பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் CEO, DEO & APO ஆகியோருக்கான மாவட்ட வாரியான ஆய்வுக் கூட்டம் 23.06.2025 & 24.06.2025 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெறுகிறது!

      Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250612_191037

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் ஆய்வுக் கூட்டம் வரும் 23.06.2025 & 24.06.2025 ஆகிய இரண்டு நாட்களும் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகக் கூட்ட அரங்கில் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது . இக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் பணியாற்றும் அலுவலர்கள் ( முதன்மைக்கல்வி அலுவலர் , மாவட்டக்கல்வி அலுவலர்கள் ( இடைநிலை ) . ( தொடக்கக் கல்வி ) , ( தனியார் பள்ளிகள் ) மற்றும் உதவித் திட்ட அலுவலர் ஆகியோர் கலந்துகொள்ள வேண்டும் . ஒவ்வொரு மாவட்டமாக அழைக்கப்பட்டு மாவட்ட நிலவரம் ஆய்வுசெய்யப்பட உள்ளது . இக்கூட்டத்தில் மாவட்ட அலுவலர்கள் கலந்துகொள்ளும்போது அந்தந்த மாவட்டத்திற்குரிய கண்காணிப்பு அலுவலர் மற்றும் அனைத்து இயக்குநர்கள் , இணைஇயக்குநர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

 கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பள்ளிக்கல்வி இயக்குநரும் , தொடக்கக்கல்வி இயக்குநரும் , தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

👇👇👇👇

District Review Meeting - Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

எதிர்பார்க்கப்படும் ஆசிரியர் கலந்தாய்வு தற்காலிக அட்டவணை - ஜூன்/ஜூலை 2025

      Education News (கல்விச் செய்திகள்)

1261877

பள்ளிக் கல்வி இயக்குநரகம் பல்வேறு ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்களுக்கான தற்காலிக கலந்தாய்வு அட்டவணையை இறுதி செய்துள்ளது. நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்ட இந்த அட்டவணை, மாநிலம் முழுவதும் ஆசிரியர்களை நியமிக்கும் செயல்முறையை சீரமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


ஜூன் 2025 முக்கிய தேதிகள்:


ஜூன் 24, 2025: பட்டதாரி ஆசிரியர் (மாவட்டத்திற்குள்) இடமாற்றங்கள்

இந்த கலந்தாய்வு அமர்வு, பட்டதாரி ஆசிரியர்களை (BT) அந்தந்த மாவட்டத்திற்குள்ளேயே இடமாற்றம் செய்வதற்கானது. இந்த செயல்முறை மாவட்ட அளவில் பணியாளர் சரிசெய்தல்களை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 30, 2025: மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் (மாவட்டம் மற்றும் வெளி மாவட்டம்) இடமாற்றங்கள்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் (HSS HM) மாவட்டத்திற்குள்ளான (அதே மாவட்டத்திற்குள்) மற்றும் வெளி மாவட்ட (வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடையே) இடமாற்றங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்பார்கள். 

ஜூலை 2025 முக்கிய தேதிகள்:


ஜூலை 01, 2025: மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு

இந்த நாள், தகுதியுடைய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 02, 2025: உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் (மாவட்டம் மற்றும் வெளி மாவட்டம்) இடமாற்றங்கள்

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் (HS HM) மாவட்டத்திற்குள்ளான மற்றும் வெளி மாவட்ட இடமாற்றங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்பார்கள். HSS HM இடமாற்றங்களை கொண்டுள்ளது.

ஜூலை 03, 2025: சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டம் மற்றும் வெளி மாவட்டம்) இடமாற்றங்கள்

இந்த விரிவான அமர்வு சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் இருவரின் இடமாற்றங்களையும் உள்ளடக்கும். மாவட்டத்திற்குள்ளான மற்றும் வெளி மாவட்ட இடமாற்ற கோரிக்கைகள் இரண்டும் பரிசீலிக்கப்படும்.

முதுகலை ஆசிரியர் இடமாற்றங்களுக்கான கலந்தாய்வு அறிவிப்புகள் (தற்காலிக):


மேலும், முதுகலை ஆசிரியர் இடமாற்றங்களுக்கான தனி கலந்தாய்வு அட்டவணை (இந்த கட்டத்தில் இதுவும் தற்காலிகமானது) குறித்த அறிவிப்புகள் வந்துள்ளன:


ஜூலை 14, 2025: முதுகலை ஆசிரியர் இடமாற்றங்கள் (மாவட்டத்திற்குள்)

தற்போதுள்ள மாவட்டத்திற்குள் இடமாற்றம் கோரும் முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு அமர்வு இந்த தேதியில் நடைபெறும்.

ஜூலை 15, 2025: முதுகலை ஆசிரியர் இடமாற்றங்கள் (வெளி மாவட்டம்)

வெவ்வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் கோரும் முதுகலை ஆசிரியர்களுக்கு இந்த நாளில் கலந்தாய்வு நடைபெறும்.


முக்கிய குறிப்பு:

குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தேதிகளும் தற்காலிகமானவை மற்றும் நிர்வாக முடிவுகளின் அடிப்படையில் மாற்றங்களுக்கு உட்பட்டவை. ஏதேனும் திருத்தங்கள் அல்லது இறுதி அட்டவணைகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தவறாமல் சரிபார்க்குமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். கலந்தாய்வுக்கான இந்த கட்டமைக்கப்பட்ட அணுகுமுறை அனைத்து கல்வியாளர்களுக்கும் ஒரு நியாயமான மற்றும் வெளிப்படையான செயல்முறையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்: வருடாந்திர உத்தேச கால அட்டவணை வெளியீடு

      Education News (கல்விச் செய்திகள்)

1365316

நடப்பு கல்வியாணடில் பள்ளி மாணவர்களுக்கு நடைபெறவுள்ள விளையாட்டு போட்டிகள் குறித்த உத்தேச கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் 2025-26-ம் கல்வியாண்டில் வட்டம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கான உத்தேச கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை எவ்வித புகார்களுக்கும் இடம் தராதபடி நடத்த வேண்டும்.


அதன்படி சர்வதேச விளையாட்டு வீரர்களை கண்டறியும் திட்டத்தின் கீழ் உலகத் திறனாய்வுப் போட்டிகள் ஜூன் 12-ல் தொடங்கி 31-ம் தேதி முடிவடையும். சர்வதேச யோகா நிகழ்ச்சிகள் ஜூன் 20-ம் தேதி நடைபெறும். 14, 17, 19 வயதுக்குட்பட்டோருக்கான வட்டார அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் ஜூன் 30 முதல் ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறும். இதேபோல் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் நடைபெறும்.


தொடர்ந்து மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின முதல்நிலை விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை நடைபெறும். இதில் குத்துச்சண்டை, ஜூடோ, நீச்சல், ஸ்குவாஷ், ஜிமினாஸ்டிக், வாள் சண்டை, சிலம்பம், கேரம் உட்பட பல்வேறு போட்டிகள் இடம்பெறும். இதையடுத்து மாநில அளவிலான போட்டிகள் செப்டம்பர் 6 முதல் 9-ம் வரை நடைபெறும்.


தொடர்ந்து இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமத்தின் (எஸ்ஜிஎஃப்ஐ) மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் செப்டம்பர் 24 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும். அதன்பின் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள் நவம்பர் 26 முதல் 29-ம் தேதி வரையும், 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகள் டிசம்பர் 3 முதல் 6-ம் தேதி வரையும், 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகள் ஜனவரி 5 முதல் 8-ம் தேதி வரையும் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

எந்தெந்த படிப்புகள் இணையானவை? - உயர்கல்வி துறை அரசாணை வெளியீடு

 Education News (கல்விச் செய்திகள்)
அரசு வேலைவாய்ப்பு நோக்கில் எந்தெந்த படிப்புகள் இணையானவை என உயர்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.


இதுதொடர்பாக தமிழக உயர்கல்வி துறை செயலர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பிபிஇ (பேச்சிலர் ஆப் பிசினஸ் எகனாமிக்ஸ்) படிப்பு வேலைவாய்ப்பு நோக்கில் பிஏ (பொருளாதாரம்) படிப்புக்கு இணையானது. அதேபோல, சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் பி.காம். (அக்கவுன்ட்டிங் & ஃபைனான்ஸ்) படிப்பு, பி.காம். (பொது) பட்டப் படிப்புக்கு சமமானது.


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் சுற்றுலா மேலாண்மை முதுகலை டிப்ளமா படிப்பு, சுற்றுலா மேலாண்மை டிப்ளமா படிப்புக்கு இணையானது.


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் எம்பிஏ ஓட்டல் மற்றும் சுற்றுலா மேலாண்மை படிப்பானது தமிழக அரசின் சுற்றுலா அலுவலர் பதவிக்கான கல்வி தகுதிகளில் ஒன்றாக நிர்ணயிக்கப்பட்ட சுற்றுலா பாடத்துடன் கூடிய முதுகலை படிப்புக்கு சமமாக கருதப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் நியமனம்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

 
Education News (கல்விச் செய்திகள்)

1261877

அரசுப் பள்ளிகளில் 3 ஆண்டுகள் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியராக பணிபுரிந்தவர்கள் விலக விரும்பினால் தகுதியான மற்ற ஆசிரியர்களை தேர்வு செய்யலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:


உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் 2023-24, 2024-25-ம் கல்வியாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களை நியமிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த ஆசிரியர்களின் பெயர்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.


அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வு மற்றும் தகவல்கள் முழுமையாக சென்றடைவதன் வாயிலாக மட்டுமே அவர்கள் உயர்கல்வி தொடர்வதை உறுதி செய்ய இயலும். இந்த இலக்கை அடைவதற்கு ஏதுவாக பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள வழிகாட்டி ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக மாற்றப்பட்டனர். அதனுடன், கூடுதலாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள வகுப்பு ஆசிரியர்கள் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.


நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்களில் எவரேனும் பணிபுரிந்த பள்ளியிலிருந்து மாறுதல் பெற விரும்பினாலோ, ஓய்வு பெற்றாலோ, பொறுப்பிலிருந்து விலக விரும்பினாலோ அவருக்கு பதிலாக தகுதியுள்ள மற்றொரு ஆசிரியரை புதிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும். அதன்படி 250 மாணவர்களுக்கு ஓர் உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் என்ற விகிதத்தில் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்து ஜூன் 25-ம் தேதிக்குள் நியமிக்க வேண்டும். தொடர்ந்து அதை எமிஸ் தளத்தில் புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

2025- 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான விளையாட்டுப்போட்டிகளை நடத்தி முடிப்பதற்கான உத்தேச வருடந்திர செயல்திட்ட அட்டவணை - பள்ளிக் கல்வித்துறை வெளியீடு.

  Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250612_135406

பள்ளி மாணவர்களிடம் உள்ளார்ந்து விளையாட்டித் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையினைப் பின்பற்றி 2025-26 ஆம் கல்வியாண்டில் குறுவட்டம் . மாவட்டம் , மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளை இத்துடன் இணக்கப்பட்டுள்ள கால அட்டவணையின்படி எவ்வித புகார்களுக்கும் இடம்தராத வண்ணம் நடத்திடவும் , உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் , அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

👇👇👇👇

Sports Calender 2025-26 | Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

இந்திய தகவல் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – Research Assistant பணிக்கு உடனே விண்ணப்பிக்கலாம்! ₹15,000

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – Research Assistant பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹15,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி 23-06-2025. முழு விவரங்கள் கீழே:

வேலைவாய்ப்பு சுருக்கம்:

விவரம்

தகவல்

நிறுவனம்

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம்

பதவி

Research Assistant

காலியிடம்

1

சம்பளம்

₹15,000

வேலை இடம்

சென்னை, தமிழ்நாடு

விண்ணப்ப முறை

ஆன்லைன்

தொடங்கும் தேதி

04-06-2025

கடைசி தேதி

23-06-2025


கல்வித் தகுதி:

Research Assistant:
BE/B.Tech in Mechanical, Mechatronics, Electronics, Robotics, Aerospace & Communication Engineering, or Electrical & Electronics Engineering.

காலியிடம் விவரம்:

பதவி

காலியிடம்

Research Assistant

1

மொத்தம்

1

சம்பள விவரம்:

பதவி

சம்பள விகிதம்

Research Assistant

₹15,000 per month

வயது வரம்பு:Maximum 25 Years

தேர்வு முறை:Interview

விண்ணப்பக் கட்டணம்:இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

1.   கீழே உள்ளஆன்லைனில் விண்ணப்பிக்கபட்டனைக் கிளிக் செய்யவும்.

2.   தேவையான விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

🔗 ஆன்லைனில் விண்ணப்பிக்க – [இணைப்பு]
📄 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – [இணைப்பு]
🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்
 – [இணைப்பு]

மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸ்:


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)