டிஜிட்டல் ஆதார் செயலி அறிமுகம் - வழங்கப்பட்டுள்ள வசதிகள் பற்றிய தகவல்கள்
Digital Aadhaar app launched
இனிமேல் அட்டை தேவையில்லை, கைரேகையும் வைக்க வேண்டாம்: டிஜிட்டல் ஆதார் செயலி அறிமுகம்
அனைத்து சேவைகளிலும் ஆதார் அட்டை தவிர்க்க முடியாத ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியர்களின் வாழ்க்கையில் ஆதார் அட்டை அத்தியாவசிய அடையாள ஆவணமாக மாறியுள்ளது. அரசு வழங்கும் பல நலத்திட்டங்கள் முதல் வங்கி கணக்கு தொடங்குதல், PAN Card பெறுதல், Passport விண்ணப்பித்தல், Cell Phone Number வாங்குதல் வரை அனைத்து சேவைகளிலும் ஆதார் அட்டை தவிர்க்க முடியாத ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை பொதுமக்கள் ஆதாரை பயன்படுத்துவதற்கு அதனை தங்களுடன் பிளாஸ்டிக் கார்டு வடிவில் எடுத்துச் செல்ல வேண்டி இருந்தது. அல்லது Aadhar இணையதளத்தில் உள்ள ஆதார் 'பிடிஎப்' பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. சில சமயங்களில் ஆதார் அட்டை இல்லாமல் இருந்தால் அல்லது இணையதளம் இல்லாத சூழலில் அதனை பதிவிறக்கம் செய்ய முடியாவிட்டால், நமது அடையாளத்தை ஆதார் மூலம் உறுதி செய்வது பிரச்சனையாக இருந்தது.
இந்த நிலையை மாற்றி, டிஜிட்டல் ஆதார் பயன்படுத்த இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் UIDAI ஆதார் (Aadhaar App) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆதார் பயன்பாட்டை இன்னும் எளிமையாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை நாம் பதிவிறக்கம் செய்து, அதில் நமது ஆதார் எண்ணை பதிவு செய்து முக அங்கீகாரம் முறை (Face Authentication ) செய்ய வேண்டும். அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் நமது ஆதார் விவரங்கள் அதில் வந்துவிடும்.
நாம் இனி செல்போன் எண் பெறுவது, வங்கி கணக்கு தொடங்குவது, ஓட்டலில் தங்குவதற்கு ஆதார் அட்டை நகல் கொடுப்பது அல்லது கைரேகை எல்லாம் இனி வைக்க வேண்டாம். அந்த செயலியில் உள்ள 'கியூஆர்' கோடு காண்பித்தால் போதுமானது அல்லது அவர்கள் காட்டும் 'QR Code' ஐ ஸ்கேன் செய்தால் போதும். அதன் மூலம் நமது ஆதார் எண்ணை கூட அவர்களால் பார்க்க முடியாது.
இந்த செயலியில் நமது ஆதார் மட்டுமின்றி ஒரே செல்போன் எண் உள்ள நமது குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் 5 பேர் ஆதார் விவரங்களை அதில் பதிவு செய்து கொள்ள முடியும். இந்த செயலியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முக அங்கீகாரம், 6 இலக்க பின் டிஜிட்டல் பாஸ்வேர்டு, ஆதார் பயோ மெட்ரிக்கை Lock செய்யவும், Unlock செய்யவும் வசதிகள் உள்ளன. இணையதள வசதிகள் இல்லாத நேரங்களில் கூட இந்த செயலியை பயன்படுத்த முடியும். இந்த புதிய செயலி, ஆதார் சேவைகளை பொதுமக்களுக்கு மேலும் எளிமையாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்தும் வழியை திறந்து இருக்கிறது.
மேலும் சில தகவல்கள்:
யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (Unique Identification Authority of India) புதிய ஆதார் ஆப் (New Aadhaar App) ஆனது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபேஸ் ஆதன்டிகேஷன் (Face Authentication) கொண்ட இந்த ஆப் மூலமாக பெயர், மொபைல் நம்பர் மற்றும் பிறந்த தேதி போன்றவற்றை மாற்ற முடியுமா?
ஆதார் கார்டில் ஏதாவது அப்டேட் செய்ய விரும்பினால், முகவரியை மட்டுமே ஆன்லைனில் மாற்ற முடிகிறது. மற்றபடி பிறந்த தேதி (Date Of Birth), மொபைல் நம்பர் (Mobile Number), பெயர் (Name) மற்றும் இமெயில் (Email) போன்றவற்றை ஆதார் சென்டர்களில் மட்டுமே மாற்றி கொள்ள முடிகிறது. ஏனென்றால், பயோமெட்ரிக் விவரங்களை சரி பார்த்த பிறகே அந்த அப்டேட்கள் செய்யப்படுகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் போர்ட்டலில் வழக்கம்போல முகவரியை மட்டுமே மாற்ற அனுமதி கொடுக்கப்பட்டது. ஆகவே, புதிய ஆதார் ஆப் வந்தவுடன் இந்த மொபைல் நம்பர், பிறந்த தேதி, பெயர் விவரங்களை மாற்ற அனுமதி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், அதில் ஃபேஸ் ஆதன்டிகேஷன் கிடைக்குமென்று யுஐடிஏஐ முன்பே உறுதி செய்திருந்தது.இப்போது, புது ஆதார் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) ஆகியவற்றில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. இதை டிஜிட்டல் ஐடி (Digital ID) ஆக பயன்படுத்தி கொள்ளலாம். ஒருவருடைய ஆதார் எண்ணை மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் எண்களுக்கும் ப்ரோஃபைல் உருவாக்கி கொள்ளலாம்.
இதில் ஃபேஸ் ஆதன்டிகேஷன் இருக்கிறது. இதன் மூலம் வெரிபிகேஷன் செய்து கொள்ளலாம். அதேபோல உங்களது ஆதார் விவரங்களை ஃபேஸ் ஆதன்டிகேஷன் அல்லது கியூஆர் கோட் மூலமாக தேவைப்படும் நேரத்தில் ஷேர் செய்து கொள்ளலாம். இதில் மாக்ஸ்டு ஐடி (Masked ID) விருப்பம் இருக்கிறது. அதாவது, இந்த ஆப் மூலமாக ஆதார் விவரங்களை பகிரும்போது, 2 ஆப்ஷன் வரும்.இதில் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற முழு ஆதார் விவரங்களை ஷேர் செய்ய வேண்டுமா அல்லது ஆதார் எண் மற்றும் பெயரை மட்டும் ஷேர் செய்ய வேண்டுமா என்று 2 ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். இதற்கு ஏற்ப மட்டுமே விவரங்கள் ஷேர் செய்யப்படும். பயோமெட்ரிக் வெரிபிகேஷன்களை (Biometric Verifications) லாக் அல்லது அன்லாக் செய்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல ஆதார் கார்டு டவுன்லோட் மற்றும் பிவிசி ஆதார் டவுன்லோட் போன்ற வழக்கமான விருப்பங்களும் இந்த புதிய ஆதார் ஆப் வாழியாக செய்து கொள்ளலாம். ஆகவே, பழைய ஆதார் கார்டுக்கு மாற்றாக அப்படியே டிஜிட்டல் வெர்ஷனாக இது வந்துள்ளது. ஆனால், மற்றபடி அதில் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற அப்டேட்களை செய்ய அனுமதி கிடைக்கவில்லை.
ஆகவே, முகவரி தவிர மற்ற விவரங்களை அப்டேட் செய்ய ஆதார் சென்டருக்கு மட்டுமே செல்ல வேண்டும். இந்த புது ஆதார் ஆப் மூலமாக வரும் நாட்களில் அதுபோன்ற அப்டேட் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால், இதில் ஃபேஸ் ஆதன்டிகேஷன், ஃபிங்கர்பிரிண்ட் போன்ற வெரிபிகேஷன்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இதை எப்படி பயன்படுத்துவது?
1. Google Play Store அல்லது ஆப் ஸ்டோரில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
Install செய்து 12 இலக்க ஆதார் எண்ணை கொடுங்கள்.
2. OTP அனுப்பி வைக்கப்படும். அதை கொடுங்கள்.
3. Face Authentication இருக்கும். அதை செய்து முடியுங்கள். இப்போது 6 இலக்க Password Set செய்யுங்கள். அவ்வளவு தான் மேற்கண்ட வசதிகளைப் பயன்படுத்தலாம்.