Search

அலுவலகத்தில் பணியாளர் மகிழ்ச்சியை அதிகரிக்க 5 வழிகள்..!

 அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மகிழ்ச்சி ஆண்டுக்கு 5% குறைந்து, நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பு சில சுவாரஸ்யமான விஷயங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக கட்டுமான துறை மகிழ்ச்சியான தொழிலாக உள்ளது என்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் கல்வித்துறை கண்ட அதிகபட்ச மதிப்பெண்கள் இதுவென்றும் தெரியவந்துள்ளது.

இருப்பினும், இந்த முடிவுகள் சில கவலைகளை எழுப்புகின்றன. 2020-ம் ஆண்டிலிருந்து பணியாளர் திருப்தியில் நிலையான சரிவு காணபடுகிறது. தொற்றுநோய்கள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தை விட தற்போது ஊழியர்களின் மகிழ்ச்சி குறைவாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

லாபத்தை அதிகரிக்க விரும்பும் முதலாளிகள், அதற்கு முதலில் ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது அவசியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், உற்பத்தித்திறனும் லாபமும் நேர்மறையாக தொடர்புடையவை. மகிழ்ச்சியான தொழிலாளர்கள் 13% அதிக உற்பத்தி செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, பணியாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், உற்பத்தியை அதிகரிக்கவும், அவர்களின் ஈடுபாட்டை மேம்படுத்தவும் விரும்பும் முதலாளிகள் ஊழியர்களின் மகிழ்ச்சியில் முதலீடு செய்ய வேண்டும்.

பணிநீக்கங்கள், சோர்வு, அலுவலகத்திற்குத் திரும்புவதற்கான உத்தரவுகள் மற்றும் போதிய ஊதிய உயர்வு இல்லாமை உள்ளிட்ட பல காரணிகள் ஊழியர்களின் மகிழ்ச்சியில் சரிவை ஏற்படுத்துகின்றன. நிறுவனங்கள் ஊழியர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்க என்ன செய்யலாம்? வாருங்கள் பார்ப்போம்.

News18

நெகிழ்வான பணி அட்டவணையை அனுமதிக்கவும்

தொலைதூரத்தில் பணிபுரிவது, பகுதிநேரம் அல்லது வேறொரு ஏற்பாட்டின் மூலம் பணிபுரிவது என எதுவாக இருந்தாலும், நெகிழ்வான பணி விருப்பங்களை வழங்கும் நிறுவனங்களில் ஊழியர்கள் அதிக திருப்தி அடைகின்றனர். ஒன்று, நெகிழ்வான விருப்பங்களை அனுபவிக்கும் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளைப் பற்றி நன்றாக உணர்வதோடு குறைந்த அளவிலான சோர்வையே அனுபவிக்கிறார்கள்.
நெகிழ்வுத்தன்மை ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை அனுமதிக்கிறது. இது ஊழியர்களுக்கு சுதந்திர உணர்வுடன், மன உறுதியை வலுப்படுத்துகின்றன. சிறந்த திறமைகளை ஈர்ப்பதற்கும் தக்கவைப்பதற்கும் நிறுவனங்கள் உறுதியுடன் இருந்தால், அவர்கள் நெகிழ்வான பணி நேரத்தை பின்பற்ற வேண்டும்.

உங்கள் குழுவை அங்கீகரித்து வெகுமதி அளிக்கவும்


தங்களது வேலையில் சரியான அளவு அங்கீகாரத்தை ஊழியர்கள் பெற்றால், அவர்கள் அதிக ஈடுபாட்டுடன் வேலை செய்வது நான்கு மடங்கு அதிகமாகும். பணியாளர்களுக்கு பணியிடங்களில் மதிப்புமிக்க உணர்வு மிகவும் முக்கியமாகும். உங்கள் குழு அவர்களின் பங்களிப்புகளை பாராட்டப்படும் போது, ​​அவர்கள் தங்கள் அணியினர் மற்றும் நிறுவனத்துடன் அதிக நெருக்கத்தை உணர்கிறார்கள். இது, உத்வேகம் மற்றும் ஊக்கத்திற்கு வழிவகுக்கிறது. வேலையில் பாராட்டு கலாச்சாரத்தை உருவாக்க, சிறிய வெற்றிகள் மற்றும் பெரிய வெற்றிகள் இரண்டையும் கொண்டாடுங்கள். உள்ளடக்கிய பணிச்சூழலை வளர்க்கும் அதே வேளையில், பணியாளர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கிறீர்கள்.

News18

நிறுவனத்தின் உள்ளேயே பதவி உயர்வு

பணியாளர் மகிழ்ச்சியை அடைவதில் முக்கியமான அம்சமாக அவர்களின் கேரியர் வளர்ச்சி உள்ளது. இதன் காரணமாக, உள் இயக்கம் மற்றும் திறமை மேம்பாடு தொடர்ந்து தேவைப்படுகின்றன. 73% தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தில் உள்ள தொழில் வாய்ப்புகளைப் பற்றி அறிய விரும்புகிறார்கள் என ஆய்வொன்று கூறுகிறது. நிறுவனத்தின் உள்ளேயே வாய்ப்புகளில் தெரிவுநிலை இல்லாத அல்லது கிடைக்கப் பெறாத பணியாளர்கள் தங்கள் வேலையை விட்டு விலகுவதற்கான வாய்ப்புகள் 61% அதிகம் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

நெருக்கமான் உணர்வை வளர்க்கவும்

தங்கள் வேலையை அர்த்தமுள்ளதாக உணரும் ஊழியர்கள் மகிழ்ச்சியாகவும் விசுவாசமாகவும் இருப்பார்கள். நிறுவன கலாச்சாரத்துடன் இணைந்ததாக உணராதவர்களை விட வேலையின் நோக்கத்தைக் கண்டறியும் நபர்கள் நெகிழ்ச்சியும் உற்பத்தித்திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள். நிறுவனத்தின் ஒட்டுமொத்த வெற்றிக்கு அவர்களின் முயற்சிகள் எவ்வாறு பங்களிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவுவதன் மூலம் ஊழியர்களுக்கு உற்சாகமூட்டுங்கள்.

தலைமை மகிழ்ச்சி அதிகாரியை நியமனம் செய்யுங்கள்

உங்கள் நிறுவனத்திற்கு CHO தேவையா என்பது உங்கள் நிறுவனத்தின் அளவு, கலாச்சாரம் மற்றும் பணியாளர் ஈடுபாட்டைப் பொறுத்தது. இந்தப் பதவியின் பெயர் எதுவாக இருந்தாலும், இந்த நபர் பொதுவாக உங்கள் பணியாளர்கள் மகிழ்ச்சியாகவும் ஈடுபாட்டுடனும் இருப்பதை உறுதிசெய்ய அர்ப்பணிக்கப்பட்ட நிர்வாகி ஆவார். சில குறிப்பிட்ட பொறுப்புகளில் சோர்வைக் குறைத்தல், அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துதல் மற்றும் பணியாளர் அனுபவத்தை மேம்படுத்துதல் ஆகியவை இவர்களின் பணிகளில் அடங்கும். இவை அனைத்தும் சரியாக செயல்படுத்தப்பட்டால், செழிப்பான பணியிடத்தை உருவாக்க உதவுகின்றன.
சிறந்த பணி கலாச்சாரங்களில் பணியாளர்கள் கடினமாகவும் ஆர்வத்தோடும் உழைக்கின்றனர். இந்த உத்திகளைப் பயன்படுத்துவதன் மூலம், சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதோடு அவர்களைத் தங்க வைக்கும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவீர்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment