Showing posts with label Travel. Show all posts
Showing posts with label Travel. Show all posts

கம்மியான செலவில் ஒரு குளுகுளு கோடை சுற்றுலா... மேகமலையில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்!

 மேகமலை தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் ஒரு சிறிய பிரமிக்க வைக்கும் பகுதி. தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து 45 கிலோ மீட்டர் மலைப்பாதை வழியாகச் சென்றால் மேகமலையை அடைந்து விடலாம். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது அழகான மேகமலை.

இங்கு தாவரங்கள், வனவிலங்குகள், நூற்றுக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. காணும் திசையெல்லாம் பசுமையான காட்சிகள், நீர்வீழ்ச்சிகள், மலைகள், இதமான சூழல் என மேகமலை நம்மை கட்டி போடுகிறது. ஊட்டி, கொடைக்கானலுக்கு மற்றாக கம்மி செலவில் மலை பகுதிக்கு டூர் போக விரும்புபவர்களுக்கு மேகமலை வரபிரசாதம் என சொல்லலாம்.


இயற்கையின் அழகை கண்டு களிக்கவும், அமைதியாக நேரத்தை கழிக்கவும் ஏற்ற இடம். இங்கு காப்பி, தேயிலை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தேயிலைத் தோட்டங்கள், பசுமையான மலைத்தொடர்களை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

18 ஹேர்பின் வளைவுகள் வழியாகச் சென்றாலும், இருபுறமும் உள்ள தேயிலை மற்றும் ஏலக்காய் பண்ணைகள் வழியாகச் சென்றாலும், மேகமலைக்கு வாகனம் ஓட்டுவது சலிப்பை தராது. தேனிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் முதல் தேர்வாக மேகமலை இருக்கும். அதிகமான வெயிலும் அதிகமான குளிரும் இல்லாமல் இதமான சூழல் எப்போதும் காணப்படும். புலிகள் சரணாலயத்துக்குட்பட்ட பகுதி என்பதால் இங்கே கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மேகமலைக்கு செல்ல முடியும்.


மணலாறு அணை : மணலாறு அணை மேகமலை பேருந்து நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்குகள் மற்றும் குடியிருப்புகளை மேலிருந்து பார்க்க முடியும். மூடுபனி படர்ந்த மலை சிகரங்கள், பசுமையான பள்ளத்தாக்குகள, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து கிடக்கும் வனப்பகுதி நல்ல அனுபவத்தை தரும்.


மேகமலை காட்சி முனை : மேகமலைப் பேருந்து நிலையத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மேகமலை காட்சி முனை. அமைதியான சூழல் மற்றும் பசுமையான தாவரங்களால் சூழப்பட்ட இந்த இடம் பிரமிப்பை ஏற்படுத்தும். சமவெளிகள், ஏரிகள், பெரிய தேயிலை தோட்டங்கள் மற்றும் மூடுபனி மூடிய மலைகளின் காட்சிகளை அனுபவிக்க முடியும்.


வனவிலங்கு சரணாலயம் : மேகமலை வனவிலங்கு சரணாலயம் பாதுகாக்கப்பட்ட காப்பகமாகும். 63,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயம் வனவிலங்கு பிரியர்களுக்கு சொர்க்கமாக உள்ளது. இது கேரளாவின் பெரியார் புலிகள் சரணாலயத்திற்கு ஒரு பாதுகாப்பு மண்டலமாக செயல்படுகிறது.


இரவங்கலாறு அணை : இரவங்கலாறு அணை மேகமலை பேருந்து நிலையத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நீர்த்தேக்கம். இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி இருக்கும். இந்த அணை அருகில் இரவங்கலாறு அருவி உள்ளது. இரவங்கலாறு பகுதியில் உள்ள ஏரியில் வன விலங்குகள் நீர் அருந்தி செல்லும் அழகை ரசிக்கலாம்.

மஹாராஜா மெட்டு : இரவங்கலாறு அணையிலிருந்து 1 கிமீ தொலைவிலும், மேகமலை பேருந்து நிலையத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும் மஹாராஜா மெட்டு அமைந்துள்ளது. மேகமலை பயணத்தின் ஒரு பகுதியாக, கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. இங்கு அமைந்துள்ள மகராசியம்மன் கோவில் வரலாற்று சிறப்பு பெற்றது.



🔻 🔻 🔻 

தேனி சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகள்..! ஆச்சர்யத்துடன் பார்த்து செல்லும் மக்கள்..!

 தேனி மாவட்டத்தில் லோயர் கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை முல்லைப்பெரியாறு அணைபாசனத்தின் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் கம்பம் பள்ளத்தாக்கின் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் முதல் போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்படும் இடங்களில் வெளிநாட்டு பறவைகள் வயல்வெளிகளுக்கு வந்து முகாமிடுவது வழக்கமாக வைத்துள்ளது.  அதேபோல் இந்த ஆண்டும் வயல்வெளிகளில் உள்ள புழு, பூச்சிகள் உள்ளிட்ட இறைகளை உண்பதற்க்காக வெளிநாட்டு பறவைகள் அதிகம் வர துவங்கியுள்ளன.

மேலும் இனப் பெருக்கத்திற்காக வந்துள்ள வெளிநாட்டு பறவைகளின் வருகையும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு நீள மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, பிளமீங்கோ, அகல வாயான், கருப்பு உள்ளான், போன்ற பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், வயல்வெளிகளில் தேங்கியுள்ள நீரில் இறையை தேடி வெளிநாட்டு பறவைகள் இங்கும் அங்கும் பறந்து வருவது பொது மக்களையும் , சுற்றுலா பயணிகளின் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

விடுமுறையை கழிக்க சூப்பர் ஸ்பாட்.. வேடந்தாங்கல் எப்போது செல்லலாம்?

 புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செங்கல்பட்டில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது இந்தியாவின் பெரிய நீர்ப்பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாகும். இங்கு பறவைகள் தண்ணீரில் மூழ்கிய மரங்களின் மீது கூடு கட்டி வாழ்கிறது. வெளிநாடுகளில் இருந்து இனப்பெருக்கத்திற்காக பல்லாயிரம் கிலோ மீட்டர் பயணித்து பருவ காலத்தில் இங்கு வரும் சில பறவைகள் அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் இருக்கும்.

டார்டர், பிளெமிங்கோக்கல், மவுண்ட் கோன்ஸ், வெள்ளை ஐபிஎஸ், ஸ்பூன் மில்ஸ் மற்றும் சாம்பல் உள்ளிட்ட பெரும்பாலான புலம்பெயர்ந்த பறவைகள் வருகை தருகையில் பறவைகளை ஆற்றங்கரை அல்லது கண்காணிப்பு கோபுரத்திலிருந்து பார்க்க முடியும்.

இந்த சரணாலயம் பார்வையிட சிறந்த காலம் அக்டோபர் முதல் மார்ச் வரை ஆகும். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல சுற்றுலா தளங்கள் இருந்தாலும் மிக முக்கிய சுற்றுலா தளமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் விளங்கி வருகிறது. ஏனென்றால் பல ஆயிரக்கணக்கான பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு குறிப்பிட்ட சில மாதங்களில் வந்து செல்வதால் சுற்றுலாப் பயணிகள் பலரும் இதைக் காண ஆர்வமுடன் வருவார்கள். இந்த இடம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறது.

சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சென்னை உள்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் என அனைவரும் இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை வந்து அடைய முடியும். இதுபோக வட மாவட்டங்களான திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் பேருந்து மூலமாக சில மணி நேரங்களில் பேருந்து மூலமாகவோ அல்லது தங்கள் சொந்த வாகனம் மூலமாகவோ வேடந்தாங்கல் சரணாலயத்தை பார்வையிட முடியும்.

தற்போது சீசன் காலம் தொடங்கும் நிலையில் சுமார் 20,000 மேற்பட்ட வகையிலான பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்து வருகின்றன. எனவே, பறவைகளை காண்பதற்காக வெளிநாட்டினர் வெளி மாநில வெளி மாவட்டங்களில் இருந்து ஆண்டு தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வேடந்தாங்கல் பறவை சரணாலயத்தை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வாரத்தில் அனைத்து நாட்களும் கண்டுக்களிக்கலாம். பெரியவர்களுக்கு 25 ரூபாயும் சிறியவர்களுக்கு ஐந்து வயதுக்கு மேல் 5 ரூபாயும் வீடியோ கேமரா எடுத்துச் சென்றால் 150 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.



மழைக்காலத்தில் பாதுகாப்பான பயணத்திற்கு இந்த 7 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

 மழைக்காலத்தில் பயணம் செய்வது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். சொந்த வாகனம் , பேருந்து, ரயில் என்று எதில் பயணித்தாலும், ஜன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் இருந்து காற்றுடன் மிதந்து வரும் சாரல் காற்றோடு , மழை பொழிந்து பசுமையுடனும் புத்துணர்ச்சியுடனும் மிளிரும் சூழலை ரசிப்பதே தனி சுகம். அதை ரசிப்பதற்காகவே பலர் மழை காலங்களில் சுற்றுலா செல்வர்.

சொந்த வாகனத்தில்  தூறல் மழை, குளிர்ந்த காற்றோடு  நீண்ட தூர சாலைகளில் நீண்ட நேரம் ஓட்டும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே கிடையாது. நீங்களும் மழைக்கால பயணத்தை மிகவும் ரசிக்கிறீர்கள் என்றால், சில முக்கியமான விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு உங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள். அவை  பயணத்தின் போது உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், சில சிக்கல்களைத் தவிர்க்கவும் உதவியாக இருக்கும்.

வானிலை முன்னறிவிப்பு : எங்கு செல்வதற்கு முன்னும், அங்குள்ள வானிலை நிலையை அறிந்து கொள்ளுங்கள். ஒரு இடத்திற்கு செல்லும் 1 வாரத்திற்கு முன்னரே அந்த இடத்தின் வானிலை மற்றும் எதாவது பேரிடர் எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கிறதா என்று தெரிந்துகொண்டு செல்லுங்கள்.

வாகனத்தைச் சரிபார்க்கவும்: நீங்கள் சாலைப் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், பயணத்திற்கு பாதுகாப்பான வாகனத்தை சரியாக தேர்வு செய்யவும். சொந்த வாகனம் என்றால் வாகனத்தின் டயர்கள், பிரேக்குகள் மற்றும் விளக்குகள் போன்றவற்றை சர்வீஸ் சென்டரில் முழுமையாகச் சரிபார்த்தால் நல்லது. மழை பெய்யும்போது இடையில் எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிப்பது சிரமமாகிவிடும்.

வானிலைக்கு ஏற்ப பேக்கிங் செய்யுங்கள்: மழைநீரால் சேதமடையக்கூடிய பொருட்களை ஒன்றாக எடுத்துச் செல்லாதீர்கள். அதனுடன் ஒரு நீர்ப்புகா பையை எடுத்துச் செல்லவும். மொபைல், கேமரா, டார்ச் போன்றவற்றை வாட்டர் ப்ரூப் பைகளில் மட்டும் வைத்திருங்கள். ஈரமான ஆடைகள் அல்லது பொருட்களை வைக்க தனியாக ஒன்று அல்லது இரண்டு கூடுதல் பிளாஸ்டிக் பைகளை வைத்திருங்கள். அவற்றை ஒன்றாக போட்டால் நல்ல ஆடைகளும் வீணாகும். வாசம் வீசும்.

ஆடைகளின் தேர்வு: உங்கள் ஆடைகள் ஈரமான பிறகு எளிதில் உலரும் வகையில் இருப்பது முக்கியம். ரெயின்கோட், குடை, ஜாம்பூட் போன்றவற்றையும் சேர்த்து வைத்துக் கொள்ளலாம். நீர் புகாத பாதணிகளை எடுத்துச் செல்லுங்கள். அதே போல அடர்த்தியான எளிதில் காயாத ஆடைகளை தவிர்ப்பது நல்லது.

விதிகளைப் பின்பற்றவும்: மழைக்காலத்தில் சாலை மற்றும் போக்குவரத்து மாற்றங்களின் வழிகாட்டுதல்களை தெரிந்துகொண்டர் அதை சரியாக பின்பற்றவும். அதே போல வழிமாற்றங்கள் ஏதும் உள்ளதா என்பதையும் அறிந்து கொண்டு கிளம்புங்கள். அதே போல மாற்று பாதைகளையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஆப்லைன் மேப் வைத்திருப்பது முக்கியம்.

உணவு தண்ணீர் : பயணத்தின் போது போதுமான அளவு தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். மழைக்காலத்தில் வெளியில் சாப்பிடும்  தண்ணீர் மற்றும்  உணவால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியமான நீண்ட நாள் கெடாத உணவு பண்டங்களை கையில் வைத்துக்கொள்ளுங்கள். அதே போல அவச கால மருந்துகளையும் உடன் வைத்திருங்கள்.

ஃபோன் மூலம் தொடர்ந்து இணைந்திருங்கள்: உங்கள் வழித் தகவலை அல்லது திட்டத்தை உங்களுக்கு நெருக்கமாக  உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதனால் ஏதேனும் தகவல் தொடர்பு செயலிழந்தால் அவர்கள் உங்களுக்கு உதவ முடியும். ஏதேனும் ஆபத்து என்றால் உடனடியாக உங்களை கண்டறியவும் இது உதவி செய்யும்.

உலகத்திலேயே மழையே பெய்யாத ஒரே கிராமம் எது தெரியுமா..? ஏன் அங்கு மழை பெய்வதில்லை..? விரிவான தகவல்கள்..!

 தென் மேற்கு பருவக்காற்று வீசி  பெய்யும்போது தான் இத்தனை மாதங்களாக கொளுத்தி எடுத்த வெயிலில் இருந்து தப்பித்தோம் என்ற ஆறுதலும் குளுமையான உணர்வும் ஏற்படுகிறது. இத்தனை நாட்கள் வறண்டு கிடந்த இடங்கள் எல்லாம் மழை பெய்தபிறகு தான் புத்துயிர் பெற்றது போல இருக்கிறது.

நிலத்தில் இருந்து நீர் ஆவியாகி பூமியின் வளிமண்டலத்தில் குளிர்ந்து மேகங்களை உருவாக்குகிறது. இந்த மேகங்கள் போதுமான அளவு கனமாக இருக்கும்போது, ​​​​குளிர்காற்று படும்போது அவை மழை வடிவத்தில் பூமியில் விழுகின்றன. உலகின் அனைத்து பகுதிகளும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மழையைப் பெறுகின்றன. ஆனால் உலகில் மழையே பெய்யாத இடம் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?

அது எப்படி இருக்க முடியும். எல்லா இடங்களிலும் லேசான மழையாவது பொழியுமே என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் உண்மைதான். உலகில் மழையே பெய்யாத ஒரு கிராமம் உள்ளது.   பல ஆண்டுகளாக மழையின்றி அந்த கிராம மக்கள் தவித்து வருகின்றனர். அந்த கிராமத்தை பற்றி தான் இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.

ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் தான் அல்-ஹுதீப் என்ற இந்த கிராமம் உள்ளது.  இந்த கிராமம்  தரை மட்டத்திலிருந்து சுமார் 3200 மீட்டர் உயரத்தில் ஒரு சிவப்பு மணற்கல் மலையின் உச்சியில் உள்ளது. மற்ற இடங்களை விட்டு உயரமாக இருந்தாலும் இந்த இடம் வறட்சியுடன் தான் காணப்படுகிறது.

உலகம் முழுவதும் வருடத்தின் வெவ்வேறு நேரங்களில் மழை பெய்கிறது.  ஆனால் அல் ஹுதைபே கிராமம் எப்போதும்  வறண்டு கிடக்கிறது.  இந்த கிராமத்தில் எப்போதும் மழை பெய்யாததால், வானிலை மிகவும் வறண்டு காணப்படும். பகலில் அதிகப்படியான வெப்பமும்  இரவில், கிராமத்தில் உறைபனி குளிரும் இறங்குகிறது.  மீண்டும் காலை சூரியன் உதிக்கும்போது வானிலை வெப்பமடைகிறது.

ஆனால் இந்த கிராமத்தில் ஏன் மழை பெய்வதில்லை என்ற கேள்வி எழும். அதற்கு  காரணம், எமனின் இந்த பகுதியில் நீர் ஆதாரங்கள் போதுமானதாக இல்லாதது மற்றும்  மேகங்கள் குவியாத உயரத்தில் கிராமம் அமைந்துள்ளது தான் காரணம்.  அதன் கீழ் அடுக்குகளில் மேகங்கள் குவிகின்றன.

அல் ஹுதைப் கிராமத்தின் இடம் சமவெளியில் இருந்து சுமார் 3200 மீட்டர் உயரத்தில் உள்ளது.  சாதாரண மழை மேகங்கள் சமவெளியில் இருந்து 2000 மீட்டருக்குள் குவியும்.  எனவே அல்-ஹுதைபின் மீது மேகங்கள் குவிவதில்லை.  மேலும் மேகங்கள் இல்லாவிட்டால் மழை பெய்ய வாய்ப்பில்லை. அதனால் தான் இங்கு மழைக்கான பேச்சே இல்லை.


திண்டுக்கல்லில் குதூகலமாக குளியல் போட குதிரை குளிப்பாட்டி நீர்வீழ்ச்சி ஓடை..! எங்க இருக்குன்னு தெரியுமா?

 திண்டுக்கல்லில் வெள்ளிமலை நீர்வீழ்ச்சி போன்ற எத்தனையோ நீர்வீழ்ச்சிகள் இருந்தாலும் எளிமையான முறையில் இயற்கை சுற்றுச்சூழலில் பாதுகாப்பான முறையில் சிறிய அளவிலான நீர்வீழ்ச்சியில் குத்தாட்டம் போட்டு குளிக்கும் குதூகலம் கிடைப்பது எளிதில்லை.

இப்படிப்பட்ட சிறிய அளவிலான நீர்வீழ்ச்சி ஓடை எங்க இருக்குன்னு பார்த்தோம்னா திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் அணையில் தான் அமைந்திருக்கிறது. இந்த காமராஜர் அணையின் கரையோரமாக மலையை நோக்கி 2 கிலோ மீட்டர் கடந்து வந்த பிறகு மலையிலிருந்து வரும் குதிரை குளிப்பாட்டி ஓடை நீர்வீழ்ச்சிதான் இந்த குதூகலம் மிக்க இடம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு இந்த இடம் இருப்பது தெரியாது. ஏனென்றால் ஆத்தூர் காமராஜர் அணையின் கரையோரமாக வந்து ஓடையை கடந்து , சிறிய புதர் போல காட்சியளிக்கும் தட்டைகளின் நடுவே சிறிய வழித்தடம் ஒன்று இருக்கும் அதனை கடந்து வந்தால் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கன்னிமார் கோவில் அமைந்திருக்கும்.

திண்டுக்கல்லில் வெள்ளிமலை நீர்வீழ்ச்சி போன்ற எத்தனையோ நீர்வீழ்ச்சிகள் இருந்தாலும் எளிமையான முறையில் இயற்கை சுற்றுச்சூழலில் பாதுகாப்பான முறையில் சிறிய அளவிலான நீர்வீழ்ச்சியில் குத்தாட்டம் போட்டு குளிக்கும் குதூகலம் கிடைப்பது எளிதில்லை.

இப்படிப்பட்ட சிறிய அளவிலான நீர்வீழ்ச்சி ஓடை எங்க இருக்குன்னு பார்த்தோம்னா திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் அணையில் தான் அமைந்திருக்கிறது. இந்த காமராஜர் அணையின் கரையோரமாக மலையை நோக்கி 2 கிலோ மீட்டர் கடந்து வந்த பிறகு மலையிலிருந்து வரும் குதிரை குளிப்பாட்டி ஓடை நீர்வீழ்ச்சிதான் இந்த குதூகலம் மிக்க இடம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு இந்த இடம் இருப்பது தெரியாது. ஏனென்றால் ஆத்தூர் காமராஜர் அணையின் கரையோரமாக வந்து ஓடையை கடந்து , சிறிய புதர் போல காட்சியளிக்கும் தட்டைகளின் நடுவே சிறிய வழித்தடம் ஒன்று இருக்கும் அதனை கடந்து வந்தால் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கன்னிமார் கோவில் அமைந்திருக்கும்.

இந்தக் கன்னிமார் கோவிலில் சுற்றுவட்டாரத்தில் விவசாயம் செய்யும் பொதுமக்கள் விசேஷ நாட்களில் பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கமான ஒன்று. இவ்வாறு கோவிலுக்கு தரிசனம் செய்ய வருபவர்களும் இந்த குதிரை குளிப்பாட்டி நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் இந்த ஓடையில் குளித்துவிட்டு தான் கோவிலில் வந்து பூஜை செய்து வழிபடுவதாக கூறுகின்றனர்.

மேலும் இந்த குதிரை குளிப்பாட்டி நீர்வீழ்ச்சி ஓடை மலைகளின் நடுவே அமைந்திருப்பதால் வாரத்திற்கு நான்கு ஐந்து முறையாவது தினமும் சிறிதளவாவது மழை பெய்து கொண்டே நான் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

இதுகுறித்து திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் வேலை பார்க்கும் மேட்டுப்பட்டி சேர்ந்த சரவணன் கூறுகையில், “இந்தக் இந்தக் குதிரை குளிப்பாட்டி நீர்வீழ்ச்சி என்பது ஆபத்து விளைவிக்கும் இடத்தில் இருப்பதால் இந்த குதிரை குளிப்பாட்டி நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் ஓடையை குதிரை குளிப்பாட்டி இடம் என்று அழைப்போம்.

இந்த நீர்வீழ்ச்சி இங்கு இருப்பது திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் தாலுகாவில் உள்ள காமராஜர் அணையின் கரையோரத்தில் இருப்பது பெரும்பாலும் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இது ஒரு அருமையான பொழுதுபோக்கு இடமாக திகழ்கிறது, உள்ளூரிலே இருக்கும் பல்வேறு பொழுதுபோக்கு இடங்களில் இதுவும் ஒன்று.

எங்களுக்கு இன்று விடுமுறை நாட்கள் என்பதால் நாங்கள் ஒரு 15 நபர்கள் ஒன்றாக கூடி இங்கு வந்து குளித்து குதூகலமாக பொழுது கழித்துக் கொண்டிருக்கிறோம், இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் தரும் இடங்களை அனைவரும் பார்த்து மகிழ வேண்டும்” என்று தெரிவித்தார்.

அழகழகான நீர் வீழ்ச்சிகள்.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய லிஸ்ட்!

 மலைகள், ஏரிகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்ற அழகான இயற்கை வளங்களை இந்தியா கொண்டுள்ளது. குறிப்பாக  இங்குள்ள பல மலைவாசஸ்தலங்களின் முக்கிய நீர்வீழ்ச்சிகள் பெரும் அளவிலான மக்களை ஈர்த்து வருகிறது. பருவ தொடங்கியுள்ளதால் நீர் வரத்தும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அருவிகள் தவிர்த்து அருகில் உள்ள மாநிலங்களில் உள்ள இடங்களைத் தேடுவோம். அப்படி நமது மாநிலத்திற்கு அருகே உள்ள மாநிலமான ஆந்திராவில் உள்ள அற்புதமான அருவிகளை பற்றி தான் இந்த செய்தித் தொகுப்பில் சொல்ல இருக்கிறோம்.  ஆந்திரா பக்கம் டூர் சென்றால் இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க

தலகோனா நீர்வீழ்ச்சி, திருப்பதி : சேஷாசல மலைகளின் நடுவில் அமைந்துள்ள அடர்ந்த காடுகளுக்கு இடையில் இருக்கும் இது திருப்பதியில்  இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு 60 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் அருவிக்கு அருகே  ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட தாவரங்கள் உள்ளன. அதனால் இந்த அருவி தண்ணீருக்கு நோய் தீர்க்கும் சக்தி இருப்பதாக நம்புகின்றனர்.

கடிகா நீர்வீழ்ச்சி, விசாகப்பட்டினம்: கடிகி நீர்வீழ்ச்சி அருவி சுமார் 50 அடி உயரம் கொண்டது. இது போரா குகையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது கோஸ்தானி ஆற்றில் இருந்து தொடங்குகிறது. மலையேற்றப் பிரியர்களுக்கு இந்தப் பகுதி மிகவும் ஏற்றது. மேலும், நடந்து செல்பவர்கள் இங்குள்ள இயற்கை அழகை கண்டு மயங்கும் வண்ணம் இருக்கும்.

ரம்பா நீர்வீழ்ச்சி, கிழக்கு கோதாவரி: இது ஆந்திராவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்த அருவியை அடைய 20 நிமிட மலையேற்றம் செய்யவேண்டும்.   ரம்பசோடவரத்திலிருந்து 10 கிமீ தொலைவிலும்,  ராஜமுந்திரியிலிருந்து 58 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் உள்ள இந்த அருவியில் குளிப்பது சிலிர்ப்பையும், புத்துணர்ச்சியையும் தரும்.

நாகலாபுரம் அருவி, சித்தூர் : திருப்பதியில் இருந்து 70 கி.மீ. நாகலாபுரம் மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி 'அருவிகளின் ராணி' என்று அழைக்கப்படுகிறது. இயற்கை அழகையும், அருவியையும் காண அதிகளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். கிழக்குத் தொடர்ச்சி மலையில் 'நாகலா மலையேற்றம்' மிகவும் பிரபலமான மலையேற்றமாகும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip