Career Choice: உங்களுக்கு பொருத்தமான படிப்பை தேர்வு செய்வது எப்படி?

   Education News (கல்விச் செய்திகள்) 

1361221

தன்னைப் பற்றிய புரிதல், பணி வாழ்க்கையைத் தேர்வு (Career Selection) செய்வதில் மிக முக்கியமானது. உங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு, அதற்கேற்ற படிப்பை தேர்வு செய்து படிக்கும் போதும், அதன் பிறகு அது தொடர்புடைய பணிக்கு செல்லும் போதும் உங்கள் முழுத் திறனையும் பயன்படுத்தி சாதனைகள் படைக்க முடியும். உளவியலாளர் பிராங்க் பார்சன் கருத்துப்படி, பணி வாழ்க்கையைத் தேர்வு செய்வதன் மூன்று முக்கிய காரணிகளுள் ஒன்று தன்னைப் பற்றி அறிதல் ஆகும்.

தன்னைப் பற்றிய புரிதல் மற்றும் படித்து முடித்த பின்பு செய்யப்போகும் வேலையை பற்றிய புரிதல், இவை இரண்டுக்குமிடையே உள்ள தொடர்பே வாழ்க்கைப் பணியை (Career Choice) தேர்வு செய்தல் என்கிறார் பிராங்க் பார்சன். ஆய்ந்தறிந்து இதனை அறிவியல் பூர்வமான உளவியல் தேர்வுகள் (Psychometric Test) மூலம் உங்களுக்குத் தெளிவுபடுத்துதலே கரியர் கவுன்சிலிங்.

இதுகுறித்து, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநர் எம்.கருணாகரன் கூறியது: மாணவர் ஒருவருக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிக்க இடம் கிடைந்திருந்தது. ஆனால், அவர் மருத்துவப் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தார். இது குறித்து அவரது தந்தை கவலையுடன் என்னிடம் தெரிவித்தார். ஆனால், மாணவர் மேலும், தனக்கு இஞ்ஜினியரிங் தான் பிடிக்குமென்றும், அதைத்தான் படிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். அவருக்கு நடத்தப்பட்ட உளவியல் தேர்வுகளில் அவருக்கு பொறியியல் பாடம் பொருத்தமானது எனத் தெரியவந்தது.

பின்பு மாணவரின் தந்தையுடன் தனியாகக் கலந்தாய்வு செய்யப்பட்டது. பின்பு மாணவரை பொறியியல் படிப்பில் சேர்த்துவிட அவரது தந்தை ஒப்புக்கொண்டார். தற்போது அந்த மாணவர் மிகுந்த சந்தோஷத்துடன் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறார். மாணவருக்கு பொறியியல்தான் படிக்க வேண்டும், பொறியியலில் குறிப்பிட்ட பாடப்பிரிவைத்தான் தேர்வு செய்ய வேண்டும், இந்தக் கல்லூரியில்தான் படிக்க வேண்டும் என்ற பரிந்துரை ஏதும் செய்யப்படவில்லை.

மாணவர் இயல்பான திறன், ஆர்வம், புத்திசாலித்தனம் போன்றவை சைக்கோமெட்ரிக் தேர்வுகள் மூலம் அறியப்பட்டு, அதனடிப்படையில் மாணவரின் இயல்புக்குப் பொருத்தமான பணி என்ன? மற்றும் அதற்குத் தேவையான படிப்புகள் குறித்த அறிக்கை அளிக்கப்பட்டது.

பள்ளிப் படிப்பை முடித்தபின்பு, உயர்கல்வியைத் தேர்வு செய்வதில், பெற்றோர்கள், உறவினர்கள், குடும்ப நண்பர்கள், மாணவ, மாணவியரின் மூத்த சகோதர சதோதரிகள் மற்றும் நண்பர்களின் செல்வாக்கு அதிகமாக உள்ளது. சில பெற்றோர்கள், தாங்கள் அடைய முடியாத கனவுகளை தங்களின் பிள்ளைகள் மூலம் நனவாக்க முயலுகின்றனர்.

டாக்டர் தந்தை தனது பிள்ளைகளை டாக்டராக்க விரும்புவதும், ஆடிட்டர் தந்தை ஆடிட்டராக்க விரும்புவதும், இசைக் கலைஞன் தனது பிள்ளை இசைக் கலையைப் பயில வேண்டும் என்று விரும்புவதும் நாம் அறிந்ததே. தங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என்ற அதீத அக்கறையின் காரணமாக தங்கள் பிள்ளைகளின் திறன் என்னவென்று தெரியாமலேயே உயர்கல்வியைத் தீர்மானிக்கின்றனர்.

ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது... - மாணவி ஒருவர் பிளஸ் 2 வகுப்பில் கணிதப் பாடப்பிரிவை படித்து இருந்தார். பள்ளிக்கல்வி முழுவதும் ஆங்கில வழியில் (English Medium) படித்து இருந்தார். ஆனால், பெற்றோர்களின் விருப்பத்துக்கு இணங்க கல்லூரியில் பி.ஏ தமிழ் இலக்கியத்தைத் தேர்வு செய்தார். அவருக்கு கணினி அறிவியல் பாடத்தைப் படிக்கத்தான் விருப்பம் இருந்தது. தமிழ் இலக்கியம் படிப்பதை விரும்பவில்லை. இலக்கியம், கதை, கவிதை போன்றவற்றை விட கணினித்திறன் மற்றும் படைப்பாக்கத் திறன் அவரிடம் மேலோங்கி இருந்தது. அவருக்கு நடத்தப்பட்ட சைக்கோமெட்ரிக் தேர்வுகள் மூலம் மொழியியல் திறன் (Linguistic Intelligence) குறைவாகவே இருந்தது கண்டறியப்பட்டது.

ஆர்க்கிடெக்சர், கணினி அறிவியல், ஃபேஷன் டெக்னாலஜி போன்ற படிப்புகளை படிப்பதற்கான இயல்பான திறமை இருந்தும், தனது திறமையை முழுமையாக பயன்படுத்த வழி இல்லாத தமிழ் இலக்கியத்தை பெற்றோர்களின் விருப்பத்துக்கிணங்க தேர்வு செய்தார். இது Unrealistic choice. உங்கள் குழந்தை, அதிபுத்திசாலியாக இருந்து, ஆனால் அத்திறனுக்கு குறைவான அல்லது சமமில்லாத ஒரு படிப்பைத் தேர்ந்தெடுப்பது Unrealistic choice.

உங்கள் மகன் / மகளின் திறன் சராசரியாக இருந்து தேர்ந்தெடுக்கும் படிப்பின் தரம் மிக அதிகமாக இருப்பதும் Unrealistic choice தான். தன்னைப் பற்றிய புரிதல் கரியரை தேர்ந்தெடுப்பதில் ஒரு பாதி எனில், தனது கரியருக்கு பொருத்தமான படிப்புகள், வேலை வாய்ப்புகள், எதிர்கால வளர்ச்சி மற்றும் உயர்கல்வி போன்ற அனைத்துத் தகவல்களையும் திரட்டுவது மறுபாதி என்கிறார் உளவியலாளர் ராபர்ட் ஹப்போக்.

மாணவர் ஒருவர் தனக்கு உயிரியல் பாடம் பிடிக்காது, அது தொடர

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பிளஸ் 2 முடித்தவர்கள் சிறந்த கல்லூரியை தேர்வு செய்வது எப்படி?

     Education News (கல்விச் செய்திகள்) 

.com/

கல்லூரி காலம் பலரின் கனவுகள் நனவாகும் காலம். விசாலமான கல்லூரி வளாகங்கள் போன்று மாணவ, மாணவரின் பள்ளிக் காலம் முடிந்து, வாழ்வின் அடுத்த கட்ட பெரும்பாய்ச்சலுக்கான காலமே கல்லூரி காலம் தான். புதுவித முயற்சிகளையும், ஆக்கப்பூர்வ சிந்தனைகளையும் வளர்த்தெடுக்கும் வகையில் கல்லூரிச் சூழல் அமைந்தால் மாணவ, மாணவியரின் எதிர்காலம் மிகுந்த நன்மை பயக்கும் என்பது பெற்றோர் மட்டுமின்றி கல்வியாளர்களின் நம்பிக்கையாக உள்ளது.

பிளஸ் 2 முடித்தவர்கள் சிறந்த கல்லூரியை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பள்ளி மேல்நிலை ஆசிரியர்கள் சிலரிடம் பேசும்போது அவர்கள் கூறியது: முதலில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத புதியதாக துவங்கப்பட்ட கல்லூரியோ அல்லது பாடத்திட்டமோ துவங்கப்பட்டால் கல்லூரியில் படிக்கும் காலமானது விரமானதாகவே இருக்கும். எதிர்கால தேடல்களான வேலைவாய்ப்புக்கு பாதிப்பை உண்டாக்கும்.

இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத் திட்டம் அமைய வேண்டியது அவசியம். டிஜிட்டல் தொழில் நுட்ப கருவிகள் ஒருங்கிணைப்புடன் கூடிய பாடத் திட்டம் மாணவர்களிடம் கற்றல் ஆர்வத்தை தூண்டி கற்றல் மேம்படுத்தும். வகுப்பு பாடமும், செயல்வழி பாடமும் சமநிலையில் இருந்தால் நல்ல கல்வி கிடைக்கும்.

பொறியியல் கல்லூரி என்றால் சிறந்த உட்கட்டமைப்பு அவசியம். நவீன ஆய்வகங்கள், சமீபத்திய தொழில் நுட்பத்துடன் கூடிய பட்டறைகள் மற்றும் விரிவான தலைப்புகளை கொண்ட நூலங்கள் அமையப் பெற்றிருக்க வேண்டும். கல்லூரியை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள், தங்கள் துறை சார்ந்த உட்கட்டமைப் புகள் எந்த அளவில் உள்ளது என்பதை கல்லூரியில் படிக்கும் சீனியர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல் கல்லூரி பேராசிரியர்களின் கல்வித் திறனை முன்னாள் மாணவர்கள் மூலம் அறியலாம். சிறந்த கல்லூரியை தேர்வு செய்வதில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மதிப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் வழங்கும் கல்லூரிகளுக்கான தரவரிசையை கருத்தில் கொள்வது நல்லது.

கல்லூரிகளில் செயல்படும் மாணவர் கிளப்புகள், குழுக்கள், தலைமைத்துவம், நேர மேலாண்மை ஆகிய திறன்களை வளர்க்கவும் உதவும் வகையில் கல்லூரி வளாகம் இருக்க வேண்டும். கல்லூரியில் நடத்தப்படும் நேர்காணலும், பங்கு பெறும் நிறுவனங்களும், வேலைவாய்ப்பு பெறும் மாணவர்களின் சதவீதம் ஆகியவை குறித்து கல்லூரியில் சேரும் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். குறிக்கோள், லட்சியம், கனவை நனவாக்க வளாக நேர்காணல் (கேம்பஸ் இன்டர்வியூ) வரமாக அமையும்.

கல்லூரி என்பது பலரின் பரவச காலம் மட்டும் இல்லை. கல்லூரி படிப்புக்குபின் வாழ்க்கை இலையுதிர் காலமாக இல்லாமல், கல்லூரி காலம் முழுவதையும் வசந்த காலமாக மாற்றும் ஆற்றல், கல்லூரி மாணவ, மாணவியருக்கே உண்டு என்பதை நம் மனது பக்குவப்படுத்தி கல்லூரியில் சேர்ந்து படித்தாலே வாழ்வில் புதிய திசை நமக்கு கிடைக்கும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TN-NHIS App Login Method & NHIS E-Card Download Procedure...

     Education News (கல்விச் செய்திகள்) 

IMG_20250511_102016

TN-NHIS APP மூலமாக NEW NHIS ID CARD 2021 DOWNLOAD செய்வது எவ்வாறு?

TN-NHIS Appல் Login செய்யும் முறை & NHIS E-Card தரவிறக்கம் செய்வதற்கான வழிமுறை - PDF...

TN-NHIS App Login Method & NHIS E-Card Download Procedure.pdf

👇👇👇👇

Click here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Tamilnadu Law Colleges Admission 2025 - Notification

     Education News (கல்விச் செய்திகள்)

Applications are invited from eligible candidates through ONLINE MODE for Admission to the 5 Years Integrated Law Degree Courses for the Academic Year 2025 2026

12 ம் வகுப்பு படித்தவர்கள் சட்டபடிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம்

Tamilnadu Law Colleges Admission 2025 - Notification 

IMG-20250511-WA0013

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

G.O 103 - Festival Advance - பண்டிகை கால முன்பணம் ₹20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

    Education News (கல்விச் செய்திகள்) 

பண்டிகை கால முன்பணம் [FA] ₹20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு - 05.05.25

Click Here to Download - G.O 103 - Festival Advance to Government Employees Orders Issued - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

+2 மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் & விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் - DGE Letter

    Education News (கல்விச் செய்திகள்) 

+2 மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் & விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!

Click Here to Download - +2 Scan Copy Application &  Mark Statement Downloading - DGE Letter - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

EMIS Students TC Generation & Promotion பணிக்கான வழிகாட்டுதல்கள்

   Education News (கல்விச் செய்திகள்) 
 
அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,

பின்வரும் வகை பள்ளிகளின் Terminal Class மாற்றுச் சான்றிதழ் (TC) களை முதலில் Generate செய்யவும்

Terminal Classes

1. Primary school - 5 std

2. Middle Schools - 8 Std

3. High Schools - 10 std

4. Higher Secondary schools - 10 and 12 std

* Note: Govt & Aided Schools அனைத்தும், மாணவர்களுக்கான அனைத்து Schemes (EMIS Mark Entry, Cycle Entry, Textbook, uniform, etc) பதிவுகளை உரிய TNSED Schools App / EMIS-இல் மேற்கொண்ட பின் மட்டும்தான் TC Generation & Promotion மேற்கொள்ள வேண்டும்.

For TC reset (Too many attempts exceeded) - Please contact BRTE

Regarding Promotion

* Promotion பணி தொடங்குவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய 3 குறிப்புகள்

குறிப்பு : 1

Terminal Class க்கு TC எடுத்து முடிக்கப்பட்டதை உறுதி செய்து கொள்ளவும்.

(Terminal Class enrollment should be zero)

குறிப்பு : 2

Promotion பணி தொடங்குவதற்கு முன் தேவையான Sections Add செய்து கொள்ளவும்.

( School -> Class and Section).

குறிப்பு : 3

Promotion பணி தொடங்குவதற்கு முன் Terminal வகுப்பு அல்லாத வேறு பள்ளியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு TC வழங்கியிருக்க வேண்டும். 

* குறிப்பு : Promotion பணி EMIS-ல் முடிந்த பின் எந்த மாணவருக்காவது TC வழங்கினால் "Student is Promoted to the Next class ?" என்ற களத்தில் Discontinued என்று குறிப்பிட வேண்டியிருக்கும்.

Promotion work

Point to be noted: 01

  • Reverse order ல் promotion தொடங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • Primary School -  4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.
  • Middle School -  7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.
  • High School -  9 to 10 std, 8 to 9 std,7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.
  • Higher secondary School - 11 to 12 std,  9 to 10 std, 8 to 9 std,7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.

    Note: 

    Higher secondary school - 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TC generate செய்து common pool அனுப்பி, Promotion பணி முடிந்த பின் common pool இல் இருந்து மாணவர்களின் EMIS number கொண்டு search செய்து 11-ஆம் வகுப்பில் Admit செய்ய வேண்டும்.

    Steps to be Followed after Promotion Process

    Promotion முடித்த பின்

    Step 1

    School -> Class and Section பகுதியில் தேவையற்ற  Class and Section ஏதேனும் மாணவர்கள் இல்லாமல் இருந்தால் Delete செய்ய வேண்டும்.

    Step : 2

    School -> Class and Section பகுதியில் அனைத்து வகுப்பு மற்றும் பிரிவுகளுக்கும் Class Teacher, Medium and Group (Only for Higher secondary schools) சரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    Click here to join WhatsApp group for Daily employment news

    Click here to join TNkalvinews whatsapp group

    Click here to join TNPSC STUDY whatsapp group

    (Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

EMIS -ல் ஆண்டுத் தேர்வு முடிவுகளை பதிவேற்றம் செய்வதில் சிக்கலா?

   Education News (கல்விச் செய்திகள்) 

தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு முடிவுகளை 'எமிஸ்'ல் பதிவேற்றம் செய்யும் போது ஆசிரியர்கள் 'பாஸ்' மதிப்பெண் வழங்கிய மாணவர்களுக்கு எமிஸில் 'பெயில்' என பதிவேற்றம் ஆவதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஆண்டுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ளன. அதற்காக தேர்ச்சி விவரத்தை எமிஸில் பதிவேற்றும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' திட்டம் உள்ளது. எனினும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், அவர்கள் தேர்ச்சி விவரம் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

ஆசிரியர்கள் குழப்பம்

ஒன்பதாம் வகுப்பில் 35 மதிப்பெண் பெற்றால் தான் மாணவர்கள் தேர்ச்சி பெற முடியும். ஆனால் அந்தந்த அரசு பள்ளிகளில் செயல்படும் தேர்ச்சிக் குழு, ஒவ்வொரு ஆண்டும் 'தேர்ச்சிக்கு தேவையான 35 மதிப்பெண் பெறாத மாணவர்கள் 25 மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கலாம்' என தீர்மானங்கள் நிறைவேற்றுகின்றன.

இதுபோன்ற பள்ளித் தேர்ச்சிக் குழு தீர்மானங்களை பின்பற்ற கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஆனால் எமிஸில் மதிப்பெண் பதிவேற்றம் செய்யப்படும்போது 35 மதிப்பெண்ணுக்கு குறைவாக பெற்ற மாணவர்களை 'பெயில்' என பதிவு செய்கிறது. இதனால் ஆசிரியர்கள் குழப்பமடைகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பள்ளிகளில் செயல்படும் தேர்ச்சி குழுக்கள் தீர்மானத்தை பின்பற்ற வேண்டாம் என உத்தரவிட வேண்டும் அல்லது 35 மதிப்பெண்களுக்கும் கீழ் பதிவேற்றம் செய்தாலும் தேர்ச்சி பெற்றதாக பதிவாகும் வகையில் 'எமிஸில் சாப்ட்வேரை மாற்றியமைக்க வேண்டும். 

ஆனால் இந்த இரண்டு பிரச்னைகளையும் சரிசெய்யாமல் ஆண்டுத் தேர்வு முடிவுகளை பதிவேற்றம் செய்ய ஆசிரியர்களை கட்டாயப்படுத்துகின்றனர். 1-8 ம் வகுப்பு வரை 'ஆல்பாஸ்' என்பதால் அவ்வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியில் பெரிய குழப்பம் எழுவதில்லை.

ஆனால் ஒன்பதாம் வகுப்பு விவரம் பதிவேற்றம் ஒரு போராட்டமாகவே மாறிவிட்டது. 9ம் வகுப்பில் குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்து பத்தாம் வகுப்புக்கு கொண்டுசெல்லும் போது, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி கடுமையாக பாதிக்கிறது.

ஆனால் ஏன் தேர்ச்சி பாதித்தது என ஆசிரியர்களிடம் தான் அதிகாரிகள் கேள்வி எழுப்பி விளக்கம் கேட்கின்றனர். இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.