தேர்வு கிடையாது!! மாதம் 20,000 ரூபாய் வரை சம்பளம் - மகளிர் அதிகார மையத்தில் பணி..

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு தகவல் தொழில்நுட்ப உதவியாளர் (IT Assistant) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் ஒன்றிய அரசின் மிஷன் சக்தி திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர் திட்டங்கள் செயல்படுத்திட மாவட்ட மகளிர் அதிகார மையம் (District Hub for Empowerment of Women DHEW) செயல்பட்டு வருகிறது. இந்த மகளிர் அதிகார மையத்தில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு தகவல் தொழில்நுட்ப உதவியாளர் (IT Assistant) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்த ஒரு தகவல் தொழில்நுட்ப உதவியாளர் (IT Assistant) பணியிடத்திற்கு கீழ் காணும் தகுதி மற்றும் முன் அனுபவம் தேவைப்படுகிறது.

தகுதிகள் : கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பம், கணினி பயன்பாடு ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்று குறைந்த பட்சம் 3-வருடம் தரவு மேலாண்மை, செயல் முறை ஆவணங்கள், இணைய அடிப்படையிலான அறிக்கை தயாரித்தல், அரசு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலோ அல்லது திட்டத்திலோ பணிபுரிந்த முன் அனுபவம் இருத்தல் வேண்டும்.

கல்வி தகுதி : மேற்குறிப்பிட்ட கல்வி தகுதிகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொகுப்பூதியம் மாதம் ரூ.20,000/-(ரூபாய் இருபதாயிரம்) வழங்கப்படும்.

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை அறை எண்.26, மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், விழுப்புரம். என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது விழுப்புரம் மாவட்ட இணையதளத்தில் (https://viluppuram.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறை எண்.26, மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், விழுப்புரம் அலுவலகத்திற்கு 22.09.2025 மாலை 5.45 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி 22.09.2025 ஆகும். கடைசி தேதிக்குபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்படாது என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TCS ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. சென்னையிலேயே இண்டர்வியூ + பணி.. செப்டம்பர் 6 ரெடியா?

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Full Stack Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 6ம் தேதி சென்னையில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Full Stack Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை பெற விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும்.

அதன்படி Node JS, ReactJS, Angular with advance JS frameworks தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ஜாவா (Basic), Spring Boot (basic) தெரிந்திருக்க வேண்டும். மேலும் Azure DeveOPS/GIt Ops, Database (Preferably SQL MongoDB andPostgres), GitHub, Client facing தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் டெக்னிக்கல் ரோல், டீம் மெம்பர்ஸ் ஸ்கில்ஸ் இருப்பதோடு, ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர TTH டொமைன் புராஜெக்ட்ஸ், Azure DevOpS, CI/CD andDevOps பயிற்சி பெற்றிருப்பது பிளஸ் பாயிண்ட்டாகும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக Full Stack Developer பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 6ம் தேதி (சனிக்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் Tata Consultancy Services, Chennai One IT SEZ, Pallavaram, - Thoraipakkam 200 feet road, throapakkam, Chennai 600097 என்ற முகவரியில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ரூ.75,000 போனஸ் + மாத சம்பளம்.. B.sc, BCA முடித்தோருக்கு விப்ரோவில் வேலை..ரெடியா? தேதி நீட்டிப்பு

 முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ சார்பில் பிஎஸ்சி, பிசிஏ படிப்பை முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பம் செய்வதற்கான தேதி இன்றுடன் முடிவடையும் என்ற அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 14 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு சேரும்போதே ஜாயினிங் போனஸாக ரூ.75 ஆயிரம் வழங்கப்பட உள்ளதோடு தனியே சம்பளமும் மாதம் மாதம் வழங்கப்பட உள்ளது.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies). இந்த நிறுவனத்தில் Wipro's Work Integrated Learning Program (WILP) 2024 and 2025 என்ற பெயரில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இதுதவிர விண்ணப்பத்தாரர்களுக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். தொலைதூர கல்வி மூலமாகவும் படித்து இருக்கலாம். இருப்பினும் டிகிரி படிப்பை 60 சதவீத மதிப்பெண் அல்லது 6.0 CGPA என்று முடித்திருக்க வேண்டும். குறிப்பாக 2024, 2025ம் ஆண்டில் பிசிஏ, பிஎஸ்சி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதிலும் பிஎஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கணிதம், ஸ்டேட்டிஸ்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இயற்பியல் உள்ளிட்ட படிப்புகளை 2024, 2025ம் ஆண்டுகளில் முடித்திருக்க வேண்டும். ஒரு அரியர் இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் டிகிரி படிப்பின்போது கண்டிப்பாக ஒரு பாடத்தை Core Mathematics-ஆக படித்திருக்க வேண்டும். Business Maths & Applied Mathematics பாடங்கள் இதில் வராது.

விண்ணப்பத்தாரர்கள் பள்ளி படிப்பில் இடைவெளி என்பது இருக்கலாம். ஆனால் கல்லூரி படிப்பில் இடைவெளி என்பது இருக்க கூடாது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஜாயினிங் போனஸாக (Joining Bonus) ஆக ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். சம்பளம் என்பது Stipend முறையில் வழங்கப்பட உள்ளது. அதன்படி முதல் ஆண்டு Stipend ஆக மாதந்தோறும் ரூ.15,488 வழங்கப்படும். 2வது ஆண்டு மாதந்தோறும் ரூ.17,553, மூன்றாவது ஆண்டு மாதந்தோறும் ரூ.19,618, 4வது ஆண்டு மாதந்தோறும் ரூ.23 ஆயிரம் வரை வழங்கப்படும். எம்டெக் படிப்பை படிக்க வாய்ப்பு என்பது வழங்கப்படும்.

vகடைசி 3 மாதத்தில் விப்ரோவில் இண்டர்வியூ சென்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் 60 மாதம் சர்வீஸ் (5 ஆண்டு) அக்ரிமென்ட் செய்து கொள்ள வேண்டும். இதனால் பணியை விட்டு 5 ஆண்டுக்குள் நிற்கும்போது அவர்கள் கட்டாயம் விப்ரோ நிறுவனத்துக்கு Joining Bonus on Pro Rata basis-ல் திரும்ப செலுத்த வேண்டும். இது ஒரு PAN India பணியாகும். இதனால்நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்படலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான தேதி இன்றுடன் (ஆகஸ்ட் 30) முடிவுக்கு வருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது விண்ணப்ப தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 14ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் 3 ரவுண்ட்டுகள் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். முதல் ரவுண்ட்டின் பெயர் Online Assessment. இதில் Verbal-ல் 20 கேள்வி, Analytical-ல் 20 கேள்வி, Quantitative-ல் 20 கேள்விகள் கேட்கப்படும். மேலும் Written Communication-ல் 20 நிமிடங்கள் வரை நடைபெறும். ரவுண்ட் 2வில் பிசினஸ் டிஸ்கசன், ரவண்ட் 3ல் எச்ஆர் டிஸ்கஷன் இருக்கும். இந்த 3 ரவுண்ட்டிலும் செலக்ட் ஆவோர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

100 % தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கும், தமிழ் பாடத்தில் நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குதல் விழா & பள்ளிகளில் பட்டியல்...

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG-20250902-WA0022

10 & 12 வகுப்பு பொத்தேர்வில்  100 விழுக்காடு தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கும், தமிழ் பாடத்தில் நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குதல் விழா நடைபெறுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

 2025-26 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பு எண் .7 ல் வெளியிடப்பட்ட அறிவிப்பான 2024-25 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கிய அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கும் மற்றும் தமிழ் பாட பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா எதிர்வரும் 07.09.2025 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம் . Montfort School ( CBSE ) , No. 15 , 12th Cross Road , Balaji Nagar , Pappakurichi Kattur 620019 , பள்ளியில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

 எனவே இணைப்பில் கண்டுள்ள விருது பெறவுள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளை 07.09.2025 மேற்கண்ட பள்ளி வளாகத்திற்கு காலை 07.00 மணியளவில் வருகை புரிந்து விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்து தெரிவு செய்யப்பட்ட தலைமையாசிரியர்களை சார்ந்த பள்ளியிலிருந்து விடுவித்து தகுந்த கடிதம் மற்றும் ஆளறி சான்றிதழுடன் இவ்விழாவில் கலந்து கொள்ளத்தக்க வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 இணைப்பு - விருது வழங்கப்படவுள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பெயர் பட்டியல்

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

100 Result Schools Name & HM names, Student List  03.08.2025 final List -.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TET Exam 2025 - Paper I & II - Model Question Paper 2

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

TET Exam 2025 - Paper I - Model Question Paper 2 - Download here

TET Exam 2025 - Paper II - Model Question Paper 2 - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

இந்திய கடற்படையில் 260 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. முழு விபரம் இங்கே

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 260 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையில் பொது சேவை (GS/X), ஹைட்ரோ கேடர், பைலட், கடற்படை விமான செயல்பாட்டு அதிகாரி, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர், தளவாடங்கள், கடற்படை ஆயுத ஆய்வாளர் பிரிவு மற்றும் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் 260 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 9 ஆம் தேதியில் இருந்து வரவேற்கப்பட்ட நிலையில், விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி- அங்கீகரிக்கப்பட்ட இந்திய அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலிருந்து பொறியியல் பட்டங்கள் (BE/B.Tech). MSc, MCA, MBA, அல்லது M.Tech போன்ற முதுகலை பட்டங்கள். LLB உடன் சட்டப் பட்டதாரிகள்.

பெரும்பாலான பணியிடங்களுக்கு வயது தகுதியாக விண்ணப்பதாரர்கள் ஜூலை 2, 1996 முதல் ஜனவரி 1, 2007 வரை பிறந்திருக்க வேண்டும் (வயது வரம்புகள் நுழைவுக்கு ஏற்ப சற்று மாறுபடும்).

தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் ஐ.என்.ஏ, எழிமலாவில் மருத்துவ அனுமதி மற்றும் பணியமர்த்தலுக்குப் பிறகு துணை லெப்டினன்ட்களாக சேருவார்கள்.

ஆரம்ப சம்பளம் மாதத்திற்கு தோராயமாக ரூ.1,10,000 இல் தொடங்குகிறது, மேலும் விமான ஊதியம், நீர்மூழ்கிக் கப்பல் கொடுப்பனவு அல்லது விமானி/NAOO கொடுப்பனவுகள் போன்ற கொடுப்பனவுகளும் பணியாளரைப் பொறுத்து வழங்கப்படும்.

கடற்படை குழு காப்பீட்டுத் திட்டத்தின் (NGIS) கீழ் அதிகாரிகளும் காப்பீடு செய்யப்படுகிறார்கள்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் www.joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

www.joinindiannavy.gov.in இந்த தளத்தில் மேலதிக விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

சைக்கிள் ஓட்டத் தெரிந்தால் போதும்... ஊரக வளர்ச்சி துறையில் வேலை... இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் அலுவலக உதவியாளர் நிலையில் உள்ள காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் முகையூர், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி விவரம்: அலுவலக உதவியாளர் ஈப்பு ஓட்டுநர் இரவு காவலர் ஆகிய காலியிடங்கள் நிரப்பப்ட்ட உள்ளது.  வயது வரம்பு விவரம் : 01.07.2025-ன்படி 32 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி: இதற்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மிதி வண்டி அல்லது இரு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும். ஐந்தாண்டுகள் வரை முன் அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 30. 09. 2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு tnrd.gov. in என்ற இணையதளம் முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

8 ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு.. முழு விவரம் உள்ளே..!

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம், கடையம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், செங்கோட்டை மற்றும் தென்காசி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் ஆகிய பணியிடங்களுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதற்கான கல்வி தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு www.tnrd.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு 30.09.2025 கடைசி தேதி ஆகும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Awards to government schools for 100 percent pass result

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

NOC Application For Teachers Writing TET - Paper 1 & 2

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

TRB - ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 / தாள் 2 எழுத துறை அனுமதி வேண்டுதல் மற்றும் தடையின்மை சான்று வழங்க வேண்டுதல் சார்ந்தது.

Click Here to Download - NOC Application For Teachers Writing TET - Paper 1 & 2 - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அரசு பள்ளி ஆசிரியர்கள் TET தேர்வுகளுக்கு தடையின்மைச் சான்று (NOC) பெறுதல் - Instructions & CEO Proceedings

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் / அலுவலர்கள் அரசு நடத்தும் தகுதித் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தடையின்மைச் சான்று பெறும் முறை - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் / அலுவலகப் பணியாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் இதர தேர்வாணையங்கள் நடத்தும் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள முன் அனுமதி / தடையின்மைச் சான்று கோரும் போது கீழ்கண்ட ஆவணங்கள் இணைத்து கருத்துரு அனுப்பிட சார்ந்த பள்ளி தலைமையிசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TRB மூலம் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணிநாடுநர்களுக்கு 03.09.2025 அன்று சென்னையில் பணிநியமன ஆணை வழங்கப்படுகிறது - DSE செய்திக் குறிப்பு!

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250901_224649

TRB மூலம் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணிநாடுநர்களுக்கு 03.09.2025 அன்று சென்னையில் பணிநியமன ஆணை வழங்கப்படுகிறது - DSE செய்திக் குறிப்பு!

BT Appointment Counselling.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TET - ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 & தாள் 2 எழுத முன் அனுமதி பெற தேவையான படிவங்கள் :

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

TET - ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத முன் அனுமதி பெற தேவையான படிவங்கள் : 

TNTET - தேர்வுக்கு ஆசிரியர்கள் / அலுவலகப் பணியாளர்கள் முன் அனுமதி / தடையின்மைச் சான்று பெற தேவையான ஆவணங்கள் :

DEE & DSE

👇👇👇

TET Exam - Permission Letters - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TET Promotion - SC Judgement Summary Copy

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

nctes-2011-notification-on-tet-marks-weightage-not-mandatory-supreme-court

TET Promotion - SC Judgement Summary.pdf 👇👇👇

Download here

TET &தீர்ப்பு தொடர்பான தீர்ப்பு விளக்கம்** (வணஜா Vs தமிழக அரசு வழக்கு, 01.09.2025):

வழக்கு தலைப்பு:

V. Vanaja Vs. The State of Tamil Nadu

நீதிமன்றம்: உச்சநீதிமன்றம்

தீர்ப்பு தேதி: 01.09.2025

நீதிபதிகள்: நீதிபதி டிபாங்கர் தத்தா மற்றும் நீதிபதி ஆகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ்

முக்கிய கேள்விகள்:

1. சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் நியமனம் பெற, TET தேர்ச்சி கட்டாயமா?

2. 2011க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியதா?

நீதிமன்றத்தின் தீர்மானம் (முழுமையாக):

1. புதிய நியமனத்திற்கு மற்றும் பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

   TET இல்லாதவர்கள் தங்களை தேர்வுக்கு எடுத்து கொள்ள முடியாது.

2. ஆனால் நிலைமைகளை கருத்தில் கொண்டு Article 142ன் கீழ் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன:

 RTE சட்டத்திற்கு முந்தைய நியமனம் பெற்ற மற்றும் ஓய்வுக்கு 5 ஆண்டுகளுக்குள் இருக்கும் ஆசிரியர்கள்:

     TET தேர்ச்சி இல்லாவிட்டாலும் ஓய்வுவரை பணியில் தொடரலாம்.

     ஆனால் அவர்கள் பதவி உயர்வுக்கு தகுதியில்லை.

  RTEக்கு முந்தைய நியமனம் + ஓய்வுக்கு 5 ஆண்டுகளுக்கும் மேலான சேவை:

     2 ஆண்டுக்குள் TET தேர்ச்சி பெற வேண்டும்.

     தேர்ச்சி பெறாவிட்டால் கட்டாய ஓய்வு.

     தகுதியுள்ளவர்களுக்கு ஓய்வூதிய நலன்கள் வழங்கப்படும்.

     சேவை குறைவாக இருப்பின் மனு மூலம் அரசு துறையில் பரிசீலனை செய்யலாம்.

Pramati வழக்கின் மீளாய்வு:

TET, RTE போன்ற சட்டங்கள் சிறுபான்மை கல்வி உரிமைகளுக்கு மோதுகிறதா என்ற கேள்விகள் எழுந்தன.

இதன் அடிப்படையில் 4 முக்கிய சட்டச் சந்தேகங்கள் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பதிவிறக்க நேரம்:

அதிகாரப்பூர்வ தீர்ப்பு PDF, உச்சநீதிமன்ற Case Status பகுதியில் 2–3 நாட்களுக்குள் வரும்.

தரவுகள் தேட:

Supreme Court Case Status → Diary No. 37105/2023 → Orders/Judgments பகுதியில் பார்க்கலாம்.

-தீர்ப்பு சுருக்கம்:

| ஆசிரியர் நிலை                         | தீர்வு                          |

| ------------------------------------- | ------------------------------- |

| புதிய நியமனம்                         | TET கட்டாயம்                    |

| பதவி உயர்வு                           | TET இல்லையெனில் தகுதி இல்லை     |

| RTEக்கு முந்தைய நியமனம் + <5 ஆண்டுகள் | TET இல்லாதாலும் ஓய்வுவரை பணி    |

| RTEக்கு முந்தைய நியமனம் + >5 ஆண்டுகள் | 2 ஆண்டில் TET தேர்ச்சி வேண்டும் |

-

இது உச்சநீதிமன்றத்தின் அதிகாரபூர்வ தீர்ப்பின் முழுமையான தகவல் சுருக்கம்.