Search

டீ குடிக்கும்போது இவற்றைச் சாப்பிடுவது ஆபத்தில் முடியும்!

 உலகளவில் பலரும் தேநீரை விரும்பி அருந்துகின்றனர், இது பலருக்கும் களைப்பை நீக்கி சுறுசுறுப்பு தரும் ஒரு அற்புத பானமாக செயல்படுகிறது. தேநீர் இல்லாத நாளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது எனலாம்.




எவ்வளவு களைப்பாக இருந்தாலும் ஒரு கோப்பை தேநீர் அருந்தினால் அவ்வளவு களைப்பு போயி சுறுசுறுப்பாக மாறுவதாக தேநீர் பிரியர்கள் கூறுகின்றனர்.

உலகளவில் அதிகமான மக்களால் ரசிக்கப்படும் ஒரு அற்புதமான பானம் என்றால் அது தேநீர் தான் . பால், சர்க்கரை, தேயிலை தூள் கலந்த ஒரு ஆரோக்கியமான பேக்காக தேநீர் நமக்கு கிடைக்கிறது.

தேநீரில் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இது கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது. மாலை நேரத்தில் அருந்தும் தேநீருடன் சிறிது சிற்றுண்டி சேர்த்து அருந்தினால் கூடுதல் இன்பமாக இருக்கும். ஆனால் தேநீருடன் சில சிற்றுண்டிகளை சாப்பிடுவது உடலுக்கு தீங்கை விளைவிப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அப்படி எந்த வகையான சிற்றுண்டிகளை தேநீரோடு சேர்த்துப் சாப்பிடக்கூடாது என்பதைத் தெரிந்துகொள்வோம்.


தவிர்க்க வேண்டியவை

கடலை மாவு போன்ற மாவுகளில் செய்த பக்கோடா போன்ற சில சிற்றுண்டிகளைத் தேநீருடன் சேர்த்து சாப்பிடும்போது அஜீரண கோளாறு ஏற்படுகிறது. அடுத்ததாக தேநீர் அருந்தும்போது அதனுடன் பச்சை காய்கறிகளை சேர்த்து உண்ணக்கூடாது. வெறுமனே பச்சை காய்கறிகள் சாப்பிடுவது உடலுக்கு நன்மையளிக்கும், ஆனால் தேநீருடன் சேர்த்து சாப்பிடும்பொழுது உடலுக்கு தீங்கை ஏற்படுத்துகிறது.

லெமன் டீ

பலருக்கும் லெமன் டீ என்றால் பிடிக்கும். டயட்டில் இருப்பவர்கள் கூட இந்த லெமன் கலந்த தேநீரை பருகுவார்கள். ஆனால் இந்த லெமன் தேயிலையுடன் கலக்கும்பொழுது அமிலமாக மாறி வயிறு சம்மந்தமான கோளாறை ஏற்படுத்துகிறது. மேலும் மஞ்சள் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை தேநீர் அருந்தும்போது உட்கொள்ளக்கூடாது. அது அமிலத்தன்மையை அதிகரிக்க செய்து செரிமான கோளாறுகளை உண்டுபண்ணுகிறது.அதேபோல பாலுடன் இரும்பு சத்து நிறைந்த பொருட்களை எடுத்துக்கொள்வது அவ்வளவு நல்லதல்ல.

நட்ஸ்

தேநீருடன் நட்ஸ் வகைகளை உண்ணுவது உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும். ஏனெனில் தேநீரில் உள்ள டானின் என்கிற பொருள் நட்ஸ்களில் உள்ள ஊட்டச்சத்துக்களை தடுக்கிறது.

0 Comments:

Post a Comment