Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
தனியார் மற்றும் பொது இடங்களில், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒருங்கிணைந்த ஆதரவையும் உதவியையும் வழங்குவதே ஒருங்கிணைந்த சேவை மையங்களின் நோக்கமாகும். மருத்துவம், சட்டம், ஆற்றுப்படுத்துதல் மற்றும் உளவியல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் உடனடி, அவசர மற்றும் அவசரமற்ற நிலையில் எளிதாக அணுகி பெற்றிடவும், பெண்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறைக்கும் எதிராக போராடவும் இம்மையம் வழிவகுக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வன்கொடுமையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருத்துவ வசதி அளித்தல், சட்ட பூர்வ நடவடிக்கைக்கு உதவி செய்தல் மற்றும் மனரீதியான ஆலோசனைகள் வழங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் கீழ்காணும் பணியிடம் காலியாக உள்ளதால் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவி - வழக்கு பணியாளர் (Case Worker). காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை - 1 தகுதி - சட்டப்படிப்பு/ முதுநிலை சமூகப் பணி, பெண் வன்கொடுமை தொடர்பாக 3 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஊதியம் - மாதாந்திர தொகுப்பூதியம் அடிப்படையில் ரூ.18,000/- ஆகும்.
மேற்படி வழக்கு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களது சுயவிபரங்களை 18.07.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், புதுக்கோட்டை என்னும் முகவரிக்கு அனுப்புமாறு குறிப்பிடப்பட்டுள்ளது . மேலும் குறிப்பிட்ட தேதிக்கு பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
0 Comments:
Post a Comment