ஜூலை 15 - இல் கல்வி வளர்ச்சி நாள் விழா : சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்ய உத்தரவு

 பள்​ளி​களில் காம​ராஜர் பிறந்​த​நாள் விழா கொண்​டாடு​வது மற்​றும் சிறந்த பள்​ளி​களை தேர்வு செய்​வதற்​கான வழி​காட்​டு​தல்​களை பள்​ளிக்​கல்வி துறை வெளி​யிட்​டுள்​ளது.


இதுகுறித்து முதன்மை கல்வி அலு​வலர்​களுக்கு பள்​ளிக்​கல்வி துறை இயக்​குநர் கண்​ணப்​பன், தொடக்க கல்வி இயக்​குநர் நரேஷ் ஆகியோர் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: தமிழகத்​தில் முன்​னாள் முதல்​வர் காம​ராஜர் பிறந்​த​நாளான ஜூலை 15-ம் தேதி ஆண்​டு​தோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்​டி, சிறந்த பள்​ளி​களை தேர்வு செய்து நிதி வழங்​கப்​படும். இந்த பள்​ளி​கள் மாணவர்​களை அதிக அளவில் சேர்த்​திருக்க வேண்​டும். மாணவர்​கள் இடைநிற்​றலை தவிர்த்​ததுடன், ஆசிரியர்​களின் கற்​பித்​தல் திறன் சிறப்​பாக இருக்க வேண்​டும். கலை, இலக்​கி​யம், நாடகம் போன்ற துறை​களில் மாணவர்​களை நன்கு ஊக்​கப்​படுத்தி இருக்க வேண்​டும். பெற்​றோர் ஆசிரியர் கழகம், எஸ்​எம்சி குழு ஆகியவை சிறப்​பாக செயல்​பட்​டிருக்க வேண்​டும். புர​வலர்​களை​யும் அதிக அளவில் சேர்த்​திருக்க வேண்​டும். இந்த திட்​டம் மூலம் பெறும் நிதியை கொண்டு பள்​ளி​களில் குடிநீர், கழிப்​பறை​கள், ஆய்​வகம், நூலக மேம்​பாடு, சுற்​றுச்​சுவர் போன்ற அத்​தி​யா​வசிய தேவை​களை பூர்த்தி செய்ய வேண்​டும்.


இதுதவிர, இந்த ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். காமராஜரின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை போட்டிகள் நடத்தி,பரிசுகள் வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். இதற்காக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment