Education News (கல்விச் செய்திகள்)
Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
தமிழகத்தில் எத்தனையோ இளைஞர்கள் படித்து பட்டம் பெற்று எந்த ஒரு வேலையுமின்றி, வருமானமுமின்றி பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருக்கின்றனர். எனவே இது போன்ற படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலையின்மையைக் குறைத்து, சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் தமிழக அரசு சிறந்த UYEGP (Unemployed Youth Employment Generation Programme) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தைப் பற்றிய முழு தகவல்களை தெரிந்து கொள்வோம்.
தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் (UYEGP) திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகை ரூ:15 இலட்சம் வரை வங்கியில் கடன் பெற்று அதற்கு 25% மானியம் அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் வரை பெறலாம்.
UYEGP திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்ச கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மாற்றுதிறனாளிகள் மற்றும் மாற்றுதிறனாளிகளின் பெற்றோர்களுக்கு கல்வி தகுதியில் விலக்கு வழங்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது பொது பிரிவினருக்கு 45, சிறப்பு பிரிவினருக்கு (ஆதி திராவிடர், பழங்குடியினர், மகளிர், சிறுபான்மையினர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். முன்னாள் ராணுவத்தினர். மாற்று திறனாளிகள் மற்றும் திருநங்கையர்) 55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குடும்ப ஆண்டு வருமானம் அதிகபட்சம் ரூ.8 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் தொழில் தொடங்க உள்ள தொழில் முனைவோர் தருமபுரி மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலை தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் வாங்கி விற்கலாம். மளிகை கடை பெட்டிக் கடை பேன்சி ஸ்டோர், ஸ்டேஷ்னரி கடை, மொபைல் உபரிபாகங்கள் கடை வாகன உதிரிபாகங்கள் வாங்கி விற்கும் உள்ளிட்ட தொழில் தொடங்குபவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், SIDCO தொழிற்பேட்டை ஒட்டப்பட்டி, தருமபுரி அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 8925533941 8925533942 மற்றும் 04342-230892 ஆகிய எண்களுக்கு தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
தமிழக அரசு UYEGP திட்டத்தின் முதன்மை நோக்கம், சமூகப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினரில் உள்ள வேலையற்ற இளைஞர்கள் மத்தியில் தொழில்முனைவோரை மேம்படுத்துவதும், உற்பத்தி, சேவை மற்றும் வணிகத் துறைகளில் புதிய நிறுவனங்களை நிறுவ நிதி மற்றும் பிற ஆதரவுகளை வழங்குவதன் மூலம் வேலையின்மையைக் குறைத்து, சுய வேலைவாய்ப்பை உருவாக்குவதுமாகும். ஆகவே, இளைஞர்கள் இத்திட்டத்தை பயன்படுத்தி பயன்பெறுவது நல்லது.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
0 Comments:
Post a Comment