரத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

IIITDM காஞ்சிபுரம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

IIITDM காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ME / M.Tech / MS தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIITDM வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.37,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIITDM தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.06.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

TANUVAS பல்கலைக்கழகத்தில் Young professional காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.30,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

  Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

TANUVAS பல்கலைக்கழகத்தில் Young professional காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.30,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஆனது Young professional I பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

Young professional I பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.05.2025 தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

CSIR ஆணையத்தில் Stenographer வேலைவாய்ப்பு 2025 – 20+ காலிப்பணியிடங்கள் || ரூ.81,100/- சம்பளம்!

  Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

CSIR ஆணையத்தில் Stenographer வேலைவாய்ப்பு 2025 – 20+ காலிப்பணியிடங்கள் || ரூ.81,100/- சம்பளம்!

Stenographer, Secretariat Assistant பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை கவுன்சில் ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் NML ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CSIR காலிப்பணியிடங்கள்:

Stenographer, Secretariat Assistant பணிக்கென 21 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CSIR வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,900/- முதல் ரூ.81,100 /- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

CSIR தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Written Exam மற்றும் Proficiency Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

CMC வேலூர் கல்லூரியில் Medical Officer வேலை – மாத சம்பளம்: ரூ.78,000/- || முழு விவரங்களுடன்!

  Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

CMC வேலூர் கல்லூரியில் Medical Officer வேலை – மாத சம்பளம்: ரூ.78,000/- || முழு விவரங்களுடன்!

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Medical Officer, Physiotherapist மற்றும் பல்வேறு பணிக்கான 5 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CMC காலிப்பணியிடங்கள்:

Medical Officer, Physiotherapist மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc, M.Sc, MBBS, MD, MS, PG Diploma, PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CMC வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35, 40, 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.78,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CMC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

HAL நிறுவனத்தில் Visiting Consultant வேலை – ஒரு வருகைக்கு ரூ.7,000/- || முழு விவரங்களுடன்!

  Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

HAL நிறுவனத்தில் Visiting Consultant வேலை – ஒரு வருகைக்கு ரூ.7,000/- || முழு விவரங்களுடன்!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் எனப்படும் HAL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Visiting consultant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

HAL காலிப்பணியிடங்கள்:

Visiting consultant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MD / MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HAL வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Visiting consultant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வருகைக்கு ரூ.7,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HAL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

தேன் சிட்டு, புது ஊஞ்சல் மற்றும் கனவு ஆசிரியர் இதழ்கள் - மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் படைப்புகளை பெற்று அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

     Education News (கல்விச் செய்திகள்) 

IMG_20250515_225435

தேன் சிட்டு, புது ஊஞ்சல் மற்றும் கனவு ஆசிரியர் இதழ்கள் - மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் படைப்புகளை பெற்று அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DSE - Magazines Preparation.pdf

👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு - ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

     Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250516_102229

கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு - பணிக்காலத்தில் காலமான / மருத்துவ இயலாமை காரணமாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

DSE - Compassionate Appointment.pdf