காஃபி குடிப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்கிறதா..?

  பெரும்பாலான மக்கள் காலை எழுந்ததும் குடிக்க விரும்பும் காபி, நாள் முழுவதும் ஒருவரை உற்சாகமாக வைத்திருக்க பெரிதும் உதவும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் உற்சாகம் அளிப்பதை தவிர வேறு பல நன்மைகளையும் காபி கொண்டிருக்கிறது. காபி குடிப்பதை ஊக்குவிப்பது மட்டும் இந்த நாள் அனுசரிக்கப்படுவதன் நோக்கம் அல்ல. மாறாக காபி விவசாயிகளின் அவலநிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு ஆதரவளிக்க, நியாயமான வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இந்த நேரத்தில் தினசரி காபியை விரும்பி பருகுவதால் உங்களுக்கு கிடைக்கும் சில முக்கிய ஆரோக்கிய நன்மைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

எனர்ஜி ட்ரிங்.! : காபியில் உள்ள காஃபின் நமக்கு எனர்ஜியை தரும் ஒன்றாக இருக்கிறது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிப்பதில் காஃபின் ஒரு முக்கிய தூண்டுதலாக இருக்கிறது. காஃபின் குறிப்பாக கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற கெமிக்கல்களின் சுழற்சியை உடலில் அதிகரிக்கிறது. சிறிய அளவிலான காஃபின் கூட நம்மை உற்சகமாக மற்றும் புத்துணர்ச்சியாக உணர வைக்கும்.

டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கிறது... தினமும் 1 கப் காபி குடிப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் 6 சதவீதம் குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காஃபின் தவிர காபியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் டைப் 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். இதிலிருக்கும் பாலிபினால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் டைப் 2 நீரிழிவு நோய்களைத் தடுக்கும். காபியில் உள்ள மெக்னீசியம் மற்றும் குரோமியம் போன்ற மற்ற தாதுக்களும் டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.


பார்கின்சன் நோய் அபாயத்தை குறைக்கும்.. பார்கின்சன் நோய் என்பது நரம்பியல் சிதைவுக் கோளாறு. பொதுவாக இது வயதான காலத்தில் ஏற்படும். தொடர்ந்து காபி குடிப்பவர்களுக்கு பார்கின்சன் நோயின் அபாயம் குறையும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கூட தினசரி மிதமான அளவு காபி குடிப்பது அவர்களின் இயக்கங்களை சிறப்பாக கட்டுப்படுத்த உதவும்.

டிப்ரெஷனை குறைக்கிறது.. காபி மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் போன்ற சிறந்த உணர்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தினசரி அடிப்படையிலான வழக்கமான காபி நுகர்வு இன்பம், பாசம், நட்பு, மனஅமைதி மற்றும் அதிக மகிழ்ச்சி போன்ற நேர்மறையான உணர்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. எனவே தினசரி குறைந்தபட்சம் ஒரு கப் காபியை பருகுவது டிப்ரெஷன் ஏற்படும் வாய்ப்புகளை 8% வரை குறைக்கிறது.

பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும்.. காபியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்த அழுத்தம், எல்டிஎல் கொழுப்பு மற்றும் பலவற்றைக் குறைப்பதன் மூலம் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை வெகுவாக குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கல்லீரல் பாதுகாப்பு: நம் உடல் காஃபினை ஜீரணிக்கும்போது, ​​அது பராக்சாந்தைன் என்ற வேதிப்பொருளை உருவாக்குகிறது, இது ஃபைப்ரோஸிஸில் உள்ள வடு திசுக்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது. மேலும் இது கல்லீரல் புற்றுநோய், ஆல்கஹால் தொடர்பான சிரோசிஸ், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் ஹெபடைடிஸ் சி உள்ளிட்டவற்றை எதிர்த்துப் போராட உதவும். மொத்தத்தில் தினசரி மிதமான காபி நுகர்வு கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது.

இதய நோய் அபாயங்களை குறைக்கிறது.. நாளொன்றுக்கு 2 - 3 கப் காபி குடிப்பது சிறந்த ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இப்பழக்கம் இதய நோய் உட்பட இறக்கும் அபாயத்தை 10-15% குறைத்து உங்கள் ஆயுளை நீட்டிக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. நினைவில் இருக்கட்டும், மேற்சொன்னபடி அதிகபட்சம் 3 கப் வரை மட்டுமே தினமும் குடிக்கலாம்.


Click here to join whatsapp group for daily health tip 

இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம் C

 CHAPTER - 1 - வரலாற்றுக்கு முந்தைய கால இந்தியா

CHAPTER - 2 - வேத காலப் பண்பாடு, சங்க காலம்

CHAPTER - 3 - மௌரியப் பேரரசு

CHAPTER - 4 - சமண, புத்த சமயங்கள் E

CHAPTER - 5 - குப்தப் பேரரசு

CHAPTER - 6 - விஜய நகர மற்றும் பாமினி அரசுகள்

CHAPTER - 7 - தென்னிந்திய வரலாறு 

CHAPTER - 8 - ஐரோப்பியர்கள் வருகை,வளர்ச்சி

CHAPTER - 9 - சமூக சீர்திருத்தங்கள்

CHAPTER - 10 - விடுதலை இந்தியா

CHAPTER - 11 - இந்தியா கலாச்சாரம் மற்றும் பண்பாடு

CHAPTER - 12 - இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு

CHAPTER - 13 - திராவிட கழகம் 

CHAPTER - 14 - அரசியல் கட்சிகளும்,அதன் தொண்டுகளும் 

CHAPTER - 15 - கலை,அறிவியல்,இலக்கியம் மற்றும் தத்துவ அறிஞர்கள்


வெறும் தண்ணீர் தானேன்னு நினைக்காதீங்க... அதனால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குது..!

 அதிக அளவில் தண்ணீர் குடிப்பதும் தண்ணீரே குடிக்காமல் இருப்பதும் உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். முக்கியமாக சரியான அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ளாத போது நம்முடைய மனதில் குழப்பங்களும் தேவையற்ற கோபங்களும் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் நிரூபிக்கின்றன. எமோஷனலின் நிறுவனத்தின் துணை நிறுவனரும் முதன்மை மனநல மருத்துவரான டாக்டர் ரோமா குமார் என்பவர் உணவு பொருட்கள் எவ்வாறு மனிதர்களுடைய மனதிலும் உடலிலும் மாறுபாட்டை ஏற்படுத்துகிறது என்பதை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.


ரேஷன் கடைகளில் 4,000 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு!!

 நியாயவிலைக் கடைகளில் சுமார் 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை   மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள்  மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிபடி ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்படும் ஒரு வருவாய்க் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளுக்கான விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தெரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் அமைக்கப்படும் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தெரிவிற்கான சரிபார்ப்புக் குழுவில் (Screening Committee) மாவட்ட வழங்கல் அலுவலரால் நியமனம் செய்யப்படும் வட்ட வழங்கல் அலுவலரும் உறுப்பினராகவுள்ளதால், அலுவலர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் சரிபார்ப்புக் குழுவின் பணிகளில் முழுமனதோடு ஈடுபட்டு ஒத்துழைக்க எதுவாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு  அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சரிபார்ப்புப் பணிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான அலுவலர்கள் தேவைப்படுவார்கள் என்பதால், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக சம்மந்தப்பட்ட துறைகளின் மாவட்ட அலுவலர்களுக்கு  அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னரான இத்தெரிவு நடவடிக்கைக்கு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணப்பிக்கக்கூடும் என்பதால்,  தெரிவு நடவடிக்கைகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்துவதற்கு எதுவாக மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசுத்துறைகளும் ஒத்துழைப்பும் உதவிகளும் நல்கிட வேண்டும் என்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் நாளில் நேர்முகத் தேர்வு மையத்திற்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்களை தகுந்த சான்றாவணங்களுடன் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்குமாறு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும், தபாலிலோ அல்லது நேரடியாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள்  ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையமானது பொது விநியோகத்திட்டத்தின் கீழ் தற்போது காலிப்பணியிடம் ஏற்பட்ட நாளிலிருந்து பதிணைந்து நாட்களுக்குள்ளும் பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு அத்தகைய காலிப்பணியிடம் ஏற்படக் கூடும் நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்கு முன்னரும் காலிப்பணியிடங்களுக்கான விவரங்களை எழுத்து மூலமாக சங்கங்களிலிருந்து பெற வேண்டும்.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையமானது அரசு பணியிடங்களுக்கு பின்பற்றப்படும் 200 புள்ளி இனச்சுழற்சி, இடஒதுக்கீட்டு விதிகள், முன்னுரிமை மற்றும் இதர நெறிமுறைகள் தொடர்பானநடைமுறையில் உள்ள அரசாணைகள், சட்டப் பிரிவுகள், விதிகள்ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

நியாய விலைக்கடை விற்பனையாளர்  பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும்  இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் கட்டுநர் பணியிடத்திற்கு பள்ளி இறுதி வகுப்பு (SSLC) தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news 

குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் எப்போது? TNPSC அறிவிப்பு

 குரூப் 2, 2ஏ  முதல் நிலை தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413  பதவிகளுக்கான  குரூப் 2/2ஏ முதல்நிலை தேர் கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. . 11 .78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.

முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு (சில பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது) என மூன்று நிலைகளில் தெரிவு முறை நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 1 பதவிக்கு 10 பேர் என்ற விகிதத்தில் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

முன்னதாக, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட விரிவான ஆட்சேர்ப்பு அறிவிப்பில் ஜுலையில் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும்,  முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர், முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. எப்போது  தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் தேர்வர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகள் வெளியீடு தேதி தொடர்பான  அட்டவணையில் குரூப் 2, 2ஏ  முதல் நிலை தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும்  என குறிப்பிடப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news 

TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

 குரூப்4  தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதனுடம் மேலும் சில தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

வி.ஏ.ஒ, டைப்பிஸ்ட், ஸ்டேனோ டைப்பிஸ்ட்,  இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜுலை 24ம் தேதி நடைபெற்றது.

22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 7,000க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வின் உத்தேச விடைத்தாள் ஆகஸ்ட் மாதம் வெளியானது. தேர்வு நடைபெற்று 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனை போக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகள் வெளியீடு தேதி தொடர்பான  அட்டவணையில்  குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல்,  குரூப் 2, 2ஏ  முதல் நிலை தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும்  என குறிப்பிடப்பட்டுள்ளது.  ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு முடிவுகளும் அப்டோபர் மாதத்தில் வெளியாகவுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news 

Indian Polity - Salient features of constitution PART 01 |இந்திய அரசியலமைப்பின் முக்கிய அம்சங்கள்

 

Indian Polity - Salient features of constitution PART 01 |இந்திய அரசியலமைப்பின் முக்கிய அம்சங்கள்


நீங்கள் இப்படியெல்லாம் மொபைல் ஃபோன் பார்த்தால் கண்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது உறுதி..!

இன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சியால் பல நன்மைகள் நமக்கு கிடைத்தாலும் இலவசமாக சில உடல் நலப்பிரச்சனைகளையும் நாம் வாங்க நேரிடுகிறது. குறிப்பாக இன்றைக்கு குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பணிக்குச் செல்வோர் அனைவர்களிடம் மொபைல் மற்றும் லேப்டாப், கணினி பயன்பாடுகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக இதைப் பயன்படுத்தும் போது கண் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு கண் பார்வை இழப்பையும் நமக்கு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

குறிப்பாக வெயிலில் ஸ்மார்ட்போன்களை மக்கள் பயன்படுத்தும் போது, சூரிய ஒளிக்கதிர்களால் நேரடியாக இல்லாமல் போனின் திரை வழியாக பிரதிபலித்து கடுமையான விழித்திரை பாதிப்பு நமக்கு ஏற்படுத்துகிறது. மற்றும் கண்பார்வை முற்றிலும் தெரியாமல் போய்விடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். சமீபத்தில் இது தொடர்பாக மருத்துவர்கள் நடத்திய சோதனையில் வெயிலில் மொபைல் போன்களைப் பார்க்கும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள்அனைவரையும் பாதித்தது கண்டறியப்பட்டுள்ளது.

அதிக நேரம் வெயிலில் மொபைலைப் பயன்படுத்தும் போது சூரிய கதிர்களின் பிரதிபலிப்பால், விழித்திரையின் பின்புறத்தைப் பாதிக்கும் மாகுலர் டிஜெனரேஷன் என்றழைக்கப்படும் மாகுலோபதி என்ற நோய் பாதிப்பை அடைகின்றனர். இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் குருடர்களாக மாற மாட்டார்கள். அதே சமயம், கொஞ்சம் கொஞ்சமாக பார்வை இழப்பைச் சந்திக்கின்றனர். பொதுவாக பெண்களைப் பொறுத்தவரை மொபைலிலிருந்து பிரதிபலிக்கும் சூரிய ஒளியினால் ஆரம்பத்தில் தொலைவில் இருக்கும் பொருள்களின் வடிவங்களை வேறுபடுத்துவதில் சிரமத்தைச் சந்திக்கின்றனர். இப்பிரச்சனை 20 வயதாக இருந்தாலும் சரி 40 வயதாக இருந்தாலும் சரி அனைவரையும் பாதிக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

எனவே இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க மொபைல் போன்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் மற்றும் வெயிலில் அதிக நேரம் செல்போன்களை உபயோகிக்கக் கூடாது என அறிவுத்துகின்றனர் மருத்துவர்கள். இதோடு சூரிய கதிர்களை நேரடியாக பார்த்தால் தான் கண்பார்வை பிரச்சனை ஏற்படும் என்பதில்லை,. மொபைல் போன்களில் சூரிய ஒளி பிரதிபலித்து நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கண் பார்வையை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்?

மொபைல் போன்கள், லேப்டாப், கணினி போன்றவற்றை பார்க்கும் நேரங்களில் குறைத்துக் கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத நேரங்களில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாவது சற்று உங்களது கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்.

செல்போன்களில் ஒளித்திரை நம் கண்களின் மட்டத்திற்கு மேல் இருக்கக்கூடாது. எப்போதும் கண்களுக்கு கீழே தான் இருக்க வேண்டும்.

பகல், இரவு என உங்களது சூழலுக்கு ஏற்ப மொபைல் போனில் ஒளித்திரையின் பிரைட்னஸை மாற்றி அமைக்க வேண்டும். இது கண்களைப் பாதுகாக்க உதவும்.

மொபைல் போன்களில் வீடியோக்களை அல்லது செய்திகளை ஆர்வத்துடன் பார்க்கும் போது கண் சிமிட்ட மறந்துவிடுகிறோம். கண்களில் உள்ள திரவம் தான் நம்முடைய கண்களைப் பாதுகாக்கிறது. கண்கள் வறண்டு போகும் போது வலி, கண்பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகள் நமக்கு ஏற்படும்.

வெளியில் செல்லும் போது கண் நோய்களிலிருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க பயனுள்ள சன்கிளாஸ்களை அணியுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயதானவர்கள் கண்களை ஆண்டிற்கு ஒருமுறையாவது பரிசோதித்துக் கொள்ள வேண்டும்

மேற்கண்ட முறைகளில் பாதுகாப்போடு உங்கள் மொபைல் போன்களை நீங்கள் உபயோகித்த பின்னரும் கண்பார்வை பிரச்சனை, கண்களில் வலி இருந்தால் உடனடியாக கண் மருத்துவரை அணுகி சோதனை செய்து கொள்ள வேண்டும்.


Click here to join whatsapp group for daily health tip 

 

பிளாஸ்டிக்களுக்கு மாற்றுப்பொருள்கள் தயாரிப்பில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு ஓர் அசத்தல் வாய்ப்பு!

 

தமிழகத்தில் தடை செய்யப்பட்டஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டவரா? உங்கள் வணிகத்தில் குறைந்த விலையில் பிளாஸ்டிக்- அல்லாத மாற்றுப் பொருட்களை அடையாளம் காண வேண்டுமா?

அப்படியென்றால், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய கண்காட்சி மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கில் கலந்து கொள்ளுங்கள்.

இன்று, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்கள் தொடர்பான தேசிய கண்காட்சியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். 150 அரங்குகள்  கொண்ட இந்த கண்காட்சியில், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கான மாற்று பொருட்களாக வாழை இலை பொருட்கள், நார்/அரிசி- தவிடு/அரிசி- மட்டை/விவசாய பொருட்கள், பாக்கு இலை பொருட்கள், தேங்காய் மட்டை பொருட்கள், தென்னை நார் பொருட்கள், மட்பாண்ட பொருட்கள், பனை பொருட்கள், துணி/சணல் பொருட்கள் போன்றவைகளை உற்பத்தி செய்யும் தயாரிப்பாளர்கள்  தங்கள் தயாரிப்புகளையும், இயந்திரங்களையும் காட்சிப் படுத்தி வருகின்றனர். மேலும், இறுதி நாளை, தொழில்முனைவோருக்கான கருத்தரங்கள் நடைபெற உள்ளது. மேலும்,  தொழில் முனைவோர்களுக்கு நிதி ஆதாரங்களை பெறும் வகையில் நிதி நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தித் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த தேசிய கண்காட்சிக்கு  அனுமதி முற்றிலும் இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுப் பொருட்களை தயாரிக்க முற்படும் தொழில் முனைவோர்களும், ஹோட்டல், சினிமா, கல்யாண மண்டபம்  போன்ற வணிகங்களில் ஈடுபட்டுள்ளவர்களும் இதில்  கலந்து கொண்டு பலனடையலாம்.

முன்னதாக, தமிழக அரசு ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை 01.01.2019 முதல் பயன்படுத்த தடை விதித்தது. மேலும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதைத் தவிர்ப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை" எனும் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது.

Click here to join WhatsApp group for Daily employment news 

20,000 பணிகளுக்கான எஸ்.எஸ்.சி தேர்வு: சேலம் மாவட்டத்தில் இலவச பயிற்சி வகுப்புகள்!

 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பட்டதார் நிலை தேர்வுக்கு (SSC- CGL) தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், தெரிவித்துள்ளதாவது:-

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரூப் பி மற்றும் குரூப் சி ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான (Combined Graduate Level) தேர்வுக்கான அறிவிப்பினை மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது.

இத்தேர்வுக்கு sscnic.in என்ற இணையதளம் வாயிலாக 08.10.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தேர்விற்கான கல்வித்தகுதி குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன், 01.01.2022 அன்றைய நிலையில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 30 வயதுக்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணமாக ரூபாய் 100/-நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி.எஸ்.டி, வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள் அதிக அளவில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சேவை மையம் (Facilitation Centre) அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 11.10.2022 அன்று இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. மேலும், விவரங்களுக்கு 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். சேலம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்விற்கு விண்ணப்பித்து, இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Click here to join WhatsApp group for Daily employment news