ஆசிரியர்களின் புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 IMG_20251202_132644

ஆசிரியர்களின் புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DSE - New Announcement

👇👇👇👇

Download here

திருக்கார்த்திகை RL விடுப்பு நாளையா? நாளை மறுநாளா?

 நண்பர்களே வணக்கம் 🙏 

திருக்கார்த்திகை தீபம் திருநாள் 3/12/25 புதன் கிழமை கொண்டாடப்படுவது நீங்கள் அறிந்ததே ...

களஞ்சியம் ஆப் இல் 

RH/RL 4/12/25 வியாழன் அன்று எனத் தவறாகக் காட்டுகிறது ( சரி செய்ய வேண்டி ticket raised still in progress)... 

ஆப் இல் சரி செய்யப்பட்டவில்லை என்றாலும்...

3/12/25 அன்று RH/RL எடுத்துக் கொள்ளலாம் 👍 

திருவண்ணாமலை தீபம் நாளை 3/12/25 தான் கொண்டாடப்படுகிறது...

தினசரி நாட்காட்டியில் கூட 3/12/25 தான் திருக் கார்த்திகை என குறிப்பிடப்பட்டுள்ளது

களஞ்சியம் ஆப் இல் காண்பிக்கிறது என்பதற்காக 4/12/25 அன்று தவறாக RH/RL எடுக்க இயலாது.

தகவலுக்காக.

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம்

மதுரை மாவட்டம் 🙏

2/12/25

ஒரு நாள் ஊதியம் களஞ்சியம் செயலியில் E செல்லான் மூலம் ஆன்லைன் முறையில் பணம் செலுத்தி பிரிண்ட் எடுக்கும் முறை

 IMG-20251202-WA0022_wm


ஒரு நாள் ஊதியம் களஞ்சியம் செயலியில் E செல்லான் மூலம் ஆன்லைன் முறையில் பணம் செலுத்தி பிரிண்ட் எடுக்கும் முறை 

Kalanjiyam App -e challan - Print Instructions - Download here

தமிழகத்தில், ஜவஹர் இதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், 'கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கிறது. எனவே இதுகுறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து முடிவு எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு விவாதித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். வித்யாலயா பள்ளிகளை அமைப்பது குறித்து உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!!!

 தமிழகத்தில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைப்பது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் விவாதித்து முடிவெடுக்கும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.


தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, குமாரி மகா சபா என்ற அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த பள்ளிகளை தமிழகத்தில் திறக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.


இந்த பள்ளிகள், தமிழ் கற்றல் சட்டம், 2006ஐ மீறாது எனக்கூறி, இரண்டு மாதங்களுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும், 240 மாணவர்களுக்கு தற்காலிக தங்குமிடத்தை வழங்கும்படி 2017, செப்., 11ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.



இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு, 2017, டிச., 11ல் விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்தது.



பின் பல ஆண்டுகள் இந்த வழக்கு விசாரிக்கப்படாமலேயே இருந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.


அப்போது குமாரி மகா சபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரியதர்ஷினி வாதிடுகையில், ''நாடு முழுதும் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் வலுவான கல்வி செயல்திறனைக் கொண்டுள்ளன. குறிப்பாக கடந்த, 2017ம் ஆண்டில் நாடு முழுதும் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் படித்த, 14,183 மாணவர்கள், 'நீட்' தேர்வை எழுதினர்.




''அதில், 11,875 பேர் மருத்துவ படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். ''கடந்த, 10 ஆண்டுகளில், இந்த பள்ளிகள், 10ம் வகுப்பில், 98.-99 சதவீத தேர்ச்சியும், பிளஸ் 2 வகுப்பில், 96.-98 சதவீத தேர்ச்சியும் அடைந்துள்ளன. இத்தகைய தரமான பள்ளிகள் தமிழகத்தில் இதுவரை திறக்கப்படவில்லை. எனவே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த பள்ளிகளை தமிழகத்தில் திறக்க உத்தரவிட வேண்டும்,'' என, வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், 'கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கிறது. எனவே இதுகுறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து முடிவு எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு விவாதித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.




டிசம்பர் 3 , 2025 - உலக மாற்றுத்திறனாளிகள் தினம் - QR கோடு ஸ்கேன் செய்து உறுதி மொழி எடுத்தல் - SPD Proceedings

 IMG_20251201_221120

ஒருங்கிணைந்த கல்வியின் கீழ் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் உள்ளடக்கிய கல்வி வழங்குதல் சார்ந்து பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 3 , 2025 - உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் . வாழ்வாதாரம் , கல்வி , வாய்ப்புகள் , உட்புகுத்தல் ஆகியவற்றை வலியுறுத்தியும் , அனைவருக்கும் சமமான வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்பதற்காக இணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும வகையில் பின்வரும் செயல்பாடுகள் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 

QR கோடு ஸ்கேன் செய்து உறுதி மொழி எடுத்தல் மேலும் , 👇

IE_world disability Day DEC 3, 2025 - spd Proceedings - Download here

ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

 பள்ளிக் கல்வி - ஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலை பட்டதாரி ஆசிரியர் சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி 05 : 122025 முதல் 09 : 122025 வரை நடைபெறுதல் கண்காணிப்பு அலுவலர்கள் கூட்டம் இணை இயக்குநர்கள் / துணை இயக்குநர்கள் கலந்துக்கொள்ள தெரிவித்தல் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பு பணித்தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் அறிவுரைகள் வழங்குதல் சார்பு .

DSE Proceedings 

IMG_20251201_203620

IMG_20251201_203639

Election, Anti-Defection & Rule of Law Notes PDF – தேர்தல், பதவி விலகல் தடுப்பு & சட்ட ஆட்சி விளக்கம்!

 Election, Anti-Defection & Rule of Law என்பது இந்திய அரசியல் அமைப்பின் முக்கியமான அடித்தளமான topics. TNPSC Group 1, Group 2, Group 4, VAO, TNUSRB PC & SI, SSC, RRB போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளிலும் Polity பகுதியில் இந்த concepts மீண்டும் மீண்டும் கேட்கப்படுகின்றன.

இந்த PDF short notes + clear explanations + quick revision charts வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
Polity-யில் mark secure பண்ணவேண்டும் என்றால், இந்த மூன்று topics must study chapters தான்.

Click here to download 

19th & 20th Century Socio-Political Movements & Rationalism in TN – Notes PDF 📘✨(தமிழகத்தின் சமூக-அரசியல் இயக்கங்கள் & பகுத்தறிவின் வளர்ச்சி!)

 19ஆம் & 20ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் உருவான சமூக-அரசியல் இயக்கங்கள் மற்றும் Rationalism (பகுத்தறிவு) வளர்ச்சி என்பது TNPSC Group 1, Group 2, Group 4, VAO, TNUSRB, SSC, RRB உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தொடர்ந்து கேட்கப்படும் மிக முக்கியமான History & Social Reform topic.

இந்த PDF simple language-ல, diagram-style notes + quick revision points வடிவில் கொடுக்கப்பட்டிருப்பதால் Social Reform topics மிகவும் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும்.

Click here to download 


1 - 8th - SA - Term 2 /Half Yearly Exam Time Table - Dec 2025

 தொடக்கக் கல்வி - இரண்டாம் பருவம் மற்றும் அரையாண்டு தேர்வுக்கான கால அடடவணை


தொடக்கக்கல்வி - ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை டிசம்பர் 2025 இல் நடைபெறும் இரண்டாம் பருவ தேர்வுக்கான கால அட்டவணை ஒரே பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 



School Calendar - December 2025

 பள்ளிக்கல்வித்துறை டிசம்பர் மாத நாள்காட்டி - 2025



💥06-12-2025 -- சனி  -- ஆசிரியர் குறை தீர் நாள் 


💥03-12-2025 - புதன் - திருக்கார்த்திகை. ( RL )


💥15-12-2025 -- திங்கள் -- இரண்டாம் பருவம் / அரையாண்டுத்  தேர்வு தொடக்கம்.


💥24-12-2025 -- புதன் -- இரண்டாம் பருவம் / அரையாண்டுத்  தேர்வு விடுமுறை தொடக்கம்.


💥05-01-2026 - மூன்றாம் பருவம் தொடக்கம்... பள்ளி திறப்பு.









SIR Forms ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

 SIR படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு 

 
👇👇👇 

PDF Download Here

வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று தற்போதைய வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தினை வழங்கி வருகின்றனர்.

பொதுமக்களின் விண்ணப்பங்களை BLOக்கள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) நடைபெற்று வருகின்றன. கடந்த 4ஆம் தேதி தொடங்கிய கணக்கெடுப்பு பணி டிசம்பர் 4ஆம் தேதியுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று தற்போதைய வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தினை வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 11ஆம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களின் படிவத்தை BLO-க்கள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16ஆம் தேதியும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ஆம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தே மாற்றலாம் - புதிய செயலியில் வசதி!

 ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை வீட்டில் இருந்தபடியே மொபைல் செயலி மூலம் மாற்றிக்கொள்ளும் வசதி வர உள்ளதாக ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.

IMG_20251201_094630_wm

இந்தியாவில் முக்கிய ஆவணமாக ஆதார் மாறியுள்ளது. அரசின் திட்டங்கள் முதல் பான் கார்டு வரை ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. வங்கியில் கணக்கு துவக்கவும், நலத்திட்டங்களின் பலன்களை பெறவும் அவசியமானதாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரில் பெயர், முகவரி, மொபைல் எண் என ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், தபால் அலுவலகம், வங்கிகள், ஆதார் மையங்களுக்கு உரிய ஆவணங்களுடன் மக்கள் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


தற்போது, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சிக்கலை தீர்க்க ஆதார் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை, மொபைல்போன் செயலி வாயிலாக மாற்றிக் கொள்ளும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக அந்த ஆணையம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: விரைவில் வருகிறது. ஆதாரில் மொபைல் எண்ணை, வீட்டில் இருந்தபடியே ஓடிபி மற்றும் முக அங்கீகாரம் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.



ஆதார் மையங்களில் இனியும் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அந்த பதவில் கூறப்பட்டுள்ளது.

மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம்: பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை

 பள்ளிக்கல்வியின் செயல் திட்டங்கள், மாணவர்களின் கற்றல் நிலை குறித்து ஆராய்வதற்காக மாதந்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.


இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை: துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தை மாதந்தோறும் 5-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டப் பொருள் சார்ந்த விவரங்கள் ஒவ்வொரு மாதமும் 4-வது வார இறுதியில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படும்.


அதன் விவரங்களை இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பி வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்படும். அதன்படி, வரும் டிசம்பர் மாதத்துக்கான கல்விசார் அலுவல் ஆய்வுக் கூட்டம் டிசம்பர் 5-ம் தேதி காணொலி மூலமாக நடைபெறுறது..


இதற்கான கூட்டப் பொருள், அதாவது பள்ளி ஆண்டாய்வு, பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு, திறன் திட்டம், குறைந்த செயல்திறன் கொண்ட பள்ளிகள் ஆகியவை குறித்த விவரங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


அந்த விவரங்களைப் பூர்த்தி செய்து துரிதமாக அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தொடக்கக்கல்வித் துறை சார்பிலும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடப்பு டிசம்பர் மாதம் பிரத்யேகமாக நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடும் நடைபெறுகிறது.

அரையாண்டு தேர்வுக்கான வினாத் தாள்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும்

 அரை​யாண்​டுத் தேர்வு வினாத்​தாள்​கள் பள்​ளி​களுக்கு நேரடியாக வழங்​கப்​படும் என்று தொடக்​கக் கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது. தமிழகத்​தில் பள்ளி மாணவர்​களுக்​கான அரை​யாண்​டுத் தேர்​வு​கள், டிச.10 முதல் 23-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது.


இதற்​கான வினாத்​தாள் தயாரிப்பு பணி​கள் தற்​போது நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்​களுக்​கான வினாத்​தாளை பதி​விறக்​கம் செய்​வதற்​கான வழி​காட்​டு​தல்​களை தொடக்​கக் கல்​வித் துறை வெளி​யிட்​டுள்​ளது.


அதன் விவரம் வருமாறு: 1 முதல் 5-ம் வகுப்பு வரை​யான வினாத்​தாள்​களை எமிஸ் தளத்​தில் டிச.3-ம் தேதி வரை மாவட்​டக் கல்வி அலு​வலர்​கள் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். அதன்​பின்​னர் பள்ளிகளில் குழந்​தைகளின் எண்​ணிக்​கைக்கு ஏற்ப அவற்றை பிரதி எடுக்க வேண்​டும்.


தொடர்ந்து வினாத்தாள்களை வகுப்பு, பாடம், பயிற்று மொழி வாரியாக பிரித்து, உறையிட்ட கவரில் வைத்து தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.




தலைமை ஆசிரியர்கள் அவற்றை பாதுகாப்பாக வைத்து, தேர்வு நடைபெறும் நாளில் வினாத்தாளை எடுத்து பயன்படுத்த வேண்டும். இதேபோல், 6 முதல் 8-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படும்.



தேர்வு நடை பெறும் நாளுக்கு முந்தைய தினம் காலை 9 மணியில் இருந்து பள்ளிகள் நேரடியாக வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி & ஊராட்சி துறையில் வேலை – மாவட்ட வாரியாக அறிவிப்பு! | 8ஆம் வகுப்பு போதும் | ₹15,700 முதல் சம்பளம்

 தமிழ்நாடு அரசு TNRD District Wise Recruitment 2025 – மாவட்ட வாரியாக வேலை அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் (TNRD) 8ஆம் வகுப்பு தகுதி போதுமான அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர், இரவு காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட மாவட்டத்தின் கடைசி தேதிக்கு முன் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

TNRD Recruitment 2025 – வேலை விவரங்கள்

  • வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை
  • துறை: Tamilnadu Rural Development & Panchayat Raj Department
  • பணியிடங்கள்: அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர், இரவு காவலர்
  • விண்ணப்பிக்கும் முறை: Offline (Post மூலம்)
  • பணியிடம்: தமிழ்நாடு மாவட்ட வாரியாக
  • அதிகாரப்பூர்வ தளம்: tnrd.tn.gov.in

🧑‍💼 காலிப்பணியிடங்கள் (Posts)

பதவிசம்பளம்
Office Assistant₹15,700 – 58,100
Jeep Driver₹19,500 – 62,000
Night Watchman₹15,700 – 58,100

🎓 கல்வித் தகுதி

பதவிதகுதி
Office Assistant8th Pass, Cycle ஓட்ட தெரிய வேண்டும், தமிழில் படிக்க/எழுதத் தெரிந்திருக்க வேண்டும்
Jeep Driver8th Pass + Valid License + 5 வருட அனுபவம்
Night Watchmanதமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

🎯 வயது வரம்பு

  • Office Assistant: 18–37
  • Jeep Driver: 18–42
  • Night Watchman: 18–37

(அரசு விதிப்படி தளர்வு பொருந்தும்)

விண்ணப்பக் கட்டணம்

  • ₹50/- (ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும்)

தேர்வு செயல்முறை

எப்படி விண்ணப்பிப்பது? (Step-by-Step Guide)

1️⃣ அதிகாரப்பூர்வ லிங்கில் இருந்து மாவட்ட அறிவிப்பை download செய்யவும்
2️⃣ விண்ணப்பப் படிவத்தை print எடுத்து பூர்த்தி செய்யவும்
3️⃣ தேவையான ஆதார ஆவணங்களை இணைக்கவும்
4️⃣ அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட அலுவலக முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்
5️⃣ கடைசி தேதி வரையில் விண்ணப்பம் கிடைக்க வேண்டும்

⚠️ Incomplete Applications / Late Applications — நிராகரிக்கப்படும்