BEL நிறுவனத்தில் Project Engineer காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.55,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

 

BEL நிறுவனத்தில் Project Engineer காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.55,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Engineer பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

Project Engineer பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Project Engineer  கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Engineer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


1st Year: 40,000/-


2nd Year: 45,000/-


3rd Year: 50,000/-


4th Year: 55,000/-


தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 01.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழக அரசில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

 தமிழக அரசில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

திண்டுக்கல் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Ayush Medical Officer, Multipurpose Worker, Data Assistant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 25 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Ayush Medical Officer, Multipurpose Worker, Data Assistant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 25 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / BBA / BCA / BE / B.Tech / BSMS / BUMS / D.Pharm / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

CMC வேலூர் கல்லூரியில் Senior Resident வேலை – சம்பளம்: ரூ.61,040/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 

CMC வேலூர் கல்லூரியில் Senior Resident வேலை – சம்பளம்: ரூ.61,040/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Resident, Research Scientist-I மற்றும் பல்வேறு பணிக்கான 7 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

Senior Resident, Research Scientist-I மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / M.Sc / MD / MS / PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.61,040/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Practical Exam Tips!

 



 *செய்முறை தேர்வில் உள்ள தியரி பகுதியை நன்கு மனப்படம் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் விடைத்தாளில் மாணவர்கள், தங்களுக்கு வந்துள்ள எக்ஸ்பெரிமெண்டின் தியரி பகுதியை முதலில் எழுத வேண்டும். அதன் பின்னரே செய்முறையை செய்ய தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர்.

*முதலில் குறிக்கோள் எழுத வேண்டும். அதாவது மாணவர்கள் தங்களுக்கு வந்துள்ள கேள்வியை புரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறார், என்ன கண்டுபிடிக்கப் போகிறார் என்பதைப் பற்றி சுருக்கமாக எழுதுவது ஆகும்.

*அடுத்து எந்தெந்த சாதனங்களை வைத்து எக்ஸ்பெரிமெண்டை செய்யப் போகிறார் என்பதையும் அந்த சாதனங்களின் பெயர்களையும் விரிவாக எழுத வேண்டும். இவை அனைத்தும் மாணவர்கள் தங்கள் அப்சர்வேஷன் நோட்டில் எழுதி இருப்பர். எந்தெந்த எக்ஸ்பெரிமெண்ட்டுக்கு எந்தெந்த கருவிகள் என்பதை கவனமுடன் எழுத வேண்டும்.

*இயற்பியல் செய்முறை தேர்வில் சர்க்யூட் வரைபடம் அல்லது பார்முலாக்களை கண்டிப்பாக எழுத வேண்டும். இதற்கு பலமுறை வரைந்து பார்த்தும் எழுதி பார்த்தும் பயிற்சி எடுப்பது அவசியம். உயிரியல் மற்றும் வேதியியல் நடைமுறைத் தேர்வில் வரைபடம் கட்டாயம் வரைந்து பாகம் குறிக்க வேண்டும்.

*அட்டவணை எழுதுதல்: அட்டவணை (டேபுலேஷன்) வரைந்து அதில் மாணவர்கள் செய்முறையின் போது கிடைக்கும் ரீடிங்குகளை அதில் குறிக்க வேண்டும். அவ்வாறு கிடைக்கும் பல ரீடிங்குகள் வைத்தே சராசரி முடிவை கணக்கிட முடியும். வேதியியல் செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ள சால்ட்-ஐயும், டைட்ரேஷன் செய்முறையில் கிடைக்கும் முடிவையும் அட்டவணையில் குறிக்க வேண்டும். செய்முறைக்கான ஒவ்வொரு படியையும் தெளிவாக எழுத வேண்டும்.

*செயல் முறை எழுதுதல்: இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் செயல்முறை எழுதுதல் (புரொசீஜர்) பகுதிக்கு அதிக மதிப்பெண்கள் ஒதுக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வாக இருப்பின் புரோகிராமை எழுத வேண்டும். இதில் நிறுத்தற்குறி, முற்றுப்புள்ளி போன்றவைகளை கவனமாக குறியிட வேண்டும்.

*நிறைவாக முடிவுரை எழுத வேண்டும். இதில் செய்முறை, பெறப்பட்ட முடிவு ஆகியவற்றை சுருக்கமாக எழுதி நிறைவு செய்ய வேண்டும்.

*இறுதியாக ரிசல்ட் (முடிவு) குறிக்க வேண்டும். இயற்பியலில் பார்முலாக்கள் பயன்படுத்தி பெறப்பட்ட முடிவு அல்லது வேதியியலில் செய்முறை மூலமாக கிடைக்கப்பட்ட முடிவை இறுதியாக எழுத வேண்டும். கம்ப்யூட்டர் சயின்சில் புரோகிராம் சரியாக எழுதி இருந்தால் அதற்கான முடிவு சரியாக வரும்.

மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு நிலைக்கும் தனித்தனியாக மதிப்பெண் வழங்கப்படும். தேர்வு மையத்திற்கு வேறு பள்ளியில் இருந்து வரும் ஆய்வாளர் இது அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டே மதிப்பெண் வழங்குவார்.

கவனிக்கப்பட வேண்டியவை:

*தேர்வு அறையில் நண்பர்களுடன் பேசுவதை தவிர்த்தல் வேண்டும்

*தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கருவி அல்லது சாதனங்கள் செயல்படவில்லையென்றால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும். அவர் அதனை சரி செய்தோ அல்லது மாற்று ஏற்பாடு செய்து தருவார்.

*எழுதி முடித்தப்பின் அனைத்தும் சரியாக எழுதப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தபின் விடைத்தாளை சமர்ப்பிக்க வேண்டும்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Maths & Science பாடங்களில் CBSE

 


கர்நாடக மாநிலத்தில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் பாடங்களில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

மேல்சபை கேள்வி நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர் அனில்குமாரின் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் மதுபங்காரப்பா கூறியதாவது:

கட்டாய கல்வி உரிமை சட்டம் செயல்படுத்தியதால், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கல்வி கட்டணத்தை, அரசே முழுமையாக செலுத்துகிறது. இந்த திட்டம் எட்டாம் வகுப்பு முதல் இரண்டாம் ஆண்டு பி.யு.சி., வரை இத்திட்டம் விஸ்தரிக்கப்படுவதால், நகர் மற்றும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

தற்போது மாநிலத்தில் ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் பாடங்களில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

நீட் தேர்வு முறையில் வருகிறது மாற்றம்: விரைவில் அறிவிக்கிறது மத்திய அரசு

 



 

 இளநிலை, நீட் நுழைவுத் தேர்வை பேனா - பேப்பர் முறையில் நடத்துவதா அல்லது, ஆன்லைன் தேர்வாக நடத்துவதா என்பது குறித்து கல்வி அமைச்சகமும், சுகாதாரத்துறையும் ஆலோசித்து வருவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு

எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான, நீட் எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை இந்த தேர்வுகளை நடத்துகிறது. நாட்டின் மிகப் பெரிய நுழைவுத்தேர்வாக கருதப்படும் இளநிலை நீட் தேர்வை, நடப்பாண்டில் 24 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வு, பேனா - பேப்பர் முறையில் தற்போது நடத்தப்படுகிறது.

இந்தாண்டு நடந்த தேர்வின் போது, வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சர்ச்சை எழுந்தது. மேலும், தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது, என்.டி.ஏ.,வுக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, என்.டி.ஏ., நடத்தும் தேர்வுகள் நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடனும் நடத்தப்படுவதை உறுதி செய்ய, இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

நுழைவுத் தேர்வு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்த இக்குழு, பல்வேறு சீர்திருத்தங்களை பரிந்துரைத்து மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. அவர்கள் அளித்துள்ள சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இரண்டு சுற்று பேச்சு
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கூறியதாவது:

இளநிலை நீட் தேர்வுகளை பேனா - பேப்பர் முறையில் நடத்துவதா அல்லது ஆன்லைன் வாயிலாக நடத்துவதா என்பது குறித்து தேர்வுகளை நிர்வகிக்கும் மத்திய சுகாதாரத்துறையுடன் விவாதித்து வருகிறோம். இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா உடன் இரண்டு சுற்று பேச்சு நடத்தப்பட்டு உள்ளது. விரைவில் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டு, 2025 தேர்வில் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உயர் படிப்புகளுக்கான தேர்வுகளை மட்டுமே என்.டி.ஏ., நடத்தும்


நீட் தேர்வு மட்டுமின்றி, முனைவர் படிப்புக்கான நெட் நுழைவுத் தேர்வு உட்பட அரசுப் பணிகளில் சேருவதற்கான பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் என்.டி.ஏ., நடத்துகிறது. ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், சில முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. அதன்படி, 2025 முதல், உயர் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை மட்டும் இனி என்.டி.ஏ., நடத்தும் என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அறிவித்தார்.
மேலும், தேர்வுகளின் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக என்.டி.ஏ., செயல்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், புதிதாக 10 புதிய பணியிடங்கள் இதற்காக உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
9 - பிளஸ் 2வுக்கு புதிய புத்தகம்

சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளுக்கான பாட புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்து அச்சிட்டு வருகிறது. ஆண்டுதோறும் 5 கோடி பாட புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி., அச்சிடுகிறது. இதை அடுத்த ஆண்டு முதல் 15 கோடியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.குறைந்த விலைக்கு தரமான புத்தகங்களை மாணவர்களுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 9 - பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பாட புத்தகங்கள் 2026 - 27 கல்வியாண்டு முதல் விற்பனைக்கு வர உள்ளன. இந்த தகவலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று உறுதி செய்தார்.

கலைகளில் சாதித்த மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி.,யில் சிறப்பு ஒதுக்கீடு

 



கலைகள் மற்றும் கலாசார பிரிவுகளில், தேசிய அளவில் சாதித்த மாணவர்களுக்கு, சென்னை ஐ.ஐ.டி.,யில் சிறப்பு பிரிவு சேர்க்கை துவக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி அளித்த பேட்டி:

சென்னை ஐ.ஐ.டி.,யில், இந்தாண்டு முதல் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீட்டு அடிப்படையில் சேர்க்கை நடந்துள்ளது.

அனுமதி

இதன் வாயிலாக, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்ற, சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற வீரர், வீராங்கனையருக்கு, ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேபோல, கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும், ஐ.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பளிக்கும் வகையில், வரும் கல்வியாண்டு முதல் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு துறையிலும் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.

இதற்காக, ஏற்கனவே உள்ள இடங்களுடன் கூடுதல் இடங்கள் ஒதுக்க, மத்திய உயர் கல்வி துறையின் அனுமதி பெற்றுள்ளோம்.

அதாவது, ஜெ.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வில், ஏதாவது ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, கலைத்துறையில் சாதித்த மாணவர்களுக்கு, இந்த சிறப்பு ஒதுக்கீட்டில் அனுமதி கிடைக்கும்.

மத்திய அரசால் வழங்கப்படும் பிரதர் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது, தேசிய பால்ஸ்ரீ விருது, தேசிய இளைஞர் விருது, சங்கீத் நாடக அகாடமி வழங்கும் உஸ்தாத் பிஸ்மில்லாகான் யுவ புரஸ்கார் விருது பெற்ற மாணவர்களுக்கு, 100 மதிப்பெண் வழங்கப்படும்.

ஆறு ஆண்டுகள்

மேலும், அகில இந்திய வானொலி, துார்தர்ஷன், பிரசார்பாரதி ஆகியவை நடத்திய போட்டிகளில், கடந்த ஆறு ஆண்டுகளில் பங்கேற்று, 'பி கிரேடு' பெற்ற மாணவர்கள்; மத்திய அரசால் வெளிநாடுகளில் நடத்தப்பட்ட இந்திய விழாக்களில், கடந்த ஆறு ஆண்டுகளில் கலைஞர்களாக பங்கேற்ற மாணவர்கள்; தேசிய இளைஞர் போட்டிகளில், பிரதமரின் முன் கலை நிகழ்த்திய மாணவர்கள், இதற்கு விண்ணப்பிக்கலாம்.

அவர்களுக்கு, 75 மதிப்பெண்கள் வழங்கப்படும். மேலும், மத்திய அரசின் கலாசார திறமையாளர் தேடல் பிரிவில் ஊக்கத்தொகை விருது பெறும் மாணவர்களும் பங்கேற்கலாம். அவர்களுக்கு, 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். இவர்களில் தரவரிசையில் முன்னணியில் இருப்போருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

ஒவ்வொரு துறையிலும் பொதுப்பிரிவில் ஒருவர், பெண்கள் பிரிவில் ஒருவர் என, இருவர் சேர்த்துக் கொள்ளப்படுவர். ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், பயாலாஜிக்கல் இன்ஜினியரிங், இன்ஜினியரிங் பிசிக்ஸ் ஆகிய துறைகளுக்கு மட்டும், நான்கு பேர் சேர்க்கப்படுவர்.

அதாவது, சென்னை ஐ.ஐ.டி.,யில் உள்ள, 14 துறைகளில், 11 துறைகளில் இரண்டு இடங்களும், மூன்று துறைகளில் நான்கு இடங்களும் என, 36 இடங்கள் ஒதுக்கப்படும், இதற்கான இணையதள விண்ணப்ப பதிவுகள், அடுத்தாண்டு ஜூன் 2ல் துவங்கி, 8ல் நிறைவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ஆசிரியர்களுக்கு வினாடி வினா போட்டி Quiz competition for teachers

 
ஆசிரியர்களுக்கு வினாடி வினா போட்டி Quiz competition for teachers

எல்கேஜி மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் பங்கேற்கும் வகையில் போட்டியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 தமிழக அரசு சார்பாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையில் வெள்ளி விழா ஆண்டையொட்டி தமிழக அரசு சார்பாக போட்டி தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இதில் எல்கேஜி மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை பல வகையிலான போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டி என பல போட்டிகளை நடத்தவுள்ளது. இதற்கு இன்றோடு விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

விருதுநகரில் இறுதி போட்டி

இதனிடையே அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தி 2 லட்சம், 1அரை லட்சம் என பல பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி வினா போட்டி நடத்தப்படவுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பாக கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவருக்கு சிலை நிறுவி 25 வது வெள்ளி விழா ஆண்டு 01 ஜனவரி 2025 வருவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி 28.12.2024 அன்று நடத்தப்படவுள்ளது. 

 அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அழைப்பு

அதற்கான முதல்நிலை தேர்வு மாவட்ட அளவில் 21.12.2024 சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிற்பகல் 2.00 மணிக்கு சென்னை-31, சேத்துப்பட்டு, கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது

போட்டியில் பங்குபெறும் போட்டியாளர்கள் தங்கள் விவரங்களை 20.12.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் Google Form https://forms.gle/DWCbZGr7nh1rtdMm8 பூர்த்தி செய்து தங்களை பதிவு செய்து கொள்ள சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து துறை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து வகையான பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மேற்காண் போட்டியில் கலந்து கொள்ள செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

10th Science - Important 2 Mark Public Exam Question Collections

 

kalvi1734507190480

அரசு பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட இரண்டு மதிப்பெண் வினாக்கள்

10th Science -  Important 2 Mark Public Exam Question Collections - Download here

10th Tamil - Question And Answer ( Question Bank ) - Mr Balakrishnan - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group