‘ஆடை வடிவடிமைப்பு’ படிப்புகளும் எதிர்காலமும் - ஒரு பார்வை

 Education News (கல்விச் செய்திகள்) 

1361369

உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றும் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது. இந்த மூன்றில் ஒன்றான உடைக்கு மனிதர்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். நம்மை ஒருவரிடம் எடுத்துக் காட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பது உடை. உடையை வடிவமைப்பதற்கு தற்போதைய காலத்தில் ஆடை வடிவமைப்புத் துறை என பிரத்யேகமாக பட்டப்படிப்பு உள்ளது.


ஆடை வடிவமைப்புத் துறை குறித்து கோவையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் கூறியது: ஆடை வடிவமைப்புப் பிரிவு அறிவியல் மற்றும் கலை சார்ந்த ஒரு படிப்பாகும். தற்போதைய காலத்தில் இது ஒரு முக்கிய தொழிற் கல்வியாக மாணவர்களிடம் உள்ளது. ஆடை வடிவமைப்பு என்பது ஆடைகள் மற்றும் அணிகலன்களுக்கு நுட்பங்களை வடிவமைக்கும் ஒரு கலையாகும்.


ஆடை வடிவமைப்பாளர் ஒரு சிந்தனையை ஒரு வடிவமைப்பாய் மாற்றி, பின்னர் அந்த வடிவமைப்பை தான் நினைத்தபடி ஆடையாகமாற்றுவார். ஆடை வடிவமைப்புக்கு இளநிலை, முதுநிலையில் படிப்புகள் உள்ளது. இளநிலையில், பி.எஸ்சி காஸ்டியூம் டிசைனிங் மற்றும் பேஷன், பி.வொக் (b.voc) கார்மென்ட் டிசைனிங், பேஷன் டெக்னாலஜி ஆகிய பட்டப்படிப்புகள் உள்ளன. பி.எஸ்சி காஸ்டியூம் டிசைனிங் மற்றும் பேஷன் துறையில், ஆடை வடிவமைப்பு மட்டுமின்றி, சிகை அலங்காரம், முக அலங்காரம் போன்றவற்றையும் சிறப்புத் தொழிற்கல்வியாக மாணவர்கள் படிப்பர்.


பி.வொக் கார்மென்ட் டிசைனிங் பிரிவில் ஆடை வடிவமைப்புடன் சேர்த்து, ஆடையின் தன்மை மற்றும் பின்னலாடைகளை பற்றியும் படிக்கலாம். ஃபேஷன் டெக்னாலஜி பிரிவில் ஆடையில் அறிவியல் நுட்பங்களை சேர்த்து கூறுவது ஆகும். இப்படிப்புக்கு அறிவியல் அடித்தளம் மிகவும் அவசியமாகும். ஃபேஷன் டெக்னாலஜி படிப்பு நூல் துணியாய் மாறி ஆடையாய் உருமாற்றம் பெறும் வரையில் அமைந்திருக்கும்.


மேற்கண்ட ஆடை வடிமைப்புத் துறைகளில் சேர பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் எந்தப் பாடப்பிரிவையும் தேர்ந்தெடுத்து படித்திருக்கலாம். அதே சமயம் ஃபேஷன் டெக்னாலஜி பாடத்துக்கு மட்டும் அறிவியல் சார்ந்த பாடப்பிரிவு படித்திருப்பது அவசியமாகும். ஆடை வடிமைப்பு படிப்புகளில் தையல் ஒரு முக்கியப் பிரிவாகும். இப்படிப்புகளை படிக்க தையல் தெரிந்திருக்க வேண்டும். தையல் தெரியவில்லை என்றாலும், இக்கல்வி படிக்கும் போது கற்றுத் தரப்படும்.


தற்போதைய நவீன உலகில் ஆடை வடிவமைப்புக்கு வேலை வாய்ப்பு சிறப்பானதாக உள்ளது. ஆடை வடிவமைப்பு பயின்ற மாணவர்கள் தொழில் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். தவிர, ஆடை வடிவமைப்பு சார்ந்த சுய தொழிலையும் செய்யலாம். மேலும், ஒருவரை ஒருவர் சார்ந்திருக்காம ல் சுயமாக தொழில் செய்யவும் இப்படிப்புகள் உதவுகின்றன என்று அவர்கள் கூறினர்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

கல்லூரிகளில் சேர்வதற்கான இணையதள முகவரி மற்றும் விண்ணப்பத்தின் கடைசி தேதி குறித்த தகவல்கள்

 Education News (கல்விச் செய்திகள்) 

.com/

தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான அரசு மற்றும் தனியார் உயர் கல்வி கல்லூரிகளில் சேர்வதற்கான TNEA, TNGASA, TNAU, TNDALU, மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆகியவற்றின் விண்ணப்பத்தின் கடைசி தேதிகள் பற்றிய விளக்கமான உரை கீழே:


முக்கிய அறிவிப்பு – TNEA மற்றும் பிற உயர் கல்வி சேர்க்கை விண்ணப்பங்கள் குறித்து:


ஒரு ஆண்டை வீணாக்க வேண்டாம்! 

கீழ்க்கண்ட உயர் கல்வி சேர்க்கைகளுக்கான விண்ணப்பத்தின் கடைசி தேதிகளை மறவாமல் கவனிக்கவும்:


TNEA (Engineering – அரசு மற்றும் தனியார் கல்லூரிகள்):


கடைசி தேதி: 06.06.2025


பி.இ / பி.டெக் போன்ற பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பம்.


அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு சேர விரும்புவோர் தவறவிடக்கூடாது.


TNGASA (Government Arts & Science Colleges Admission):


கடைசி தேதி: 27.05.2025


அரசுத் திறனாய்வுத் தேர்வு அடிப்படையில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம்.


TNAU (Agriculture, Fisheries, Forestry – Govt & Private):


கடைசி தேதி: 31.05.2025


வேளாண்மை, மீன்வளம், வனவியல் போன்ற பாடங்களில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள்.


Government Polytechnic Colleges Admission (Diploma Courses):


கடைசி தேதி: 06.06.2025


10ம் வகுப்பிற்கு பிறகு அரசுப் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிக்க விரும்புவோருக்கு.


TNDALU (Law Colleges – Govt & Private):


கடைசி தேதி: 31.05.2025


சட்டப் படிப்புகளுக்கான (5 வருட மற்றும் 3 வருட) சேர்க்கை. அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சட்டக் கல்லூரிகள்.


குறிப்பு:


மாணவர்கள் ஒவ்வொரு சேர்க்கைக்கும் தனித்தனியாக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.


தேவையான சான்றிதழ்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் (TC, Marksheet, Caste, Income, Nativity, First Graduate, etc).


கடைசி நாளில் இணையதளங்களில் டிராஃபிக் அதிகம் இருக்கும். ஆகையால் முன்பே விண்ணப்பிக்கவும்.


"கடைசி நாளை தவற விட்டால், ஒரு வருடம் வீண்!" என்பதனை நினைவில் வையுங்கள்.


அதிகாரப்பூர்வ இணையதள முகவரிகளும், கடைசி தேதிகளும் 


1. TNEA – Engineering Admission

துறை: அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள்


கடைசி தேதி: 06.06.2025


இணையதளம்: https://www.tneaonline.org


2. TNGASA – Arts & Science Colleges Admission

துறை: அரசு கலை & அறிவியல் கல்லூரிகள்


கடைசி தேதி: 27.05.2025


இணையதளம்: https://www.tngasa.in


3. TNAU – Agriculture, Horticulture, Forestry, Fisheries

துறை: வேளாண்மை மற்றும் தொடர்புடைய படிப்புகள் (அரசு + தனியார்)


கடைசி தேதி: 31.05.2025


இணையதளம்: https://tnau.ac.in


4. Government Polytechnic Colleges Admission

துறை: டிப்ளமோ படிப்புகள் – அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்


கடைசி தேதி: 06.06.2025


இணையதளம்: https://tnpoly.in/


5. TNDALU – Law Colleges Admission

துறை: அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள்


கடைசி தேதி: 31.05.2025


இணையதளம்: https://www.tndalu.ac.in


பயனுள்ள ஆலோசனை:

விண்ணப்பிக்கும் முன்:


உங்கள் அனைத்து சான்றிதழ்களும் PDF வடிவில் தயார் இருக்கட்டும்.


புகைப்படம் மற்றும் கையெழுத்து (signature) JPEG/PDF வடிவில் தயார் இருக்கட்டும்.


இணையதள வழிகாட்டல்களை பூரணமாகப் படித்த பிறகு மட்டுமே விண்ணப்பிக்கவும்.


சந்தேகம் ஏற்பட்டால் அண்ணா பல்கலைக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட TFC மையங்களுக்கு நேரில் சென்று உதவி பெறலாம்


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பிறப்பு சான்றிதழ் தொலைந்து போய்விட்டதா? எளிதாக டவுன்லோடு செய்வது எப்படி?

 Education News (கல்விச் செய்திகள்) 
இன்றைக்கு ஒருவர் பிறந்ததற்கு அடையாளமே பிறப்பு சான்றிதழ் தான்.. அந்த காலத்தில் பிறந்தவர்களை பதிவு கூட செய்திருக்க மாட்டார்கள். இன்றைக்கு பிறப்பை பதிவு செய்யாமல் அவர் வாழவே முடியாது. பிறப்பு பதிவு கட்டாயம் ஆகும். பிறப்பு சான்றிதழ் இல்லாமல் படிப்பது தொடங்கி எதுவும் செய்ய முடியாது. பிறப்பு சான்றிதழ் தான் ஒருவரின் அடையாளம். பிறப்பு சான்றிதழ் தொலைந்து போனால், அதனை எப்படி வாங்குவது, புதிதாக பிறப்பு சான்றிதழ் வாங்குவோர் எப்படி ஆன்லைனில் எளிதாக டவுன்லோடு செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.


2000க்கு பிறகு பிறப்பு சான்றிதழ் வாங்காமல் விட்ட பலர் இன்று அவதிப்படுகிறார்கள். அதற்கு கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்து, அதன்பிறகு அவர் விஏஓ மூலம் விசாரித்து தான் பிறப்பு சான்றிதழ் வழங்குவார். அந்த முறை எளிதானது கிடையாது. சற்று சவாலானது.. முன்பு நீதிமன்றத்தில் போய் பிறப்பு சான்றிதழ் வாங்கினார்கள். இப்போது கோட்டாட்சியரிடம் தான் விண்ணப்பித்து வாங்க முடியும். பிறப்பு சான்றிதழ் மட்டுமல்ல.. இறப்பு சான்றிதழ் வாங்கவும் கோட்டாட்சியரிடம் தான் போய் விண்ணப்பிக்க வேண்டும். அவர் தான் விசாரணை நடத்தி, அதன் அடிப்படையிலேயே சான்றிதழ் கிடைக்கும். எனவே பிறப்பு, இறப்பு பதிவை உடனே செய்து, சான்றிதழ் வாங்கி கொள்வது நல்லது.

birth2-1747043167

அதேநேரம் ஒருவேளை பிறப்பு சான்றிதழ் வாங்கி அசல் ஆவணம் தொலைந்து போனால், எப்படி சான்றிதழ் வாங்குவது என்பதையும், புதிதாக பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆன்லைனிலேயே சான்றிதழை எப்படி டவுன்லோடு செய்வது என்பதையும் இந்த பதிவில் பார்ப்போம்.


சென்னை மாநகராட்சியில் வாழ்பவர்கள் பிறப்பு சான்றிதழை டவுன்லோடு செய்ய ஒரு இணையதளம் உள்ளது. https://chennaicorporation.gov.in/Tamil/online-civic-services/birthCertificate.do?do=show என்ற இணையதளத்தில் பதிவு எண், குழந்தையின் பெயர், பாலினம், பிறந்த தேதி, குழந்தை பிறந்த இடம், தந்தையின் பெயர், தாயின் பெயர் போன்ற விவரங்களை கொடுத்து பதிவு செய்து டவுன்லோடு செய்யலாம்.


சென்னையை தவிர மற்ற பகுதி மக்கள் பிறப்பு சான்றிதழை https://crstn.org/birth_death_tn/BCert என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்யலாம். *RCHID என்று அழைக்கப்படும் குழந்தை பதிவு எண் வேண்டும். குழந்தை பிறப்பதற்காக தாயை மருத்துவமனையில் சேர்க்க எண் தருவார்கள். அந்த எண் தான் RCHID எண் ஆகும். அதன்பிறகு பாலினத்தை தெரிவிக்க வேண்டும். அடுத்ததாக எந்த மாவட்டம் என்பதை செலக்ட் செய்ய வேண்டும். அதில் எந்த மருத்துவமனை என்ற ஆப்சன் ஓபன் ஆகும். அந்த மருத்துவமனையை தேர்வு செய்ய வேண்டும். பிறந்த தேதி மற்றும் மொபைல் நம்பர் மற்றும் வெரிபிகேசன் போன்றவற்றை பதிவு செய்தால், பிறப்பு சான்றிதழை டவுன்லோடு செய்ய முடியும்.


பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை, பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சியாகும். குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற முடியும். பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும். பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளார் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற பாஸ்போர்ட், விசா உரிமம், அயல்நாட்டில் குடியுரிமை பெற ஆகியவற்றிற்கு இன்றியமையாத ஆவணம் ஆகும்.


ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவில் உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமும் இன்றி பதிவு செய்ய முடியும். 12 மாதங்களுக்கு பிறகு 15 வருடங்களுக்குள் ரூ.200 தாமதக்கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய முடியாது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

சட்டப் படிப்பு சேர்க்கை: விண்ணப்பம் தொடக்கம்!

  Education News (கல்விச் செய்திகள்) 

dinamani%2F2025-05-12%2Fizqm6jgl%2Flaw1a

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர இன்று(மே 12) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு, 9 தனியார் சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 5 ஆண்டுகால சட்டப் படிப்புகளில் 3,024 இடங்கள் உள்ளன.


இந்தக் கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர இன்று(மே 12)முதல் மே 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


விருப்பம் உள்ள மாணவர்கள் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தகுதி பெற்ற மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல், கட்ஆப் மதிப்பெண் விவரங்களை சட்டப் பல்கலைக்கழகம் பின்னர் வெளியிடப்படும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Amazon நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஜாக்பாட் வாய்ப்பை தவறவிடாதீர்கள்

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Amazon நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஜாக்பாட் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Amazon நிறுவனமான ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் System Development Engineer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Amazon காலிப்பணியிடங்கள்:

System Development Engineer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

System Development Engineer கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E. in Computer Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

System Development Engineer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு Amazon-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியமாக வழங்கப்படும்.

Amazon தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Skill Test / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

SJVN நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – 100+ காலிப்பணியிடங்கள் || ரூ.1,60,000/- சம்பளம்..!

 Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

SJVN நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – 100+ காலிப்பணியிடங்கள் || ரூ.1,60,000/- சம்பளம்..!

SJVN Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Executive Trainee பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

SJVN காலிப்பணியிடங்கள்:

Executive Trainee பணிக்கென மொத்தம் 114 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc /M.Tech / MBA / Post Graduate Degree / Diploma / Post Graduate Diploma / Graduate / Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SJVN வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SJVN தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் CBT / Group Discussion / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

SLAS - 2025 Report on Learning Outcomes

 Education News (கல்விச் செய்திகள்) 

IMG_20250512_174644

STATE LEVEL ACHIEVEMENT SURVEY ( SLAS ) 2025 Report on Learning Outcomes ( Government and Aided Schools )

SLAS - 2025 Report - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

CBSE - 10th & 12th Public Exam Result Direct Link

   Education News (கல்விச் செய்திகள்) 

IMG_20250512_173751


CBSE 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு!!!

https://results.cbse.nic.in

https://results.digilocker.gov.in

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )