பெற்றோர் செய்யும் 4 தவறுகள்.. சில குழந்தைகள் அம்மா அப்பாவை சார்ந்தே இருக்க காரணம் இதுதான்..! - Agri Info

Adding Green to your Life

October 18, 2023

பெற்றோர் செய்யும் 4 தவறுகள்.. சில குழந்தைகள் அம்மா அப்பாவை சார்ந்தே இருக்க காரணம் இதுதான்..!

 குழந்தைகள் எப்போதுமே பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் யாராவது ஒருவரைச் சார்ந்தே இருக்கும் குறிப்பாக. குழந்தைப்பருவம் முதல் டாட்லர் என்று கூறும் பருவம் வரை, பெரும்பாலும் அம்மாவைச் சார்ந்து தான் குழந்தைகள் இயங்கும். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு தானாக செயல்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் பெற்றோரையோ அல்லது வேறு யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது.

குழந்தைகள் வளர்ந்த பிறகு, குறிப்பாக, 2-3 ஆண்டுகளுக்குப்பிறகு, எல்லா விஷயத்துக்குமே மற்றவரை இன்னொருவரை சார்ந்து இருப்பது என்பது பிரச்னைக்குரிய அறிகுறியாகும். ஏன் குழந்தைகள் மற்றவர்களை சார்ந்து இருக்கிறார்கள் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இதில் முக்கியமானது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி வளர்கிறார்கள் என்பது தான்!

குறிப்பாக, பெற்றோர்கள் செய்யும் இந்த நான்கு தவறுகள் தான் குழந்தைகள் அப்பா அம்மாவை சார்ந்தே இருக்கிறது. அவை என்னவென்று இங்கே பார்க்கலாம்.

குழந்தைகளை பொத்தி பொத்தி பாதுகாப்பது :

ஒரு அம்மாவாக அல்லது அப்பாவாக குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்பது முக்கியம் தான்; ஆனால் குழந்தைக்கு எப்போதும் ஏதாவது ஆகிவிடுமோ, பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அதீதமான ஒரு பாதுகாப்பு உணர்வு அவர்களை பொத்தி பொத்தி வளர்ப்பதாக முடியும். நீங்கள் அந்த அளவுக்கு ஓவர் ப்ரொடக்ட்திவாக இருக்கும் பொழுது, ஒரு சின்ன விஷயம் வேண்டும் என்றால் கூட குழந்தை உங்களைத்தான் தேடி வரும். தானாக எதையாவது கற்றுக் கொள்வதற்கோ அல்லது கடினமான சூழ்நிலைகளை கையாள்வதற்கு, முடிவு எடுப்பதற்கு குழந்தைக்கு தெரியாமல் போகும்.

News18

அத்தகைய சூழ்நிலையில் நேரடியாக உங்களிடம் ஓடிவந்து என்ன செய்வது என்று குழந்தைகள் கேட்கும். அதுமட்டுமில்லாமல், இது என்ன ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டால் அது என்ன என்று புரிந்து கொள்வதற்குள்ளேயே பெற்றோரிடம் ஓடி வந்து அழத் துவங்கி விடுவார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் சரி, ஆதரவாக, துணையாக பெற்றோர் இருப்பது மிகவும் நல்லதாக இருந்தாலும், குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுடைய பிரச்சனைகள், தங்களுடைய சூழலை தானாகவே கையாள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

எல்லைகள் இல்லாமல் போவது :

எல்லா விஷயத்திற்கும் எல்லா உறவுகளுக்குமே எல்லைகள் தேவை. இந்த எல்லையைத் தாண்டி மற்றவருடைய விஷயங்களில் தானாக தலையிடக் கூடாது என்பது மிகவும் முக்கியம். அந்த விதத்தில், பெற்றோர்கள் பலவீனமான எல்லைகளை வைத்திருக்கும் பொழுது குழந்தைகள் தங்களை தாங்களே வளர்த்துக் கொள்ள மிகவும் சிரமப்படுவார்கள்.

உதாரணமாக, குழந்தைகள் செய்ய வேண்டிய சின்ன விஷயத்தை கூட, ‘நீ இதை செய்ய வேண்டும், என்னிடம் கொடுக்கக் கூடாது’ என்று ஒரு வரைமுறை இல்லாமல் பெற்றோர்கள் எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கும் பொழுது அது சுயமாக குழந்தைகள் இயங்குவதற்கு மிகப்பெரிய தடையாக அமைகிறது! எனவே பெற்றோரைச் சார்ந்து தான் ஒரு குழந்தை முழுக்க முழுக்க இயங்கும்.

குழந்தை பெற்றோரின் ஒப்புதலையும் அங்கீகரிப்பையும் எப்போதும் எதிர்பார்க்கும் :  

குழந்தைகளை பாராட்டுவது அவசியம் தான்! குழந்தைகள் சின்ன சின்ன விஷயங்களை முயற்சி செய்தால் கூட நிச்சயமாக அவர்களை பாராட்ட வேண்டும், அது அவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும். ஆனால், குழந்தைகள் தாமாக வந்து தான் செய்யும் ஒவ்வொரு விஷயமும் சரியா இது அம்மாவுக்கு ஓகே வா, அப்பாவிற்கு இது சரியாக இருக்கிறதா என்று அங்கீகாரமும் ஒப்புதலும் கேட்கும் பொழுது அம்மா அப்பாவை சார்ந்து இருக்கும் நிலையை ஏற்படுத்தும்.

அவர்களைக் கேட்காமல் எந்த ஒரு விஷயத்தையுமே குழந்தைகளால் செய்யவே முடியாது என்ற ஒரு நிலை ஏற்பட்டு விடும். இது அவர்களுடைய தன்னம்பிக்கையை மிகப்பெரிய அளவில் பாதித்து, தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தாது. குழந்தைகள் நன்றாக ரேன்க் வாங்கவில்லை, போட்டியில் வெற்றி பெற வில்லை அல்லது அவர்களுக்கு பிடித்ததை கூட அவர்களால் சரியாக செய்ய முடியவில்லை என்றால் அது பெரிய விஷயம் இல்லை என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.

News18

சார்ந்து இருப்பதை கவனிக்காமல் இருப்பது:

ஏதாவது ஒரு சிக்கல் நடக்கும் பொழுது அல்லது வீட்டில் சூழல் சரியில்லாதபோது குழந்தைகள் பெற்றோரை சார்ந்தே இருப்பது இயல்பானதுதான். அதேபோல குழந்தைக்கு உடல் நல பிரச்சனை இருந்தால் அம்மாவிடம் தான் முழுவதுமாக இருக்கும்; சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அம்மாவிடம் அனுமதி கேட்கும். ஆனால் பொதுவாக எல்லாவற்றுக்குமே இதுபோல பெற்றோரின் அனுமதியை, அவர்களை சார்ந்து நடப்பதை பெற்றோர்கள் கவனித்தாலும் குழந்தைதானே அதற்கு என்ன தெரிந்துவிடப் போகிறது என்று அதனை இயல்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

பெற்றோர்கள் அந்த குறிப்பிட்ட சூழலை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் அல்லது தாமதப்படுத்துவதால், குழந்தைகள் அதையே வழக்கமாக்கிக் கொள்கிறார்கள். இது குழந்தைகளின் ஆளுமைத்தன்மையை பெரிதாக பாதிக்கிறது. எந்த அளவுக்கு சார்ந்து இருப்பது நல்லது, எவற்றிலெல்லாம் குழந்தைகள் தனியாக இயங்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் குழந்தை நல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.

இதை எப்படி சரி செய்யலாம்?

  1. குழந்தைகள் தன்னிச்சையாக இயங்குவதை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்

  2. அந்தந்த வயது சார்ந்த முடிவுகளை குழந்தைகள் எடுக்க அனுமதிக்க வேண்டும்

  3. குழந்தைகளுக்கான எல்லைகளை வரையறுக்க வேண்டும்

  4. குழந்தை சுயமாகக் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் வழங்க வேண்டும்

  5. வெளிப்புற பாராட்டுக்கள் மட்டுமல்லாமல், குழந்தை சுயத்தை வளர்க்க உதவி செய்ய வேண்டும்

News18

இதை சரி செய்யவில்லை என்றால் என்னென்ன பிரச்சனைகள் ஏறபடும்?

  • உணர்வு ரீதியாக தான் என்ன நினைக்கிறோம், உணர்கிறோம் என்பது சரியா தவறா என்று அனுமதி கேட்பார்கள்

  • தனியாக எதையும் செய்யும் அல்லது முடிவெடுக்கும் திறனை இழப்பார்கள்

  • யாரும் இல்லாமை இவர்களால் எந்த வேலையையும் செய்ய முடியாது

  • தன்னம்பிக்கை மிகவும் குறைவாகும்

  • நிராகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது

  • தனக்கென்று அடையாளம் இல்லாமல் போகும்

No comments:

Post a Comment