

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Education News, Employment News in tamil


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
மணற்கேணி என்பது தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் இணையவழி, இலவச கற்றல் தளமாகும். இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கானது. கீழ்கண்ட ஆவணம் மணற்கேணி செயலியின் முக்கிய அம்சங்கள் பற்றிய குறிப்புகளையும் அதன் கைபேசி வடிவத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கான விரிவான வழிமுறைகளையும் வழங்குகிறது.
Click Here to Download - Manarkeni App - How to Use - Manual - Pdf
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
இந்த ஆண்டிற்கான வருமானவரித் தொகை நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கிறதா அல்லது பிப்ரவரி மாதத்திற்கு பிடிக்க வேண்டும் என்பதை IFHRMS மூலம் சுலபமாக கண்டறியலாம்.
👉Open Google
👉Type IFHRMS and search
👉Select களஞ்சியம் Website
👉Input Your IFHRMS User ID and Password
👉Select eServices ( HR & Fin)
👉Select employee self service
👉Select Reports ( Top of the Menu ICONS )
👉Choose Incometax projection Report self service
👉Input Jan-2025 and select the same below
👉And then select Continue
👉Finally submit
👉Click OK
👉Click Monitor Request Status
👉Selec View Output (HTML format)
👉இதில் 2024-25 நிதி ஆண்டிற்கான மொத்த சம்பளத்தொகை
இந்த தொகைக்கு இந்த நிதி ஆண்டிற்கு January 2025 வரை IFHRMS மூலம் கட்டிய வருமான வரி தொகை ....
இனி நீங்கள் எவ்வளவு கட்ட வேண்டும் என்பது குறித்த அனைத்து விவரங்களும் இருக்கும்.
வருமான வரி தொகை வித்தியாசம் இருக்கிறது என்றால் , (,old regime or New regime)
ஏப்ரல் 2024 முதல் ஜனவரி 2025 வரை ஊதியம் & பிடிக்கப்பட்ட வருமான வரி தொகையை Payslip மூலமாக தொகையை கணக்கிட்டு
இந்த ஆண்டிற்கான மொத்த வருமான வரி தொகையிலிருந்து கழித்து, மீதித் தொகையை பிப்ரவரி 2025 ல் பிடித்தம் செய்யலாம்.
கட்ட வேண்டிய வரியை விட கூடுதலாக பிடித்தம் செய்யப் பட்டிருந்தால், பிப்ரவரி மாதம் வருமான வரி பிடித்தம் செய்யாமல் Drawing officer க்கு எழுத்துப் பூர்வமாக கணக்கீட்டுத் தாளுடன் கடிதம் தரலாம்.
கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட தொகை, ஜூன் மாதம் e filing செய்த பின், சம்மந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் படும் என்பதால் கவலைப்பட தேவையில்லை.
Link...
👇
https://www.karuvoolam.tn.gov.in/
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Hitech Lab - "Do's and Don'ts" - செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
Click Here to Download - Hitech Lab - "Do's and Don'ts" - Pdf
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர் விபரங்கள், யுடைஸ் எனும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
அதில் ஆண்டுதோறும் பள்ளிகளில் புதிதாக சேரும் மாணவர், பள்ளியை விட்டு மாற்றுச்சான்றிதழ் பெற்றுச்செல்லும் மாணவர் விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. பள்ளிகளில் இருந்து மாற்றுச்சான்றிதழ் பெறும் மாணவர், ட்ராப் பாக்ஸ் எனும் பட்டியலில் வைக்கப்படுகின்றனர். இவர்கள் வேறு பள்ளியில் புதிதாக சேரும்போது, அந்த பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
நடப்பு கல்வியாண்டில் இறுதி செய்யப்பட்ட, ட்ராப் பாக்ஸ் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்து, பள்ளியில் சேர்த்தல் பதிவு விடுபட்டிருந்தால், அவற்றை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை, மாற்றுச்சான்றிதழ் பெற்று, இதுவரை வேறு பள்ளிகளில் சேராத மாணவர் விபரம், தொடர்பு எண் உள்ளிட்டவற்றை சேகரித்து, அந்தந்த வட்டார வள மையத்தில் வரும், 27க்குள் சமர்ப்பிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு கடந்த, 13ல் உத்தரவிடப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தொழில்நுட்ப கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தொழில்நுட்ப கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான டி.ஆபிரகாம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தொழில்நுட்ப கல்வித்துறையால் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய வணிகவியல் தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தில் பிப்ரவரி 2 முதல் 4-ம் தேதி வரை திருத்தம் செய்துகொள்ளலாம். இதற்கு எவ்வித அபராத கட்டணமும் செலுத்த தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
8 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு எப்போது நடைமுறை படுத்த வாய்ப்பு உள்ளது?
ஒன்றிய அரசு இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அதாவது 31.01.2025 ஆம் தேதிக்குள் ஊதியக் குழு தலைவர், ஊதியக் குழு பரிந்துரைகள் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டிய கால அளவு பற்றிய அரசாணை வெளியிடும்.
இதன் பிறகு ஊதியக் குழு, ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகளுக்கு உட்பட்டு, பல்வேறு தரவுகள் மூலம் ஆய்வுகள் மேற்கொண்டு, ஒன்றிய அரசு ஊழியர்கள் சங்கங்களின் கருத்தையும் கேட்டு, கடந்த 10 ஆண்டுகளில் அத்தியாவசிய நுகர்வு பொருள்களின் விலை உயர்வு மற்றும் அரசின் நிதி நிலைக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவு ஊதிய உயர்வு வழங்கலாம் என பரிந்துரை செய்து, ஊதிய நிர்ணய காரணியை இறுதி செய்து, அரசுக்கு அறிக்கையாக அளிக்கும்.
ஊதிய உயர்வு 15% முதல் 20% வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
Fitment factor 1.86 முதல் 2.28 க்குள் இருக்கலாம் என பல்வேறு ஒன்றிய அரசு ஊழியர் சங்கங்களின் கணிப்பு கணக்கீடுகள் மூலம் தெரிய வருகிறது.
இந்த நடைமுறைகள் முடிய, 2026 ஜூன் மாதம் ஆகலாம். இந்த பரிந்துரைகளை அரசு ஆய்வு செய்து, அமைச்சரவை ஒப்புதல் பெற்று 2026 ஜூலையில் அரசாணை வெளியிடப் படலாம். 2026 ஜனவரி முதல் ஜூன் வரை நிலுவைத் தொகையாகவும், 2026 ஜூலை முதல் ஊதியத்துடனும் ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறை படுத்தப் பட வாய்ப்பு அதிகம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, 2026 மே மாதம் தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற கட்சி ஆட்சி பொறுப்பேற்கும்.
அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், 8 வது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழகத்தில் நடைமுறை படுத்த அரசிடம் கோரிக்கை வைப்பார்கள்.
இந்த கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 8 வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழ்நாட்டில் நடைமுறை படுத்துவது சார்பான குழு ஒன்றை அமைக்கும்.
இந்தக் குழு 8வது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையிலும், தமிழ்நாட்டில் உள்ள நிதி நிலைக்கு ஏற்ற, பல்வேறு தரவுகளின் அடிப்படையிலும் ஆய்வுகள் மேற்கொண்டு , 8 வது ஊதியக் குழு நடைமுறை படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி அரசுக்கு அறிக்கை அளிக்கும்.
இதற்கு தோராயமாக 2027 டிசம்பர் மாதம் வரை ஆகலாம். இந்த அறிக்கையின் அடிப்படையில், 2028 பிப்ரவரி மாதம் அதாவது 2028-29 ஆம் நிதி ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகலாம்.
2026, 2027 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு (24 மாதங்கள்) நிலுவைத் தொகை வழங்கப்படுமா? என்பது அப்போதைய நிதிநிலையை கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும்.
ஆகவே, தமிழக அரசு ஊழியர்கள் 8வது ஊதியக்குழு பணப்பலன்களை பெற, 2028 பிப்ரவரி வரை காத்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
பொங்கல் விழாவால் தள்ளிவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வு ஜனவரி 21 மற்றும் 27-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித் தேர்வு மற்றும் பிஎச்டி படிப்புக்கான நுழைவுத் தேர்வு ஜனவரி 3 முதல் 16ம் தேதி வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்திருந்தது.
தமிழகத்தில் ஜனவரி 15 மற்றும் 16ம் தேதி பொங்கல் பண்டிகை நாட்களாக இருப்பதால் அன்றைய தினங்களில் நடைபெறும் நெட் தேர்வை மாற்றியமைக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினும் மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, ஜனவரி 15ம் தேதி நடைபெறுவதாக இருந்த நெட் தேர்வு தள்ளிவைக்கப்படும் என்றும் புதிய தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் என்டிஏ தெரிவித்தது. இந்நிலையில், புதிய தேர்வு தேதியை என்டிஏ நேற்று அறிவித்தது. அதன்படி, ஜனவரி 15ம் தேதி நடைபெற இருந்த நெட் தேர்வு ஜனவரி 21 மற்றும் 27ம் தேதி ஒரே ஷிப்டில் நடத்தப்படும். கூடுதல் விவரங்களை என்டிஏ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கருத்து: நெட் தேர்வு தேதி மாற்றப்பட்டது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "பொங்கல் பண்டிகைக் காலத்தில் நடைபெறவிருந்த யுஜிசி தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்ற வேண்டும் என மத்திய கல்வி அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது சரியான முடிவு. தமிழ் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கிய தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் அது ஒத்திவைக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இனியேனும் நாட்டில் செயல்படும் எந்தவொரு அமைப்பும், நமது நாட்டின் பன்முகத்தன்மையையும் இங்கு வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளையும் மதித்து முடிவுகளை எடுப்பார்கள் என நம்புவோம்" என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news