அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை துவக்கம்.. விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ

 அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2024ஆம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பத்தாம் வகுப்பு / எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10.05.2024 முதல் 07.06.2024 முடிய விண்ணப்பங்கள் பதிவு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்விற்கான தரவரிசைப்பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்குப் பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் அரசு தொழிற்ப்பிற்சி நிலையம் :


விழுப்புரம் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திண்டிவனம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்கள் தெரிந்துகொள்ளwww.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தினை பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் பொழுது தங்களது அசல் ஆவணங்களான மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் மற்றும் இடப்பெயர்வு சான்றிதழ் ஆகியன பதிவேற்றம் செய்யப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

உதவித்தொகையுடன் (On the Job Training)தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750/- உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பாடப் புத்தகம், மூடு காலணி, சீருடை, சீருடைக்கான தையற்கூலி, வரைபடக்கருவிகள், ஆடவர் தங்கும் விடுதி மற்றும் இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது.

மேலும், பயிற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் On the Job Training ஆனது உதவித்தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழிற் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்துதரப்படும். இந்த இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

விண்ணப்பக்கட்டணம் ரூ.50/- ஐ விண்ணப்பதாரர் Debit card/ Credit Card / Net Banking/ UPI வாயிலாக செலுத்தலாம் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் : 07.06.2024. மேலும், விபரங்களுக்கு 9380114610, 8072217350, 9789695190 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்பழனி தெரிவித்துள்ளார்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு இதோ!

 டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் மொத்தம் 118 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

காலி பணியிடங்கள் மற்றும் பதவிகள் :

கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குனர், மேலாளர், உதவி மேலாளர், துணை மேலாளர், உதவி பொது மேலாளர், தமிழ் நிருபர், ஆங்கில நிருபர், கணக்கு அலுவலர், உதவி இயக்குனர், முதுநிலை அலுவலர், வேளாண் உதவி அலுவலர், நிதியாளர், என 20 வகையில் கீழ் 118 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
வயதுவரம்பு:

ஒவ்வொரு வேலை வாய்ப்பிற்கும் வயதுவரம்புகள் வேறுபடும். 21 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிவாரியாக உச்ச வயதுவரம்பு மாறுபடும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஒருமுறைப்பதிவு மூலம் பதிவுக்கட்டணமாக ரூ.150/- ஐ செலுத்தி. பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒருமுறைப்பதிவு, பதிவு செய்த நாள் முதல் ஐந்தாண்டுகள் வரை செல்லுபடியாகும். கணினி வழியில் பதிவு செய்யும் பொழுது, பத்தாம் வகுப்பு (SSLC) பதிவு எண், சான்றிதழ் எண், தேர்ச்சி பெற்ற ஆண்டு, மாதம், பயிற்று மொழி மற்றும் சான்றிதழ் வழங்கிய குழுமம் ஆகிய தகவல்களை சரியாகப் பதிவு செய்ய வேண்டும்.பிறந்ததேதியை பத்தாம் வகுப்பு (SSLC) அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு(HSC) மதிப்பெண் பட்டியலுடன் சரி பார்க்க வேண்டியது அவசியம். தேர்வுக் கட்டணச் சலுகை கோராத தேர்வர்கள் எழுத்துத் தேர்விற்கு தேர்வுக் கட்டணமாக ரூ. 200 கணினி வழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது செலுத்த வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 14.06.2024 கடைசி தேதி ஆகும். டிகிரி மற்றும் பொறியியல் படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்கள். மேலும் பணிவாரியான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் உடைய விபரங்களை தெரிந்து கொள்ள https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை காணவும்.

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News




🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

College Guidance: படித்த உடன் வேலை வேண்டுமா..? நியூட்ரிஷன் அண்ட் டயட்டீஷியன் பற்றி தெரிஞ்சுக்கோங்க...

 மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. ஊட்டச்சத்தான உணவு இல்லாமல் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியாது அப்படிப்பட்ட உணவும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் அதிகப்படியான உணவு மனிதனுக்குப் பல பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

மனித வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் உணவினை எவ்வளவு உட்கொள்ள வேண்டும், எது சத்தான உணவு? ஆரோக்கிய வாழ்விற்கு எவ்வளவு உண்ண வேண்டும் இந்தத் தெளிவினை நாம் பெற வேண்டுமானால் ஒரு ஊட்டச்சத்து நிபுணரை நாம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
இந்த ஊட்டச்சத்து நிபுணர் படிப்புக்கு 12ஆம் வகுப்பில் என்ன பிரிவு எடுத்துப் படிக்க வேண்டும், இதற்கான தகுதிகள் என்னென்ன, ஊட்டச்சத்து நிபுணர் படித்த பிறகு அரசாங்க வேலைவாய்ப்புகள் என்ன, தனியார்துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் என்ன என்பதைத் தனியார் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் நித்யா விளக்குகிறார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், “தற்போதைய காலகட்டத்தில் மாணவர்கள் அதிகம் விரும்பும் பிரிவாக ஊட்டச்சத்து நிபுணருக்கான பாடப்பிரிவு உள்ளது. அறிவியல் மற்றும் கணினி அறிவியல் பாடப் பிரிவினை எடுத்துப்படிக்கும் மாணவர்கள் அதிகம் விரும்பும் பாடமாக ஊட்டச்சத்து நிபுணர் பாடப்பிரிவு உள்ளது.


ஊட்டச்சத்து நிபுணருக்கான பாடப்பிரிவினை மாணவர்கள் தேர்ந்தெடுத்துப் படிப்பதால் மாணவர்களுக்கு அதிகத் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. இந்தப் பிரிவினைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாணவர்கள் தானும் தன்னை சார்ந்தவர்களும் வயது மற்றும் உடல் எடை ஏற்ப எவ்வளவு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ன உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்கின்றனர் மற்றும் அதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாணவர்கள் இந்த துறை தான் என்று அல்லாமல் பல துறைகளில் பணி புரிவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஊட்டச்சத்து நிபுணர் படிப்புடன் ஆசிரியர் படிப்பு படித்தால் ஆசிரியராகப் பணிபுரியலாம். இவர்கள் ராணுவப் பள்ளியில் கூட பணி புரிவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணி புரிவதற்குக் கூட வாய்ப்புகள் உள்ளது அதற்கான தகுதிகள் இருந்தால்.


இதேபோன்று வேளாண் துறைகளில் ஆராய்ச்சி பிரிவில் பல்வேறு விதைகளைப் பதப்படுத்துவது மற்றும் புதிய விதைகளைக் கண்டறிந்து ஆராய்ச்சி செய்வது மேலும் மருத்துவத்துறையில் ஊட்டச்சத்து நிபுணராக நோயாளிகளுக்கு எந்தெந்த உணவு உட்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கும் பணியினையும் மேற்கொள்ளலாம்.

மேலும் ஊட்டச்சத்து நிபுணர்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஆலோசனை வழங்குதல், அவர்களுக்கான உணவுகளை அட்டவணைப்படுத்திக் கொடுப்பது, மேலும் உடற்பயிற்சிக் கூடத்தில் உணவுக் கட்டுப்பாட்டு ஆலோசகராக என பலவிதங்களில் பணிபுரியலாம்.
இதேபோன்று அரசாங்க பணி என்று வரும்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தில் உணவு தர ஆய்வாளர் பணிக்கும் சேரலாம். இந்தப் பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தேர்வு எழுதி இந்தப் பணியில் சேரலாம்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலர் மற்றும் அங்கன்வாடி அலுவலர் போன்று பலஅரசுப்பணிகள் ஊட்டச்சத்து நிபுணர் பயின்றோருக்கான வேலைவாய்ப்பாக உள்ளது என அவர் தெரிவித்தார்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

College Guidance : உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் குறைந்த கட்டணத்தில் பட்டப் படிப்பு... விண்ணப்பிக்க முந்துங்கள்...

 தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழ்நாடு அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் முதுகலை பட்டப் படிப்பு (MA. Tamil) மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு (Five Years Integrated Post Graduate M.A. Tamil) மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு (PhD) ஆகியன இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 2024-25ஆம் கல்வியாண்டில் தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்ட வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

மேற்கண்ட படிப்பில் பயில விரும்புவோர் சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள்/தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து தெரிந்துக் கொள்ளலாம் அல்லது நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

இருபாலருக்கெனத் தனித்தனியே கட்டணம் இல்லா தங்கும் விடுதி வசதி உள்ளன. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரில் (அ) தபால் மூலம் இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து இயக்குநர் (கூ.பொ.) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி. சென்னை-600113 (தொலைபேசி 044-22542992) என்ற முகவரியில் 07.06.2024 - வெள்ளிக்கிழமைக்குள் அனுப்ப வேண்டும். மேலும் தகவல்பெற மேற்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது நிறுவன வலைத் தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

தமிழகத்தில் NIFTEM வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம்: ரூ.31,000/-

 தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படும் தேசிய உணவு தொழில்நுட்ப, தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (NIFTEM) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Senior Research Fellow (SRF), Project Assistant (PA) ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:


Senior Research Fellow (SRF) – 03 பணியிடங்கள்

Project Assistant (PA) – 02 பணியிடங்கள்

வயது வரம்பு:

பதிவு செய்வோர் கீழ்கண்ட வயது வரம்புடன் இருக்க வேண்டும்.

ஆண் விண்ணப்பத்தாரர்கள் – 35 வயது

பெண் விண்ணப்பத்தாரர்கள் – 40 வயது

NIFTEM கல்வித்தகுதி:

Senior Research Fellow (SRF) – M.Tech. / Ph.D. degree (4 years of UG + 2 years of PG) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Project Assistant (PA) – B.Tech in Agricultural Engineering/ Food Engineering/ Food Technology/Food Process Engineering தேர்ச்சி

NIFTEM ஊதிய விவரம்:


தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை:


1. Written Exam

2. Interview


விண்ணப்பக் கட்டணம்:


பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-

SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை:


ஆர்வமுள்ளவர்கள் வரும் 24.05.2024 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


NIFTEM Notification PDF 2024 

Apply Online

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம் ரூ.40,000/-

 இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Faculty, Office Assistant & Attender பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வங்கி வேலைவாய்ப்பு 2024 :

IOB வங்கியில் Faculty, Office Assistant & Attender பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IOB கல்வித்தகுதி :

  • Faculty – Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் கணினி செயல்திறன் கற்றிருக்க வேண்டும்.
  • Office Assistant – Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வட்டார மொழிகளை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
  • Attender – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.

IOB ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.14,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் written examination, personal interview & Demonstration/ Presentation followed by Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

Faculty and Office Assistant பணிக்கு விண்ணப்பிப்போர் ரூ.200/- கட்டணம் செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் வரும் 31.05.2024 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

IOB Notification PDF 2024 

Application Form 



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

WIPRO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 – டிகிரி இருந்தால் போதும்!

 சென்னையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் IT services & IT consulting சார்ந்த WIPRO நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பிட புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் Associate Analyst பணிக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு செய்ய விழையும் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

தனியார் காலிப்பணியிடங்கள் :

WIPRO நிறுவனத்தில் Associate Analyst பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

WIPRO கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு டிகிரி (Any Graduate) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேவைப்படும் திறன்கள்:

  • Good communication experience
  • Client Constitution and other documents
  • Understanding of Financial Services
  • Data Sources, and in Several Cases Utilizing Financial Reports

WIPRO தேர்வு செயல்முறை :

Written test/ Aptitude/ GD/ HR Interview இவற்றில் ஏதேனும் ஒன்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு அதிவிரைவில் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்

WIPRO Job Application 2024




🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

TPF/GPF Account Slip published

 

account slip AG OFFICE ஆல் வெளியிடப்பட்டது.

நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டுத்தாள் (GPF/TPF Account Slip) வெளியிடப்பட்டுள்ளது.

கணக்கீட்டுதாள் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு  வரும் 4 இலக்க OTP எண்ணை உள்ளீடு செய்து தான் கணக்கீட்டுதாளை பதிவிறக்கம் செய்ய இயலும்.


ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்றி இருந்தால் தங்களது


பெயர்

GPF/TPF NUMBER


மற்றும் பழைய தொலைபேசி எண்,புதிய தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு www.aggpf.nic.in என்ற முகவரிக்கு இமெயில் (email) அனுப்பி தொலைபேசி எண்ணை மாற்றம் செய்துகொள்ளலாம்.


Click Here To Download - GPF/TPF Account Slip



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

5690+ ரயில்வே பணிகள்… என்ன படிக்க வேண்டும் தெரியுமா??

 

image-1-16

Railway Recruitment Board (RRB) வாரியத்தில் இருந்து Assistant Loco Pilots பதவிக்கு மொத்தமாக 5696 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு கடந்த ஜனவரியில் அறிவிப்பு வெளியானது. நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்பு நிலவிய பணி என்பதால் லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்தன. அதனைத் தொடர்ந்து பதிவு செய்தவர்களுக்கு தேர்வு விரைவில் நடத்தப்படவுள்ளது.அதற்கு படித்து வருபவர்களுக்கு உதவி புரிய எங்கள் வலைத்தளத்தில் பாடங்களை வழங்கியுள்ளோம்.


RRB ALP தேர்வு செயல்முறை:

CBT I

CBT II

CBAT

Document Verification

RRB ALP CBT I Exam Pattern:

IMG_20240520_160109

பாடங்கள் கேள்விகளின் எண்ணிக்கை மதிப்பெண்கள் கால அளவு

கணிதம் 75 75 60 நிமிடங்கள்

மன திறன்

பொது அறிவியல்

பொது விழிப்புணர்வு

RRB ALP CBT II Exam Syllabus:

Mathematics:


Mensuration

Number system,

BODMAS,

Decimals,

Fractions,

LCM and HCF,

Ratio and Proportion,

Percentages,

Time and Work,

Time and Distance,

Simple and Compound Interest,

Profit and Loss,

Algebra,

Geometry and Trigonometry,

Elementary Statistics,

Square Root,

Age Calculations,

Calendar & Clock,

Pipes & Cistern

Mental Ability (Reasoning)


Analogy

Alphabetical and Number Series

Coding and Decoding

Mathematical operations,

Relationships,

Syllogism,

Jumbling,

Venn Diagram,

Data Interpretation and Sufficiency,

Conclusions and Decision Making,

Similarities and Differences,

Analytical reasoning,

Classification,

Directions,

Statement – Arguments and Assumptions

General Science


Biology

Physics

Chemistry

Environment

General Awareness


Current Affairs – Latest Awards, Sports Events, Railway Updates, National Current Affairs

Science and Technology

Polity

Economy

Award & Honors

Art & Culture

Sports

Static GK

Download Syllabus PDF

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

2023-2024 TPF/GPF ACCOUNT SLIP Published

 TPF/GPF ACCOUNT SLIP 

2023-2024 ஆம் நிதியாண்டின் பொது வருங்கால வைப்பு நிதி/ ஆசிரியர் சேமநல நிதி கணக்கீட்டு தாள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. www.agae.tn.nic.in என்ற இணையதளத்தில் கணக்கீட்டு தாள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத / தேர்வு எழுதாத மாணவர்களை மறு தேர்விற்கு பள்ளிக்கு வந்து விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத / தேர்வு எழுதாத மாணவர்களை மறு தேர்விற்கு பள்ளிக்கு வந்து விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!


IMG_20240520_201209
🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

 

dinamani%2F2024-05%2F34de7aa2-a865-49cb-8d38-6974f7c5b5fb%2FScreenshot_2024_05_20_085649

பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகாரத்தின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.


அதன் மூலம் நாடு முழுவதும் 21 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று யுஜிசியால் அறிவிக்கப்பட்டுள்ளன.


அந்த பட்டியலில், தில்லியில் 8, உத்தரப்பிரதேசத்தில் 4, ஆந்திரா, மேற்கு வங்கம், கேரளத்தில் தலா 2-ம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் தலா 1 உட்பட மொத்தம் 21 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள எந்த பல்கலைக்கழகமும் இந்தப் பட்டியலில் இல்லை.


பிற மாநிலக் கல்லூரிகளில் படிக்க விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள் இந்தப் பட்டியலை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களை யுஜிசியின் https://www.ugc.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News