அரசு ஊழியர்கள் புத்தகங்கள் எழுதி வெளியிட அனுமதி தேவையில்லை - தமிழக அரசு அறிவிப்பு

 Education News (கல்விச் செய்திகள்)

1500x900_43687102-untitled-1

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் கீழ் ஒரு அரசு ஊழியர் புத்தகங்களை வெளியிடுவதற்கு முன் அனுமதி பெறவேண்டும். மேலும், இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை மற்றும் கவிதை பற்றிய புத்தகங்களை எழுதும் அரசு ஊழியர்கள், பதிப்பகத்தாரிடமிருந்து ஊதியம் பெறும்போது உடனடியாக நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது.

தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்த விதியில் தமிழக அரசு சில திருத்தங்களை செய்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள், அரசின் செயல்பாடுகள் அல்லது கொள்கைகள் தொடர்பான புத்தகங்களைத் தவிர, இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, கவிதை மற்றும் தொழில்முறை மற்றும் கல்வி சார்ந்த புத்தகங்களை எழுதி வெளியிடுவதற்கு முன்னரே அனுமதி பெற வேண்டியதில்லை. ஆனால் தகுதியான அதிகாரிக்கு முறைப்படி தகவல் தெரிவித்து இனி புத்தகங்களை வெளியிடலாம்.

அந்த புத்தகத்தில் மாநிலத்திற்கு எதிரான எந்தவொரு விமர்சனமோ, தாக்குதலோ இல்லை மற்றும் புத்தகத்தில் மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதிக்கும் எந்தவொரு ஆட்சேபனைக்குரிய உரையோ, உள்ளடக்கமோ இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சுய அறிவிப்பையும் சமர்ப்பிக்க வேண்டும். புத்தகம் மூலம் பதிப்பகத்தாரிடம் இருந்து ஒருமுறை தொகை அல்லது ராயல்டி பெறுவதற்கு முன்னரே அனுமதி பெறவேண்டும்.

அரசு ஊழியர் தனது அலுவல் நேரம் அல்லது பதவி செல்வாக்கை பயன்படுத்தி புத்தக விற்பனையை ஊக்குவிக்கக்கூடாது. இந்த புத்தகம் அரசின் கொள்கை, செயல்பாடுகளை எதிர்க்காமல், சமூக ஒற்றுமையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இந்த சட்டத்திருத்தம் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளதால் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

ஆராய்ச்சி ஊக்குவிப்பு நிதியுதவி திட்டம்; மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம்: அறிவியல் தொழில்நுட்ப மன்றம் அறிவிப்பு

 Education News (கல்விச் செய்திகள்)

1358735

ஆராய்ச்சி ஊக்குவிப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ் 1,014 கல்லூரி மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர்-செயலர் எஸ்.வின்சென்ட் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம், முதுகலையில் கலை மற்றும் அறிவியல் படிப்புகள் மற்றும் இளங்கலையில் தொழில்முறை படிப்புகள் பயிலும் மாணவர்களை ஆராய்ச்சி மேற்கொள்ள ஊக்குவிக்கும் பொருட்டு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வேளாண்மை, உயிரியல், சுற்றுச்சூழல், மருத்துவம், இயற்பியல், சமூகவியல், கால்நடை மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் , வேதியியல், இயந்திரவியல், கணினி அறிவியல், மின்சாரம், மின்னணுவியல் உள்ளிட்ட துறைகளில் நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களின் 1,014 சாத்தியமான திட்டங்கள் ஐஐடி, சிஎல்ஆர்ஐ, நியாட் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், இயக்குநர்கள் அடங்கிய நிபுணர் குழுக்கள் வாயிலாக தேர்வுசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தேர்வுசெய்யப்பட்ட திட்டங்களுக்கு அரசின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்துக்கு அதன் செயல்பாட்டுக்கு அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும்.

ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி ஆய்வுத் திட்டம் முடிவடைந்ததும், அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தால் ஏற்பாடு செய்யப்படும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நிகழ்வில் மறுஆய்வு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும். அக்கூட்டத்தில் மாணவர்களால் செய்யப்படும் சாத்தியமான மற்றும் சிறந்த பயனுள்ள திட்டங்களை நிபுணர்கள் அடையாளம் காண்பார்கள். அவ்வாறு அடையாள காணப்படும் திட்டங்கள் அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் காப்புரிமை தகவல் மையம் வாயிலாக தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான காப்புரிமை செய்ய வழிவகுக்கும்.

மாணவர் ஆராய்ச்சி கண்டுபிடிப்பு ஒரு அறிவியல் ஆராய்ச்சி கட்டுரையாக பதிவுசெய்யப்பட்டு, ஐஎஸ்பிஎன் எண்ணுடன் செயல்முறைகளாக வெளியிடப்படும். இது அம்மாணவர்கள் பிற்காலத்தில் முழு அளவிலான விஞ்ஞானியாக உருவாக பேருதவி புரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

TN SED App ல் 21.4.25 முதல் மாணவர் மற்றும் ஆசிரியர் வருகை பதிவை எவ்வாறு மேற்கொள்வது ?

   Education News (கல்விச் செய்திகள்)
அனைத்து தொடக்க /நடுநிலைப் பள்ளிகளுக்கான மாணவர்  மற்றும் ஆசிரியர் வருகை பதிவை  21-04-2025 TO 30-04-2025 வரை எவ்வாறு மேற்கொள்வது என்பது விளக்கம் காணொளி

💁‍♂️NEW UPDATE TNSED Attendance APP

TN SED App ல் 21.4.25 முதல்

1-5 வகுப்பு வரை 

Fully not working..& .Reason Others.....

Mark Staff attendance Only Trs🖕

6-8 வகுப்பு 

Partially working... select 

6,7,8 class.....&  Reason Others.... Trs

💁‍♂️மேற்கொள்ளும் வழிமுறை

https://youtu.be/araOX3dznwk

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

NIT திருச்சி Professor காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

 NIT திருச்சி Professor காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி ஆனது Associate Professor, Professor மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 49 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

Associate Professor, and Professor மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 49 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Assistant Professor (Grade-II) – 35 பணியிடங்கள்
  • Assistant Professor (Grade-I) – 8 பணியிடங்கள்
  • Associate Professor – 2 பணியிடங்கள்
  • Professor – 4 பணியிடங்கள்
கல்வி தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 7th CPC Pay Matrix 10, 12,13A2 & 14A அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Diploma தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உங்களுக்கான வேலை!

 Diploma தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உங்களுக்கான வேலை!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் எனப்படும் TNSTC ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Apprentice பணிக்கென காலியாக உள்ள 527 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

Apprentice பணிக்கென காலியாக உள்ள 527 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree & Diploma (Engineering /Technology) / Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8,000/- முதல் ரூ.9,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Merit List மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Cognizant நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Cognizant நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Cognizant Technology Solutions ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Process Executive – Voice பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Cognizant பணியிடங்கள்:

Process Executive – Voice பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cognizant வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Cognizant-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

Cognizant தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாள் முடிவதற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேதி, இணையதள விவரங்கள் இதோ

    Education News (கல்விச் செய்திகள்)

தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2024-25 கல்வி ஆண்டிற்கான 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைந்தது. அதனைத்தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்தேர்வுகளுக்கான முடிவுகள் எப்போது வெளியாகிறது என்பதை பற்றி இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு பொதுத்தேர்வு முடிவுகள் 2024-25
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத மொத்தம் 25,57,354 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு தேர்விற்கு 43 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு அறை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவையில்லாமால் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.

  • இதில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 4-ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான முடிவுகள் 09.05.2025 (மே 9) தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

  • 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 30-ம் தேதி முடிவடைந்து, முடிவுகள் 19.05.2025 (மே 19) தேதி வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
  • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில், தேர்வு முடிவடைந்தவுடன் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து 19.05.2025 (மே 19) தேதி முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் தெரிந்துகொள்ளுவது எப்படி?
தமிழ்நாடு பொதுத்தேர்வு மாணவர்கள் அதிகாரப்பூர்வ www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொண்டு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இவையில்லாமல், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயக்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மேலும், மாணவர்கள் தேர்விற்கு கொடுத்த மொபைல் எண்ணிற்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட/மாநில அளவிலான விளையாட்டு, பல்திறன் போட்டிகள் - Direct Registration Link

 CULTURAL%20&%20SPORTS%20FEST%202025

The Buddhist Society of India, Tamilnadu Conducts This Mega Summer Sports & Cultural Festival

பள்ளி மாணவர்களுக்கான கோடைகால விளையாட்டு மற்றும் பல்திறன் போட்டிகள் மே 12 முதல் 17ஆம் தேதி வரை மாவட்ட அளவில் பல்வேறு பிரிவுகளில் நடைபெறுகிறது 

மாநில அளவிலான போட்டிகள் மே 24 மற்றும் 25ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெறுகின்றன. 

Click Here - Mega Summer Sports & Cultural Festival - Registration Google Form

போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக மூன்றாயிரம் ரூபாயும் மூன்றாம் பரிசாக 2000 ரூபாயும் அளிக்கப்படுகிறது 

இப் போட்டிகளில் கலந்து கொள்ள மற்றும் போட்டிகள் குறித்து மாணவர்களின் சந்தேகங்களை போக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் 

போட்டிகளின் விவரங்கள் மற்றும் பொறுப்பாளர்களின் தொடர்பு எண்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. 

பங்கு பெற விரும்பும் மாணவர்கள் கீழே உள்ள Google Form நிரப்பி பதிவு செய்து கொள்ளவும். சந்தேகங்களுக்கு மாவட்ட வாரியாக தொடர்பு எண்களை அணுகவும். 

0016

Click Here - Mega Summer Sports & Cultural Festival - Registration Google Form

நாடு முழுவதும் 9.92 லட்சம் பேர் எழுதிய ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

   Education News (கல்விச் செய்திகள்)

1358685

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகளை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.

நம்நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை 12.58 லட்சம் பேர் வரை எழுதினர். இதன் முடிவுகள் பிப்ரவரி 11-ம் தேதி வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து ஜேஇஇ 2-ம்கட்ட தேர்வு ஏப்ரல் 2 முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 531 மையங்களில் 9 லட்சத்து92,350 மாணவர்கள் எழுதினர்.

அதற்கான தேர்வு முடிவுகள் இன்று (ஏப்.19) வெளியானது. இதையடுத்து மாணவர்கள் https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்கள் முடிவுகளை அறியலாம். இந்த தேர்வில் மொத்தம் 10 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக மாணவர் எஸ்.பிரதீஷ் காந்தி 99.99% மதிப்பெண் பெற்றுள்ளார்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாணவர்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புக் கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே இவ்விரு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற அதிக மதிப்பெண் அடுத்தகட்ட ஜேஇஇ பிரதானத் தேர்வுக்கு கணக்கில் கொள்ளப்படும். பிரதானத் தேர்வு மே 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு தகுதியான நபர்கள் ஏப்ரல் 23-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

சி.பி.எஸ்.இ. 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்.. கட்டாயமாகும் 3வது மொழி!

   Education News (கல்விச் செய்திகள்)

CBSE பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரவுள்ளதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, புதிய பாடத்திட்டமானது, பாடத்தேர்வுகள், பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் மதிப்பீட்டு முறைகள் போன்றவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தில் மாணவர்கள் 8ம் வகுப்பு வரை மூன்று மொழிகளை கற்றிருக்க வேண்டும். இதில் ஆங்கிலம், இந்தி போன்ற 38 மொழிகள் இடம் பெற வேண்டும். இந்த மாற்றங்கள், தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைகளை பின்பற்றி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், மூன்றாவது மொழியில், 8ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், 9ம் வகுப்பில் அதே மொழியை தொடர்ந்து படித்து தேர்ச்சி பெறலாம் என்றும், 9ம் வகுப்பிலும் தேர்ச்சி பெறவில்லை என்றால், 10ம் வகுப்பில் மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், மூன்றாவது மொழியில் தேர்ச்சி பெறாதவர்கள், 10ம் வகுப்பு இறுதித் தேர்வுக்கு அனுமதி பெற முடியாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 9 மற்றும் 10ம் வகுப்புகளில், ஆங்கிலம் அல்லது இந்தி ஆகிய மொழிகளில் மாணவர்கள் குறைந்தது ஏதேனும் ஒன்றை கட்டாயமாக தேர்வு செய்ய வேண்டும். விருப்பப்பட்டால், இரண்டு மொழிகளையும் தேர்வு செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று தெரிகிறது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

CCE Grade Chart - தரநிலை பட்டியல் - Primary & Upper Primary

   Education News (கல்விச் செய்திகள்)
CCE GRADE தரநிலை 

*புதிய தரநிலை விவரம்*
(100 மதிப்பெண்களுக்கு உண்டானது)

  • A Grade-80%-100%
  • B Grade-60%-79%
  • C Grade-40%-59%
  • D Grade-20%-39%
  • E Grade-19% கும் கீழ்

Click Here to Download - CCE GRADE தரநிலை - Pd

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

முதுகலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

 Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250418_235406

முதுகலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

பார்வை ( 1 ) இல் காண் பள்ளிக்கல்வித் துறை செயலர் அவர்களின் அறிவுரையின்படி , மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 2025-2026 ஆம் கல்வியாண்டு முதல் முதுகலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்திட அறிவுறுத்தப்பட்டது . அரசு பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன்வளர் பயிற்சியினை வழங்கிடும் பொருட்டுக் கட்டகம் தயாரித்தல் பணியானது நிறைவு பெற்றுள்ளது . இதனை தொடர்ந்து வருகின்ற 2025-2026 ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ( இயற்பியல் , வேதியியல் , கணிதவியல் , தாவரவியல் , விலங்கியல் , பொருளியல் , வணிகவியல் , கணக்குபதிவியல் மற்றும் வரலாறு ) பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியானது . கீழ்க்கண்ட அட்டவணையின்படி இந்நிறுவன வளாகத்தில் நடத்தப்படவுள்ளது.

SCERT Proceedings - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

SSLC Paper Valuation Camp - Mistakes / Corrections

 முதன்மைத் தேர்வாளர்கள் / கூர்ந்தாய்வு அலுவலர்கள் / உதவித் தேர்வாளர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறுகள் / நிவர்த்தி செய்தல்

IMG_20250419_084037

IMG_20250419_084051