நம்மில் பெரும்பாலானோர் காலை எழுந்தவுடன் பல் தேய்த்து விட்டு முதல் வேலையாக காஃபி அல்லது டீ குடித்து விட்டு நாளை தொடங்குகிறோம். ஒரு சில காலை நேரத்தில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பச்சை தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான நீரை பருகுகிறார்கள்.நாம் காலை எழுந்தவுடன் குடிக்கும் பானம் நம் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா.! ஆம், நாம் காலையில் ஆரோக்கியம் நிறைந்த ஒன்றை பருகினால் அது நம் உடலில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் தான் நிபுணர்கள் காலை எழுந்தவுடன் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் இஞ்சி மற்றும் மஞ்சள் தண்ணீரை குடிக்க பரிந்துரைக்கிறார்கள்
ஏனென்றால் மஞ்சள் (raw turmeric) மற்றும் இஞ்சி இரண்டிலுமே இயற்கையாகவே ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன. இந்த இரண்டும் கலந்த ஆரோக்கியமான நீரை காலையில் குடிப்பதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.
அழற்சி எதிர்ப்பு பண்புகள்:
இஞ்சியில் உள்ள Gingerol மற்றும் மஞ்சளில் உள்ள குர்குமின் (curcumin) உள்ளிட்டவை மிகவும் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் ஆகும். காலை எழுந்க்வுடன் இஞ்சி மற்றும் மஞ்சள் அடங்கிய பானத்தை குடிப்பது உடலில் ஏற்படும் அழற்சிகளை குறைக்க உதவும். மூட்டுவலி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவரணம் அளிப்பதோடு ஒட்டுமொத்த மூட்டு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
சிறந்த செரிமானம்:
சிறந்த செரிமானத்திற்கு தேவையான நொதிகள் சுரப்பதை ஊக்குவிப்பதன் மூலமும் குமட்டலை குறைப்பதன் மூலமும் செரிமான ஆரோக்கியத்தில் இஞ்சி குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. அதே நேரம் மஞ்சளானது செரிமான மண்டலத்தை அமைதிப்படுத்தி தணிப்பதன் மூலம் நல்ல செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எனவே இஞ்சி மற்றும் மஞ்சள் கலந்த பானத்தை குடிப்பது செரிமான கோளாறுகளை எளிதாக போக்க உதவுகிறது.
நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்:
இஞ்சி மற்றும் மஞ்சளில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நம் உடலை ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸிலிருந்து பாதுகாக்க, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகின்றன. எனவே காலை எழுந்தவுடன் இஞ்சி-மஞ்சள் பானம் குடிப்பது நோயெதிர்ப்பு அமைப்பை வலுவாக்குவதோடு, தொற்றுகளுக்கு எதிர்க்க சிறந்த பாதுகாப்பையும் வழங்கும்.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்:
இஞ்சி மற்றும் மஞ்சள் ஆகிய 2 பொருட்களுமே நம்முடைய ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் என கூறப்படுகிறது. குறிப்பாக இஞ்சி ரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவும். மறுபக்கம் கொலஸ்ட்ரால் லெவலை குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது மஞ்சள்.
உடல் எடையை நிர்வகிக்க...
எடையை குறைக்கும் முயற்ச்சியில் இருப்பவர்களுக்கு பல சாத்தியமான நன்மைகளை அளிக்கிறது மஞ்சள். இதிலிருக்கும் குர்குமின் என்ற கலவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலமும், அழற்சியை குறைப்பதன் மூலமும் எடை இழப்பு முயற்சிக்கு கணிசமாக உதவும். அதே நேரம் பசியை கட்டுப்படுத்த இஞ்சி உதவும். எனவே காலை நேரம் இந்த 2 முக்கிய மசாலா பொருட்கள் கலந்த பானத்தை குடிப்பது வெயிட் லாஸ் முயற்சிக்கு பெரிதும் உதவ கூடும்.
இஞ்சி-மஞ்சள் பானத்தை தயாரிக்க தேவையான பொருட்கள்:
- வெதுவெதுப்பான தண்ணீர் - 1 கப்
- துருவிய புதிய இஞ்சி அல்லது இஞ்சி பவுடர் - 1/2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- பிளாக் பெப்பர் - ஒரு பின்ச்
- தேன் அல்லது எலுமிச்சை
செய்முறை:
முதலில் 1 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அடுப்பில் இருந்து இறக்கி தண்ணீரின் வெப்பநிலை வெதுவெதுப்பாக மாறியதும் அதில் துருவிய இஞ்சி அல்லது இஞ்சி பவுடரை சேர்க்கவும். பின் எடுத்து வைத்திருக்கும் மஞ்சள் தூள் மற்றும் பிளாக் பெப்பரை சேர்க்கவும். பின்பு இவற்றை வெதுவெதுப்பான தண்ணீரில் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். சுவைக்காக தேவைப்பட்டால் சிறிதளவு தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளுங்கள். மேற்கண்ட நன்மைகளை பெற காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிக்கவும். இந்த பானத்தில் கூடுதலாக இலவங்கப்பட்டையை சேர்த்து கொள்வது எடை இழப்புக்கு கணிசமாக உதவும்.
Click here for more Health Tip
Click here to join whatsapp group for daily health tip
No comments:
Post a Comment