Search

காலில் இந்த அறிகுறி தெரிந்தால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கலாம்.. உடனே டாக்டரை பாருங்க..!

 அதிக சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் ஆகிய மூன்றுமே உயிர்க்கொல்லிகளாக கருதப்படுகிறது. இதில் குறிப்பாக அதிக கொலஸ்ட்ரால் என்பது இதய நோய்களுக்கான முக்கிய காரணியாக இருக்கின்றது.

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதை கண்டறிய பல அறிகுறிகள் உள்ளன. சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் பொழுது கால்களில் குறிப்பிட்ட அறிகுறி தோன்றினால் அது அதிக கொலஸ்ட்ரால் இருப்பதைக் குறிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

நல்ல கொலஸ்டிரால் மற்றும் கெட்ட கொலஸ்டிரால்

கொலஸ்டிராளில் நல்ல கொலஸ்டிரால், கெட்ட கொலஸ்டிரால் என்று இரு வகைகள் உள்ளன. நம் உடலிலேயே இவை உற்பத்தியாகும் மற்றும் உணவுகளின் மூலம் கிடைக்கும். எல்டிஎல் கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என்றும், ஹெச்டிஎல் கொலஸ்டிரால் நல்ல கொலஸ்டிரால் என்றும் கூறப்படுகிறது.

குறைவான அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் அதாவது LDL கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது நம்முடைய ஆரோக்கியத்திற்கு கேடு மற்றும் இதயத்திற்கும் பாதிப்பை விளைவிக்கும்.

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது ஆர்ட்டரிகளில் கொஞ்சம் கொஞ்சமாக கொழுப்பை சேகரித்து ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும். நாட்கள் செல்ல செல்ல இது இதயத்தை இதயத்தில் இருந்து வெளிவரும், உட்செல்லும் ரத்த ஓட்டத்தை பாதிக்கும். இதனால் இதய பாதிப்பு ஏற்படும்.

உடற்பயிற்சி செய்தால் கால்களில் இந்த அறிகுறி தோன்றலாம்

கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறது என்பதற்குப் பல அறிகுறிகள் உள்ளன. அதில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது தான் காலில் தோன்றக்கூடிய அறிகுறியாகும். கால்கள் மற்றும் பாதங்களில் கூட ஆர்ட்டரிகள் உள்ளன. எனவே உங்களுடைய உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் கால்களில் இருக்கும் ஆர்ட்டரிகளில் கொழுப்பு சேர்ந்து பெரிஃபெரல் ஆர்ட்டரி என்ற ஒரு நோய் உருவாகும்.

PAD என்று கூறப்படும் இந்த நோய், உங்கள் இடுப்புப் பகுதிகள், தொடை மற்றும் கெண்டைக்கால் தசைகளில் கிராம்ப்ஸ் என்ற தசைபிடிப்பு மற்றும் வலியை ஏற்படுத்தும். கால்களில் போதிய அளவுக்கு ரத்த ஓட்டம் சரியாக இல்லையென்றால் இந்த கிராம்ப் தோன்றும்.

மேலும், கொழுப்பு, ஆர்ட்டரிகளின் சுவர்களில் சேர்வதால், ரத்த ஓட்டம் தடைபடும். இந்த நிலைக்கு அதிரோக்ளோரோசிஸ் என்று பெயர். பெரிஃபெரல் நோய் என்பது, கால்களுக்கு இந்த ரத்த ஓட்டம் தடைபடுவதால் ஆர்ட்டரிகள் சுருங்குவதைக் குறிக்கிறது.

PAD என்றால் என்ன?

அமெரிக்க இதய அசொசியஷன் குறிப்பிட்டுள்ளபடி, உங்களுக்கு அதிக கொலஸ்டிரால் இருக்கும் போது, PAD நோய் எற்படும் அபாயம் உள்ளது. இதனால், உங்களுடைய இடுப்புப் பகுதி, தொடை மற்றும் கெண்டைக் கால் பகுதிகளில் வலி ஏற்படும். குறிப்பாக, உடற்பயிற்சி செய்யும் போது, நீண்ட தூரம் நடக்கும் போது, படிகள் ஏறும் போது, மேற்கூறிய பகுதிகளில் வலி மற்றும் தசை பிடிப்பு ஏற்படும்.

கொலஸ்டிரால் மூலம் PAD ஏற்படும் அபாயம் இருப்பவர்களுக்கு, கால்களில் வலி, வீக்கம், மரத்து போகும் உணர்வு, காயங்கள் ஆறாமல் இருப்பது, பலவீனம், கால்களில் நிறம் மாறுதல், முடி கொட்டுவது, நகங்கள் உடைவது, கைகளில் வலி மற்றும் பிடிப்பு ஆகியவை ஏற்படலாம். நீண்ட நேரம் கால்களுக்கு வேலை கொடுத்தால் தீவிரமான வலி ஏற்படலாம். அதே போல கைகளும் மறத்துப் போகலாம். கால்களின் சரும நிறம் மாறக்கூடும். சிலருக்கு, விறைப்புத்தன்மை குறைபாடும் உண்டாகும்.

கொலஸ்டிரால் அதிகரிக்காமல், நோய் வராமல் தவிர்ப்பது எப்படி?

உடல் நல்ல ஆரோக்கியமாக இருந்தாலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது மிகமிக அவசியமாகும்.

கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு ஆரோக்கியமாக உணவுகளை சாப்பிடுவது மிக மிக முக்கியம். கொழுப்பு, எண்ணெயில் பொறித்த உணவுகள், வறுத்த உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். நார் சத்து நிறைந்த உணவுகள், முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

உணவுக் கட்டுப்பாடு என்பதைத் தவிர்த்து உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். உடற்பயிற்சி செய்யும் பொழுது ரத்த ஓட்டம் சீராகி தசைகள் மற்றும் எலும்புகள் வலுப்படும். இதன் மூலம் பல உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க முடியும். அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்வதும் அவசியம்.

🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment