இந்த இசையை கேட்டால் தூக்கம் தானா வருமாம்... தூக்கமின்மை பிரச்சனையை விரட்ட ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு..!

 இரவில் தூங்கும் நேரத்தில் இசையைக் கேட்பது நமது இதயத் துடிப்பு மற்றும் சுவாசத்தைக் குறைப்பதற்கும், மன அழுத்த ஹார்மோன்களின் அளவைக் குறைப்பதற்கும் உதவுகிறது என்கின்றனர் வல்லுநர்கள்.

தூக்கம் வரவில்லையா? மனம் பாரமாக உள்ளதா? சந்தோஷமா? என அனைத்துச் சூழல்களிலும் நம்மை ஒருநிலைப்படுத்துவது இசை தான். அதிலும் தூக்கம் வராதவர்கள் பலரின் காதுகளில் இளையராஜாவின் இசை ரீங்காரம் அடிக்கும். ஆனால் இப்படி தூங்கும் போது பாடல்களைக் கேட்டாதீர்கள் என்பார்கள். நல்ல தூக்கத்திற்காக நமக்கு என்ன தோன்றுகிறதோ? அதை நிச்சயம் செய்யலாம்.

“ஒரு நாள் தூக்கம் பல நாள் கெடுதி“ என்பார்கள். ஆம் இரவில் நல்ல தூக்கம் இல்லை என்றால் ஒருவரின் மனம் ஒருநிலையில் இல்லாமல் இருப்பதோடு பல்வேறு உடல் நலக்கோளாறுகளையும் நமக்கு ஏற்படுத்துகிறது. பொதுவாக உலகளவில் சுமார் 62 சதவீத பெரியவர்கள் இரவில் நன்றாக தூக்கம் வரவில்லை என்று நினைக்கிறார்கள். இந்த நிலைமை உங்களுக்கும் ஏற்படுகிறதா? தூக்கம் வரவில்லை என்றால் என்ன மாதிரியான இசையை நீங்கள் கேட்பீர்கள்? என்ன மாதிரியான இசை உங்களின் மனதை இதமாக்கும் என்பது குறித்து வல்லுனர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை நாமும் தெரிந்துக் கொள்வோம்…

நல்ல தூக்கத்தைத்தரும் மெல்லிசை (slow Tempo):

பெரும்பாலும் இரவு நேரங்களில் தூக்கம் வரவில்லை என்றால், மனதிற்கு இதம் தரக்கூடிய பாடல்களை நாம் கேட்டிருப்போம். அதில் முக்கியமானது மெல்லிசை தான். எனவே கடந்த காலத்தில் நீங்கள் தூங்குவதற்கு உதவிய அல்லது சிறிது நேரம் ஓய்வெடுக்க உதவிய பாடல்களை நீங்கள் கேட்டிருந்தால், அதற்கென்று ஒரு தனிப்பட்ட பிளேஸிஸ்ட்டை உருவாக்கவும். உங்களுக்கு தூக்கம் வராத நேரத்தில் இந்த பாடல்களை நீங்கள் கேட்க ஆரம்பியுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.

பொதுவாக டெம்போ என்பது இசை இசைக்கப்படும் வேகத்தை குறிக்கிறது. பெரும்பாலும் நிமிட துடிப்புகளின் அளவு என்றும் கணக்கிடப்படுகிறது. எனவே மனித இதயம் 60 முதல் 100 பிபிஎம் வரை துடிக்கும் என்பதால் 60-80 பிபிஎம் வரையிலான டெம்போவுடன் இசையைக் கேட்பது உடலின் சொந்த தாளங்களுடன் ஒத்திசைக்க உதவும் என்று சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எனவே உங்களுக்கு எது பிடித்த இசையோ அதைக் கேட்க முயலுங்கள். மேலும் கடினமாக ராக் போன்ற பாடல்கள் எதுவாக இருந்தாலும் உங்களது மனதிற்கு எது இதமளிக்கிறது என்பதை முதலில் கண்டுபிடிக்க முயலுங்கள். மனித உடலில் ஏராளமான இசை உள்ளதால், இதயத்தைப் போலவே மூளைக்கும் அதன் சொந்த தாளங்கள் உள்ளதால் சில இசை உங்களது தூக்கத்திற்கு பொருத்தமானதாக இருக்கும்.

இசைக்கும் தூக்கத்திற்கும் உள்ள தொடர்பு:

தூங்குவதற்கு உதவும் இசையை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் அந்த ஆல்பா அதிர்வெண்ணை செயல்படுத்தக்கூடிய பாடல்களைத் தேடுமாறு Vago பரிந்துரைக்கிறார். உண்மையில் மூளை அலைகளை அளவிடாமல் இப்படிப்பட்ட இசையை எப்படி கண்டுபிடிப்பது? என்ற சந்தேகம் நிச்சயம் அனைவருக்கும் ஏற்படும். இது ஒன்றும் உங்களுக்கு மிகப்பெரிய விஷயம் இல்லை.

ஏதாவது ஒரு பாடலைக் கேட்கும் போது நம்மை அறியாமலேயே இதயத்தில் ஒருவித புத்துணர்வு ஏற்படும். எனவே அந்த பாடல் என்ன என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்து கேட்க முயலுங்கள். மேலும் நீங்கள் தூங்கும் போது உங்களது மொபைல் போன்களைப் பயன்படுத்தும் நிலை இருந்தால் தாராளமாக பயன்படுத்தவும். இது உங்களை நிம்மதியான உறக்கத்திற்கு இட்டு செல்ல உதவும் என்றால் செய்யலாம். எனவே உடல் ஆரோக்கியத்திற்கு உங்களுக்கு பிடித்த பாடல்களைக் கேட்டு நல்ல தூக்கத்திற்கு வழிவகை செய்து கொள்ளுங்கள்.


0 Comments:

Post a Comment