CMC வேலூர் கல்லூரியில் Technician காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

CMC வேலூர் கல்லூரியில் Technician காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Staff III Graduate Technician பணிக்கான 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Staff III Graduate Technician பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு CMC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

மறுநியமன காலத்தில் பணிபுரியும் CPS ஆசிரியர்களுக்கு 20% ஊதியம் பிடித்தம் செய்தல் சார்ந்து தெளிவுரை

 Education News (கல்விச் செய்திகள்)
மறுநியமன காலத்தில் பணிபுரியும் CPS ஆசிரியர்களுக்கு 20% ஊதியம் பிடித்தம் செய்தல் சார்ந்து தெளிவுரை வழங்கக் கோரி நிதித் துறைச் செயலாளருக்கு கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் இயக்குநர் கடிதம்!

IMG_20250426_110328

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

புதிதாக 13 ஆரம்ப பள்ளிகள்: அமைச்சர்

  

  Education News (கல்விச் செய்திகள்)

.com/

தொலைதூர கிராமங்கள், மலைப்பகுதிகள் மற்றும் புதிய குடியேற்றப் பகுதிகளில் புதிதாக 13 ஆரம்பப் பள்ளிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.


தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுசியாதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் இந்த துறைக்கென ரூ.2.24 லட்சம கோடி நிதி ஒதுக்கப்பட்டது. எனினும், நமது 5 ஆண்டுகால ஆட்சியில் மட்டும் ரூ.2.60 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த துறையில் இதுவரை 168 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் 114 நடைமுறைக்கு வந்துவிட்டது. மேலும், 54 அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


அதேபோல், தேர்தல் வாக்குறுதியில் பள்ளிக் கல்வித் துறை சார்ந்து வழங்கப்பட்ட 32 வாக்குறுதிகளில் 24 நிறைவேற்றப்பட்டுள்ளது. எஞ்சியவற்றை நடைமுறைபடுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் என்பது இல்லை.


மேல்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரை 7.7 சதவீதம் இடைநிற்றல் இருக்கிறது. அதையும் படிப்படியாக குறைத்துவிடுவோம். தேசியக் கல்விக் கொள்கையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதகங்களை தரக்கூடிய பல்வேறு அம்சங்கள் உள்ளன. அதனால் அதை எதிர்க்கிறோம். இவ்வாறு தெரிவித்தார்.


தொடர்ந்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு பயிலும் 13 லட்சம் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் திறன் என்னும் முனைப்பு இயக்கம் ரூ.19 கோடியில் மேற்கொள்ளப்படும். இன்றைய சூழலில் பள்ளி மாணவர்களிடம் வாழ்வியல் திறன்கள், பாலினச் சமத்துவம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுகாதாரமான பழக்கங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.26 லட்சத்தில் கட்டகம் தயாரிக்கப்படும். இதற்காக பள்ளிகளின் வாராந்திர கால அட்டவணையில் ஒரு பாடவேளை ஒதுக்கப்படும்.


இதுதவிர மாற்றுத்திறன் மாணவர்களின் உடல் நலன் மற்றும் மன நலன் மேம்படுத்த தகுந்த விளையாட்டு சாதனங்கள் வழங்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படும். 10, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.


தொலைதூர கிராமங்கள், மலைப்பகுதிகள் மற்றும் புதிய குடியேற்றப் பகுதிகளில் புதிதாக 13 ஆரம்பப் பள்ளிகள் தொடங்கப்படும். மேலும், 38 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். மேலும், மாணவர்களை அதிகம் சேர்க்கும் அரசுப் பள்ளிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.


இதுதவிர மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும், நவீன தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ளவும் கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் பாட நூல்கள் மாற்றி அமைக்கப்படும். இசைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் பொருட்டு 10, பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். மேலும், பாரதியார் மற்றும் பாரதிதாசன் கவிதைதகள் ரூ.1 கோடியில் மொழிப்பெயர்க்கப்படும் என்பன உட்பட பல்வேறு அறிவிப்புகள் அதில் இடம் பெற்றுள்ளன.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

கோடை விடுமுறையில் ஆதார் புதுப்பித்தல்: பள்ளிகக் கல்வித்துறை அறிவுறுத்தல்

 
 
  Education News (கல்விச் செய்திகள்)

பள்ளி மாணவர்களின் ஆதார் பயோமெட்ரிக் பதிவுகளை புதுப்பிக்கத் தவறியவர்கள், கோடை விடுமுறையில் அதை செய்து முடிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற திட்டத்தின் கீழ் 2024-25-ம் கல்வியாண்டில் ஜூன் மாதம் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆதார் பதிவு மேற்கொள்ளுதல், 5 முதல் 17 வயது வரையுள்ள மாணவர்களுக்கு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது பயின்று வரும் மாணவர்கள் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளாமல் இருந்தால், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்கள் தங்கள் அருகில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள், அஞ்சலகங்கள் மற்றும் வட்டார வள மையங்களில் செயல்பட்டு வரும் சிறப்பு முகாம்கள் ஆகியவற்றில் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தலை மேற்கொள்ள பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.


இதுதவிர புதிதாக பள்ளியில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்களிடமும் பள்ளியில் சேரும்போதே இந்த பணிகளை நிறைவு செய்யக் கோருவதன் மூலம், வங்கிக் கணக்குகள் தொடங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பணிகள் கால தாமதமின்றி நடைபெறுவதை உறுதி செய்ய இயலும். இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு 10.03 .2020க்கு முன்பாக முடித்தவர்களுக்கு இரண்டு அப்பில் வழக்குகளில் அனுமதி

  

  Education News (கல்விச் செய்திகள்)
உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு 10.03 .2020க்கு முன்பாக முடித்தவர்களுக்கு  இரண்டு அப்பில் வழக்குகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது .

* ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை , 9047191706.

* அரசு தரப்பில் 10 .03.2020க்கு முன்பாக ஆணை வழங்கப்படவில்லையெனில் , If no Previous order were issued என்று அரசாணையில் தெரிவித்தவாறு ஆணை ஏதும் வழங்கப்படாத நிலையில், 10 .03.2020 க்கு முன்பாக முடித்தவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டது .அரசாணை எண் 37 நாள் 10.03 .2020 , 6 (vi) ன் படி ஆணை எதுவும் வழங்கப்படாத நிலையில் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படாது என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

* மேற்கண்ட அரசு வழக்கறிஞர் விளக்கத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை

* அரசாணை எண் 37 Cannot operate retrospectively அரசாணை எண் 37 பின்னோக்கி செயல்படுத்த முடியாது என்பதை நீதிமன்றம் ஏற்றுள்ளது .

* அரசாணை எண் 37ல் பிரிவு 6 vi ன் நோக்கமே 10.03.2020க்கு முன்னால் முடித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதே .

* 10.03.2020க்கு முன்னால் உயர்கல்வி முடித்தவர்களுக்கு மேல் முறையீட்டில் ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது . தீர்ப்பு வந்தவுடன் பதிவு செய்கிறேன்

* இன்று வழங்கப்பட்ட அப்பில் தீர்ப்பில் அரசாணை எண் 95 ன் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது . நீதிமன்றம் ஏற்க வில்லை 

* .In the instant case, the Writ Petitioner has, admittedly, acquired 

additional qualification by getting proper permission prior to issuance of 

G.O.(Ms)No.37 and it is his second incentive increment and in fact, the same 

also had been considered and granted by the appellants by proceedings, dated 

19.12.2019 with effect from 01.07.2017.  Hence, the argument of the 

appellants that in view of the clarificatory order, the Writ Petitioner is 

not entitled for the incentive increment, cannot be sustained and 

accordingly, rejected.  The learned Judge, had rightly, arrived at a 

conclusion that the Writ Petitioner is entitled for the grant of second 

incentive increment and the same cannot be denied in view of G.O.(Ms)No.37 

and G.O.(Ms)No.95, which needs no interference and accordingly, sustained. என்று இரு நபர் அமர்வு 10.03.2020 க்கு முன்பாக முடித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது.

* இது வரை இரண்டு அப்பில் தீர்ப்புகள் 10.03.2020க்கு முன்பாக முடித்தவர்களுக்கு தீர்ப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது .தனி நபர் தீர்ப்புகள் வந்தவுடன் பதிவு செய்கிறேன் .

* 1500க்கு மேற்பட்ட உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு கோரிய தொகுப்பு வழக்குகளின் தீர்ப்பு வியாழன் அன்று அளிக்கப்பட கூடும் .

* 10.03.2020க்கு முன்பாக முடித்தவர்கள் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை நீதிமன்றம் நாடுவதன் மூலம் மட்டுமே பெற முடியும் .

* தொடர்ந்து உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை கோரி வழக்கு தாக்கல் செய்து கொண்டு இருக்கிறோம் .

* ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை , 9047191706

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

நீட் தேர்வு குறித்த புகார்களை தெரிவிக்க இணையதளத்தில் வசதி: என்டிஏ அறிவிப்பு

  
  Education News (கல்விச் செய்திகள்)
நீட் தேர்வு தொடர்பான புகார்களை தெரிவிக்க, என்டிஏ இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ‘நீட்’ (NEET) தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.


அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 4-ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதியுடன் முடிவடைந்தது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான புகார்களை தேர்வர்கள் தெரிவிக்க, இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் குறித்த புகார்களை https://nta.ac.in மற்றும் https://neet.nta.ac.in ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் மே 4-ம் தேதி மாலை 5 மணி வரை தெரிவிக்கலாம். அதாவது, தங்களிடம் நீட் வினாத்தாள் இருப்பதாக, அங்கீகரிக்கப்படாத இணையதளங்கள், சமூக வலைதளங்களில் தகவல் வந்தாலோ, என்டிஏ மற்றும் அரசு அதிகாரிகள்போல யாராவது பேசி தொடர்பு கொண்டாலோ இந்த தளத்தில் புகார் அளிக்கலாம். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர் தவறு செய்தது உறுதியானால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறான வழிகாட்டுதலால் ஏமாற்றி, முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து தேர்வர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

Zoho வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. ஐடி நிறுவனத்தில் பணியாற்ற சூப்பர் சான்ஸ்.. ரெடியா?

  Education News (கல்விச் செய்திகள்) IMG_20250427_094926

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த பணி குறித்த முக்கிய விபரங்கள் வருமாறு:


பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோவில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.


அந்த வகையில் இப்போது ஜோஹோவில் செக்யூரிட்டி இன்ஜினியர் (Security Engineer) பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்து குறைந்தபட்சம் செக்யூரிட்டி இன்ஜினியர் பிரிவில் ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.


அதோடு விண்ணப்பம் செய்வோருக்கு எண்ட்பாயிண்ட் செக்யூரிட்டி, லாக் அனலிசிஸ், கோரிலேஷன் ரூல்ஸ், SIEM ஹேண்ட்லிங், நெட்வொர்க் புரோட்டோகால்ஸ், ஃபயர்வால்ஸ், விபிஎன், ஐடிஎஸ்/ஐபிஎஸ் உள்ளிட்டவை பற்றிய புரிதல் இருக்க வேண்டும். அதேபோல் செக்யூரிட்டி டூல்ஸ்களான SIEM பிளாட்பார்ம், ஃபயர்வால் மேனேஜ்மென்ட் மற்றும் எண்ட்பாயிண்ட் செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.


மேலும் விண்டோஸ், லினக்ஸ், மாக் உள்ளிட்ட ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ், பைத்தான், செல்ஸ்கிரிப்ட், பவர்செல் உள்ளிட்ட ஸ்கிரிப்டிங் லேங்குவேஷ், குளோவ்ட் செக்யூரிட்டி பிளாட்பார்ம்ஸ்களான ஏடபிள்யூஎஸ், அசூர் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். MITRE ATT & CK , YARA ரூல்ஸ் தெரிந்திருக்க வேண்டும்.


சாப்ஃட் ஸ்கில்ஸ் என்று எடுத்து கொண்டால் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், பிரச்சனைகளை தீர்க்கும் திறன், ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. அதுபற்றி இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படலாம்.


தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம் என்பதால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.


அதேபோல் பணி நியமனம் செய்யும் இடங்கள் பற்றியும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றியும் கடைசி கட்ட இண்டர்வியூவில் தான் தெரிவிக்கப்படும். தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை, மதுரை, திருநெல்வேலி,தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை உள்ளிட்ட இடங்களில் ஜோஹோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதேபோல் வெளிமாநிலங்களிலும் ஜோஹோ நிறுவனம் இயங்கி வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

அங்​கன்​வாடி ஆசிரியர்​களுக்கு முதல் தேதி​யிலேயே ஊதியம்: தொடக்க கல்​வித்​துறை உத்​தரவு

 
  Education News (கல்விச் செய்திகள்)

1359679

அங்கன்வாடிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியில் ஊதியம் வழங்கப்பட வேண்டுமென தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து தொடக்க கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2022-23-ம் கல்வியாண்டு முதல் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி வளாகத்துக்குள் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளில் தற்காலிகமாக பணிபுரியும் மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் விதிகளுக்குட்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.


அதன்படி அங்கன்வாடி மையத்தின் பணி நேரம் காலை 9 முதல் மதியம் 12.30 மணி வரை செயல்படுகிறது. அதில் பணிபுரியும் தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) மூலம் மின்னணு நிதி பரிமாற்ற (இசிஎஸ்) முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.


இந்த ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் எவ்வித காலதாமதமும் இருக்கக்கூடாது. இதை மாவட்டக் கல்வி அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும்.


மழலையர் வகுப்புகளை கையாளும் தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கு மாதம் ஒரு நாள் தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. மேலும், இந்த ஆசிரியர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்து அவர்கள் எமிஸ் எண் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

புதிய என்சிஇஆா்டி புத்தகங்களில் முகலாயா்கள் தில்லி சுல்தான்கள் பாடங்கள் நீக்கம்! அப்துல் கலாம் பாடம் சோ்ப்பு!

   Education News (கல்விச் செய்திகள்)

dinamani%2F2025-04-27%2Fesju1ffi%2Fncert

7 -ஆம் வகுப்புக்கான புதிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆா்டி) புத்தகங்களில் முகலாயா்கள் மற்றும் தில்லி சுல்தான்கள் சாா்ந்த அனைத்து பாடக்குறிப்புகளும் நீக்கப்பட்டன.


மாறாக அண்மையில் உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த மகா கும்பமேளா, மத்திய அரசின் திட்டங்களான ‘மேக் இன் இந்தியா’, ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டம் குறித்த பகுதிகள் சோ்க்கப்பட்டுள்ளன.


தேசிய கல்விக் கொள்கை, 2020 மற்றும் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (என்சிஎஃப்எஸ்இ),2023-இன்கீழ் வடிவமைக்கப்பட்ட புதிய பாடப் புத்தகங்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் இந்திய பாரம்பரியம், தத்துவங்கள், அறிவுசாா் தகவல்கள் மற்றும் உள்ளூா் சூழல் குறித்த பகுதிகளை சோ்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதிய பாடப்புத்தகங்களில் சில பகுதிகள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளன.


கரோனா பெருந்தொற்றின்போது முகலாயா்கள் மற்றும் தில்லி சுல்தான்கள் பற்றிய பாடக் குறிப்புகளை என்சிஇஆா்டி குறைத்திருந்த நிலையில், தற்போது இந்த இரு பேரரசுகள் சாா்ந்த அனைத்து தகவல்களையும் நீக்கியுள்ளது.


புதிதாக சோ்க்கப்பட்ட பாடங்கள்:


7-ஆம் வகுப்பு வரலாறு பாடப் புத்தகத்தின் முதல் பகுதியில் இந்திய பண்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் இந்திய பேரரசுகளான மகத பேரரசு, மௌரிய பேரரசு, சுங்க பேரரசு மற்றும் சாதவாஹனா்கள் குறித்த புதிய பாடங்கள் சோ்க்கப்பட்டுள்ளன.


அதேபோல் ஹிந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், பெளத்தம், சீக்கியம், யூதம் மற்றும் ஜோராஷ்டிரியம் ஆகிய மதங்கள் சாா்ந்து இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் குறித்த புதிய பாடமும் சோ்க்கப்பட்டுள்ளது.


‘இந்தியா வழிபாட்டுத் தலங்களின் நிலம்’ எனக் கூறி பத்ரிநாத், அமா்நாத் முதல் கன்னியாகுமரி வரையிலான வழிபாட்டுத் தலங்களை விளக்கிய முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் வாசகமும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.


அதேபோல் ஆரம்பகட்டத்தில் ஜாதி முறையால் சமூகத்தில் நிலைத்தன்மை இருந்ததாகவும் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இது சமூக ஏற்றத் தாழ்வுக்கு வழிவகுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுதவிர 66 கோடி போ் பங்கேற்ற மகா கும்பமேளா நிகழ்வு, ‘மேக் இன் இந்தியா’, ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ போன்ற திட்டங்கள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.


ஆங்கில புத்தகத்தில் முன்னதாக 4 இந்திய எழுத்தாளா்களின் படைப்புகள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது ரவீந்தரநாத் தாகூா், முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் உள்பட 9 இந்திய எழுத்தாளா்களின் படைப்புகள் சோ்க்கப்பட்டுள்ளன.


விரைவில் இரண்டாம் பகுதி:


இந்த பாடப் புத்தகங்களின் இரண்டாம் பகுதி விரைவில் வெளியிடப்படும் எனக்கூறிய என்சிஇஆா்டிஅதிகாரிகள், அதில் தற்போது விடுபட்டுள்ள பாடங்கள் சோ்க்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டனா்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

Higher Sec School HM Panel – தயார் செய்யக் கருத்துருக்கள் கோருதல் - DSE Proceedings

   Education News (கல்விச் செய்திகள்)

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2025 இல் உள்ளவாறு அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் ( நிலை -1 ) / அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் – தயார் செய்யக் கருத்துருக்கள் கோருதல் - தொடர்பாக .


Click Here to Download - DSE - Higher Sec School HM Panel - Director Proceedings - Pdf



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

கலைத்திருவிழா " - 2025-26 மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி மாணவர்களுக்கான புத்தொளி நடத்துதல் பெற்ற பயிற்சி முகாம்

Education News (கல்விச் செய்திகள்)

 IMG_20250423_102033

பள்ளி மாணவர்களிடம் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொணரவும் . நடைமுறையில் உள்ள கலை மரபுகள் பற்றி அவர்களுக்குக் கற்பிக்கவும் . ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலை வடிவங்களில் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தவும் 2022 -23 ஆம் ஆண்டு முதல் பள்ளி . வட்டாரம் , மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது.


 அவ்வாறு கடந்த மூன்று ஆண்டுகளாக மாநில அளவில் வெற்றி பெற்ற மாவணவர்களின் கலைத்திறன்களை மேலும் மேம்படுத்தும் விதமாகவும் , அவர்களின் கலை ஆர்வத்தினை ஊக்குவிக்கும் விதமாகவும் , அவர்கள் மென்மேலும் கலை வடிவங்களில் சிறந்து விளங்குவதற்கான அவரவர்தம் வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கக்தில் , அந்தந்த கலைப்பிரிவின் வல்லுநர்களைக் கொண்டு மாணவர்களுக்கான கோடைகால சிறப்பு புத்தொளி பயிற்சி முகாம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

👇👇👇👇

SPD Proceedings - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )