அரியலூர் DSWO வேலைவாய்ப்பு 2025 – சீனியர் கவுன்சலர், கேஸ் வார்கர் பணியிடங்கள்

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அரியலூர் DSWO வேலைவாய்ப்பு 2025 – சீனியர் கவுன்சலர், கேஸ் வார்கர் பணியிடங்கள்

அரியலூர் மாவட்ட சமூக நல அலுவலகம் (DSWO Ariyalur) 2025-ல் சீனியர் கவுன்சலர் மற்றும் கேஸ் வார்கர் போன்ற பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு மொத்தம் 4 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். பணியிடம் அரியலூர், தமிழ்நாடு ஆகும். சம்பளம் மாதம் ₹10,000 முதல் ₹22,000 வரை வழங்கப்படுகிறது. இந்தக் வேலைவாய்ப்பில் விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு, B.Sc, BSW, M.Sc, MSW தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் முன்பு தகுதி மற்றும் வயது வரம்புகளை சரிபார்க்க வேண்டும்.

காலியிடங்கள் விவரம்

பதவிகாலியிடங்கள்
Senior Counsellor1
Case Worker2
Multipurpose Helper1
மொத்தம்4

கல்வித் தகுதி 

  • Senior Counsellor (சீனியர் கவுன்சலர்): சமூக பணியில் ماس்டர் (MSW) / கவுன்சலிங் சைக்காலஜி / டெவலப்மெண்ட் மேனேஜ்மென்ட் (Master’s Degree in Social Work / Counselling Psychology / Development Management)

  • Case Worker (கேஸ் வார்கர்): சமூகப் பணி / கவுன்சலிங் சைக்காலஜி / டெவலப்மெண்ட் மேனேஜ்மென்ட் துறையில் பச்சலர் அல்லது மாஸ்டர் (B.Sc / BSW / MSW / Counselling Psychology / Development Management)

  • Multipurpose Helper (மல்டிபர்பஸ் ஹெல்பர்): 10ஆம் வகுப்பு பாஸ் (10th Pass)

வயது வரம்பு

  • அதிகபட்சம்: 40 ஆண்டுகள்

  • வயது தளர்வுகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி வழங்கப்படும்.

சம்பளம்

பதவிசம்பளம்
Senior Counsellor₹22,000/மாதம்
Case Worker₹18,000/மாதம்
Multipurpose Helper₹10,000/மாதம்

தேர்வு முறை

  • நேர்முகம் (Interview)

விண்ணப்பக் கட்டணம்

  • கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை

  1. கீழே கொடுக்கப்பட்ட இணைப்பில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.

  2. விண்ணப்பத்தை அச்சிடவும்.

  3. தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை நிரப்பி, கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பவும்.

அஞ்சல் முகவரி:
District Social Welfare Office,
Room No: 20, Ground Floor,
District Collector Office,
Ariyalur-621704.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamilKalvi (கல்வி) )  

CMC வேலூர் ஜூனியர் கிராஜுவேட் மெடிக்கல் லேப் டெக்னிஷியன் வேலைவாய்ப்பு 2025 – ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் முழுமையான விவரங்கள்

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

CMC வேலூர் ஜூனியர் கிராஜுவேட் மெடிக்கல் லேப் டெக்னிஷியன் வேலைவாய்ப்பு 2025 – ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் முழுமையான விவரங்கள்

கிரிஸ்டியன் மெடிக்கல் கல்லூரி, வேலூர் (CMC Vellore) 2025-ல் Junior Graduate Medical Lab Technician பதவிக்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள், குறிக்கப்பட்ட கல்வி தகுதிகள் மற்றும் வயது வரம்புகளை பூர்த்தி செய்தால், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பு சுகாதார மற்றும் மருத்துவ ஆய்வக துறையில் ஒரு சிறந்த வாய்ப்பாகும். விண்ணப்பிக்க கடைசி தேதி 27 அக்டோபர் 2025 ஆகும்.

பணியிடம் விவரம் 

பதவி பெயர்காலியிடங்கள்சம்பளம்
Junior Graduate Medical Lab Technicianகுறிப்பிடப்படவில்லைவிதிகளுக்கு ஏற்ப (Consolidated Pay)

கல்வித் தகுதி 

  • BMLT (B.Sc. Medical Laboratory Technology) முடித்திருக்க வேண்டும்.

  • முன்னுரிமை: 2020க்குப் பிறகு CMC வேலூரில் 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள்.

வயது வரம்பு

  • அதிகபட்ச வயது: 30 ஆண்டுகள்

  • வயது தளர்வுகள் அதிகாரப்பூர்வ விதிகளுக்கு ஏற்ப வழங்கப்படும்.

சம்பளம்

  • Consolidated Pay: நிர்ணயிக்கப்பட்ட விதிகளுக்கு ஏற்ப.

விண்ணப்ப கட்டணம் 

  • குறிப்பிடப்படவில்லை (No Fee).

தேர்வு செயல்முறை 

  • தகுதி சான்றிதழ்கள் மற்றும் அனுபவத்தை மதிப்பீடு செய்யும் அடிப்படையில் தேர்வு.

  • தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 

  1. அதிகாரப்பூர்வ இணையதளம் clin.cmcvellore.ac.in-க்கு செல்லவும்.

  2. Junior Graduate Medical Lab Technician Recruitment Notification திறந்து Eligibility நிபந்தனைகளை சரிபார்க்கவும்.

  3. விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யவும்.

  4. கடைசி தேதிக்குள் (27-10-2025) விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamilKalvi (கல்வி) )  

PGTRB 2025 - உத்தேச விடைக்குறிப்புகள் மற்றும் விடைக்குறிப்புகள் மீதான ஆட்சேபனை தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பத்திரிக்கைச் செய்தி!

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG-20251015-WA0028

PGTRB 2025 - Tentative Answer Key Published 

PGTRB -உத்தேச விடைக்குறிப்புகள் மற்றும் விடைக்குறிப்புகள் மீதான ஆட்சேபனை தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பத்திரிக்கைச் செய்தி!

PGTRB 2025 - Tentative Answer Key - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

வளரிளம் பருவக் கல்வி தொடர்பான பங்கேற்று நடித்தல் ( Role Play ) - பள்ளி மற்றும் மாவட்ட அளவிலான போட்டி மாணவர்கள் கலந்து கொள்ள சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251015_122321

ஆசிரியர் கல்வி - தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தேசிய மக்கள்தொகை கல்வித்திட்டம் - வளரிளம் பருவக் கல்வி தொடர்பான பங்கேற்று நடித்தல் ( Role Play ) - பள்ளி மற்றும் மாவட்ட அளவிலான போட்டி மாணவர்கள் கலந்து கொள்ள சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த கோருதல்

NPEP-Role Play Proceeding reg-pages.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அக்டோபர் 2025 மாத சிறார் திரைப்படம் - `குரங்கு பெடல்` திரையிடுதல் தொடர்பாக DSE செயல்முறைகள்!

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
IMG_20251015_143030_wm

அக்டோபர் 2025 மாத சிறார் திரைப்படம் - `குரங்கு பெடல்` திரையிடுதல் தொடர்பாக DSE செயல்முறைகள்!

DSE - Kurangu Pedal Movie Proceedings - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஜன. 24, 25 தேதிகளில் சிறப்பு "டெட்' தேர்வு: டிஆர்பி அறிவிப்பு

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

dinamani%2Fimport%2F2019%2F11%2F26%2Foriginal%2Ftrb

தமிழகத்தில் பணியில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு அடுத்த ஆண்டு ஜன. 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) அறிவித்துள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: உச்சநீதிமன்றத் தீர்ப்பாணையின் அடிப்படையில் தமிழக பள்ளிகளில் தற்போது பணியாற்றிவரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் முறைப்படி ஆசிரியர் தகுதித் தேர்வுகளுடன் 2026-ஆம் ஆண்டில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜனவரி, ஜூலை, டிசம்பர் ஆகிய மாதங்களில் நடத்த கடந்த திங்கள்கிழமை (அக்.13) ஆணையிடப்பட்டது.

இதன்படி, ஜனவரி மாதத்தில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை உத்தேசமாக அடுத்த ஆண்டு ஜன. 24-ஆம் தேதி தாள்-1 மற்றும் 25-ஆம் தேதி தாள்-2 நடத்தவும், இதற்கான அறிவிக்கையை அடுத்த மாதம் (நவம்பர்) வெளியிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு ஜூலை, டிசம்பர் மாதங்களில் நடத்த வேண்டிய சிறப்புத் தகுதித் தேர்வு சார்ந்த அறிவிக்கை பின்னர் வெளியிடப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கை

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
kalvi_L_251015084035000000

பணி நிரந்தரம் எதிர்பார்த்து காத்துள்ள பகுதி நேர ஆசிரியர்கள், தங்களின் கோரிக்கை, சட்டசபையில் எதிரொலிக்க வேண்டும்' என, தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:

கடந்த, 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில், 'பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்' என, வாக்குறுதி அளித்திருந்தது.

தமிழக அரசுப்பள்ளிகளில், 12 ஆயிரத்து 500 ரூபாய் தொகுப்பூதியத்தில் உடற்கல்வி, ஓவியம், கம்ப்யூட்டர் அறிவியல், தையல், இசை, தொழில் கல்வி பாடங்களை பகுதி நேர ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர்.

அதேநேரம் ஓவியம், கம்ப்யூட்டர், தையல் மற்றும் இசை பயிற்றுவிக்கும் சிறப்பாசிரியர்கள், 20 ஆயிரத்து 600 ரூபாய் அடிப்படை சம்பளம் பெறுகின்றனர். 'ஒரே கல்வித்தகுதியுடைய ஒரே பாட ஆசிரியர்களுக்கு, சம வேலை, சம ஊதியம் வழங்க வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

எனவே, 14 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில், பகுதிநேர ஆசிரியர்களாக இணைந்தவர்களை பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; இக்கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தற்போது சட்டசபை கூடியுள்ள நிலையில், பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம், பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். சட்டசபையில், இக்கோரிக்கையை எதிர்க்கட்சியின் எழுப்பி, கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

காலாண்டுத் தேர்வில் மதிப்பெண் குறைந்தவர்களுக்கு சிறப்பு வகுப்பு தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசிக்க முடிவு

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Tamil_News_lrg_4057341

காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது பற்றி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்த உள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

தமிழகத்தில் காலாண்டு தேர்வு கடந்த மாதம் முடிந்தது. கடந்தவாரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டன. இதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்விற்கு தயாரகும் வகையில் இப்போதே பாடங்களை நடத்த ஆசிரியர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். ஆனால், சில மாணவர்கள் காலாண்டுத்தேர்வில் மிககுறைந்த மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இவர்களும் பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் எடுக்க வைக்க கல்வித்துறை சார்பில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட உள்ளது.

மேலும் குறைந்த மதிப்பெண் எடுத்து மாணவர்களை படிப்பில் கவனம் செலுத்த எவ்வித பயிற்சி வழங்கலாம் உள்ளிட்டவை பற்றி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்