வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த படிவத்தை ‘ஆன்லைன்’ மூலம் பூர்த்தி செய்ய வசதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1. காலதாமதத்தைத் தவிர்க்க, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் படிவத்தை 'ஆன்லைன்' மூலம் பூர்த்தி செய்யும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணியை தேர்தல் ஆணையம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது.

3. தேர்தல் அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று படிவங்களைக் கொடுத்து வாக்காளர் விவரங்களைப் பூர்த்தி செய்யும் பணியை டிசம்பர் 4-ந் தேதி வரை மேற்கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

4. கடந்த ஜனவரி 1-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

5. ஒரு மாதத்துக்குள் 6.34 கோடி வாக்காளர்கள் விவரங்களை நேரில் சரிபார்ப்பது கடினம் என்ற கேள்வி எழுந்தது.

6. பல பகுதிகளில் இன்னும் கணக்கீட்டு விண்ணப்பப் படிவம் கொடுக்கும் பணி தொடங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

7. இந்தநிலையில், 'ஆன்லைன்' மூலம் கணக்கீட்டுப் படிவத்தை நிரப்புவதற்கான வசதியை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

8. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:

9. வாக்காளர்கள் வசதிக்காக இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in-ல் கணக்கீட்டுப் படிவத்தை 'ஆன்லைன்' மூலம் நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.

10. வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி இணையதளம் மூலம் உள் நுழையலாம்.

11. இதற்கு பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (ஓ.டி.பி. எண்) அனுப்பப்படும்.

12. அந்த எண்ணை உள்ளிட்டபின், இணையப் பக்கத்தில் காட்டப்படும் 'கணக்கீட்டுப் படிவம்' (Fill Enumeration Form) என்ற இணைப்பைத் தேர்வு செய்யலாம்.

13. உள்நுழைந்த பிறகு, இணையப் பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை வாக்காளர் நிரப்ப வேண்டும்.

14. விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு இணையப் பக்கமானது 'e-sign' பக்கத்திற்கு மாறும்.

15. மீண்டும் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. எண் அனுப்பப்படும். அந்த எண்ணை உள்ளிட்டவுடன், படிவம் வெற்றிகரமாகப் பதிவேற்றப்படும்.

16. இந்த வசதியை வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

2024-2025 ஆம் ஆண்டு சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் - பள்ளிகளில் பெயர் பட்டியல் வெளியீடு.

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251110_175052

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககம் அரசு / ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்குதல்

2024-2025 ஆம் ஆண்டு சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் - பள்ளிகளில் பெயர் பட்டியல் வெளியீடு.

Best School Award List - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

2708 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு - விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள அவகாசம் - TRB

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251110_200424

Direct Recruitment for the Posts of Assistant Professors in the Tamil Nadu Collegiate Educational Service for Government Arts and Science Colleges and Government Colleges of Education – Press Release - Edit Option for Online Application.. 

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2708 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் , 04 / 2025 , நாள் . 16.10.2025 அன்று வெளியிடப்பட்டு , விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 10.11.2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது . தொடர்ந்து , விண்ணப்பதாரர்களின் பணிஅனுபவ சான்றிதழ் உள்ளீடு செய்வதற்கு ஏற்கனவே 28.10.2025 அன்று வெளியிடப்பட்ட Addendum 04.B / 2025 ன்படி 30.11.2025 க்குள் பணிஅனுபவ சான்றிதழ்களை மட்டும் உள்ளீடு செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இந்நிலையில் , அறிவிக்கையில் தெரிவித்துள்ளவாறு விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள அவகாசம் வழங்கியதின் அடிப்படையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகள் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள விரும்பினால் 111.2025 முதல் 13.11.2025 வரை திருத்தம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது . 13.11.2025 முதல் தேர்வர்களின் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட விவரங்களை மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்கும் . 13.11.2025 க்கு பிறகு மாற்றங்கள் கோரி வரப்பெறும் கோரிக்கைகள் பரிசீலிக்க இயலாது . மேலும் , விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் ( Edit Option ) மேற்கொள்ளும்போது கீழ்காணும் வழிமுறைகளை கவனமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது.

Edit Option - TRB Press News - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழகத்தில் மூத்த குடிமக்களுக்காக 25 ‘அன்புச் சோலை’ மையங்கள் திறப்பு - செயல்படுவது எப்படி?

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

New-Project-57

மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக, 25 ‘அன்புச் சோலை’ மையங்களை திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ.10) திருச்சி, பொன்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக ‘அன்புச் சோலை’ மையங்கள் ஒரு மாநகராட்சியில் இரண்டு வீதம் 10 மாநகராட்சிகளில் 20 மையங்கள், சென்னை பெருநகராட்சியில் 3 மையங்கள் மற்றும் தொழில் மாவட்டங்களான ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரியில் 2 மையங்கள் என மொத்தம் 25 ‘அன்புச் சோலை’ மையங்களை தொடங்கி வைத்தார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலமாக குழந்தைகள், மகளிர், கல்வி பயிலும் மாணவ, மாணவியர், திருநங்கைகள் மற்றும் முதியோர் அனைவரையும் பேணிக் காக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சட்டங்கள் இத்துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட முதியோர்களுக்காக முதியோர் இல்லங்கள், ஒருங்கிணைந்த வளாக இல்லங்கள், நடமாடும் மருத்துவ அலகுகள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளிட்ட மூத்த குடிமக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. முதியவர்கள் அமைதியான, கண்ணியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்து, அத்தியாவசிய வசதிகளை வழங்குவதே இத்திட்டங்களின் நோக்கம் ஆகும்.

மூத்த குடிமக்களுக்கான ‘அன்புச் சோலை’ மையங்கள்: தமிழகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூத்த குடிமக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்வதற்காக ஒரு மாநகராட்சியில் இரண்டு அன்புச் சோலைகள் வீதம், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் 20 அன்புச் சோலைகள் அமைக்கப்படுகின்றன.

மேலும், 2 தொழில் துறை மாவட்டங்களான ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி, பெருநகர மாநகராட்சியான சென்னையில் தண்டையார் பேட்டை, சோழிங்கநல்லூர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் ‘அன்புச் சோலை’ மையங்கள் தொடங்கப்பட்டு, இயன்முறை மருத்துவ சேவைகள் (Physiotherapy), யோகா, பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் நூலகம் போன்றவை வழங்கப்படவுள்ளன.

அன்புச் சோலையின் முக்கிய நோக்கங்கள்: முதியோருக்கு வழங்கப்படும் இயன்முறை மருத்துவ சேவைகள், பொழுது போக்கு, திறன் மேம்பாடு நிகழ்வுகள் மூலம் மனமும், உடலும் சுறுசுறுப்புடன் இருக்கச் செய்தல், முதியோர் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டு, சமூக உறவுகளை வலுப்படுத்துதல், ஆண், பெண் இருவரும் வேலை பார்க்கும் குடும்பங்களுக்கு, அவர்களது மூத்த உறுப்பினர்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு அன்புச் சோலை மையங்கள் செயல்படும்.

அன்புச் சோலையின் சமூக நோக்கம்: அன்புச் சோலை திட்டமானது, முதியோர்களை போற்றும் தமிழ் பாரம் பரியத்தை பிரதிபலிப்பதோடு, முதியோர்களின் பாதுகாப்பையும், நன்முறையில் பராமரிப்பதையும் உறுதி செய்வதால் அவர்களது குடும்பத்தினருக்கு மன அமைதியை ஏற்படுத்துகிறது. இதனால் முழுமையான நிறுவனம் சார்ந்த பராமரிப்பு தேவையை குறைத்தும், குடும்ப பிணைப்பை வலுப்படுத்தவும் உதவுகிறது.

மேலும், வேலைக்கு செல்ல ஆர்வமுள்ள பெண்கள், தங்கள் வீட்டிலுள்ள முதியோர்களை பகல் நேரங்களில் பராமரிக்க இயலாததால் வேலைக்கு செல்ல இயலாத நிலையுள்ளது. எனவே, வேலைக்கு செல்லும் பெண்களுக்காகவும், வேலைக்கு செல்ல ஆர்வமுள்ள பெண்களுக்காகவும், அவர்களது வீட்டு முதியவர்களுக்கு தனிமையில்லாமல் நேரத்தை சிறந்த முறையில் செலவு செய்து, மகிழ்வாக வாழ வழிவகை செய்யும் நோக்கத் தோடும் இம்மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக திருச்சியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், 25 அன்புச் சோலை மையங்களை காணொலி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்து, மூத்த குடிமக்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட சிறு தானிய உணவு வகைகள் மற்றும் சத்துமாவு கொண்ட பெட்டகங்களை வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடி, கேரம் விளையாடினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, கீதா ஜீவன், எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, துரை வைகோ, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்யும் முறை.

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்யும் முறை..

1) வலது பக்க மேல் மூலையில் புதிய புகைப்படம் ஒட்ட வேண்டும் 

2) வாக்காளரின் விபரம், பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணைவர் விபரங்களை எழுத வேண்டும்.

3) வாக்காளருக்கு 2002-2005 இல் நடந்த (SIR) சிறப்பு திருத்த பட்டியலிலும் பெயர் இருந்தால் அதன் விபரங்களை எழுத வேண்டும்.

4) வாக்காளருக்கு 2002-2005 (SIR) சிறப்பு திருத்த பட்டியலில் பெயர் இல்லை எனில் அந்த பட்டியலில் இடம் பெற்ற அவரது தந்தை, தாயார், தாத்தா, பாட்டி ஆகியோரில் ஒருவரது விபரத்தை எழுத வேண்டும்.

5) தனக்கோ, தன் குடும்பத்தினருக்கோ 2002-2005 சிறப்பு திருத்தப் பட்டியலில் பெயர் இல்லாத பட்சத்தில் கீழே உள்ள இரு கட்டங்களிலும் இல்லை என எழுதி விட்டு தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்களை இணைத்து BLO அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

* 2002-2005 சிறப்பு திருத்த பட்டியலில் பெயர் உள்ளதா என கண்டறிவதற்குரிய இணைய முகவரி:

https://erolls.tn.gov.in/electoralsearch/

* 2002-2005 சிறப்பு திருத்த வாக்காளர் பட்டியலை தரவிறக்கம் செய்வதற்குரிய இணைய முகவரி:

https://old.eci.gov.in/electoral-roll/link-to-pdf-e-roll/

* ஆன்லைன் மூலமே  SIR கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வதற்குரிய இணைய முகவரி:

https://voters.eci.gov.in/signup

நமது வாக்கு! நமது உரிமை!

இன்றே அதை உறுதி செய்வோம்!

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

2026 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் - அரசாணை வெளியீடு!

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251111_221041

2026 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் - அரசாணை வெளியீடு!

G.O 708 General Holiday List 2026 - Download here

IMG-20251111-WA0021

ஞாயிற்றுக்கிழமையில் 2, சனிக்கிழமையில் 3 விடுமுறைகள் வருகின்றன. மற்ற 19 பொது விடுமுறைகளும் வார நாட்களில் வருகின்றன.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ENNUM EZHUTHUM LESSON PLAN

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ENNUM EZHUTHUM LESSON PLAN 

10 NOV 2025

எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள்

CLICK HERE EE LOP UNIT 4
CLICK HERE EE LOP UNIT 4 CLASS 4&5
CLICK HERE EE LOP COLLECTIONS

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TN SCHOOLS CLUB ACTIVITIES RECORDS PDF

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மன்ற செயலபாடுகள் பதிவேடுகள் 

PDF DOWNLOAD 

வகுப்பு 6 முதல் 8 வரை பள்ளிகளில் நடைமுறையில் உள்ள மன்ற செயல்பாடுகள் பதிவேடுகள் PDF இங்கு பகிர்ந்துள்ளோம்...

CLICK HERE TAMIL MANDRAM PDF
CLICK HERE MATHS CLUB PDF
CLICK HERE HISTORY CLUB PDF
CLICK HERE MOVIE CLUB PDF
CLICK HERE MAGIZH MUTRAM PDF

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

S.I.R - கணக்கீட்டுப் படிவத்தை இணையதளம் மூலம் நிரப்பலாம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவத்தை இணையதளம் மூலம் நிரப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாக்காளா்கள் வசதிக்காக இந்தியத் தோ்தல் ஆணையம் தனது அதிகாரபூா்வ இணையதளத்தில் கணக்கீட்டுப் படிவத்தை இணையதளம் மூலம் நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.

வாக்காளா்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண் அல்லது வாக்காளா் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி இணையதளம் மூலம் உள்நுழைய பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு வரும் ஒரு முறை கடவுச் சொல்லை (ஓடிபி) உள்ளிட வேண்டும். உள்நுழைந்த பின்னா், அந்த இணையப் பக்கத்தில் காட்டப்படும் இணைப்பைத் தோ்வு செய்யலாம்.

இந்த வசதியை வாக்காளா் பட்டியலில் உள்ள பெயா், ஆதாா் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளா்கள் மட்டுமே பயன்படுத்த இயலும். வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு, வாக்காளா் இணையப் பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும்.

சரியான விவரங்களைச் சமா்ப்பித்த பிறகு இணையப் பக்கம் பக்கத்துக்கு மாறும். அதன் பின்னா் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) அனுப்பப்படும்.

அந்த ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிட்டவுடன், படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும். தங்களது கைப்பேசி எண்களைப் பதிவு செய்திருக்கும், மேலும் வாக்காளா் பட்டியல் மற்றும் ஆதாா் பதிவுகளில் பெயா் பொருந்தி உள்ள வாக்காளா்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

S.I.R படிவத்தை நிரப்புவது எப்படி? - முழு விளக்கம்

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தேர்தல் ஆணையம் வழங்கும் எஸ்.ஐ.ஆர். படிவத்தில் என்ன இருக்கிறது? நிரப்புவது எப்படி?

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் நவ. 4 முதல் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தின் கணக்கீட்டுப் படிவம் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தாலும் இனி வரும் தேர்தல்களில் வாக்களிக்கவும் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இடம்பெறவும் நீங்கள் இந்த படிவத்தைப் பெற்று கண்டிப்பாக நிரப்பித் தர வேண்டும்.

ஏனெனில் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்வது சிறப்பு சுருக்க திருத்தம்(எஸ்.எஸ்.ஆர்.) இதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தங்களை மேற்கொள்வது நடக்கும்.

ஆனால் தேவைக்கேற்ப குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை 'சிறப்பு தீவிர திருத்தத்தை(எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளும். முன்னதாக கடந்த 2002 ஆம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அறிவித்து அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. இது வாக்காளர் பட்டியலை முழுவதுமாக ஒருமுறை சரிபார்ப்பதாகும்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணைய ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வாக்குச்சாவடி அலுவலர்களாக செயல்படுகின்றனர். ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் படிவத்தை வீடுவீடாகச் சென்று வழங்குகின்றனர்.

வருகிற டிச. 4 ஆம் தேதிக்குள் நீங்கள் இந்த படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும்.

படிவத்தில் என்ன இருக்கிறது? நிரப்புவது எப்படி?

தற்போது இருக்கும் வாக்காளர் பட்டியலின்படி வாக்காளரின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், முகவரி, வாக்காளர் பட்டியல் வரிசை எண், பாகம் எண், வாக்குச்சாவடி பெயர் மற்றும் அமைவிடம், சட்டமன்றத் தொகுதியின் பெயர், க்யூஆர் கோடு, தற்போதைய புகைப்படம் ஆகியன ஏற்கெனவே அச்சிடப்பட்டிருக்கும். தற்போதைய புகைப்படத்திற்கு அருகில் புதிய புகைப்படத்திற்கான இடம் இருக்கும். அதில் உங்களுடைய இப்போதைய புகைப்படத்தை ஒட்ட வேண்டும்.

இதன் பிறகு கீழே கேட்கப்பட்டுள்ள விவரங்களை நீங்கள் நிரப்ப வேண்டும்.

வாக்காளரின் பிறந்த தேதி, ஆதார் எண், கைப்பேசி எண் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். பின்னர் தந்தை//பாதுகாவலர் பெயர், தந்தை/பாதுகாவலர் வாக்காளர் அடையாள அட்டை எண், தாய் பெயர், தாயாரின் வாக்காளர் அடையாள அட்டை எண், கணவன்/மனைவி பெயர் மற்றும் அவரின் வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

இதற்கு கீழே மேலும் ஒரு விவரம் கேட்கப்பட்டிருக்கும்.

2002ல் நீங்கள் வாக்களித்திருந்தால் முந்தைய(2002) சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள உங்களின் விவரங்களை பதிவிட வேண்டும். உங்களுடைய பெயர், அடையாள அட்டை எண், மாநிலம், மாவட்டம், சட்டமன்றத் தொகுதியின் பெயரை குறிப்பிட வேண்டும்.

ஒருவேளை நீங்கள் 2002ல் வாக்களிக்கவில்லை என்றால் 2002ல் வாக்காளர் பட்டியலில் உள்ள உங்களுடைய தாய் அல்லது தந்தையின் விவரங்களைக் குறிப்பிட வேண்டும். அதாவது தந்தையின் பெயர், அவரின் வாக்காளர் அடையாள அட்டை எண், சட்டமன்றத் தொகுதி, மாவட்டம், மாநிலம் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

இறுதியாக வாக்காளரின் கையொப்பம் என்ற இடத்தில் நீங்கள் கையொப்பம் இட வேண்டும். உங்கள் தொகுதி வாக்குச்சாவடி அலுவலரும் கையெழுத்திடுவார்.

2002 சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் உங்களுடைய பெயர், தாய் அல்லது தந்தையின் பெயர் இருந்தால் எந்த கூடுதல் ஆவணங்களும் தேவையில்லை. ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் வாக்குச்சாவடி அலுவலர் உங்களுடைய அடையாள ஆவணங்களைக் கேட்கலாம்.

அந்த வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயரும் இல்லை, உங்களுடைய பெற்றோரின் பெயரும் இல்லை என்றால் உங்களுடைய படிவம், அடையாள ஆவணங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். அந்த சமயத்தில் அடையாள ஆவணங்களை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

படிவத்தில் வெள்ளை நிற பின்னணி கொண்ட புதிய புகைப்படத்தை ஒட்ட வேண்டும்.

இரு பிரதிகள் வழங்கப்படும் நிலையில் அதனை பூர்த்தி செய்து ஒன்றை வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். மற்றொரு பிரதியில் அவரிடம் ஒப்புதல் பெற்று வைத்துக்கொள்ள வேண்டும். படிவத்தை ஜெராக்ஸ் எடுத்து வழங்க முடியாது.

அதனால் திருத்தங்கள் இல்லாமல் கவனமாக நிரப்ப வேண்டும். நிரப்பியவுடன் அதை ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொள்ளலாம் அல்லது ஆவணமாக ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு நிரப்புவதற்கு கடினமாக இருந்தால் அலுவலரிடம் அல்லது அரசியல் கட்சிகளின் சார்பில் உள்ள 2 ஆம் நிலை வாக்குச்சாவடி அலுவலர்களின் உதவியைப் பெறலாம். தவறுகள் இன்றி படிவத்தை நிரப்ப வேண்டும்.

படிவம் பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், படிவத்தில் குறிப்பிட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலரின் கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். படிவத்தில் வாக்குச்சாவடி அலுவலரின் பெயர் மற்றும் தொடர்பு எண் இருக்கும்.

டிச. 4 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வழங்க வேண்டும். படிவத்துடன் முதலில் எந்த ஆவணங்களையும் வழங்கத் தேவையில்லை எனவும் உங்கள் விண்ணப்பங்களில் சந்தேகங்கள் இருந்தால் தேவைப்பட்டால் வாக்குச்சாவடி அலுவலர் உங்களிடம் ஆவணங்களைக் கேட்பார்.

2002 வாக்காளர் பட்டியலில் சரிபார்ப்பது எப்படி?

உங்கள் தொகுதிக்கு வரும் வாக்குச்சாவடி அலுவலர் 2002 சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலை வைத்திருப்பார். அவரிடம் உங்களுடைய தொகுதி, பாகம் எண் உள்ளிட்ட விவரங்களைக் கூறி கேட்கலாம். https://voters.eci.gov.in/ அல்லது https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று உங்கள் விவரங்களை உள்ளிட்டு கண்டறியலாம்.

கட்சி அங்கீகரிக்கப்பட்ட '2 ஆம் நிலை வாக்குச்சாவடி அலுவலர்'

தேர்தல் ஆணையத்தால் ஒரு வாக்குச்சாவடி அலுவலர் நியமிக்கப்படுவார். அவர்களுக்கு உதவியாகவோ அல்லது ஒவ்வொரு தொகுதி மக்களுக்கு உதவும் பொருட்டு அந்தந்த கட்சிகள் ஒரு வாக்குச்சாவடி அலுவலரைத் தயார் செய்து நியமிக்கும்.

அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்கி நியமித்துள்ளது.

எனவே படிவம் தொடர்பான சந்தேகங்களுக்கு 2002 பட்டியலில் பெயர் இருக்கிறதா என தெரிந்துகொள்ள உங்கள் தொகுதியில் உள்ள கட்சி சார்ந்த வாக்குச்சாவடி அலுவலர்களைத் தொடர்புகொள்ளலாம். அவர்கள் உங்களுக்கு படிவத்தை நிரப்பியும் தருவார்கள்.