Search

Type 2 Diabetes : தூக்கமின்மையால் அவதியா? உங்களுக்கு சர்க்கரை நோய் ஆபத்து அதிகம் – அதிர்ச்சி ஆய்வு!

 

Type 2 Diabetes : இந்த ஹார்மோன்காளால் இன்சுலின் சுரக்கும் அளவு குறைவதாலும், மன அழுத்தம் தொடர்ந்து நீடித்தால் சர்க்கரைநோய் வரும் வாய்ப்பை அவை அதிகப்படுத்துகிறது.

முறையான தூக்கமின்மை காரணமாகவும் சர்க்கரைநோய் வரும் வாய்ப்பு நிச்சயம் உள்ளது என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

சமீபத்திய "JAMA Network Open" மருத்துவ ஆய்விதழில், உடலுழைப்பு குறைந்த வாழ்க்கை முறை, பதப்படுத்தப்பட்ட மாவுச்சத்து அதிகமுள்ள உணவு போன்றவைகள் தவிர்த்து, முறையான தூக்கமின்மை காரணமாகவும், சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகமுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

5 லட்சம் ஆங்கிலேயர்கள், இங்கிலாந்திலிருந்து UK Biobank மூலம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், தூக்கமின்மை சர்க்கரைநோய்க்கு வித்திடலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு ஒன்றுக்கு தேவையான 7 முதல் 8மணி நேர தூக்கத்தில் இருப்பவர்களைக் காட்டிலும், முறையாக தூங்காதவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு 5 மணி நேரம் மட்டுமே தூங்குபவர்கள் மத்தியில் சர்க்கரைநோய் 2ம் வகை ஏற்படும் வாய்ப்பு 16 சதவீதம் அதிகமாகவும், 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே தூங்குபவர்கள் மத்தியில் சர்க்கரைநோய் 2ம் வகை வரும் வாய்ப்பு 41 சதவீதம் அதிகம் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதில் அதிர்ச்சி என்னவெனில் நன்கு தூங்க முடியாதவர்கள் முறையான மற்றும் தேவையான உணவுமுறைகளைக் கடைப்பிடித்தபோதிலும் சர்க்கரைநோய் ஏற்படும் வாய்ப்பில் மாற்றம் ஏதும் இல்லை.

சர்க்கரைநோய் 2ம் வகையில், இன்சுலின் சுரக்கப்படும் அளவு வழக்கமாக இருந்தாலும், இன்சுலின் செயல்பாட்டிற்கு எதிர்ப்புத்தன்மை (Insulin Resistance) ஏற்பட்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

தூக்கமின்மை எவ்வாறு சர்க்கரைநோயை உண்டாக்குகிறது?

சுரக்கும் இன்சுலின் ஹார்மோன், செல் அளவில் சரியாக செயல்படாமல் போவது

ஒருவரது குடலில் நன்மை பயக்கும் கிருமிகளின் அளவில் ஏற்படும் மாற்றங்கள்,

வேறு சில காரணங்கள் காரணமாகவும், சர்க்கரைநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது.

2015ம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழக ஆய்வு,"Diabetologia"எனும் இதழில் வெளிவந்து, அதிலும் 3 தொடர் இரவுகளில் 4 மணி நேரம் மட்டுமே தூங்குபவர்களின் ரத்தத்தில் கொழுப்பு அமிலங்கள் (Fatty acids) காலை 4 முதல் 9 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், சில நாட்களாகவே அதிகரித்து காணப்பட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுவாக கொழுப்பு அமிலங்கள் சற்று உயர்ந்தாலும் 24 மணி நேரத்திற்குள் வழக்கமான அளவை அவை அடைந்து விடும்.

ஆனால் தூக்கம் குறைவாக இருந்தால் கொழுப்பு அமிலங்கள் உயர்வதால், ரத்தத்தில் இன்சுலின் ஹார்மோனால் சர்க்கரையின் அளவு குறைக்கப்படுவது சரிவர நடக்க முடியாமல் போய், சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது.

சர்க்கரைநோய் ஏற்பட,

பரம்பரை மரபணு காரணிகள்

உடலுழைப்பு குறைவு

பதப்படுத்தப்பட்ட (Processed) மாவுச்சத்துகள் உணவில் அதிகம் இருப்பது போன்றவைகளும் காரணங்களாக உள்ளது.

மேற்சொன்ன காரணங்கள் இந்தியாவில் அதிகம் என்பதால், நமது நாட்டில் சர்க்கரைநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்தியாவில், 2019ல் சர்க்கரைநோய் பாதிப்பு 70 மில்லியன் மக்களுக்கு என இருந்தது, தற்போது அந்த எண்ணிக்கை 101 மில்லியனாக உயர்ந்துள்ளது என ICMR செய்த ஆய்வுக் கட்டுரையில் தெரியவந்து, அது Lancet மருத்துவ ஆய்விதழில் ஓராண்டுக்கு முன் வெளிவந்துள்ளது.

நகர்ப்புறங்களில் தூக்கமின்மை பாதிப்பு அதிகமாக உள்ளது.

எனவே வேலைப்பளு, மனஅழுத்தம், பொருளாதார நெருக்கடிகள், அதிக சமூக வலைதள பயன்பாடு போன்றவை தூக்கமின்மைக்கு காரணங்களாக இருக்கலாம்.

இந்த விஷயங்களுக்கு தீர்வு கண்டு, 7 முதல் 8 மணி நேர தூக்கத்தை உறுதிபடுத்துவது, சர்க்கரைநோய் 2ம் வகை பாதிப்பிலிருந்து குறைக்க உதவும்.

முறையான தூக்கமின்மை காரணமாக சர்க்கரைநோய் ஏற்படும் வாய்ப்பு தவிர்த்து, நரம்பு மண்டலங்களை பாதித்து பிற நரம்பு மண்டல நோய்களையும் ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தற்போதைய சமூக சூழலில் மக்கள் மத்தியில் மனஅழுத்தம் (Stress) அதிகரித்து வருகிறது.

மனஅழுத்தம் கேட்டகால் அமின்ஸ், குளுக்கோகார்டிக்காய்ட்ஸ் ஹார்மோன்களை அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டுவதாலும்,

இந்த ஹார்மோன்காளால் இன்சுலின் சுரக்கும் அளவு குறைவதாலும், மன அழுத்தம் தொடர்ந்து நீடித்தால் சர்க்கரைநோய் வரும் வாய்ப்பை அவை அதிகப்படுத்துகிறது.

முறையான தூக்கமின்மை அதிகரித்து வரும் மனஅழுத்தமும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இவ்வாறு அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment