பள்ளி நாட்காட்டி 2025 - 2026 | அனைத்து தகவல்களும் ஒரே பக்கத்தில்...

      Education News (கல்விச் செய்திகள்)

IMG_20230621_215553
பள்ளி நாட்காட்டி 2025 - 2026 | அனைத்து தகவல்களும் ஒரே பக்கத்தில்....

Academic School Calendar 2025 - 2026 |Single Page ( All Details )

👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மாணவர்களின் படைப்புகளை EMIS login வழியாக பள்ளிக் கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் அனுப்ப உத்தரவு.

      Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250613_173551

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது . இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை . நட , ஓடு . பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன . முதல் கட்டமாக 53 புத்தகங்களும் , இரண்டாம் கட்டமாக 70 புத்தகங்களும் அனைத்து வகை அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன . மூன்றாம் கட்டமாக 81 புத்தகங்கள் அரசுப்பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளி ஆசிரியர்களின் EMIS login வழியே படைப்புகளை அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

Letter to CEO's - EMIS Login last date 09.07.2025.pdf

👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஜூன் 23, 24-ல் கல்வித் துறைஅமைச்சர் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

      Education News (கல்விச் செய்திகள்)

1365460

அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில், ஜூன் 23, 24-ல் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதற்காக துறை சார்ந்த ஆய்வுகளை பள்ளிக்கல்வித் துறை செய்துவருகிறது. அதன்படி பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள் தொடர்பாக துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் ஜூன் 23, 24-ம் தேதிகளில் மாவட்ட வாரியாக நடத்தப்பட உள்ளது.

அதன்படி கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் உட்பட 13 மாவட்டங்களுக்கு ஜூன் 23-ம் தேதி காலையும், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், மதுரை, ஈரோடு, திருச்சி உட்பட 12 மாவட்டங்களுக்கு மதியமும் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். அதேபோல், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, கரூர், நாமக்கல், வேலூர், சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு ஜூன் 24-ம் தேதி கூட்டம் நடத்தப்படும். இதுசார்ந்த தகவல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தகூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் பணிபுரியும் முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவித் திட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டமாக அழைக்கப்பட்டு களநிலவரம் ஆய்வு செய்யப்படவுள்ளது. மேலும், கூட்டத்தில் மாவட்ட அலுவலர்கள் கலந்து கொள்ளும் போது அந்தந்த மாவட்டத்துக்குரிய கண்காணிப்பு பொறுப்பில் உள்ள துறை இயக்குநர்களும் பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

School Calendar 2025 - 2026 | Important Dates :

      Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250613_181814

2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி - முக்கிய நாட்கள்

⭕ 2025-26ம் கல்வியாண்டின் மொத்தம் 210 நாட்கள் வேலை நாட்கள் ;

 ⭕ அனைத்து சனி , ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை 

⭕ செப் -18 முதல் 26 ம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது. 

⭕ ஆயுத பூஜை , விஜயதசமி விடுமுறையைச் சேர்த்து செப் .27 முதல் அக் .5 ம் தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை

 ⭕ டிச .15 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது டிச .24 முதல் ஜன .4.2026 வரை ( 12 நாட்கள் ) அரையாண்டு விடுமுறை 

⭕ 2026 ஜன .14 முதல் ஜனவரி 18 வரை ( 5 நாட்கள் ) பொங்கல் விடுமுறை 

⭕ ஏப்ரல் 10 ம் தேதி முழு ஆண்டு தேர்வு தொடங்குகிறது.

⭕ கோடை விடுமுறை 2026 ஏப்ரல் 25 - ம் தேதி தொடங்குகிறது 

⭕ 2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

6 - 10th English - Weekly Wise Syllabus 2025 - 2026

 Education News (கல்விச் செய்திகள்)
6 - 10th English - Weekly Wise Syllabus 2025 - 2026 

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

4 & 5 -ம் வகுப்பு கற்றல் விளைவுகள் / பருவம் 1

7.5 PP / TP / PSTM - GO collections to Government Schools

7.5% Bonafide certificateகேட்டு 2024_25 கல்வி ஆண்டு மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகுகிறார்கள் ...

மார்ச் 2023, 2024 மற்றும் இந்த ஆண்டு மார்ச் 2025இல் +2 முடித்துள்ள மாணவ மாணவிகளுக்கு நாம் தனியே Bonafide certificate வழங்க  தேவையில்லை ...
 EMIS Data வழியாக அவர்களே எடுத்துக் கொள்வார்கள் 

 2022 மற்றும் அதற்கு முன் பயின்ற மாணவர்கள் எனில்.

Bonafide certificate பெற வேண்டும்...
( இதற்கு முன் Bonafide certificate HM/CEO sign உடன் வாங்கி இருந்தால் - அதையே பயன்படுத்திக் கொள்ளலாம்) 
 ஓவ்வொரு ஆண்டும் புதிதாக வாங்க தேவையில்லை... 

7.5, புதுமை பெண், தமிழ் புதல்வன், PSTM சார்ந்த மொத்த தகவல் /அரசாணை தொகுப்பில்...

மூன்றாம் பக்கத்தில் bonafide certificate - தொடர்பாக medical board selection committee சுற்றறிக்கை இணைத்துள்ளேன் 

👇👇👇 

PDF Download Here

தகவலுக்காக.
க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
மோ சுப்புலாபுரம்
மதுரை 625702

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC NOTIFICATION - Combined Technical Services Examination ( Non - Interview Posts )

 IMG_20250612_125404

1.1 . In Para 3 of the Notification No.09 / 2025 , dated 21.05.2025 , the pension scheme for the post of Senior Accountant ( Post Code : 3702 ) in the Tamil Nadu Minerals Limited shall be read as EPF ( Employees ' Provident Fund ) instead of CPS ( Contributory Pension Scheme ) . 

2. The distribution of vacancies for the posts mentioned in para No.1 are given in the Annexure . 

3. Age Limit : ( as on 01.07.2025 )

TNPSC NOTIFICATION - 👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அரசு பள்ளி ஆசிரியைக்கு லண்டனில் கவுரவம் - ஏன்? என்ன செய்தார் இவர்?

 Education News (கல்விச் செய்திகள்)

Tamil_News_lrg_3954029

தலைமை ஆசிரியை பொறுப்பை கைவிட்டு, இடைநிலை ஆசிரியராக பதவி இறங்கி, தமிழ் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டு வரும், சென்னை, ஷெனாய் நகர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை கனகலட்சுமிக்கு விருது வழங்கி, பிரிட்டன் பார்லிமென்ட் கவுரவிக்க உள்ளது.

கோவில்பட்டியைச் சேர்ந்த கனகலட்சுமி, எம்.ஏ., தமிழ் மொழியியல், இலக்கியம் படித்துள்ளார். தமிழ் பல்கலையில் பி.லிட்., பட்டமும், கரந்தை தமிழ்ச் சங்கத்தில் புலவர் பட்டமும், அண்ணாமலை பல்கலையில் பி.எட்., பட்டமும் பெற்றுள்ளார்.

'தமிழ் வாசிப்புத் திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிஎச்.டி., முடித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிய இவர், தன் தமிழ் ஆர்வத்தால், சென்னை, ஷெனாய் நகர் மாநகராட்சி பள்ளியில், இடைநிலை ஆசிரியராக பதவி இறக்கம் பெற்று, பணியில் சேர்ந்தார்.

கடந்த 23 ஆண்டுகளாக தமிழில் எழுத, படிக்க தெரியாத மாணவர்களை தேர்வு செய்து, எளிய முறையில் கற்பித்து வருகிறார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒலக்கூர் கிராமத்தில், ஆறு பள்ளிகளில் இருந்த, 100 மாணவர்களை தேர்வு செய்து, 40 நாள்களில், அவர்களுக்கு தமிழ் எழுத, படிக்க கற்பித்தார்.

தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில், படிக்கத் தெரியாத ஒரு லட்சத்து, 56,710 மாணவர்களை வாசிக்க வைத்து, மாவட்ட கலெக்டரின் பாராட்டை பெற்றார்.

கொரோனா காலத்தில், 36 குழந்தைகளுக்கு தமிழ் வாசிப்பு பயிற்சி அளித்ததுடன், 2,000 ஆசிரியர்களுக்கு எளிய முறை தமிழ் வாசிப்பை கற்பிப்பதற்கான பயிற்சிகளை அளித்தார்.

மேலும், 'கியூஆர் குறியீடை ஸ்கேன்' செய்தால், எளிய தமிழ் வாசிப்பு பயிற்சி பெறும் வகையில், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இவரின் தமிழ்ப் பணிகளை, சமூக வலைதளங்கள் வாயிலாக கண்காணித்த, பிரிட்டனில் உள்ள கிராய்டான் தமிழ்ச் சங்கம், பிரிட்டன் பார்லிமென்டில் இவரை கவுரவிக்க உள்ளது. மேலும், ஆக்ஸ்போர்ட் பல்கலையில் நடக்க உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிலும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.

பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ், 'தமிழால் உயர்ந்துள்ள ஆசிரியை கனகலட்சுமிக்கு, தமிழனாக மனமார்ந்த வாழ்த்துகள்' என கூறியுள்ளார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

10 ஆம் வகுப்பு - பொதுத் தேர்வு விடைத்தாட்களின் நகலினை நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை

 Education News (கல்விச் செய்திகள்)
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல்-2025 - விடைத்தாட்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளல் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் சார்ந்த செய்திக் குறிப்பு

IMG_20250612_140337

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அரசு பள்ளி மாணவர்களின் அடையாளத்தை மாற்றும் கல்விச் சுற்றுலா

      Education News (கல்விச் செய்திகள்)

17495372362006

கடந்த நான்கு ஆண்டுகளாக, நமது அரசு பள்ளி மாணவர்களை துபாய், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், ஜெர்மனி போன்ற நாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளேன். “இந்த யோசனை எப்படி வந்தது? அரசு பள்ளி மாணவர்கள் பன்னாடுகளுக்குச் செல்வதால் என்ன பயன்?” என்று பலரும் என்னிடம் கேட்டிருக் கிறார்கள். அதற்கான பதிலை இப்போது சொல்ல விரும்புகிறேன்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக 2021இல் பொறுப்பேற்ற பிறகு, முதல்வரின் வழிகாட்டு தலின்படி, அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தினோம். இருப்பினும், நான் பொறுப்பேற்றபோது, முதல்வர் சொன்ன வார்த்தைகளில் ஏதோ ஒன்றைத் தவற விடுவதாகத் தோன்றியது.

நேருவுக்கு நேர்: அந்நேரத்தில், முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பற்றிய சுவாரசிய செய்தி ஒன்றை வாசிக்க நேர்ந்தது. 1957இல் புதுடெல்லியில் உள்ள நேருவின் மாளிகையில் அவரைக் குழந்தைகள் பேட்டி கண்டனர். அந்தப் பேட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி கி.லட்சுமி, “நீங்கள் அயல்நாடுகளுக்குத் தூதுவர்களை அனுப்புகிறீர்கள்.

நீங்கள் ஏன் எங்களையும் வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது? நாங்கள் அந்த நாட்டுக் குழந்தைகளைச் சந்தித்து, அவர்களிடம் நம்மைப் பற்றிக் கூறுவோம். அவர்களைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்” என்றார். “நல்ல யோசனை. நிச்சயம் கவனிக்கிறேன்” என்று பதில் அளித்திருந்தார் நேரு.

.

இதை வாசித்தபோது எனக்குள் வெளிச்சம் தோன்றியது. முதல்வரின் விருப்பப்படி, அரசு பள்ளி மாணவர்கள் சிறந்த ஆளுமைகளாகத் திகழ வேண்டும் என்றால், உலக நாடுகளை அவர்கள் பார்ப்பதும் உதவியாக இருக்கும் என நினைத்தேன். இந்த யோசனைக்கு முதல்வர் உடனடி ஒப்புதல் வழங்கினார்.

இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு முதல் கல்விச் சுற்றுலா சென்றோம். அபுதாபி லூவ்வர் அறிவியல் அருங்காட்சியகம், அபுதாபி பன்னாட்டுப் புத்தகத் திருவிழா போன்ற பல்வேறு இடங்களுக்கு 68 மாணவர்களை அழைத்துச் சென்றேன். அதன் பிறகு, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தென்கொரியா தற்போது ஜெர்மனி என இதுவரை 350 அரசு பள்ளி மாணவர்களைப் பன்னாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளேன்.

இவர்கள் அனைவரும் அரசு பள்ளிகளில் நடத்தப்படும் கலைத்திருவிழா, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, விநாடி வினா, சிறார் திரைப்பட விழா, நூல் வாசிப்பு, இலக்கியம், அறிவியல் போன்ற மன்றச் செயல்பாடுகளில் தங்களின் திறமைகளை நிரூபித்தவர்கள். மாணவர்களைப் போலவே ‘கனவு ஆசிரியர்’ திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 54 ஆசிரியப் பெருமக்களை பிரான்ஸ் நாட்டுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளேன்.

சமத்துவக் கல்வி: எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கே உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், நூலகங்கள், பள்ளிக்கூடங்கள், அறிவுசார் மையங்களை மாணவர்கள் பார்வையிடுகின்றனர். தமிழ்நாட்டில் இருமொழிக் கல்வியில் பயின்று பல்வேறு நாடுகளில் பணியாற்றும் பல்துறை ஆளுமைகளுடனான சந்திப்பை, வெளிநாட்டுக் கல்விச் சுற்றுலாவில் மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து வருகிறேன்.

ஒருமுறை கலந்துரையாடல் முடிந்த பிறகு அவர்களிடம் “என்ன கற்றுக்கொண்டீர்கள்” எனக் கேட்டேன். “ஆங்கிலம் என்பது ஒரு ஊடகம்தான் சார். அது எங்களுக்குத் தடை இல்லை. வருங்காலத்தில் இதுபோன்ற இடங்களில் உயர்கல்வி கற்க வேண்டும். இங்கே பணிபுரிய வேண்டும்.

இந்த அறிவை தமிழ்நாட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும்” என்றார்கள். “நீங்கள் இங்கே கற்றுக்கொண்டதை, இங்கு பார்த்ததைப் பற்றி உங்கள் ஆசிரியர்களிடமும், நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். அதன்மூலம், அவர்களும் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்றேன்.

சில நாட்களுக்கு முன்பு ஜெர்மனியில் இருந்து ஆஸ்திரியாவுக்குச் சாலை மார்க்கமாகவே பயணமானோம். அப்போது மாணவி ஒருவர் என் அருகில் அமர்ந்து ‘சமத்துவக் கல்வி’ குறித்து உரையாற்றினார். “சமத்துவக் கல்வி என்பது என்ன தெரியுமா? யாரையெல்லாம் கல்வி கற்கக் கூடாது.

அறிவை வளர்க்கக் கூடாது. பதவிக்குச் செல்லக் கூடாது எனப் பிரிவினையில் பிரித்து வைத்திருந்தார்களோ, அவர்கள் எல்லோரும் கல்வி கற்று அறிவைப் பெற்று பதவிக்குச் செல்வதுதான் சமத்துவக் கல்வி. குத்தாலம் எனும் கிராமத்தில் பிறந்த நான் பேச்சுப் போட்டியில் வென்று இன்று ஜெர்மனி வரைக்கும் வந்ததுதான் சமத்துவக் கல்வி” எனப் பாடம் எடுத்தார். இதுதான் வெளிநாடு கல்விச் சுற்றுலா மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது.

ஒரு சிறு கிராமம் என்றால், அதில், அந்த ஊரின் ஊராட்சி தலைவர், கவுன்சிலர், பரம்பரை பணக்காரர் ஆகியோர்தான் முக்கியமானவர்களாக அடையாளம் காணப்படுவார்கள். அந்த வரிசையில், பள்ளிக் கல்வித் துறையால் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அரசு பள்ளி மாணவர்களும் சேர்ந்து, இப்போது அந்த ஊரின் முக்கியஸ்தராக மாறி உள்ளார்கள்.

சமத்துவக் கல்வியின் மூலமே, ஊரின் அடையாளமாக அவர்கள் மாறி உள்ளார்கள் என்பதை நினைக்கும்போது மனதில் கொண்டாட்டம் உண்டாகிறது. இப்பயணம் தொடரும்... அரசு பள்ளி மாணவர்களே வாருங்கள் பறக்கலாம்! பயிலலாம்!

- அன்பில் மகேஸ் பொய்யாமொழி; கட்டுரையாளர்: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.