Search

கோடைகாலத்தில் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்..!

 

பலருக்கும் உயர் ரத்த அழுத்த அறிகுறிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக ஹைப்பர்டென்ஷன் தினம் என்ற ஒரு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள், எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை பற்றி விவரங்கள் உலகம் முழுவதிலும் பகிரப்பட்டு வருகிறது.


ஹைபர் டென்ஷன் என்பது உயர் ரத்த அழுத்த நிலையைக் குறிக்கும், அதாவது எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆவது தான் ஹைப்பர் டென்ஷன். நம்முடைய மனநிலையை அவ்வளவு எளிதில் கட்டுப்படுத்த முடியாது. உயர் ரத்த அழுத்தத்திற்கு பிரத்யேகமான அறிகுறிகள் கிடையாது. தலைவலி காலையில் எழுந்து கொள்ளும் போது நிதானமின்மை, படப்படப்பாக உணர்வது ஆகியவை பல உடல் நலக் குறைபாடுகளுடன் தொடர்புடையது.

உயர் ரத்த அழுத்தத்தால் கோடிக்கணக்கானவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கோடைக்காலத்தில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தை சில உணவுகளின் மூலம் ஓரளவுக்கு நிர்வகிக்க முடியும். உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் நீங்கள் எந்த உணவுகளை சாப்பிட்டு ரத்த அழுத்தத்தை குறைக்க முயற்சிக்கலாம் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி: இனிமையான நறுமணம் கொண்ட இனிப்பும் புளிப்புச் சுவையும் ஸ்ட்ராபெர்ரியில் அந்தோசயினின் என்ற பவர்ஃபுல் ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை உள்ளன. இந்த நுண்ஊட்டச்சத்துக்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரியை அடிக்கடி சாப்பிட்டு வருவது நன்மை அளிக்கும். சாஸ், கேக்குகள், மில்க் ஷேக், மற்றும் சாலட்களில் இதைச் சேர்த்து சாப்பிடலாம்.

வாழைப்பழம்: உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து சீரான நிலையில் வைக்க உதவும் மினரல்கலான பொட்டாசியம், மற்றும் மெக்னீசியம் ஆகிய இரண்டுமே வாழைப்பழத்தில் உள்ளது. இது உடனடியாக ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும், நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானம் மேம்பட்டு, உடல் ஆரோக்கியம் பலப்படுகிறது.

மாதுளை: மாதுளை ரத்த விருத்தியை அதிகப்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. இரத்த நாளங்களின் அளவைக் கட்டுப்படுத்தும் ACE என்ற என்சைம் இதில் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைத்து, BP அளவை சீராக வைத்திருக்கும்./

மாம்பழம்: கோடைகாலம் என்றாலே, மாம்பழத்தை தவிர்க்கவே முடியாது. சுவையான மாம்பழத்தில் நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் மற்றும் பொட்டாசியம் ஆகியவை அதிக அளவில் உள்ளது. சத்து நிறைந்த மாம்பழம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். கோடைக்காலம் முழுவதும் மாம்பழங்களை பழமாகவோ, பழச் சாறாகவோ, மில்க் ஷேக், ஸ்மூத்திகள், இனிப்பு பண்டமாகவோ சேர்த்து, சாப்பிட்டு வரலாம்.

கீரை, பீட்ரூட் போன்ற காய்கறிகள்: பெரும்பாலான கீரைகள் வகைகளில் மற்றும் பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து நிறைந்துள்ளன. இவை செரிமானம் ஆன பின்பு, நைட்ரிக் ஆக்சைடாக மாறும். நைட்ரிக் ஆக்சைடு இரத்த நாளங்களை விரிவுபடுத்துவதி தளர்த்துகிறது. இதனால், உங்கள் இரத்த அழுத்தம் குறைகிறது.

தயிர்:
 தயிரில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. வாழைப்பழம் போலவே, தயிரில் இருக்கும் சத்துக்கள் உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், தயிரில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களும் உள்ளன. வெயில் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான இயற்கை பானம் மோர். மேலும், தயிராய் அப்படியே சாப்பிடலாம், அல்லது தயிர் பச்சடி மற்றும் லஸ்ஸியாக குடிக்கலாம்.

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

0 Comments:

Post a Comment