Search

குழந்தைகளை வாட்டர் தீம் பார்க் அழைத்துச் செல்லும்போது இந்த 5 விஷயங்களில் கவனம்..!

 கோடை விடுமுறைகள் தொடங்கியுள்ளதால், வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள நம்மில் பலர், பல்வேறு இடங்களுக்குச் செல்ல திட்டமிடுவார்கள். அதிலும் குறிப்பாக, இந்த சீசனில் குடும்பங்களுடனும், நண்பர்களுடனும் சேர்ந்து வாட்டர்பார்க்குகளுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்த வாட்டர்பார்க்குகளானது, வாட்டர்ஸ்லைடுகள், சவாரிகள், நீச்சல் குளங்கள் மற்றும் பலவற்றால் நிரப்பப்பட்டுள்ளன. இந்த சீசனில் வாட்டர்பார்க்குகள் தண்ணீரால் நிரம்பியிருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், கவனமில்லாமல் இருந்தால் பல்வேறு விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன.

News18

வாட்டர்பார்க்கிற்குச் செல்லும்போது உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க மனதில் கொள்ள வேண்டிய சில பாதுகாப்பு குறிப்புகளைப் பற்றி பார்ப்போம்.

  • உங்கள் நகரத்திலும், அதைச் சுற்றிலும் பல வாட்டர்பார்க்குகள் இருக்கும். சிலது மிகவும் பெரியதாகவும், கவர்ச்சிகரமானதாகவும் இருக்கும், எனினும் இணையத்தில் முழுமையாக ஆராய்ந்து சரியான வாட்டர்பார்க்குகளை தேர்வு செய்ய வேண்டும்.
  • நீங்கள் குழந்தைகளுடன் வாட்டர்பார்க்கிற்குச் சென்றால், உங்களுடன் உடைகள், டவல்கள், சன்ஸ்கிரீன் லோஷன், பவுடர், தண்ணீர் பாட்டில், முதலுதவி பெட்டி மற்றும் ஸ்னாக்ஸ்களை கூடுதலாக எடுத்துச் செல்ல வேண்டும்.
  • வாட்டர்பார்க்கில் சிறிய காயங்கள் ஏற்படுவது பொதுவானவை, எனவே மருந்துகள் மற்றும் பேண்ட்-எய்ட்களை எடுத்துச் செல்வது முக்கியமானதாகும்.
  • உங்கள் குழந்தைகள் எங்கு சென்றாலும், அவர்களை பின்தொடர வேண்டும். இது அவர்களைக் கண்காணிக்கவும், அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.
  • சிறு குழந்தைகளை உள்ளே நுழைய விடாமல் தடுக்கும் ஸ்லைடுகளில் இருந்து அவர்களை விலக்கி வைப்பது முக்கியமாகும். மற்றும் எந்த சவாரியிலும் அவர்களை தனியாக செல்ல விடாதீர்கள், அவர்களுடன் துணைக்கு நீங்களும் செல்வது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
  • வாட்டர்பார்க்கிற்கு செல்வதற்கு முன் திறந்திருக்கும் நேரத்தையும் உறுதி செய்ய கால் செய்ய வேண்டும். இதன் மூலம் டிக்கெட் விலை பற்றிய விவரங்களையும் நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஒரு சில வாட்டர் பார்க்கில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என இருவருக்கும் தனித்தனி நீச்சல் குளங்களைக் கொண்டிருக்கும்.
  • முடிந்தளவுக்கு விரைவாக வாட்டர்பார்க்கிற்கு செல்வதை முயற்சிக்கவும். நீங்கள் எவ்வளவு தாமதமாக செல்கிறீர்களோ, அவ்வளவு கூட்டம் அதிகமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலைகளில், உங்கள் பிள்ளைகள் சுதந்திரமாக வாட்டர்பார்க்கை பார்த்து ரசிக்க முடியாது, மேலும், உங்களுக்கு பிடித்த சவாரிகளுக்கு செல்ல அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
  • எனவே, வாட்டர்பார்க் திறக்கும் நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன் வந்து விட்டால், அதிக கூட்டத்தை சந்திக்காமல் வசதியாக உள்ளே செல்லவும் முடியும், சவாரிகளுக்கு செல்ல அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. மேலும், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதற்காக, தண்ணீரின் தரம், தூய்மை மற்றும் சுகாதார நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை தெரிந்திருப்பதும் அவசியமாகும்.


🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment