இட்லி, தோசை மாவு தயாரிக்கும் தொழில் தொடங்குவது எப்படி? - முழுமையான வழிகாட்டல்!

 தொழில்களில் எப்போது சரிவே காணாத தொழில்கள் என்றால் அது உணவு தொடர்பான தொழில்தான். தற்போதையக் காலகட்டத்தில் பிரபலமான உணவுப் பொருட்கள் எல்லாம் ஒரு காலத்தில் சிறிய அளவில் தொடங்கிப் போராடி உலகளவில் சாதனைப் படைத்தவர்கள்தான். அந்த அளவிற்கு உணவு தொழில்களுக்கான சந்தை அதிகமாக இருக்கிறது.

அதில் நீங்களும் இணைய எளிய தொழிலே இட்லி தோசை மாவு அரைத்து வியாபாரம் செய்வது. முதல் கட்டத்தில் வீட்டில் இருந்தபடியே கூட இந்த தொழிலைத் தொடங்கலாம். சிறிய முதலீட்டில் குறுகிய காலத்தில் நல்ல லாபம் தரும் தொழில் இது. செலவிடும் நேரம், முதலீடு மற்றும் உழைப்புக்கு ஏற்ற லாபம் பெறலாம். குறிப்பாக தற்போதைய வேகமான காலத்தில் தினமும் மாவை ஊரவைத்து முறையாகச் செய்ய யாருக்கும் நேரமில்லை. இதில் உங்களுக்கு வேலைக்குச் செல்லும் நபர்கள் மட்டும் இல்லாமல் உணவகங்கள் கூட வாடிக்கையாளர்களாகக் கிடைப்பார்கள். அதனால் உங்கள் வேலை தடைப்படாமல் தினமும் லாபம் பார்க்கலாம். இட்லி தோசை மாவு தொழில் தொடங்க தேவையான விவரங்களைப் பார்க்கலாம்.

இட்லி தோசை மாவு தொழில் தொடங்குவது எப்படி? நீங்கள் வீட்டில் இருந்தபடியே கூட இந்த தொழிலைத் தொடங்கலாம். உங்கள் ஏரியாவில் சிறிய அளவில் தொடங்க வேண்டும் என்றால் வீட்டில் இருந்தபடியே எளிய முறையில் ஏற்கனவே உள்ள பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இட்லி தோசை மாவு அரைத்து கடைகளில் சப்ளை செய்ய அல்லது பெரிய சூப்பர்மார்க்கெட் போன்ற இடங்களில் விற்பனை செய்ய வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் கண்டிப்பாக இந்த தகவலைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

முதலீடு : குறைந்தளவு முதலீடு என்றால் சுமார் 2 இருந்து 3 லட்சம் வரை ஆகும். வியாபாரம் என்றால் அதற்கு ஏற்ற வேகம் தேவை. அதற்காக மாவு அரைக்க Instant Wet Grinder என்ற இயந்திரத்தை வாங்க வேண்டும். இந்த இயந்திரம் சுமார் ரூ.20,000 முதல் ரூ.35,000 ஆயிரம் வரை வரும். அதனைத் தொடர்ந்து, சில பாத்திரங்கள் வாங்க வேண்டும். இது இல்லாமல் தின அரிசி, உளுந்து போன்ற பொருட்கள் வாங்க வேண்டும். மாவு தாயார் செய்ய 10க்கு 10 அடி இடம் இருந்தால் போதுமானது.

தொழிலைப் பதிவு செய்வது எப்படி? இட்லி தோசை மாவு அரைக்கும் தொழில் குறைந்த முதலீட்டில் தொடங்குவதால் சிறுதொழில்களில் இடம்பெறும். எந்த வித உணவு தாயரிப்பு தொழில்களாக இருந்தாலும் அதற்குக் கண்டிப்பாக Fssai பதிவுச் சான்றிதழ் பெறவேண்டும். தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் இணைந்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 கீழ் பதிவு சான்றிதழ் பெற வேண்டும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அடிப்படையில் வழங்கப்படும் Udyog Aadhar சான்றிதழைப் பதிவு செய்து பெற வேண்டும். தொடர்ந்து, உங்கள் பகுதி மாவட்ட அலுவலகத்தில் இருந்து கைத்தொழில்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் வழங்கப்படும் லைசென்ஸ் பெறவேண்டும். மேலும் தொழில் வரி செலுத்தி அதற்கான ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.இது எல்லாம் இல்லாமல் GST வரிக்குப் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். அது உங்களுக்கு வங்கிக் கடன் வாங்க உதவும்.

வங்கிக் கடன் வாங்குவது எப்படி? MSME பதிவாக நீங்கள் வாங்கும் Udyog Aadhar சான்றிதழ் இருப்பதால் வங்கிக் கடன் வாங்குவது மிகவும் எளிமையானது. தொழில்முனைவோர்களுக்கான வங்கிக் கடன்களில் இருக்கின்ற சலுகைகளின் மூலம் குறைந்த வட்டியில் கடன் பெற்று உங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ளலாம். மேலும் மேல் குறிப்பிட்ட அனைத்து சான்றிதழ்களையும் பெற்று உள்ளீர்கள் என்றால் உங்கள் தொழிலை மேலும் விரிவுபடுத்தி பெரிய அளவில் உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்.

இட்லி தோசை மாவு தாயார் செய்வது எப்படி? வீட்டு உபயோகத்திற்கு என்று இல்லாமல் வியாபாரத்திற்கு என்றால் தினசரி வியாபாரத்திற்கு என்று ஏற்றவாறு மாவு அரைக்க வேண்டும். 1 கிலோ அரிசி என்றால் அதற்கு 200 கிராம் வரை உளுந்து போட்டுக்கொள்ள வேண்டும். வியாபாரத்திற்குத் தரமும் மிகவும் முக்கியம். அதனால் தரமான இட்லி அரிசி, உளுந்தைப் பயன்படுத்தவும்.

 தேவையான பொருட்கள் : அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம். 

அரைக்கும் முறை : 1 கிலோ அரிசிக்கு 200 கிராம் உளுந்து சேர்க்க வேண்டும். சிறிதளவு வெந்தயம் உளுந்துடன் சேர்த்து ஊரவைக்க வேண்டும். இரண்டையும் சுமார் 4 -5 மணி நேரம் வரை ஊரவைக்க வேண்டும். அதற்குப் பின்னர் தனித் தனியாக அரைத்து பின்னர் ஒன்றாகச் சேர்த்து உப்புடன் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். சுமார் 8 மணி நேரமாவது மாவு தாயார் ஆக தேவை. அதனால் அடுத்த நாள் காலை மாவுக்கு இரவே அரைத்து வைக்க வேண்டும்.

பேக்கிங் முறை : அரைந்த மாவை பேக்கிங் செய்வதில் கவனம் செலுத்துவது நல்லது. தரமான அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட கவர்களை பயன்படுத்த வேண்டும். உணவு காலாவதியாகும் நேரம், உற்பத்தி செய்யப்பட்ட நேரம் போன்றவற்றை பேக்கிங் இடம்பெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சாதாரண Sealing Machine இயந்திரத்தை பேக்கிங் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

விநியோக்கிக்கும் முறை : தாயாராக உள்ள மாவு பாக்கெட்களை வாடிக்கையாக சில கடைகளில் விற்பனைக்குக் கொடுக்கலாம். பெரிய அளவிலான சூப்பர் மார்கெட் போன்ற கடைகளில் ஆர்டர் பெறும் வகையில் வியாபாரம் செய்தால் நாள் ஒன்றுக்கு சுமார் 2000 பாக்கெட் வரை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம். 

லாபம் : ஒரு நாளைக்கு 2,000 ஆயிரம் வரை செலவு செய்தால் சுமார் 4,000 முதல் 5,000 வரை லாபம் பெறலாம். அனைத்து செலவுகளும் போக மாதம் ரூ.50,000 வரை தனி நபராக லாபம் பெறலாம்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

வயிறு உப்பசமாக இருக்கும்போது இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க... உடனே பலன் தரும்.!

 வயிறு உப்புசம் மிகவும் பொதுவானது மற்றும் நம்மில் பலர் பல சந்தர்ப்பங்களில் இதை எதிர்கொள்ள நேரிடுகிறது. சில நேரங்களில் வாயு மற்றும் வலியுடன் ஏற்படும் ஒரு அசௌகரிய நிலை வயிறு உப்புசம் எனப்படுகிறது. நம் வயிற்றில் அதிகமான வாயு அல்லது நீர் இருக்கும் போது வயிறு உப்புசம் ஏற்படுகிறது. இது வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பதோடு அடிக்கடி இதுபோன்று வயிற்று பிரச்சனைகள் ஏற்படுவது அடிப்படை உடல்நலப் பிரச்சினைகளின் அடையாளமாக இருக்கலாம். உப்புசமானது நமது உணவுப் பழக்கவழக்கங்களுடன் நேரடி தொடர்புடையது மற்றும் நாம் சாப்பிடும் உணவுகளை பொறுத்தது.

பால், ப்ரோக்கோலி அல்லது காலிஃபிளவர் போன்ற பல உணவுகள் வயிறு உப்புசத்திற்கு வழிவகுக்கும் என்பதால், நாம் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிட கூடாது என்பதில் கவனம் செலுத்துவது அவசியம். உப்புசத்திற்கு வழிவகுக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று குடல் வீக்கம். காற்று மாசுபாடு, புகைபழக்கம், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுப்பது, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவை குடல் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. இது முடிவில் உப்புசம் போன்ற கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. நீங்கள் வயிறு உப்புசத்தை தவிர்க்க விரும்பினால் உங்கள் டயட்டில் பின்வரும் உணவுகள் மற்றும் பானங்களை சேர்த்து கொள்ளுங்கள்.

வெள்ளரி : ஒரு பச்சை வெள்ளரியில் சுமார் 95% தண்ணீர் அடங்கி இருக்கிறது மற்றும் உங்களை ஹைட்ரேட்டாக வைத்திருக்க ஒரு சிறந்த உணவாகும். வெள்ளரிகள் வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகிறது. தவிர மலச்சிக்கலை தடுக்கும் மற்றும் குடல் இயக்கத்திற்கு உதவும் நார்ச்சத்தும் வெள்ளரிகளில் அடங்கி இருக்கிறது. எனவே உங்கள் டயட்டில் வெள்ளரித் துண்டுகளைச் சேர்த்து கொள்ளுங்கள்.

அன்னாசி பழம் : அன்னாசி பழத்தில் வைட்டமின் சி, மாங்கனீஸ் மற்றும் பி வைட்டமின்ஸ் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளன. அன்னாசியில் புரோமிலைன் என்ற நொதி உள்ளது, இது சரியான செரிமானத்தை ஊக்குவிப்பதன் மூலம் வயிறு உப்புசத்தை குறைக்க உதவும். மேலும் அன்னாசி வயிற்றில் உள்ள புரதங்களை உடைத்து செரிமானத்திற்கு உதவும் இயற்கையான செரிமான நொதியை கொண்ட நீர் அடர்த்தி மிகுந்த பழமாகும்.

பெருஞ்சீரக விதைகள் : சோம்பு எனப்படும் பெருஞ்சீரகம் விதைகளில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை குடல் தசைகளை தளர்த்தவும், வாயுவை வெளியேற்றவும் உதவுகின்றன. தவிர செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பெருஞ்சீரக விதைகளை ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து விதைகளை வடிகட்டி, உங்கள் உணவுக்கு இடையில் இந்த தண்ணீரை பருகவும்.

கிரீன் டீ : வழக்கமாக குடிக்கும் காபி அல்லது டீ-க்கு பதில் கிரீன் டீ-யை குடிப்பது உங்களை ஹைட்ரேட்டாக வைத்திருக்க மற்றும் உடலில் நீர் தேங்குவதை தடுக்க உதவுகிறது. கிரீன் டீ-யில் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளன மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களுக்கு எதிராக போராடுகிறது மற்றும் உப்புசத்திற்கு எதிராக வேலை செய்கிறது. கிரீன் டீ-யில் உள்ள காஃபின் மூலப்பொருள் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. மேலும் செரிமான மண்டலத்தின் சிறப்பான இயக்கத்திற்கு உதவுகிறது.

அவகடோ: பட்டர் ஃப்ரூட் என்று குறிப்பிடப்படும் அவகடோ பழத்தில் என்னற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இந்த பழங்கள் ஃபோலேட் (வைட்டமின் பி9), வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இந்த பழத்தில் நிறைந்திருக்கும் அதிக பொட்டாசியம் உடலில் சோடியம் சமநிலையை ஒழுங்குபடுத்தி வயிற்றில் தண்ணீர் தேங்குவதை தடுக்கிறது. அவகடோவில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் உப்புசத்தை தடுக்க உதவுகிறது. மதிய உணவில் இந்தப் பழத்தின் ஒரு பீஸ் சாப்பிட்டால் கூட நன்மை அளிக்கும்.


Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

உலர் கருப்பு திராட்சை அல்லது மஞ்சள் திராட்சை... எதில் ஆரோக்கியம் அதிகம்..?

 கருப்பு திராட்சை மற்றும் பச்சை திராட்சை இரண்டின் உலர வைத்த பதம்தான் உலர் திராட்சை என்கிறோம். கருப்பு உலர் திராட்சை , தங்க நிற அல்லது மஞ்சள் நிற உலர் திராட்சை என இரண்டு உள்ளது. இதில் மஞ்சள் நிற உலர் திராட்சை விசேஷ நாட்களில் இனிப்பு வகைகளில் சேர்ப்பதுண்டு. கருப்பு திராட்சை ஊட்டச்சத்திற்காக சாப்பிடுவார்கள். ஆனால் இவை இரண்டில் எதை ஆரோக்கியத்திற்காக சாப்பிடுவது என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. உங்களை தெளிவுபடுத்தவே இந்தக் கட்டுரை.

எது சிறந்தது..? : பொதுவாக இரண்டு திராட்சையிலும் ஆரோக்கியம் , ஊட்டச்சத்து என்பது சம அளவிலேயே உள்ளது. ஆனால் கலோரியில் மட்டுமே இரண்டும் வித்தியாசப்படுகிறது. அதாவது கால் கப் மஞ்சள் நிற திராட்சையில் 130 கலோரிகள் அடங்கியுள்ளது. கருப்பு திராட்சையில் 120 கலோரிகள் அடங்கியுள்ளது. இரண்டிலும் இனிப்பு சுவை அதாவது சர்க்கரை 29 கிராம் அடங்கியுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து , பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்து நிறைவாக உள்ளது.

இந்த இரண்டு திராட்சைகளையும் சாப்பிடுவதால் மலச்சிக்கல், அமிலத்தன்மை, இரத்த சோகை, காய்ச்சல் மற்றும் பாலியல் தொடர்பான பிரச்னைகளுக்கு நிவாரணம் என பல பிரச்னைகளுக்கு உதவுகிறது.

இருப்பினும் கருப்பு திராட்சையையே வல்லுநர்கள் , மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் ஆரோக்கியமான வழியில் எடை அதிகரிக்க கருப்பு திராட்சை உதவுகிறது. அத்துடன் கண் ஆரோக்கியம், பல் பராமரிப்பு மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கும் கருப்பு திராட்சையை சாப்பிடலாம். கருப்பு திராட்சையை நேரடியாக அல்லாமல் இரவு தூங்கும் முன் ஊற வைத்துவிட்டு மறுநாள் காலையில் சாப்பிட்டால் அதன் ஆரோக்கியத்தை முழுமையாக பெறலாம்.

உலர் திராட்சையில் மெக்னீசியம் நிறைந்திருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கும், இதயத்தின் செயல்பாடுகளுக்கும் நல்ல பலன் தருகிறது. அதோடு நார்ச்சத்து நிறைந்திருப்பது கூடுதல் சிறப்பு..

2013 ஆண்டு Journal of Food Science-இல் வெளியான தகவலில் திராட்சை நீரிழிவு மற்றும் இதய நோய்களை உருவாக்கும் அபாயங்களை தவிர்க்க உதவுகிறது என்று கூறியுள்ளது. இருப்பினும், திராட்சையில் அதிக கலோரிகள் இருப்பதால், நீங்கள் ஆரோக்கியமான எடையை அடைய அல்லது பராமரிக்க விரும்பினால் அவற்றை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip



ஒரு கையளவு பூசணி விதையில் இத்தனை பிரச்சனைகளை சரி செய்யலாமா..? ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

 பெப்டஸ் என்றும் அழைக்கப்படும் பூசணி விதைகள், பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அதீத ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. பூசணி விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. தினசரி உங்கள் உணவில் பூசணி விதைகளை சேர்ப்பதன் மூலம், நீங்கள் நீண்டகால ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். பூசணி விதைகளில் இரும்பு, கால்சியம், பி 2, ஃபோலேட் மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது.

பூசணி விதைகளில் அதிக அளவு கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ஆரோக்கியமான இரத்த நாளங்களை பராமரிக்க உதவுகிறது மற்றும் இரத்தத்தில் உள்ள கேட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு பூசணி விதைகளும் மிகவும் நன்மை பயக்கும். மேலும், இது இதயத்தின் இயக்கம், இரத்த நாளங்களின் தளர்வு மற்றும் தடையற்ற குடல் செயல்பாடு போன்ற முக்கியமான உடலியல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

பூசணி விதைகளில் இயற்கையாகவே ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. அதேபோல, பூசணி விதைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை கீல்வாதம் வலியைக் குறைக்க உதவுகின்றன. மூட்டு வலிக்கு இந்த விதை, ஒரு நல்ல மருந்து.

பூசணி விதைகளில் உள்ள பைட்டோ கெமிக்கல்கல் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள சத்துக்கள் பெருங்குடல், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

தூக்கமின்மை பிரச்சனையால் அவதிபடுபவர்கள் தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் இரவு நல்ல தூக்கம் வரும்.

பூசணி விதைகளை நெய்யில் வறுத்து தினமும் அதனை சாப்பிட்டால் மாதவிடாய்க் காலத்தில் ஏற்படக்கூடிய வலி மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது பூசணி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பு நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிக அளவில் இருக்கிறது. இது நீரில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலில் சீராக இயங்குவதற்கு உதவி செய்யும்.

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் தாவர உணவுகளின் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா அமிலம் பூசணி விதைகளில் அதிக அளவில் இருக்கிறது.

உடல் எடையை குறைப்பதில் பெரும்பாலான கவனம் செலுத்துகின்றனர். பூசணி விதைகள் உடல் எடையையை குறைப்பதற்கு உதவும் நல்ல மூலமாக உள்ளது. பூசணி விதைகளில் நிறைய நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் பசியை கட்டுப்படுத்தி கேட்ட கொழுப்பை குறைக்கிறது.

பூசணி விதைகளில் கர்டிவைட்டாசின் உள்ளது. இது ஒரு தனித்துவமான அமினோ அமிலமாகும், இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில், வைட்டமின் சி நிறைந்துள்ளதால் முடி வளர்ச்சிக்கு உதவும். பூசணி விதை எண்ணெயைப் பயன்படுத்தி வந்தால், முடி உதிர்வு குறைந்து, அடர்த்தி அதிகரிக்கும்.

பூசணி விதைகளில் வைட்டமின் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. அவை வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன மற்றும் தீங்கு விளைவிக்கும் செல்களை அளிக்கிறது. இதனால், உங்கள் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். நோயெதிர்ப்பு சக்த்தி அதிகரிக்கும்.

பூசணி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, அவை உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த சிறிய விதைகளில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களும் உள்ளன, அவை மோசமான கொழுப்பைக் குறைக்கவும் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகின்றன.

விந்தணு தரம் மேம்படும் : உடலில் துத்தநாகம் குறைவாக உள்ளதால், விந்தணு தரம் குறைவு மற்றும் கருவுறுதலில் பிரச்சனை ஏற்படுகிறது. பூசணி விதைகள் துத்தநாகம் நிறைந்தவை என்பதால், அதை நாம் சாப்பிடுவதன் மூலம் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தலாம்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip


Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நார்ச்சத்து நிறைந்த 7 காய்கறிகள்..!

 மனிதனின் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் உடல் இயக்கத்திற்கு ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் உதவக்கூடியதாக இருக்கும். இருந்தப் போதும் குடல் ஆரோக்கியம் என்பது மற்ற பாகங்களை விட கொஞ்சம் சிறப்பு வாய்ந்தது என்று கூறலாம். ஆம் மனித உடலில் சுமார் 40 டிரில்லியன் பாக்டீரியாக்கள் இருந்தாலும், பெரும்பாலான பாக்டீரியாக்கள் குடலில் தான் காணப்படுகின்றன. இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்களைக் காப்பாற்றுவதற்கும் கெட்ட பாக்டீரியாக்களை ஒழிப்பதற்கு குடல் ஆரோக்கியம் என்பது இன்றியமையாதது.

ஒருவேளை உங்களது குடல் சீராக இயக்கவில்லை என்றால், நோய் எதிர்ப்பு அமைப்பு குறைதல், மூளை ஆரோக்கியமின்மை மற்றும் தூக்கமின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மெடிக்கல் நியூஸ் டுடேயின் அறிக்கையின் படி, நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது ஒரு நபரின் குடல் நுண்ணுயிரியை மாற்றுவதற்கு கணிசமாக உதவும். மேலும் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபது முதல் குடல் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக நாம் நார்ச்சத்துள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோ என்னென்ன காய்கறிகள் என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

இலை காய்கறிகள் : நம்முடை உணவுமுறையில் காணப்படும் முக்கிய பச்சை இலை காய்கறிகளில் ஒன்று கீரை. இதில் ஃபோலேட், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஏ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்குப் பேருதவியாக உள்ளது.

கேரட் : கேரட்டில் உள்ள அதிக நார்ச்சத்து மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவுகிறது. பச்சையாக கேரட்டை சாப்பிடுவது, பல உடல்நலப் பிரச்சனையை சீராக்க உதவும். இது தவிர, எலும்புகளை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கண் பிரச்சனைகளுக்கும் கேரட் உதவுகிறது. இதுப்போன்று பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளதால் உங்களது உணவு முறையில் நீங்கள் கேரட்டை மறக்காமல் சேர்த்துக்கொள்ளவும்.

பீட்ரூட் : பீட்ரூட் அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளில் ஒன்று. இது செரிமான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதோடு இது செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், மலச்சிக்கலைத் தடுப்பதன் மூலம் குடலில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க முடியும்.

அஸ்பாரகஸ் : நாம் அனைத்து காய்கறிக் கடைகளிலும் இதைப் பார்க்க முடியாது. மிகவும் அரிதானக் காய்கறிகளில் ஒன்று. ஆனால் இதில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்குப் பேருதவியாக உள்ளது. குறிப்பாக நல்ல வளமான நார்ச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன்கள், வைட்டமின் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், நல்ல செரிமானத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. மேலும் இதில் இன்சுலின் எனும் கார்ப்போஹைட்ரேட் உள்ளது. இது உணவுப்பொருள்களில் உள்ள சத்துக்களை முழுவதுமாக உறிஞ்சுவதோடு, குடல் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.

பாகற்காய் : கசப்பான சுவையுடைய பாகற்காய் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் காயாகும்.  அவை நோய்களை எதிர்த்துப் போராடும் பண்புகளை உடையது மேலும் உடல் வளர்ச்சிக்கு முக்கியமான பங்கு வகிப்பது மட்டுமல்லாமல் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன. இதை சாப்பிடுகையில் குடல் ஆரோக்கியம்  மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட பல குடல் பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.

பிரஸ்ஸல்ஸ் முளைகள் : இதில் ஆன்டிஆக்ஸிடன்கள், வைட்டமின் கே உள்ளிட்ட சத்துக்களோடு அதிகளவு நார்ச்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது. எனவே செரிமான பிரச்சனை ஏற்படாமல் பாதுகாப்பதோடு குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

ப்ரோக்கோலி : ப்ரோக்கோலியில் அதிக நார்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளன. இவை இரண்டும் ஆரோக்கியமான குடல் செயல்பாடு மற்றும் செரிமான பிரச்சனையைத் தீர்க்கக்கூடிய ஊட்டச்சத்துள்ள காய்கறிகளி ஒன்று. எனவே உங்களது உணவு முறையில் இந்த காய்கறிகளை நீங்கள் பயன்படுத்தும்போது, இதில் நார்ச்சத்துக்களால் மலச்சிக்கல் பிரச்சனைக்குத் தீர்வாக அமைவதோடு, செரிமானப் பாதையும் பராமரிக்க உதவுகிறது.


Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

குறைந்த வட்டியில் ரூ.2 லட்சம் வரை கடன் உதவி... பெண்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

 தேசிய பிற்படுத்தப்பட்டோர் பிரிவு நிதி, மேம்பாட்டுக் கழகம் (NBCFDC), பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் (New Swarnima Scheme For women) சிறு வணிகம் செய்வதற்கு குறைந்த வட்டியில் கடன் அளித்து வருகிறது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பெறுவதற்கான பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் இத்திட்டத்தை கீழ் விண்ணப்பிக்கலாம்..

பொதுவாக, இதுபோன்ற கடன் திட்டங்களில், ஒட்டு மொத்த திட்டத் தொகையில் பயனாளிகள்  குறைந்தது 5 முதல் 10% வரை பங்களிப்பு செய்ய வேண்டும். ஆனால், இந்த திட்டத்தில் அத்தகைய நிபந்தனைகள் ஏதுமில்லை.

சுயமான தொழில் தொடங்க இருக்கும் பெண்கள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வெறும் 5% வட்டியில் ரூ 2 லட்சம் வரை கடன் உதவி பெறலாம். இந்த வட்டி விகிதம்  ஏனைய இதர திட்டங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும். கடன் தொகையை, 3 முதல் 8 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்த அவகாசம் அளிக்கப்படுகிறது.

அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் , மண்டல மேலாளர் (அல்லது) அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்/ நகர கூட்டுறவு வங்கிகள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் அலுவலரை அணுகவும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரூ.1.25 லட்சம் வரை சம்பளம்... ஊராட்சித் துறையில் 97 காலிப்பணியிடங்கள்

 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் பணிபுரிய 97 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பிப்ரவரி 16 ஆம் நாள் முதல் தொடங்கப்பட்டுள்ளது.

பல்வேறு பிரிவுகளில் 97 காலிப்பணியிடங்கள் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. இப்பணியிடங்களுக்குச் சம்பளமாக ரூ.25,000 முதல் தொடங்கி ரூ.1,25,000 வரை வழங்கப்படுகிறது.

காலிப்பணியிடங்கள் விவரங்கள்: திட்ட நிர்வாகி (தொழில் மேம்பாடு) - 13, திட்ட நிர்வாக (கணக்கு) - 18, திட்ட நிர்வாகி (திறன் மற்றும் வேலைகள்) -25, இளம் தொழில் வல்லுநர்கள் - 30, மாவட்ட நிர்வாக அதிகாரி - 2, திட்ட நிர்வாக (அக்கவுண்ட்ஸ் மற்றும் அட்மின்) - 1, திட்ட நிர்வாகி ( தொழில் நிறுவனங்களுக்கான நிதி விநியோகம்) - 1, செயல் அதிகாரி - 1 மற்றும் வட்டார குழு தலைவர் - 6.

வயது வரம்பு : திட்ட நிர்வாகி (தொழில் மேம்பாடு), திட்ட நிர்வாக (கணக்கு) மற்றும் திட்ட நிர்வாகி (திறன் மற்றும் வேலைகள்) பதவிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 40 ஆக உள்ளது. இளம் தொழில் வல்லுநர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க 28 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாக அதிகாரி பதவிக்கு அதிகபட்ச  45 வயதாகவும், இதர பதவிகளுக்கு அதிகபட்ச வயது 53 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: அந்தந்த பதவிகளுக்கு ஏற்ற பாடப்பிரிவில் முதுகலை அல்லது இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 4 முதல் 8 ஆண்டுகள் அனுபவம் தேவை. இளம் தொழில் வல்லுநர்கள் பதவிகளுக்கு Business Administration, rural management, business management, entrepreneurship development, social work, agriculture, automation, engineering, marketing, finance, HR என்ற பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் : திட்ட நிர்வாகி (தொழில் மேம்பாடு), திட்ட நிர்வாக (கணக்கு) மற்றும் திட்ட நிர்வாகி (திறன் மற்றும் வேலைகள்) ஆகிய பதவிகளுக்கு மாதம் ரூ.20,000 சம்பளம் வழங்கப்படும். இளம் தொழில் வல்லுநர்கள் பதவிக்கு ரூ.45,000 மாத சம்பளமாக வழங்கப்படும். மாவட்ட நிர்வாக அதிகாரி பதவிகளுக்கு ரூ.75,000 - 1,25,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதர பதவிகளுக்கு ரூ.35,000 சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://tnjobs.tnmhr.com/Landing.aspx என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு மார்ச் 2 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Nokkam App: அரசு பணிக்கான போட்டித் தேர்வுக்கு தயாராகி வருவோர்களுக்கு குட் நியூஸ் -இலவச பயிற்சி பெற அசத்தல் வாய்ப்பு

 அரசு போட்டித் தேர்வுகளுக்கென்றே தயாராகி வரும் தமிழ்நாடு மாணவர்கள் பயன்பெறும் வகையில், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி, ' நோக்கம்' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

தமிழ்நாடு அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி (Anna Administrative Staff College ) அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.

கால மாற்றத்திற்கேற்ப பயிற்சிகளின் தன்மையை விரிவுபடுத்தவும், தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அது சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் இக்கல்லூரி AIM TN என்றழைக்கப்படும் YouTube channel ஒன்றை ஆரம்பித்து அதில் பயிற்சி வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறது.

அதன், தொடர்ச்சியாக, தற்போது போட்டித்  தேர்வுகளுக்கென்றே 'நோக்கம்' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இச்செயலியின் மூலம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB), மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC), வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS), UPSC போன்ற அனைத்து நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அன்றாடம் பதிவேற்றப்படும் பயிற்சிக் காணொலிகளைக் காண்பதோடு அதற்கான பாடக் குறிப்புகளையும் (notes) இச்செயலி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதன் சிறப்பம்சமே மாதிரித் தேர்வுகள் தாம். ஒவ்வொரு பாடத்திலும் பலவிதமான தேர்வுகள் நடத்தப்பட்டு விடைத்தாள்கள் திருத்திக்கொடுக்கப்படும். இது மாணவர்கள் தங்கள் தயாரிப்பின் நிலையை அவ்வப்போது சுயமதிப்பீடு செய்து கொள்ள உதவும். 'நோக்கம்' செயலியை ப்ளேஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளீர்களா?... அரசு கல்லூரியில் காலியிடங்கள் அறிவிப்பு..!

 கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் (Government College Of Fine Arts-Kumbakonam) காலியாக உள்ள இரண்டு அலுவலக உதவியாளர் (Office Assistant) காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்- 2, சம்பள விகிதம் நிலை - 1 (ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரை).  வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1.07. 2022 அன்றைய நிலவரப்படி, 18  முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்தும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பட்டியல்களில் இருந்தும்  தகுதியான நபர்களை தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும்.

இந்த பதவிக்கான விண்ணப்பப் படிவத்தை, தஞ்சாவூர் மாவட்ட https://thanjavur.nic.in/ இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகல்களுடன்  வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய முகவரி, முதல்வர், அரசு கவின் கலைக் கல்லூரி, மேலக்கொட்டையூர், சுவாமிமலை மெயின் ரோடு, மேலக்காவேரி போஸ்ட், கும்பகோணம், தஞ்சாவூர் - 612002 ஆகும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


அஞ்சல் துறை தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? முக்கிய அப்டேட்ஸ் இதோ..!

 40,889 கிராம அஞ்சல் பணியாளர் பதவிக்கான தகுதி பட்டியல் (Merit List) மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  விண்ணப்பதாரர்கள், GDS Online Portal தளத்தில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளாலாம்.

நாடு முழுவதும் கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான ( Gramin Dak Sevaks (GDS) (Branch Postmaster(BPM)/Assistant Branch Postmaster ) அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டது. கடந்த 16ம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், தற்போது தகுதி பட்டியலை தயாரிக்கும் பணிகள் தீவிரமாகி வருகிறது.

தகுதி பட்டியல் எப்படி தயாரிக்கப்படும்? 

இந்த பதவிக்கு, எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல் 10ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (Merti List) தயாரிக்கப்படும். ஒருவேளை, 10ம் வகுப்புத் தேர்வில், இரண்டிற்கும் மேற்பட்ட தேர்வர்கள் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எந்தவித மனித தலையீடுகள் இல்லாமல், தொழில்நுட்ப உதவியோடு இந்த பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது, மேலும்,  மத்திய அரசின் இடஒதுக்கீடு முறை இதில் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு: 

தகுதிப் பட்டியலில் இடம் பிடித்தவர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) வாயிலாக தகவல் பரிமாறிக் கொள்ளப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டும். சரிபார்ப்பின் போது,  தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் உறுதி செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TANGEDCO நிறுவனத்தில் 10,000க்கும் மேற்பட்ட காலியிடங்களா? இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

 தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) பெயரில் சமூக ஊடங்கங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக,   தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 10,000க்கும் மேற்பட்ட மதிப்பீட்டாளர் (Assessors) காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், குறைந்தபட்சம் 10ம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.ஆனால், இது போலியான வேலைவாய்ப்பு அறிவிக்கை என்று  டான்ஜெட்கொ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், செய்தித் தாள்களிலும் வெளியிடப்படும். போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள் குறித்து பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்  என்று தெரிவித்துளளது.

முன்னதாக, இந்த மதிப்பீட்டாளர்கள் பணி தொடர்பாக ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, " தற்போது இருக்கும் மின் கணக்கு எடுக்கும் மீட்டர்களை ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றிவிட்டால், இந்தப் பணிக்கு புதிய ஆட்கள் எடுக்கும் தேவையிருக்காது" என்று தெரிவித்திருந்தார்.

எனவே, வேலை தேடும் இளைஞர்கள், போலி அறிவிப்புகளை நம்பாமல் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள அந்தந்த அரசு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஒருமுறை பார்த்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்... தருமபுரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் பணி..!

 தருமபுரி மாவட்ட இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்துடன் ஏற்கனவே உள்ள மற்றும் புதியதாக ஏற்படுத்தப்பட்ட ஆய்வாளர்கள், சிறப்பு வட்டாட்சியர் பணியிடங்களுக்குத் துணை பணியிடங்களாக ஏற்படுத்தப்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களைத் தற்காலிகமாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்தம் 7 காலியிடங்கள் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. அதில் ஆதிதிராவிடர் (அருந்ததியினர்) -1, பொது - 1, ஆதிதிராவிடர் - 1, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் அறிவிக்கப்படாத வகுப்பினர் - 1, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இதர பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர) - 1, பொதுப் பிரிவு - 1, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 1.

கல்வித்தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வித்தகுதியாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளம் : இப்பணியிடங்களுக்கு ரூ.15,700 முதல் தொடங்கி ரூ.50,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு : குறைந்தபட்ச வயதாக 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதே போல், அதிகபட்சமாக SC/ST பிரிவினருக்கு 37 ஆகவும், பொதுப் பிரிவினருக்கு 32 ஆகவும், MBC/DNC பிரிவினருக்கு 34 ஆகவும் மற்றும் BC பிரிவினருக்கு 34 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதார்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு அதில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து உரியச் சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, செங்குந்தர் திருமணம் மண்டப வளாகம், பென்னாகரம் ரோடு, குமாரசாமிப்பேட்டை, தருமபுரி மாவட்டம் - 636 701. என்ற முகவரிக்குத் தபால் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 11.03.2023 மாலை 5.30 வரை தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு செய்யவும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரூ. 2 லட்சம் வரை மாதச் சம்பளம்... டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புது வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..!

 கல்லூரி நூலகர், மாவட்ட நூலக அலுவலர் மற்றும் இதர பதவிகளுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  வெளியிட்டது. இதற்கான, விண்ணப்ப செயல்முறை 1.03.2023 அன்றுடன் நிறைவடைய இருக்கிறது. எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்  கொள்ளப்படுகின்றனர்.

பணியிடங்கள் பற்றிய விவரங்கள்: 

பதவிகாலியிடங்கள்சம்பளம்
கல்லூரி நூலகர் (அரசு சட்டக் கல்லூரி )8ரூ. 57,700-2,11,500
நூலகர் மற்றும் தகவல் அலுவலர்1ரூ.56,100- 2,05,700
மாவட்ட நூலக அலுவலர்3ரூ.56,100- 2,05,700

கல்வித் தகுதி: குறைந்தது நூலக அறிவியில் படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:  எழுத்துத் தேர்வு / கணினி வழித் தேர்வு, மற்றும் வாய்மொழித் தேர்வு என்ற இரண்டு நிலைகளில் பெற்ற மொத்த மதிப்பெண்கள்  அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை tnpsc.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 01-03-2023 ஆகும். காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை டிஎன்பிஎஸ்சி  அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

SSC CGL 2022 Tier1 ScoreCard: எஸ்எஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு! ரிசல்ட் செக் செய்வது எப்படி?

 

ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான முதற்கட்ட  தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது.  முதற்கட்ட தேர்வு எழுதிய தேர்வர்கள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

முன்னதாக, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளில் காலியாக உள்ள குரூப் 'பி'&'சி' பணியிடங்களுக்கான  அறிவிப்பை  பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 20,000 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இப்பதவிக்கான தேர்வு முறையானது, முதல் நிலை(Tier- I), இரண்டாம் நிலை (Tier- II), மூன்றாம் நிலை(Teir - III) என 3 முறைகளில் நடைபெற உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 1 முதல் 13 ஆகிய தேதிகளில் கணினி வழியில்  முதற்கட்ட தேர்வு  நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், முதற்கட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை https://ssc.nic.in/  என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதில், தேர்ச்சி பெற்ற விண்ணப்பதார்கள், கணினி வழியில் நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability) காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். மூன்றாம் நிலை தேர்வு பேனா/பேப்பர் முறையில் நடைபெறும். தேர்வர்கள் வினாக்களுக்கு விரிவான பதில்கள் அளிக்க வேண்டும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரூ.58,000 வரை சம்பளம்: இந்து அறநிலையத் துறையில் பல்வேறு காலியிடங்கள் - உடனே விண்ணப்பியுங்கள்

 Govt Jobs alert:  சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் மார்ச் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இளநிலை உதவியாளர்: காலியிடங்கள் 2 ஆகும். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். சம்பள நிலை:  ரூ. 18,500 முதல் 58600 வரை ஆகும்.

தமிழ் புலவர்: ஒரு காலியிடம். ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அல்லது அதற்கு இணையான தமிழில் B.lit அல்லது B.A., அல்லது M.A., அல்லது M.Lit பட்டம் பெற்றிருக்க வேண்டும். திருமுறைகள் ஒப்புவித்தலில் திறன் பெற்றிருக்க வேண்டும். சம்பள நிலை:  ரூ. 18,500 முதல் 58,600 வரை ஆகும்.

தவில்: ஒரு காலியிடம். தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.  இசைக்கருவிகளை வாசிப்பதில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியதுடன்,  ஏதேனும் சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் நடத்தப்படும் தவில் பள்ளிகளில் மூன்றாண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். சம்பள நிலை:  ரூ. 18,500 முதல் 58,600 வரை ஆகும்.

பிளம்பர்: ஒரு காலியிடம். அரசால் அங்கீகரிக்கப்ட்ட நிறுவனங்களால் குழாய் தொழில்/குழாய் பணியர் பாடப்பிரிவில் வழங்கப்படும் தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.  தொடர்புடைய பிரிவில் 5 ஆண்டுகள் அல்லது 2 ஆண்டுகள் தொழில் பழகுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பள நிலை: ரூ. 18000 முதல் ரூ. 56900 வரை ஆகும்.

வேத பாராயணம்: ஒரு காலியிடம். தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஏதேனும் சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி பாடசாலையில் அல்லது வேத தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் படிப்பினை மேற் கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். சம்பள நிலை ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரை ஆகும்.

உதவி பரிச்சாரகர்: காலியிடம் ஒன்று. தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். கோயிலில் வழங்களுக்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பள நிலை ரூ.10,000 முதல் 31,500 வரை ஆகும்.


இதர நிபந்தனைகள்: விண்ணப்பதாரர் 01.07.2022 அன்று 19- 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

mylaikapaleeswarar.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு கபாலீசுவரர், திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை- 4 ஆகும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரூ. 1 லட்சம் சம்பளத்தில் சவுதி அரேபியாவில் வேலை வேண்டுமா? நாளைக்குள் விண்ணப்பியுங்கள்!

 

சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு 150 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OVERSEAS MANPOWER CORPORATION LIMITED) தெரிவித்துள்ளது. இதற்கான, விண்ணப்ப செயல்முறை நாளையுடன் (23.02.2022) நிறைவடைய இருக்கிறது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள பெண் விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிட விவரம்: 

பணிசெவிலியர்
பணி இடம்சவுதி அரேபியா
காலியிடங்கள்150
பணி இடம்சவுதி அரேபியா
சம்பளம்ரூ. 80,000 முதல் 1,00,000 வரை
கல்வி தகுதிB.Sc Nursing
இதர சலுகைகள்மேற்படி சம்பளம் சேர்க்காமல் உணவு, இருப்பிடம், விமான பயணச் சீட்டு, ஆண்டு விடுமுறை ஆகியவைகள் அந்நாட்டின் வேலை அளிப்பவரால் தனியாக வழங்கப்படும்
நேர்காணல் தேதிபெங்களூர் : பிப்ரவரி 26, 27,28 மற்றும் மார்ச்  01ம் தேதிகொச்சின் : பிப்ரவரி 27,28,  மார்ச் 1,2,3டெல்லி: பிப்ரவரி 25,26சென்னை: 28 மற்றும் மார்ச் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி23.03.2023)

இப்பணிக்கு, விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ omcmanpower.com இணையதளத்தில்  விண்ணப்பிக்கலாம்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

8-ம் வகுப்புத் தேர்ச்சி போதும்: கும்பகோணம் அரசு கல்லூரியில் அலுவலக உதவியாளர் வேலை

 கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் (Government College Of Fine Arts-Kumbakonam) காலியாக உள்ள இரண்டு அலுவலக உதவியாளர் (Office Assistant) காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறைந்தது 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்அலுவலக உதவியாளர் (Office Assistant)
காலியிடம்2
சம்பள விகிதம்Level - 1 (15,700 முதல் ரூ.50,000 வரை )
வயது1.07. 2022 அன்றைய நிலவரப்படி, 18 - 37 வயதுக்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
இட ஒதுக்கீடு மற்றும் இன சுழற்சிஅருந்ததியினர் (Desititute Widow), பொதுப்பிரிவு ஆதரவற்றோர்
வேலைவாய்ப்பு அறிவிக்க எண்644/அ2/2022 

இந்த பதவிக்கான விண்ணப்பப் படிவத்தை, தஞ்சாவூர் மாவட்ட https://thanjavur.nic.in/ இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்கள் நகல்களுடன் வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய முகவரி, முதல்வர், அரசு கவின்கலைக் கல்லூரி, மேலக்கொட்டையூர், சுவாமிமலை மெயின்ரோடு, மேலக்காவேரி போஸ்ட், கும்பகோணம், தஞ்சாவூர் - 612002 ஆகும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் 577 காலியிடங்கள்: யுபிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ

 UPSC EPFO Recruitment : அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் (Employees' Provident Fund Organisation) காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

பொதுவாக, ஐஏஎஸ் , குரூப் 1,  வங்கித்  தேர்வுகளுக்கு தயாராகி வரும் பெரும்பாலான தேர்வர்கள் இந்த தேர்வில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் பெரும்பாலும் இதர தேர்வுகளோடு ஒத்து போவாதால், தேர்வர்கள் EPFO அறிவிப்புக்கு ஒரு வகையான எதிர்பார்ப்பு எப்போதுமே இருந்து வருகிறது. மேலும், குரூப் 1, ஐஏஎஸ் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு இதில்  வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

காலியிட விவரம்: 

பதவிகாலியிடங்கள்வயது வரம்பு
Enforcement officer/ Accounts officer41830
Assistant Provident Fund Commissioner15935
இதற்கான விண்ணப்பங்களை upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை வரும் 25ம் தேதியில் இருந்து தொடங்கும். இதற்கான,  அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.  கல்வித் தகுதி, வயது வரம்பு,  கட்டணம், தேர்வு முறை, கடைசி தேதி, விண்ணப்பக் கட்டணம்,  விண்ணப்பிக்கும் முறை ஆகியவை யுபிஎஸ்சி அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்படும்.
.

ஜிங்க் சத்து நிறைந்த டாப் 10 உணவுகள்.. மறக்காமல் தினமும் சேர்த்துக்கோங்க..!

 தினசரி உணவில் காய்கறிகளை சேர்த்துக்கொள்வது அவசியம் என்பது நம்மில் பலருக்கு தெரியும். ஏனென்றால், இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. உடலின் பல்வேறு இயக்கங்களுக்கு தேவைப்படும் முக்கிய ஊட்டச்சத்துகளில் ஒன்று ஜிங்க். இது நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் காய்கறிகள் மற்றும் அசைவத்திலிருந்தே உடலுக்குக் கிடைக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜிங்க், சரும ஆரோக்யம், காயங்களை ஆற்றுதல் மற்றும் அலர்ஜி போன்றவற்றில் முக்கியப் பங்காற்றுகிறது. முட்டை, மாமிசம் மற்றும் கடல் உணவுகளில் ஜிங்க் நிறைந்திருப்பது தெரிந்த பலருக்கும் காய்கறிகளிலேயே இந்த ஊட்டச்சத்து நிறைந்திருப்பது தெரிவதில்லை.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி-யை போலவே ஜிங்க் (Zinc) எனப்படும் துத்தநாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. சுவை மற்றும் வாசனையை நாம் சரியாக உணர இது அவசியம். இது உடல், தோல், கணையம், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் வலுவான தசைகளில் உள்ளது. ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்திக்கு துத்தநாகத்தின் தேவை அவசியமாகிறது. ஒரு நாளில் பெண்களுக்கு 8 மில்லி கிராம் ஜிங்க்கும், கர்ப்பிணிகள், ஆண்களுக்கு 11 மிகி ஜிங்க்கும் தேவைப்படுகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு 12 மிகி ஜிங்க்கும் தேவைப்படுகிறது. ஜிங்க் நிறைந்த உணவுப்பொருட்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

கொண்டைக் கடலை : நாம் இயல்பாக உணவில் அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று கொண்டைக் கடலை. இதில், அதிகமாக ஜிங்க் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? அசைவ உணவு சாப்பிடாதவர்கள் தங்களது உடலுக்கான துத்தநாகத் தேவையை பூர்த்தி செய்ய விரும்பினால், கொண்டைக் கடலை எடுத்துக்கொள்ளலாம். இதில், துத்தநாகம் மட்டுமின்றி இரும்புச்சத்து, சோடியம், செலெனியம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகளும் அடங்கி உள்ளன. ஒரு கப் வேக வைத்த கொண்டைக்கடலையில் அதிக அளவு ஃபைபர், புரதங்கள் மற்றும் 2.5 மி.கி துத்தநாகம் உள்ளது.

பயறு வகைகள் : பயறு வகைகள் துத்தநாகத்தின் சிறந்த மூலம். இதில், கொழுப்பு, கலோரிகள் குறைவாகவும், புரதங்கள் மற்றும் ஃபைபர் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. ஒரு கப் பயறு வகைகளில் கிட்டத்தட்ட 4.7 மி.கி துத்தநாகம் உள்ளது. கறி வடிவில் வழக்கமான உணவில் அவற்றைப் பயன்படுத்துங்கள்.

பூசணி விதைகள் : பூசணி விதைகள் எண்ணற்ற உணவுகளில் சேர்க்கப்படும். ஒரு கப் பூசணி விதையில் 2.2 மி.கி அளவு துத்தநாக சத்து மற்றும் 8.5 மி.கி தாவர அடிப்படையிலான புரதங்கள் அடங்கி உள்ளன. பூசணி விதைகள் நிறைந்த உணவை உட்கொள்வது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை தடுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. துத்தநாக குறைபாடு இருப்பவர்கள் நாள்தோறும் ஒரு கைப்பிடி அளவு பூசணி விதைகள் எடுத்து கொள்ளலாம்.

தர்பூசணி விதைகள் : தர்பூசணி விதைகள் பழத்தை விட மிகவும் சத்தானவை. இதில், துத்தநாகம் மற்றும் பிற நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளன. ஒரு சில தர்பூசணி விதைகளில் 4 மி.கி வரை துத்தநாகம் உள்ளது. நீங்கள் அவற்றை உலர்த்தி தினசரி ஸ்னாக்ஸாக கூட சாப்பிடலாம். தர்பூசணி விதைகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

சணல் விதைகள் : சணல் விதைகள் ஊட்டச்சத்துக்களின் வளமான மூலம். இதில், நிறைவுறா கொழுப்புகள் மற்றும் துத்தநாகம் காணப்படுகின்றன. சுமார் 3 டேபிள்ஸ்பூன் சணல் விதைகளில் 3 மி.கி வரை துத்தநாகம் உள்ளது. இதில், அமினோ ஆசிட்ஸ் அர்ஜினைன் (amino acids arginine) நிறைந்துள்ளது. இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. தயிர் அல்லது சாலட்களில் இந்த விதைகளை தூவி சாப்பிடலாம்.

பீன்ஸ் : கிட்னி மற்றும் கருப்பு பீன்சஸில் அதிக அளவு துத்தநாகம் உள்ளது. இதில், ஃபைபர், புரதங்கள், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்கள் உள்ளது. ஒரு கப் சமைத்த கருப்பு பீன்ஸ்-யில் 2 மி.கி துத்தநாகமும், அரை கப் சமைத்த கிட்னி பீன்ஸ்-யில் 0.9 மி.கி துத்தநாகமும் உள்ளது.

ஓட்ஸ் : நம்மில் பலர் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவது உண்டு. ஏனென்றால், அதில் எக்கச் சக்க ஊட்டச்சத்து உள்ளது. இதில், துத்தநாகம், ஃபைபர், ஃபோலேட், வைட்டமின் பி6 மற்றும் பீட்டா-குளுக்கன் ஆகியவை உள்ளன. அரை கப் ஓட்ஸில் 1.3 மி.கி துத்தநாகம் உள்ளது.

முந்திரி : இயற்கையான, தாவர அடிப்படையிலான துத்தநாக சத்தை பெற முந்திரி உதவுகிறது. முந்திரியை நீங்கள் அப்படியே அல்லது வறுத்து சாப்பிட்டால், உடலுக்கு சுமார் 1.5 மி.கி துத்தநாகம் கிடைக்கும். ஆரோக்கியமான கொழுப்பை ஊக்குவிக்கும் முந்திரியை சாப்பிடுவதால் இதய நோய்கள் வருவதற்கான அபாயம் குறையும்.

தயிர் : குறைந்த கொழுப்புள்ள தயிர் அல்லது யோகர்ட் ஆரோக்கியமான குடலுக்கு நல்ல பாக்டீரியாவை தருகிறது. மேலும், போதுமான அளவு துத்தநாகத்தையும் வழங்குகிறது. ஒரு கப் தயிர் அல்லது யோகார்ட்டில் 1.5 மி.கி துத்தநாகம் உள்ளது.

டார்க் சாக்லேட் : 100 கிராம் டார்க் சாக்லேட்டில் 3.3 மி.கி துத்தநாகம் உள்ளது. ஆனால் டார்க் சாக்லேட்டில் கலோரிகள் மற்றும் சர்க்கரை நிறைந்துள்ளது. எனவே துத்தநாக சத்தை மட்டும் பெற விரும்பினால் இனிப்பு இல்லாத டார்க் சாக்லெட்யை தேர்வு செய்யவும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உடலுக்கு மிகவும் அவசியமான வைட்டமின்-டி

 வைட்டமின்-டி என்பது எலும்பு, பற்களுக்கு அத்தியாவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான பல உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கும், இந்த வைட்டமின் மிகவும் அடிப்படையானது. வைட்டமின்-டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோஸிஸ், ரிக்கட்ஸ், இதய நோய், புற்றுநோய், மல்ட்டிபிள் ஸ்கிளரோஸிஸ், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. 

ஜலதோஷத்தை விரட்டுவதிலும் மன அழுத்தத்தை சமாளிப்பதிலும் வைட்டமின்-டி உதவுவதாகக் கூறப்படுகிறது. மற்ற வைட்டமின்களை பொறுத்தவரை நமது வழக்கமான உணவுப்பொருட்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

 வைட்டமின் 'டி'யைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சிக்கல்தான். வைட்டமின் 'டி'யைப் பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம். நமது வாழ்க்கை முறை என்பது பெரும்பாலும் நான்கு சுவர்களுக்குள் அமைந்துவிட்டது. 

வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்கு வெளியே ஒரு 20-25 நிமிடங்கள் நம் கை மீது வெயிலோ அல்லது திறந்தவெளிக் காற்றோ படும்படி இருந்தாலே போதும், வைட்டமின்-டி கிடைக்கும். மதிய உணவு நேரத்தின்போது அலுவலக வளாகத்துக்கு வெளியே சற்று நடந்துவரலாம். 

அதேபோல் குழந்தைகளையும் வெளியே விளையாட ஊக்குவிக்கலாம். இப்படிச் செய்யும் அதேநேரத்தில் அதிகப்படியாக வெயில் இருந்துவிடவும் கூடாது. அதனாலும் பாதிப்பு ஏற்பட நேரிடும். நமது வழக்கமான உணவிலிருந்து தினசரி நமக்கு தேவைப்படும் வைட்டமின் 'டி'யைப் பெறுவது கடினம் என்பதால் காளா, சூரை, கானாங்கெளுத்தி போன்ற மீன்களைக் கொண்டு நமது தேவையைப் பூர்த்திசெய்து கொள்ளலாம். 

மூன்று காளா துண்டுகள், நமது தினசரி வைட்டமின் 'டி' தேவையில் 80 சதவீதம் பூர்த்தி செய்துவிடும். முட்டைகளிலிருந்தும் வைட்டமின்-டி பெறலாம். ஒரு முட்டையிலிருந்து ஒரு மைக்ரோகிராம் அளவில் வைட்டமின் 'டி'யை பெறலாம். மாட்டு ஈரலில் புரதச்சத்து, இரும்புச்சத்து போன்றவை மட்டுமல்ல, வைட்டமின் 'டி'யும் இருப்பதாக ஊட்டசத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip